

Post No. 11,216
Date uploaded in London – 23 AUGUST 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
குஜராத்தின் புகழ்பெற்ற சமண முனிவர் ஹேமசந்திர சூரியின் சீடர் ராமசந்திர சூரி.இவரைப் பற்றிய அரிய தகவல்களைத் தருகிறது தோல்கா (Dholka வட குஜராத்) கல்வெட்டு. இது 12-ம் நூற்றாண்டுக் கல்வெட்டு.
அச்சுப் பொறித்த்தாற்போல அழகிய எழுத்துக்களில் உள்ள கல்வெட்டுத் துண்டில் எண் 71 முதல் 103 வரையுள்ள பாடல்கள் மட்டும் கிடைத்துள்ளன. முதல் 70 பாடல்களைக் கொண்ட கல்வெட்டுகள் கிடைக்கவில்லை .
கடைசி பாடலை மட்டும் காண்போம்
ப்ரபந்த சத நிர்மிதிப்ரதித கீர்த்திகாம்யோதயஹ
ப்ரசஸ்திமதுலாமிமாமக்ருத ராமசந்த்ரோ முனிஹி
இதிலிருந்து அவர் 100 பாடல்களைக் கொண்ட பிரபந்தம் எழுதியது தெரிகிறது. ஆனால் முதல் 70 பாடல்களைக் கொண்ட கல்வெட்டுகள் இதுவரை கிடைக்கவில்லை. 35 செய்யட்கள் மட்டுமே நமக்கு கிடைத்திருக்கின்றன.
அவர் எழுதிய நாடகங்கள்
நள விலாஸ , யது விலாஸ, ஸத்ய ஹரிச்சந்திர, நிர்பய பீம வ்யாயோயக , மல்லிகா மகரந்த , ராகவாப்யுதய , ரோஹிணி ம்ருகாங்க , வனமாலா நாடிகா , கெளமுதீ மித்ரானந்த, யாதவாப்யுதய , ரகு விலாஸ, குமார ரவி ஹாரா சதக .
இவை அனைத்தும் கிடைத்துவிட்டன. சுதா கலச என்ற பாடல் தொகுப்பையும் இவர் இயற்றினார் குண சந்த்ர சூரி என்பவருட இணைந்து அவர் எழுதிய நாட்யதர்பண என்ற நூலும் கிடைத்திருக்கிறது . அவர் கி.பி (பொ .ஆ.) 1110 முதல் 1173 வரை வாழ்ந்தார் குஜராத் சாளுக்கிய வம்ச அரசர்கள் சித்தராஜ ஜெயசிம்ஹ, மற்றும் குமாரபால ஆகியோரின் ஆஸ்தான புலவராகவும் இருந்தார்..அவருடைய இலக்கிய படைப்புகளைக் கண்டு வியந்த மன்னன் சித்தராஜ ஜெயசிம்மன், புலவருக்கு ‘கவி கடார மல்ல’ என்ற சிறப்பு விருது வழங்கினார் .மன்னருக்கு முன்னர் நடந்த வாக்குவாதத்தில் அவர் திகம்பர சமணப் பிரிவினைச் சார்ந்த ஒரு அறிஞரை வென்றார். அவருக்கு ஒரு கண் தெரியாது என்பதும் வரலாற்றுக்குறிப்பில் காணப்படுகிறது..
Xxx
யசோதர்மன் புகழ் பாடிய கவி வாஸுல
ஹூண மன்னன் மிஹிரகுலனைத் தோற்கடித்த மன்னன் யசோதர்மன் ஆவார் . கல்வெட்டின் காலம் பொது ஆண்டு (கி.பி.) 532. கக்க என்பவரின் மகனான வாஸுல இயற்றிய கவிதைகள் மாண்டசோர் தூண் கல்வெட்டில் செதுக்கப்பட்டுள்ளது. ஒன்பதே செய்யுட்களானாலும் நல்ல தரமான கவிதைகள் அவை.
