
Post No. 11,212
Date uploaded in London – – 22 AUGUST 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
மூளை ஆற்றலைக் கூட்ட 10 திரைப்படங்களைப் பாருங்கள்!
ச.நாகராஜன்
பிரபல மூளை இயல் நிபுணரான டேவிட் டிசால்வோ மூளை ஆற்றலை முழுதுமாகப் புரிந்து கொள்வதையும் அதை எப்படிக் கூட்டுவது என்பது பற்றியும் அருமையான ஒரு நூலை எழுதி இருக்கிறார்.
What Makes Your Brain Happy and Why You Should do the opposite என்ற இவரது புத்தகம் 15 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு பல்லாயிரம் பேர்களால் படிக்கப்பட்டது. ஃபோர்பஸ், சைக்காலஜி டு டே போன்ற பத்திரிகைகளில் எழுதி வருபவர் இவர்.
அவரது இன்னொரு புத்தகம் Brain Changer – How Harnessing Your Brain’s Power To Adapt Can Change Your Life.
இதில் ஏராளமான பயனுள்ள தகவல்களை அவர் தந்துள்ளார்.
அவற்றில் ஒன்று – அவர் பரிந்துரைக்கும் பத்து திரைப்படங்களைப் பாருங்கள் என்பது தான்.
படங்களைப் பற்றிய சுருக்கமான தகவல்கள் இதோ:
1) Adaptation (2002) Director Spike Jonze
Narration narrating narrated narrative – தலை சுற்றுகிறதா? விவரிக்கப்பட்ட ஒரு விவரணத்தை விவரிக்கும் விவரணம்! அது தான் அருமையான இந்தப் படம். பிரக்ஞை (Consciousness) எப்படி விவரணத்துடன் சம்பந்தப்பட்டுள்ளது என்பதைச் சித்தரிக்கிறது இது.
2) Barcelona (1994) Director and Writer : Whit Stillman
பார்த்தால் பிரமிக்க வைக்கும் படம் இது. இதே இயக்குநர் The Last days of Disco என்ற படத்தை எடுத்துள்ளார். இவரது வசனம் தான் பிரமிக்க வைக்கும் நம்மை.
3) The Diving Bell and the Butterfly (2007) Director : Julian Schnabel
பிரபலமான ஒருவருக்கு திடீரென்று பேச முடியவில்லை; நகர முடியவில்லை. இடது கண்ணை சிமிட்ட மட்டும் முடிகிறது. அவர் எப்படி உலகத்துடன் தன்னை இணைத்துக் கொள்கிறார். அவருடன் சேர்ந்து செய்யும் ஒரு பயணம் தான் இந்தப் படம்.
4) Rectorum (2005) Director : Bent hamer
சார்லஸ் புகோவ்ஸ்கி என்ற எழுத்தாளரின் எழுத்தின் அடிப்படையில் உருவானது இது. குழப்பம், ஏமாற்றம்! இதிலிருந்து மீண்டு சுயமாக தன்னைக் கண்டுபிடிப்பதைக் காட்டும் படம் இது.
5) The Grey (2011) Director L Joe Carnahan
கதையின் பிரதானமான பாத்திரம் ஃப்ளாஷ்பேக்கில் தனது கடந்த கால வாழ்க்கையை நினைத்துப் பார்க்கிறார். அவர் எதிர்கொள்ளும் சவால்களை அவரோடு பயணித்து இந்தப் படத்தில் பார்க்கலாம்.
6) The Insider (1999) Director : Michael Mann
ஒரு மனிதர் தனது குடும்பத்தை இழக்கிறார்; தனது தொழிலை இழக்கிறார்.எப்படி அவர் மாறுகிறார் – இந்தப் படத்தில் காணலாம்.
7) The Salton Sea (2002) Director : D.J.Caruso
தான் யார் என்பதை நிஜமாக உணர்ந்த ஒருவர் ஒரு புது வாழ்க்கையைத் தொடங்குகிறார். அதைச் சித்தரிக்கும் படம் இது.
