அனுமதி தேவி புகழ்பாடும் பீஹார்  கல்வெட்டு (Post No.11,213)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,213

Date uploaded in London – 22 AUGUST 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

மாதவ என்ற புலவர் இயற்றிய ஸம்ஸ்க்ருதக் கல்வெட்டு பீஹார் மாநில பகீரதபுரியில் (பகிரத்பூர் ) உள்ளது. இது அனுமதி தேவி என்ற ராணியின் புகழை அழகிய ஸம்ஸ்க்ருதத்தில் வடித்துள்ளது .

அனுமதி தேவி என்பவர் ராமபத்ராவின் மனைவி; ஹரிநாராயணனின் மருமகள்; கம்ச நாராயணனின் தாயார் .

கம்சநாராயண, மிதிலா நகர ஒயின்வாரா வம்ச சிற்றரசர்.. கி.பி.1500 ஐ ஒட்டி வாழ்ந்தவர்.லட்சுமண சேன சம்வத்சரம் 403.

இந்தக் கல்வெட்டு, அனுமதி தேவி கட்டிய தேவி கோவில் பற்றிப் பேசுகிறது. ஒன்பது செய்யுட்களைக் கொண்டது.

புலவர் மாதவ, தன்னுடைய வம்சாவளியையும் சொல்கிறார். மஹாதேவியின் தந்தை சிவா ஜா தனது வம்சத்தைச் சேர்ந்தவர்என்கிறார்.. மிதிலா நகரைச் சேர்ந்த கதாதர பட்டர் இயற்றிய ரசிகஜீவன பாடல் தொகுப்பில் இது குறிப்பிடப்பட்டதாகவும் புகழ்ந்து கொள்கிறார்.

அனுமதி தேவி தனது தானங்களால் உலகிலுள்ள கொடிய வறுமையை ஒழித்தாள் ;

தன்னுடைய புகழ் ஒளி மூலம் சரத் கால சந்திரனின் ஒளியைவிட பல்லாயிரம் பேரின் ஒளியை மேலும் பிரகாசமாக்கினாள் ;தனது அடக்கத்தாலும், விவேகத்தாலும் உறவினர்களைக் கவர்ந்தாள் ;

ஒப்பற்ற குணங்கள் அடங்கிய இத்தகையவரே இந்தக் கோவிலை நிர்மாணித்தார்.

இதை சம்ஸ்க்ருத மொழியில் காணும்போது இதன் அழகு தெரியும். இது கல்வெட்டின் இரண்டாவது செய்யுளாக அமைந்துள்ளது . இதோ அந்தப் பாடல் :

தானைர்யா தலயாம் பபூவ ஜகதாம்  தாரித்ர்ய மத்யுத்கடம்

கீர்த்யா யா சரத்திந்துசுந்தரதரா லோகாம்ஸ் சகாராயுதான்

கிஞ்சோச்சைர் விநயான்யாச்ச  வசதாம் நீதா யயா  பாந்தவாஹா

ஸேயம்  விஸ்வவிலக்ஷணோஜ்வல  குண க்ராமா  மடம் நிர்மமமே 

ராணியின் புகழ்பாடும் குலதரா என்னும் புலவரின் பெயரையும் கல்வெட்டில் காண முடிகிறது.

xxx

வந்தலி கல்வெட்டு

குஜராத் மாநில செளராஷ்டிர பிரதேசத்தைச் சேர்ந்த இன்னும் ஒரு மாதவ என்ற புலவரையும் காண்போம்.இவர் சமத்காரபுர நாகர பிராஹ்மணர். தந்தை பெயர் முஞ்ஜீக  . குஜராத் சாளுக்கிய மன்னர் சாரங்கதேவரின் கி.பி. (பொ .ஆ) 1290 காலத்தியவர்

கல்வெட்டில் ஒரு ஸப்தஸ்லோகி ( ஏழு செய்யுட்கள்) இருக்கிறது.வந்தலி என்னும் இடத்தில் உள்ள இக்கல்வெட்டு ராஜ்கோட் மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ள ஒரு கல்வெட்டைப் போல இருப்பதால் அதையும் இவர்தான் பாடி யிருக்க வேண்டும் என்று ஊகிக்கமுடிகிறது

வந்தலியில் நமக்குக் கிடைக்கும் ஏழு செய்யுட்களில் ஒன்று இதோ :

ச்ருங்கார பங்கிசஸு பகாஹா  சுபகானவீ சிவாசாலகண்டகுஹரா முஹராத்த வீணாஹா

காயந்தி ………… கிரா நகராஜச்ருங்கமாருஹ்ய  குஹ்யக சகோர த்ருசோ யசோ ஸ்ய

கல்வெட்டுகளில் காணப்படும் அத்தனை கவிதைகளையும் படி எடுத்து மொழிபெயர்ப்புடன் வெளியிடுவது நமது கடமை.

Xxx

காளிதாசனைப் பின்பற்றும் சமணமதப் புலவர்

கர்நாடக மாநில ஐஹோலவில் (அய்கொள) உள்ள சமண சமய ஸம்ஸ்க்ருதப் புலவர் ரவிகீர்த்தியின் கல்வெட்டு மிகவும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது . ஸத்யாஸ்ரய என்னும் சாளுக்கிய அரசன் இரண்டாம் புலிகேசியின் காலத்தைச் சேர் ந்தது . கிபி. 634.

புலவரும் துறவியூமான ரவி கீர்த்தி கட்டிய சமணர் கோவில் பற்றி அவரே பாடிய செய்யுட்களில் காளிதாசன், பாரவி ஆகியோரின் பெயர்கள் வருவதால் அக்காலத்திலேயே காளிதாசன் புகழ் கர்நாடகம் வரை பரவி இருந்தது உறுதி ஆகிறது அவர் அலங்கார சாஸ்திரம் என்னும் செய்யுள் இயலையும் நன்கு அறிந்தவர் என்பது இவர் இயற்றிய கவிகளில் இருந்து தெரிகிறது பாரவியின் கிரார்த்தஜூனியம், காளிதாசனின் ரகு வம்சம் நூல்களில் உள்ள சொல்லோவியங்களை ரவி கீர்த்தி கையாளுவதால் அவர் சம்ஸ்க்ருத இலக்கியத்தை நன்கு கற்றவர் என்பதையும் அறிய முடிகிறது  வரலாறு , இலக்கியம் இரண்டையும் காட்டுவதால் இந்தக் கல்வெட்டு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது .

–சுபம் –tags- அனுமதி தேவி, மாதவ, சப்தஸ்லோகி , செளராஷ்டிர , பீஹார் 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: