

Post No. 11,211
Date uploaded in London – 21 AUGUST 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
‘கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்’ ,’கணவனே கண்கண்ட தெய்வம்’ , ‘அடுத்த பிறவியிலும் நீயே கணவன்’ என்று சங்கத் தமிழ் நூல்களிலும் சம்ஸ்க்ருத நூல்களிலும் மீண்டும் மீண்டும் வரும் கருத்துக்களை 3, 4 கட்டுரைகளில் எழுதிவிட்டேன் (கீழே இணைப்புகள் உள்ளன)
கணவர்களுக்காக தமயந்தியும் சாவித்ரிரியும் எப்படிப் புலம்பினார்கள் என்பது மஹாபாரதத்தில் உள்ளது
எல்லோருக்கும் தெரிந்த கதைதான்.
நள-தமயந்தி காதல் கதை மிகவும் பிரசித்தமானது ஆயினும் நளன் , தமயந்தியைக் காட்டில் தவிக்கவிட்டுப் போய்விடுகிறான். அப்போது அவள் கதறிய கதறலை வியாசர் நமக்கு அப்படியே கண்முன் கொண்டுவருகிறார்.
அதே போல சத்யவான்- சாவித்திரி கதையையும் அறியாத இந்துப் பெண்கள் இருக்க முடியாது. சத்தியவானின் உயிரை, விதிப்படி யமன் பறித்துச் சென்றபோதிலும், தன்னுடைய பேச்சுத் திறமையாலும், பதிவிரதா குணத்தாலும் மீட்டு வருகிறாள் .
இரண்டு கதைகளையும் சற்று விரிவாகக் காண்போம்.
இதோ காட்டில் தனித்து விடப்பட்ட தமயந்தியின் புலம்பல்
ஹா நாத ஹா மஹாராஜ ஹா ஸ்வாமின் . கிம் ஜஹாமி மாம்
ஹா ஹதாஸ்மி விநஷ்டாஸ்மி பீதாஸ்மி விஜனே வனே
நனு நாம மஹாராஜ தர்மக்ஞஹ ஸத்ய வாகஸி
கதமுக்த்வா ததா ஸத்யம் ஸுப்தாமுத் ச்ருஜ்ய மாம் கதஹ
பர்யாப்தஹ பரிஹாஸோ அயமேதாவான் புருஷஷர்ப
பீதாஹமதி துர்கர்ஷ தர்சயாத்மான மீஸ்வர
த்ருஸ்யஸே த்ருஸ்யஸே ராஜன்னேஷ த்ருஷ்டாஸி நைஷத
ஆவார்ய குல்மைராத்மானம் கிம் மாம் ந ப்ரதிபாஷஸே
ந்ரும்ஸ பத ராஜேந்த்ர யன்மாமேவங்கதாமிஹ
விலபந்தீம் ஸமாகம்ய நாசவாஸயஸி பார்த்திவ
ந சோசா ம்யஹமாத்மானம் ந சான்யதபி கிஞ்சன
கதம் து பவிதாஸ்யேக இதி த்வாம் ந்ருப ரோதிமி
கதம் நு ராஜம்ஸ் தூஷிதஹ க்ஷு திதஹ ஸ்ரம கர்ஷிதஹ
ஸாயாஹ்னே வ்ருக்ஷ மூலேஷு மாம பச்யன் பவிஷ்யஸி
—வன பர்வம் , மஹாபாரதம்
பொருள்
“ஆ, என் தெய்வமே ! ஆ என் அரசனே! ஆ என் கணவா ! ஏன் என்னைக் கைவிட்டீர்கள்? நான் செத்தேன் .என் முடிவு வந்துவிட்டது; இந்தத் தனிக்காட்டில் பயந்து நடுங்குகிறேன். மஹாராஜனே எனக்கு நல்லவராகவும் விசுவாசமாகவும் இருந்தீரே ! இப்படித் தூங்கும்போது என்னைத் தவிக்கவிட்டு ஓடுவது நியாயமா? ஒருவேளை தமாஷுக்காக இப்படிச் செய்தாலும் இவ்வளவு நேரம் தவிக்கவிடலாமா ?
ஆண் சிங்கமே ! எனக்குப் பயமாக இருக்கிறது எவராலும் வெல்லமுடியாத வீரனே! உங்கள் முகத்தைக் காட்டுங்கள் . அரசனே, என் தெய்வமே ! இதோ நான் கண்டுபிடித்துவிட்டேன், கண்டுபிடித்துவிட்டேன், புதருக்குப் பின்னே ஒளிந்து இருப்பதைப் பார்த்துவிட்டேன்; ஏன் என்னிடம் பேசவில்லை ? என்ன கொடுமை! பயந்துகொண்டும் கதறிக்கொண்டும் இருக்கும் எனக்கு ஆறுதல் சொல்ல வரமாட்டீர்களா ? எனக்காக நான் துக்கப்படவில்லை; வேறு எவருக்காகவும் இல்லை. நீங்கள் தனிமையில் என்ன பாடு படுவீர்களோ என்று அஞ்சுகிறேன் . நான் இல்லாதபடி ஒரு மரத்தின் கீழ் பசியுடனும், தாகத்துடனும் , களைப்புடனும் எப்படி காலம் தள்ளுவீர்கள், அரசே?”
XXX
திடீரென்று விஷயம் தெரிந்த ஒருவர் நடுக்காட்டில் மறைந்தவுடன் முதலில் பயம் வருகிறது. பின்னர் ஒருவேளை இது ஜோக் Joke – ஆக இருக்குமோ என்ற சந்தேகம் வருகிறது. பின்னர் அப்படி இராது என்று பயம் பற்றுகிறது. இறுதியில் அன்புள்ள மனைவிக்கு, எந்தத் தாய்க்கும் உள்ள பாசம் பீறிட்டெழுகிறது. நான் எப்படி வேண்டுமானாலும் சாவேன். நீங்கள் எப்படி பசியால், தாகத்தால் தவிப்பீர்களோ என்று எண்ணி அழுகிறேன் என்கிறாள் தமயந்தி.
வியாசர் ஒரு பெரிய PSYCHOLOGIST சைக்காலஜிஸ்ட். உள்ள இயல்/ மன இயல் நிபுணர். நடுக்காட்டில் திடீரென்று தொலைந்துபோன ஒருவரின் உணர்ச்சிகளை அற்புதமாக வடித்ததோடு பெண்ணுக்கே உள்ள உயரிய குணங்களையும் படம்பிடித்துக் காட்டிவிட்டார்.
இதே மஹாபாரதத்தில் நளோபாக்யானம் போல விரிவாக இல்லாவிடினும் ஸாவித்ரீ உபாக்யானமும் நமக்கு ஒரு நல்ல காட்சியைத் தருகிறது மஹாபாரத்திலேயே ஸாவித்ரீ கதை மிகவும் பழையது என்று வியாஸர் சொல்லுவதால் அவருக்கும் முந்தைய காலக் கதை என்பது புலப்படுகிறது. இன்றும் இந்து மதப் பெண்கள் ஸாவித்ரீ விரதம் அனுஷ்டிப்பதைக் காண்கிறோம்.
ஸாவித்ரீ விரதம் கடைப்பிடிப்போர் சொல்லும் ஸ்லோகத்தில் அவளை, கன்யா தேஜஸ்வினீ , தேவ கன்யா, ஜ்வலந்தீமிவ தேஜஸா , பதிவ்ரதா , த்யானயோக பராயணா என்று போற்றுவர். சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால் ‘ஒளி மயமாகப் பிரகாசிப்பவள் , பத்தினி’
.
மத்ர தேசத்தின் அரசன் அஸ்வபதி. அவன் மனைவி பெயர் மாளவிகா. புத்திரப் பேறு இல்லாமல் நீண்ட காலம் தவித்த அவர்களுக்கு சவிதா என்னும் சூரிய தேவனை வழிபடும்படி நாரதர் உபதேசித்தார். பெண் குழந்தை பிறந்தவுடன் சூரியனைப் போற்றும் வகையில் ஸாவித்ரீ என்று பெயர் சூட்டினார். பேரழகியாக வளர்ந்த ஸாவித்ரீயிடம் உனக்குப் பிடித்த இளைஞனை நீயே தேர்ந்தெடு என்று சொன்னார் . ஒரு முறை அவள் காட்டுக்குச் சென்றபோது சாளுவ தேச இளவரசன் சத்தியவான் என்பவன், அவனுடைய கண் தெரியாத, வயதான தாய் தந்தையருக்குப் பணிவிடை செய்வதைக் கண்டு அவனிடம் மனதை பறிகொடுத்தாள் . ஆனால் நாரதர் மீண்டும் தோன்றி எச்சரிக்கை விடுக்கிறார். சத்தியவான் ஜாதகப்படி அவன் ஒரே வருடம்தான் உயிர்வாழ்வான் என்கிறார். ஸாவித்ரீயின் மனதை மாற்ற தாய் தந்தையர் செய்த முயற்சி பலிக்கவில்லை. அப்போது அவள் சொல்கிறாள் கல்லானாலும் கணவன், புல்லானாலும் அவனே என் புருஷன் என்று .
இதோ அந்த மஹாபாரத ஸ்லோகம்
தீர்காயுரதவால்பாயுஹு சகுணோ நிர்குணோபி வா
ஸக்ருத் துவ்ருத்தோ மயாபர்த்தா ந த்விதீயம் வ்ருணோ அம்யஹம்
பொருள்
“அவருக்கு குறைவான ஆயுளோ, அல்லது நீண்ட ஆயுளோ, அவர் நல்ல குணம் உடையவரோ கெட்ட குணங்கள் உடையவரோ, ஒரு முறை கணவன் என்று நான் தேர்ந்தெடுத்துவிட்டால் , வேறு எவரையும் நான் நாடமாட்டேன்” .
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட இந்த சக்திமிகு வரிகள்தான் இன்றும் பெண்களை ஸாவித்ரீ விரதம் இருக்கச் செய்கிறது!
பின்னர் தன்னுடைய திறமை மிகு பேச்சினாலும் தவத்தினாலும் யமனையே ஸாவித்ரீ வெல்லுவதால், பெண்களின் நம்பிக்கை நட்சத்திரமாக ஸாவித்ரீ திகழ்கிறாள் .

கணவன் தெய்வம் | Tamil and Vedas
https://tamilandvedas.com › tag › க…
·
13 Mar 2017 — Pictures are taken from various sources; thanks. contact; swami_48@yahoo.com. கணவனே கண்கண்ட தெய்வம்; சாமியைக் …
கணவனே கண்கண்ட | Tamil and Vedas
https://tamilandvedas.com › tag › க…
·
13 Apr 2016 — (for old articles go to tamilandvedas.com OR … கணவனே கண்கண்ட தெய்வம்; உறவுகள் அல்ல.
விவாதம் | Tamil and Vedas
https://tamilandvedas.com › tag › வ…
11 Feb 2020 — … ‘கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்‘ என்று படிக்கிறோம்.

–சுபம்—
Tags- தமயந்தி, சாவித்திரி, புலம்பல், விரதம், பெண்கள் குணம், கல்லானாலும், கணவன், புருஷன்