கணவனுடன் எரிந்து கருகிய தமிழ்ப் பெண்கள் பட்டியல்-1 (Post No.11204)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,204

Date uploaded in London – 18 AUGUST 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

கணவன் இறந்தவுடன் அன்பின் காரணமாக அவனுடைய சிதைத் தீயில் புகுந்து உயிர் விடும் வழக்கம் “சதி” அல்லது “உடன்கட்டை ஏறுதல்” எனப்படும்

மனு ஸ்ம்ருதி இது பற்றி எதுவும் சொல்லாதது, வேத காலத்தில் இந்த வழக்கம் இல்லை என்பதைக் காட்டுகிறது. மேலும் ரிக் வேதத்திலுள்ள 1000 துதிகளில்  (10,000 மந்திரங்களில்) ஒரே ஒரு இடத்தில் சதி என்று ஊகிக்க ஒரே ஒரு குறிப்பு வருகிறது. அதுவும் சிதைத் தீயில் இருந்து வெளியே வா என்று சதிக்கு எதிராகவே உள்ளது. ராமாயண காலத்தில் இது இல்லை போலும். தசரதனின் மனைவியர் அவன் இறந்த போதும் தீப் பாயவில்லை. மஹாபாரதத்தில் பாண்டு இறந்த போது குந்தி தீப்பாயவில்லை. மாத்ரி மட்டுமே சதி முறையில் இறந்தாள் . ஆக இது கட்டாயம் இல்லை என்றே தோன்றுகிறது. ராமாயண காலத்தில் இலங்கையில் மட்டும் ‘சதி’ இருந்தது. மண்டோதரி, ராவணனுடன் உயிர் நீத்தாள்  .ஆனால் சங்க இலக்கியத்தில் இது அதிகமான இடங்களில் வருவது வியப்புக்குரியது. குறிப்பாக மன்னர்கள் இறந்தவுடன் மஹாராணிகள் சதி முறையில் கணவனுடன் தீயில் கருகி இறந்தனர்.

புறநானூற்றில் வரும் பூதப் பாண்டியன் பெருந்தேவி (பாடல் 246) மரணம் எல்லோரும் அறிந்ததே. அறிஞர்கள் தடுத்தும் அவள் தீப்பாய்ந்து இறந்தாள் . மஹா பாரதத்தில் புறாக்கள் உயிர்விட்டது போல, குறுந்தொகை என்னும் சங்க நூலில் குரங்குகள் ‘சதி’ செய்துகொண்டதை முன்னரே எழுதியுள்ளேன் (கீழேயுள்ள இணைப்புகளைக் காண்க)

இப்போது மேலும் சில ‘சதி’ மரணங்களைக் காண்போம்

கே.வி.ராமகிருஷ்ணராவ் 1991ம் ஆண்டு எழுதிய ஆங்கிலக்கட்டுரையில் உலகம் முழுதும் இவ்வழக்கம் இருந்ததையும் தமிழ் இலக்கியத்தில் இது பற்றி உள்ள விஷயங்களையும் விரிவாக எழுதியுள்ளார்

இந்த வழக்கம் எகிப்து முதலிய நாடுகளில் இருந்து உலகெங்கும் பரவியதாக ஆங்கிலேயர்கள் எழுதி வைத்துள்ளனர். சதி என்றால் நல்ல பெண் என்று பொருள்; அதாவது உத்தமி; கணவனிடத்தில் பேரன்பு கொண்டவள் .

கர்ம வினைக் கொள்கையிலும் மறு பிறப்பிலும் தமிழர்கள் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தார்கள். அவர்கள் அதி தீவிர இந்துக்கள் என்பதை புற  நானூற்றுப் பாடல்கள்  27, 214, 236, 240 பறை சாற்றுகின்றன .

வட இந்தியா போல தமிழ் மன்னர்கள் பலதார மணத்தைக் கைப்பிடித்தாலும், ஒருவனுக்கு ஒருத்தி என்பதே நல்லது என்பதை தமிழர்கள் உணர்ந்து இருந்தனர். புறம் 71, 73, 245 பாடல்களில் இக்கருத்தைக் காண்கிறோம்.

புறம் 62-ம் பாடல், சேரமான் குடக்கோ நெடுஞ் சேரலாதனும் , சோழன் வேற்பல் தடக்கைப் பெருவிரற் கிள்ளியும் சண்டை போட்டு இறந்த போது கழாத்தலையார் பாடியதாகும் . மன்னர்கள் இறந்து சொர்க்கத்துக்குப் போனார்கள். அவர்களுடைய மனைவியரும் மார்புகளைத் தழுவியபடி இறந்தனர் என்றும் அவர்கள் கீரை உணவையும் குளிர்ந்த நீரில் நீராடும் விதவை வாழ்க்கையை விரும்பவில்லை என்றும் அவர்கள் தேவர் உலகத்துக்கு விருந்தினர் ஆயினர் என்றும் காண்கிறோம்.

