
PICTURE OF SNAKE SCIMITAR CHART INSCRIPTION , UJJAIN
Post No. 11,202
Date uploaded in London – 17 AUGUST 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
பந்து என்ற புலவர் இயற்றிய சரப்பபந்த கல்வெட்டு பாம்புக்கத்தி (SNAKE SCIMITAR CHART INSCRIPTION, UJJAIN) உருவத்தில் உள்ளது. இது மத்திய பிரதேச உஜ்ஜைனி சிவன் கோவிலில் இருக்கிறது . அந்தக் கோவில் மஹா காலேஸ்வர் கோவில் என்று அழைக்கப்படும். இதில் ஸம்ஸ்க்ருத எழுத்துக்கள் அகரவரிசையில் உள்ளன. அதன் கீழ் கவிதையும் உளது. இதை மாணவர்கள் அணிந்தால் அவர்களுக்கு மொழி அறிவு எளிதில் கிட்டும் என்பது நம்பிக்கை. உதயாதித்யன் பரமார வம்ச அரசன்.
இந்தக் கல்வெட்டு சுமார் ஆயிரம் ஆண்டுப் பழமை உடைத்து. நீண்ட செய்யுள் அடங்கிய கல்வெட்டை நரவர்மன் என்ற மன்னன் புதுப்பித்தான். அதன் கீழே சரப்ப பந்த கல்வெட்டு இருக்கிறது. தலைப்பகுதியில் அகரவரிசை எழுத்துக்களும் வால்பகுதியில் வினைச் சொற்களின் விகுதியும் (SUFFIX) எழுதப்பட்டுள்ளன
கல்வெட்டில் எழுதப்பட்ட ஸ்லோகம் சொல்வதாவது :
இது உதயாதித்ய வர்மனின் சர்ப-கத்தி பந்தம். இதில் மொழியின் சப்தங்கள் உள்ளன.இதை அரசர்களும் கவிஞர்களும் கழுத்தில் அணிந்து கொள்ளவேண்டும். சிவ பெருமானை வழிபடுவோரின் அபூர்வமான (மந்திர) சக்தி உடைய கத்தி இது; அரசர்களான உதயாதித்யனும், நர வர்மனும் –வர்ண ஸ்திதியை – மொழியைப் – பாதுகாக்கிறார்கள்
உதயாதித்ய தேவஸ்ய வர்ண நாக க்ருபாணிகா
கவீநாம் ச ந்ருபாணாம் ச வேஷோ வக்ஷஸி ரோபிதஹ
ஏகேயம் உதயாதித்ய நரவர்மன் மஹீ பு ஜோஹோ
மஹேச ஸ்வா மி நோரவர்ண ஸ்தித் யை ஸித்தாஸி புத்ரிகா
மன்னர்கள் இருவரும் வர்ண ஸ்திதியைப் பாதுகாக்கிறார்கள் என்னும் சொற்றொடர் இருபொருள் உடைத்து ; வர்ண என்றால் நான்கு ஜாதி சமூக கட்டுக்கோப்பு; வர்ண என்றால் நிறம், எழுத்து என்றும் பொருள். ஆகவே மன்னர்கள் சமூக நீதியைப் பாதுகாப்பவர்கள், மொழியைப் பாதுகாப்பவர்கள் என்று மொழி பெயர்க்க முடியும்.
கல்வெட்டில் குருகுல புத்திரனின் சொல்லாடல்
கல்வெட்டுகளில் உள்ள ஸம்ஸ்க்ருத இலக்கியம் பிரம்மாண்டமானது. இதுவரை யாரும் அவைகளை வெளியிட்டு ஆராயவில்லை. அவைகளை பற்றிய குறிப்புகளை மட்டுமே புஸ்தகத்தில் இருந்து அறிகிறோம். அது மட்டுமல்ல. அந்தக் கல்வெட்டுகளில் காணப்படும் புலவர்கள் குறிப்பிடும் நாடகங்களோ, நூல்களோ, துதிகளோ, கவிதைகளோ அல்லது பிற கல்வெட்டுகளோ நமக்குக் கிடைக்கவில்லை . முஸ்லீம்களின் படையெடுப்புகளினாலும், இந்துக்களின் கவனக்குறைவினாலும் அவைகள் அழிந்து போய்விட்டன. அவைகளின் பட்டியலை சேகரித்தால், அழிந்து போன இலக்கியங்களின் பெயர்களே பல தொகுதிகளாக (IN VOLUMES) வெளிவரும். அவ்வளவும் அழிந்துபோனாலும் அதன் அளவாவது நமக்குத் தெரியும். உலகில் அதிகமான இலக்கியம் உடைய ஒரே மொழி சம்ஸ்க்ருதம். கி.மு 800ல்- ஒரு கோடு கிழித்து, அதற்கு முன்னர் ஏதேனும் இலக்கியம் இருந்ததா என்றால் இப்போது அழிந்துபோன நாகரீகங்களின் சரக்குகள் மட்டுமே காணப்படும். தமிழோ, லத்தீனோ, கிரேக்கமோ, சீனமோ இராது. பாரசீக, எபிரேய (HEBREW) மொழிகளின் படைப்புகள் ஒரு கீற்று போல தென்படும்.. சம்ஸ்க்ருத வேத, உபநிஷத, பிராமண, ஆரண்யக, இதிஹாச, சரக. சுஸ்ருத மருத்துவ நூல்கள் இமயமலை அளவுக்கு உயர்ந்து நிற்கும். இவைகளில் உள்ள ரகசியங்கள் அனைத்தும் இன்னும் அறியப்படவில்லை. அவைகளைக் காப்பாற்றி ஆராய்வது நம் கடமை.
“கல்வெட்டுகளில் காணப்படும் 800 ஸம்ஸ்க்ருத, ப்ராக்ருத மொழிப் புலவர்கள்”– என்ற தலைப்பில் புனே நகரைச் சேர்ந்த பேராசிரியர் திஸ்கல்கர் எழுதிய நூலில் சில மாதிரி செய்யுட்களை, வசனங்களை மட்டும் கொடுத்துள்ளார் . இதோ குரு குல புத்ரன் எழுதியது:
ஸந்திவிக்ரஹ ஸமாஸநிஸ்சயநிபுணஹ ஸ்தானானுரூபமாதீசம் தததாம்
குண விருத்திவிதான ஜனித ஸம்ஸ்கார ஸாதூனாம் ராஜ்யசாலாதுரீய
தந்த்ரயோருபயோராபி நிஷ்ணாதஹ
பொருள்
ஒரு புறத்தில் சமாதானம், போர் முதலியவற்றை முடிவு செய்வதில் சமர்த்தர்; மறுபுறத்தில் சொற்களை சேர்ப்பதிலும், இணைப்பதிலும், அலசி ஆராய்வதிலும் வல்லவர் ; அரசியல் விஷயங்களிலும் சாலாதுரீய விஷயங்களிலும் நிபுணர்
இதில் ஸந்தி , விக்ரஹம் என்ற இலக்கணச் சொற்களை சமாதானம் போர் , சொற்களின் சேர்க்கை , பிரித்தல் முதலிய இரு பொருள் வருமாறு புனைந்து மைத்ரக மன்னன் சிலாதித்யனைப் புகழ்கிறார் கவிஞர் குரு குலபுத்ர.
சாலாதுரீய என்பது உலகப் புகழ்பெற்ற இலக்கண வித்தகர் பாணினியின் மற்றொரு பெயர். அவர் பிறந்த ஊர் சாலா துரீய இப்பொழுது பாகிஸ்தானில் லாகூருக்கு அருகில் இருந்தது.
ஹேம்பட என்பவரின் மகன் குரு குலபுத்ர ; அவரை சித்தசேனன் என்பவர் மைத்ரக அரச குடும்பத்துக்கு அனுப்பிவைத்தார். அவர் செய்த தாமிர சாசனம்/ அலினா செப்பேடுகள் என்று அழைக்கப்படும். அது ஏழாவது சிலாதித்யனைப் பற்றியது. அவர் கிபி. அல்லது பொது ஆண்டு 766-ல் இருந்தார். இரண்டாம் துருவசேனன் என்னும் மன்னரைப் புகழும் இடத்தில் ,மன்னரைப் புகழும் சாக்கில், கவிஞர் தன் மேதாவிலாசத்தையும் சம்ஸ்க்ருத இலக்கண அறிவையும் வெளிப்படுத்தியுள்ளார். பாணினியின் இலக்கணத்தை நன்கு அறிந்தவர் என்பதும் தெரிகிறது . சந்தி , விக்ரஹம் என்னும் சொற்களை சிலேடைப் பொருளில் பயன்படுத்தியுள்ளார் .
XXX SUBHAM XXX

TAGS- சரப்பபந்தம், கல்வெட்டு, உஜ்ஜைனி, குருகுல புத்ர, சந்தி , விக்ரஹ , ஸர்ப்ப , கத்தி, உதயாதித்யன் , நரவர்மன்