8) The Spanish Prisoner (1997) ) Director (and Writer) : David Mamet
கண்ணால் பார்ப்பதைப் போலத் தான் ஒருவர் நிஜமாக இருக்கிறாரா? படத்தின் ஹீரோ எப்படி மாறுகிறார் என்பதை அருமையாக விவரிக்கிறது இந்தப் படம்.
9) There Will be Blodd (2007) ) Director : Paul Thomas Anderson
எண்ணெய் நிறுவனத்தில் பெரும் புள்ளி. எப்படி வெற்றி பெறுகிறார்? இந்தப் படம் சித்தரிக்கிறது.
10) Vanilla Sky (2001) ) Director : Cameron Crowe
ஆழ்மனம் சக்தி வாய்ந்தது, அது வாழ்க்கையை புனரமைக்க வல்லது. நீங்கள் விரும்பும் வகையில் சிறிது சிறிதாக முன்னேற முடியும். இதைச் சொல்கிறது இந்தப் படம்.
நினைத்தபடி வாழ முடியுமா? உங்கள் ஆழ்மனம் இதற்கு உதவுமா? இந்த இரு கேள்விகளுக்கு விடை இந்தப் படத்தைப் பார்க்கும் போது கிடைக்கும்!
ஆக பத்து படங்களைப் பார்த்து விட்டு ஆஹா என்று சொல்பவருக்கு அவர் இன்னும் முப்பது படங்களைப் பரிந்துரைக்கிறார்.
அதைப் பின்னர் பார்ப்போம்.
***
புத்தக அறிமுகம் – 36
கொங்கு மண்டல சித்தர்கள், புலவர்கள், தலங்கள்!

பொருளடக்கம்
அத்தியாயங்கள்
முதல் பகுதி : கொங்குமண்டல சதகம் தரும் சித்தர் வரலாறுகள்
1. அகத்தியர் சிவலிங்க பூஜை செய்த இடம்!
4. அதிசயம் அநேகமுற்ற பழனி மலையில் வசித்த போகர்!
5. செம்பைப் பொன்னாக்கி அனைவருக்கும் தந்த கொங்கண சித்தர்!
இரண்டாம் பகுதி : கொங்குமண்டல சதகம் தரும் புலவர் வரலாறுகள்
7. சுந்தர மூர்த்தி நாயனாருக்கு சிவபிரான் பொன் கொடுத்த வரலாறு!
8. கம்பர் தமிழுக்குத் தந்த கலியாண வரி!
9. ஔவையாருக்குத் தங்க இலையில் அன்னமிட்டவன் யார்?
12. கவிதார்க்கிக சிங்கம் வேதாந்த தேசிகர் பரமத பங்கம் எங்கு இயற்றினார்?
13. கபிலதேவ நாயனார் போற்றிய செங்குன்றூர்!
14. இராமானுஜரை ஆதரித்த கொங்கு பிராட்டியார்!
15. பட்ட மரம் தழைக்கக் கவி பாடிய காழிப் புலவன்!
16. சாமிநாதப் புலவன் நெற்போர்கள் எரியப் பாடிய வசை வெண்பா!
17. உரிச்சொல் நிகண்டு எனும் வெண்பா நூலை இயற்றியவர்!
18. அடியார்க்கு நல்லார் பிறந்த ஊர் எது?
மூன்றாம் பகுதி – கொங்குமண்டல சதகம் தரும் தலங்கள் பற்றிய வரலாறுகள்
19. அகத்தியரின் கைப்பிடியில் அடங்கிய சிவபெருமான்!
20. பொன்னுலகம் தரும் வாலிப காசி எந்த ஊர் தெரியுமா?
21. திருத்தலங்களில் வேடுபறி நிகழ்ச்சி நடக்கக் காரணம் என்ன?
22. பேரூர் நந்தியின் முகம் வெட்டப்பட்டு பின் மீண்டும் வளர்ந்தது ஏன்?
24. இடும்பாசுரன் காவடியாகத் தூக்கி வந்த மலைகள்!
25. மொக்கணீசுரர் என்ற திருநாமம் சிவனுக்கு ஏன் உண்டாயிற்று?
27. சிதம்பரம் கோவிலுக்குப் பொன் வேய்ந்தது எப்படி?
28. இளங்கோவடிகள் சொல்லி அருளிய வேலனின் தலம் எது?
29. சித்தன் வாழ்வைப் புகழ்ந்து பாடிய ஔவை!
30. வயோதிகன் குமரன் ஆன விந்தைச் சம்பவம்!
31. கற்பணிக் கோவிலும் எண்கோணமான குளமும் அமைத்த கட்டி முதலி!
32. மலையைக் குடைந்து அரங்கநாதன் ஆலயம் அமைத்த அதியன்!
பாடல் முதல் குறிப்பும், பாடல் எண்ணும், வரலாறும்
*
நூலில் நான் வழங்கிய என்னுரை இது :
என்னுரை
தமிழகத்தின் தலை சிறந்த மண்டலங்களுள் ஒன்று கொங்கு மண்டலம்.
தங்கம் நிகர் கொங்குமண்டலத்தின் புகழ் பல நூறு வரலாறுகளைக் கொண்டது.
அவற்றில் அருமையான நூறு வரலாறுகளைத் தொகுத்தார் கார்மேகக் கவிஞர் என்னும் பெரும் புலவர்.
கொங்குமண்டலத்தில் குறும்பு நாட்டில் விஜயமங்கலம் என்னும் ஊரில் ஸ்ரீ வத்ஸ கோத்திரத்தில் ஔபாக்கிய சூத்திரம் விருத்தானிய யோகசாகை காசிபப் பிரவரணம் ஜைன பிராமண குலத்தில் பத்மநாப ஐயர் என்பாருக்கு இவர் மகனாகப் பிறந்தார். மேகம் பொழிவது போல் கவிதை மழை பொழிவதால் இவர் கார்மேகக் கவிஞர் என்று அழைக்கப்பட்டார். இவரது வரலாறு சிறப்பான ஒன்று. இவர் இயற்றிய அரும் நூலே கொங்குமண்டல சதகம்.
கொங்குமண்டல சதகம் என்னும் நூறு பாக்கள் அடங்கிய நூலில் கொங்குமண்டலத்தின் பெருமை அனைத்தும் அடக்கிய இவரது புலமை வியக்க வைக்கும் ஒன்று. கொங்குமண்டலம் பற்றி அறிய விரும்புவோரும் தமிழகத்தின் தலையாய வளர்ச்சியையும் பண்பாட்டையும் அறிய விரும்புவோரும் தமிழ்ச் சுவையைச் சுவைக்க விரும்புவோரும் படிக்க வேண்டிய அரிய நூல் இது.
இதில் கூறும் வரலாறுகளைக் கட்டுரைகளாகத் தொகுத்தேன்.
இந்தக் கட்டுரைகள் www.tamilandvedas.com-ல் அவ்வப்பொழுது வெளியிடப்பட்டு வந்தன.
இந்த வரலாறுகளில் 32 வரலாறுகள் முதல் பாகமாக இப்போது வெளியிடப் படுகிறது.
இதைத் தொடராக வெளியிட்ட லண்டன் திரு ச. சுவாமிநாதன் அவர்களுக்கு எனது நன்றி.
இந்த நூலை டிஜிடல் வடிவமாக வெளியிட முன் வந்த பெங்களூர் நிறுவனமான PUSTAKA DIGITAL MEDIAவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவராஜ் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ் மீது ஆர்வம் கொண்ட அனைத்து மக்களும் இதைப் படித்து உத்வேகம் பெற்றுத் தமிழைப் போற்றி வளர்ப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் இதைத் தமிழ் அன்பர்களுக்குச் சமர்ப்பிக்கிறேன். அனைவருக்கும் எனது நன்றி.
பங்களூர்
10-3-2022
ச.நாகராஜன்
*
நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.
இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.
சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in
என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்
தொடர்புக்கான தொலைபேசி எண் : 9980387852
**