………………………………………………பெண்டிரும்

பாசடகு மிசையார் பனி நீர் மூழ்கார்

மார்பகம் பொருந்தி ஆங்கமைந்தனரே 

………….

அரும்பெறல் உலகம் நிறைய

விருந்து பெற்ற யாரால் பொலிக நும் புகழே (புறம் 62)

போரில் இறந்தால் சொர்க்கத்துக்கு நேரடியாக செல்லலாம்  என்று கிருஷ்ண பரமாத்மாவும் பகவத் கீதை 2-32, 2-37 ஸ்லோகங்களில் தெளிவாகவே சொல்கிறார்.

புறம் பாடல் 240 ஆய் அண்டிரன் இறந்தது பற்றியும் அவனுடைய மனைவியர் அனைவரும் அவனுடன் இறந்தது பற்றியும் கூறுகிறது . அந்தக் காலத்தில் ‘சதி’ என்பதை அனைவரும் அறிந்து இருந்ததால் குறிப்பாக தீப்பாய்ந்தாள் , தீக்குளித்தாள் என்ற சொற்கள் காணப்படவில்லை. ஆனால் போர்க்களத்திற்கு மனைவியர் செல்வதில்லை என்பதால் தகனத்தின்போது அவர்கள் சென்று தீப்பாய்ந்தது வெள்ளிடை மலை .

பாடுநர்க்கு அருகா ஆய் அண்டிரன்

கோடு ஏந்து அல்குல் குறுந்தொடி மகளிரொடு

காலன் என்னும் கண்ணிலி உய்ப்ப

மேலோர் உலகம் எய்தினன்

இதைப்படியவர் குட்டுவன் கீரனார். ஆய் அண்டிரன் இறந்தவுடன் ஈமத் தீயில் அவனது உரிமை மகளிரையும் இட்டு எரித்ததை நேரில் கண்டு பாடுகிறார்.

அவர்கள் மேல் உலகம் சென்றவுடன் இந்திரா லோக ‘ஆர்க்கெஸ்ட்ரா’ ORCHESTRA  இசை பாடி வரவேற்றதை உறையூர் ஏணிச் சேரி முடமோசியார் அடுத்த பாடலில் நமக்குத் தெரிவிக்கிறார்.

திண் தேர்  இரவலர்க்கு ஈத்த தண் தார்

அண்டிரன் வரூ  உம் என்ன ஒண் தொடி

வச்சிரத் தடக்கை நெடியோன் கோயிலுள்

போர்ப்புறு  முரசும் கறங்க

ஆர்ப்பு எழுந்தன்றால் விசும்பினோனே

–புறம் 241.

புறம் 246, 247 பாடல்களில் பெருங் கோப்பெண்டு , பூதப் பாண்டியன் இறந்தவுடன் பலர் தடுத்தும் தீயில் புகுந்ததோடு அந்த சிதைத்தீ தாமரைக்குளம் போன்ற குளிர்ச்சி உடையது என்றும் வருணிக்கிறார்.

இந்தப் பாடல்களை பெருங் கோப்பெண்டும், மதுரைப் பேராலவாயாரும் பாடியுள்ளனர்  பெருங்கோப்பெண்டு காட்டில் உள்ள காளி கோயிலின் முன் மூட்டப்பட்ட தீயை வ  ம் வந்து தீப்புகுந்து உயிர்விட்டாள்.

XXXX

PREVIOUS POSTS

பாண்டிய மஹாராணி தீயில் குதித்ததற்கு தொல்காப்பியமே காரணம்? (Post No.3210)

பாண்டிய மஹாராணி தீயில் குதித்ததற்கு …

https://tamilandvedas.com › பாண…

· Translate this page

2 Oct 2016 — … Post No.3210 Pictures are taken from various sources; thanks. … குதித்ததற்கு தொல்காப்பியமே காரணம்?

You visited this page on 18/08/22

சங்கத் தமிழ் நூல்களில் “சதி”

சங்கத் தமிழ் நூல்களில் “சதி” | Tamil and Vedas

https://tamilandvedas.com › சங்க…

· Translate this page

15 Jun 2014 — Suttee in Bali in 1597 (Wikipedia picture) சங்கத் தமிழ் நூல்களில் “சதி” (உடன்கட்டை ஏறுதல்) …

“Aryan SATI” in Sangam Tamil Literature!

“Aryan SATI” in Sangam Tamil Literature!

https://tamilandvedas.com › 2014/06/14 › aryan-sati-in-…

14 Jun 2014 — Tamil and Vedas. A blog exploring themes in Tamil and vedic literature. “Aryan SATI” in Sangam Tamil Literature …

தொடரும் —————–

TAGS-சதி , உடன் கட்டை ஏறுதல் , சங்க இலக்கியம் , பெருங்கோப்பெண்டு

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: