
Post No. 11,210
Date uploaded in London – – 21 AUGUST 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
விண்வெளிச் சாலை மற்றும் சந்திரன் பற்றிய திரைப்படங்கள்! – 8
ச.நாகராஜன்
விண்வெளி பற்றிய படங்களின் தொகுப்பு தொடர்கிறது. மேலும் சில படங்களைப் பற்றிய விவரங்களைப் பார்ப்போம்:
லாக் அவுட் 2011இல் வெளியான படம் இது. அதிகமான பாதுகாப்புடன் உள்ள விண்வெளிச் சிறைச்சாலைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் இது. இதற்கான சரியான தலைப்பு ‘எஸ்கேப் ஃப்ரம் லியோ” என்று இருந்திருக்க வேண்டும். ஜனாதிபதியின் மகள் மனிதாபிமானத்தின் அடைப்படையில் உண்மை அறியும் ஒரு பணியை விண்வெளியில் உள்ள நிலையத்திற்குச் சென்று மேற்கொள்கிறாள். ஆனால் அது தவறான திசையில் போகிறது. அவளை ஒரு ஹீரோ மீட்டுக் கொண்டு வரும் கதை இது!
லவ் : 2011இல் வெளியான படம் இது. ஐ எஸ் எஸ் படத்தில் வந்து விடுகிறது. ஒரு விண்வெளி வீரர் அவர்களிடம் சிக்கி விடுகிறார். மனித நேசம் தேவையாகிறது. அஸ்ட்ரானெட் : தி லாஸ்ட் புஷ் என்ற படம் போல அமைந்திருக்கும் இது. விண்வெளியில் எடையற்ற தன்மை இருக்கும் அல்லவா? அதைப் பற்றியெல்லாம் படத்தை எடுத்தவர்கள் கவலைப்படவில்லை. அதை அப்படியே காட்டவும் இல்லை. ஆனால் . ஐ எஸ் எஸ் பற்றிய பகுதி நன்றாக சித்தரிக்கப்படுகிறது.
க்வான் க்ஜு ரி லியான் (Quan Qiu Re Lian – விண்வெளிக் காதல்) : இது 2011இல் வெளி வந்தது. காதலும் நகைச்சுவையும் கலந்த சீனப்படம் இது. விண்வெளி நிலையத்தில் உள்ள ஒரு விவாக ரத்து ஆன ஜோடி சந்திரனுக்குப் பயணமாகச் செல்கிறது. அங்கு ஒரு சிவப்புக் கொடியை நாட்டுகிறது. காதல் ஜெயிக்கிறதா? ஓ! விண்வெளிப் படம் என்றாலே பிடிக்காது என்று இருக்கும் பெண்மணிகளைக் கவர்ந்திழுக்க இந்த விண்வெளிக் கதை தயார் செய்யப்பட்டுள்ளது. ஓகே என்று சொல்லும்படியான படமாக ஆனது. மாண்டரின் மொழி பேசும் பெண்மணி அவள். இனிமையான உள்ளத்தைத் தொடும் சித்திரம் இது!
அபல்லோ 18 : 2011இல் வெளியான படம் இது. சந்திரனில் பல விசித்திரமான செயல்கள் நிகழ்வதை அங்கு செல்லும் அபல்லோ மிஷன் கண்டு பிடிக்கிறது. ஏன் அங்கு செல்வோர் திரும்புவதில்லை என்பதைச் சொல்கிறது.
அயர்ன் ஸ்கை : 2012 இல் வெளி வந்த படம் இது. இரண்டாம் உலகப் போரின் முடிவில் பூமியிலிருந்து தப்பிய நாஜிகள் சந்திரனுக்குச் சென்று பூமியின் மீது படையெடுக்க ஒரு சூப்பரான ஆயுதத்தை உருவாக்குகின்றனர். படம் பூமியில் உள்ள நாடுகள், நாஜிக்களால் சேமிக்கப்பட்டுள்ள ஹீலியம் -3 -க்காக சண்டையிடுவதைக் காட்டி முடிகிறது.
ஜெனிஸில் 7 : ஃபர்ஸ்ட் மிஷன் : 2012இல் வெளியான படம் இது. விண்வெளியை மையமாகக் கொண்ட கிறிஸ்தவப் படம் இது. இளம் சாகஸவீரர்கள் சூரிய மண்டலத்தை ஆராயப் புறப்படுகின்றனர். சில மாதிரிகளை சேகரிப்பதற்காகச் சந்திரனுக்குச் செல்கின்றனர். மதமாற்றம், கொஞ்சம் விஞ்ஞான உண்மைகள் என்ற அடிப்படையில் செல்கிறது படம்.
எலிஸியம் : 2013இல் வெளியான படம் இது. அதி நவீன முதலாளித்துவ மனப்பான்மை கொண்ட சிலர் விண்வெளிக்குச் சென்று அதிநவீன பூங்காக்கள், தோட்டங்கள், சுத்தமான காற்று ஆகியவற்றைத் தாம் மட்டுமே அனுபவிக்கத் திட்டம் இடுகின்றனர். இது எப்படி மாற்ற முனையப்படுகிறது என்பதைச் சித்தரிக்கும் படம் இது.
ஸ்பேஸ் வாரியர்ஸ் : 2013இல் வெளியான படம் இது. நவீன கால ஸ்பேஸ் முகாமைச் சித்தரிக்கிறது இது. ஒரு சிக்கலான நிலை உருவாகவே மாணவர்கள் விண்வெளி செல்கின்றனர். இளம் தலைமுறையினரை, விண்வெளி ஆய்விற்கு உத்வேகம் ஊட்டுவதை நோக்கமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் இது.
ஸ்ட்ராண்டட் : 2013இல் வெளியான படம் இது. விண்கற்கள் சந்திர தளத்தில் பொழிகிறது. அதை ஆராயப் புறப்படுகின்றனர் ஆய்வாளர்கள். அதற்கான காரணம் ஒன்று உண்டு. பான்ஸ்பெர்மியா எனப்படும் ‘இசைவான சூழ்நிலையில் பெருக்கம் அடையத்தக்க எண்ணற்ற நுண்மங்கள் வளிமண்டலத்தில் நிறைந்துள்ளன’ என்னும் கோட்பாட்டின் அடிப்படையில் கதை செல்கிறது!
க்ராவிடி : 2013இல் வெளியான படம் இது டிவிடியில் வெளியான படம் இது. விண்வெளி பற்றிய இதை ஏராளமானோர் பார்த்தனர். ஒரு விண்வெளி வீரர் விண்கல ஓடுபாதையில் விண்கலம் ஒன்று சோதனை செய்யப்படும் போது அபாயகரமாகச் சிக்கிக் கொள்கிறார். ஷட்டிலே கட்டுப்பாடை இழந்து சிதைகிறது. இதை இந்தப் படம் சித்தரிக்கிறது.
இதுவரை 87 சந்திரனைப் பற்றிய திரைப்படங்களின் விவரத்தை மிகச் சுருக்கமாகப் பார்த்தோம்.
2013க்குப் பின்னர் ஏராளமான படங்கள் வெளி வந்துள்ளன.
அவற்றையும் தொகுத்துப் பார்த்தால் சந்திரன் திரைப்படத்துறையை கவர்ந்த விதத்தையும், திரைப்படத் துறை சந்திரனை மையமாக வைத்து மக்களைக் கவர்ந்த விதத்தையும் அறியலாம்.
நிலா நிலா ஓடி வா, நில்லாமல் ஓடி வா என்று சின்னக் குழந்தையிலிருந்தே அம்புலி மாமா பாட்டு கேட்டு வளர்ந்தோம்!.
இளைஞர்களான போது காதல் பாடல்களில் காதல் சுவை நனி சொட்டச் சொட்ட நிலாப் பாடல்களையும் கேட்டு மகிழ்ந்தோம்!
மனித வாழ்க்கையில் மகிழ்ச்சி தரும் ஒரு அங்கமாகத் திகழ்வது சந்திரன்!
அதிசயம் அநேகம் தரும் சந்திரனைப் பற்றிய திரைப்படங்கள் எண்ணற்றவை இனியும் உருவாகும் என்பதில் ஐயமில்லை.
***
சந்திரனைப் பற்றிய திரைப்படங்கள் பற்றிய இந்தத் தொடர் நிறைவுறுகிறது.
புத்தக அறிமுகம் – 33
திரைப்படங்களில் ராமர் பாடல்கள்!

பொருளடக்கம்
3. ஜனகனின் மகளை மணமகளாக ராமன் நினைத்திருந்தான்!
5. ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே!
8. ராதைக்கேற்ற கண்ணனோ சீதைக்கேற்ற ராமனோ!
9. யாருக்கு ஜானகி காத்திருந்தாள்!
10. ராமனின் மோகனம் ஜானகி மந்திரம்!
12. ஸ்ரீ ராமனின் ஸ்ரீ தேவியே அனுமான் உன்னைக் காக்க!
14. லாலி! லாலி! ஆகாயவண்ணனுக்கு தியாகையர் நானே!
16. வைதேகி ராமன் கை சேரும் காலம்!
17. ஒருவனுக்கு உலகில் ஒரு தாரம் எனும் உயர்வினைக் காட்டிய அவதாரம்!
இந்த நூலில் இடம் பெற்றுள்ள பாடல்கள் பற்றிய குறிப்புகள்
*
நூலில் என்னுரையாக இடம் பெற்றுள்ளது இது:
என்னுரை
‘திரைப்படப் பாடல்களோடு ஒரு பயணம்’ என்ற எனது நூலைத் தொடர்ந்து இந்த நூல் எழுதப்பட்டது.
காலம் காலமாக பாரத தேச மக்கள் வழிபட்டு வரும் ராமரைப் பற்றிய பல்லாயிரக்கணக்கான ஸ்லோகங்கள், துதிகள், நூல்கள் எழுந்துள்ளன.
இமயம் முதல் குமரி வரை மக்கள் ராமரின் மீது கொண்டுள்ள பக்தியையும் சீதையைத் தாயாக மதிக்கும் பாங்கையும் கண்டு அனைவரும் மகிழ்வது இயல்பே. பாரத தேசம் ஒரே பண்பாடு உடையது என்பதற்குச் சான்றாக இலங்குவது வேதம், புராணங்கள், இதிஹாஸம் ஆகியவையே.
நவீன தொழில்நுட்பத்தின் ஒரு கண்டுபிடிப்பாக அமைந்துள்ள திரைத்துறையிலும் இதன் தாக்கம் இருப்பது இயல்பே.
திரைப்பாடல்களில் ராமர், சீதை என்று சொல்லும்போதே அதற்கென இருக்கும் ஒரு பெரும் பாரம்பரியத்தையும் அந்தச் சொற்கள் கொண்டு வந்து தருகின்றன; ஆகவே பாடலாசிரியர் சொல்ல வேண்டியதை அர்த்தத்துடனும் ஆழத்துடனும் சொல்கிறார். மக்களிடையே நல்ல வரவேற்பையும் இந்தப் பாடல்கள் பெறுகின்றன; பெறும்.
இப்படிப்பட்ட பாடல்களைத் தொகுத்து பாடலாசிரியர், படம் உள்ளிட்ட முழு விவரங்களையும் கொடுக்க எண்ணம் உண்டாயிற்று, அதன் வெளிப்பாடே இந்த நூல்.
லண்டன் திரு ச. சுவாமிநாதன் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக.
இந்த நூலை வெளியிட முன் வந்த பெங்களூர் நிறுவனமான PUSTAKA DIGITAL MEDIAவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவராஜ் அவர்களுக்கு எனது உளம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தொடராக வெளிவந்த போது இதைப் படித்து உற்சாகத்துடன் அனைவரும் வரவேற்ற ஆர்வத்தின் அடிப்படையில் இந்த நூல் வெளியிடப்படுகிறது.
தமிழ் உலகம் இந்த நூலை வரவேற்கும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.
இந்தப் புவி வாழ் அனைத்து மக்களும் நலமுடன் வாழ ஸ்ரீ ராமரைப் பிரார்த்திக்கிறேன்.
நன்றி
பங்களூர் ச.நாகராஜன்
13-1-2022
*
நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.
இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.
சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in
என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்
தொடர்புக்கான தொலைபேசி எண் : 9980387852
**