நல்ல கற்பனைத் திறனைக்கொண்ட அவரது பாடலின் ஒரு பகுதி இதோ :
காமேவோண்மாதுமூர்த்வம் விகணயிதுமிவ ஜ்யோதிஷாம் சக்ரவாளம்
நிர்தேஷ்ட்டும் மார்கமுச்சைர்திவ இவ ஸுக்ருதோ பார்ஜிதாயாஹா ஸ்வ கீர்த்தே …….
இதே போல எட்டாவது பாடலின் பிற்பகுதியும் இவர் கற்பனை சிறகடித்துப் ப றப்பதைக் காட்டும்:
இத்யுத்கர்ஷம் குணானாம் லிகிதுமிவ யசோதர்மண ஸ் சந்த்ரபிம்பே
ராகாதுத் க்ஷிப்த உச்சைர் புஜ இவ ருசிமான்யஹ ப்ரு திவ்யாம் விபாதி
மேலும் 28 கவிகளைக் கொண்ட மற்றும் ஒரு மாண்டசோர் கல்வெட்டையும் இவரே செய்ததாகத் தெரிகிறது . மன்னர்கள் யசோதர்மன் மற்றும் விஷ்ணுவர்தனனின் (பொ .ஆ.532) புகழ்பாடும் பிரசஸ்தி இது.
புலவர் பெயர் இல்லாவிடினும் ஒரே ஆண்டு மூலமாகவும் கல்வெட்டைச் செதுக்கிய சிற்பி கோவிந்தன் என்ற பெயர் மூலமாகவும் ஒரே புலவர் யாத்தவை என்பதை அறிய முடிகிறது.
Xxx
அரிய ஸம்ஸ்க்ருத நாடகம்

சம்ஸ்க்ருத மொழியில் உள்ள நாடகங்கள் எண்ணிலடங்கா. தமிழில் 2000 ஆண்டுகளில் எழுதப்பட்ட ஒரு நாடகமும் நமக்குக் கிடைக்காதது தமிழர்களின் துர்பாக்கியமே.
சம்ஸ்க்ருத மொழியில் உள்ள நாடகங்களின் பெயர்களையும் ஆசிரியர் பெயர்களையும் மட்டும் எழுதினாலேயே ஒரு புஸ்தகம் அளவுக்குப் பெரிதாகிவிடும் !
நாலாம் விக்ரஹ ராஜதேவ என்பவர் அருணாராஜனின் புதல்வர். இவர் ஆஜ்மீர்-சாகம்பரியை (Rajasthan) ஆண்ட சிற்றரசர். ஆண்டு; 1153-1164. அவர் இயற்றிய நாடகத்தின் பெயர் ஹரகேளி நாடகம். இது ஒரு அருமையான நாடகம். இவருக்கு 1000 ஆண்டுகளுக்கு முன்னர் கி.மு. முதல் நூற்றாண்டில் காளிதாசன் நாடகம் இயற்றினான். அவருக்கு முன்னர் பாஷா எழுதிய நாடகங்களும் கிடைத்து இருக்கின்றன. ஆயினும் 1000 ஆண்டுக்குப் பின்னரும் அதே போல ஒரு சுவை குன்றாத நாடகம் எழுதியவர் விக்ரஹ ராஜ தேவ ஆவார். அர்ஜுனனும் சிவ பிரானும் போட்ட சண்டை பற்றியது இது.
ஆஜ்மீர் (Rajasthan) ஸம்ஸ்க்ருதக் கல்லூரியில் கல்வெட்டு இருந்தது . ஸம்ஸ்க்ருத கல்லூரியாக இருந்த இடத்தைப் பின்னர் முஸ்லீம்கள் மசூதி ஆக்கிவிட்டனர்
போஜ மன்னனின் நண்பனும் ஹுன வம்சத்தில் தோன்றியவனுமான பாஸ்கர என்பவன் இதைப் படி எடுத்துள்ளான். ஆயினும் முழு நாடகம் கிடைக்கவில்லை.
புலவரும் மன்னருமான விக்ரஹாராஜதேவ இறந்த பின்னர் , உலகம் புலவர்களின் நண்பர்கள் இல்லாத அளவுக்கு வறியதாகிவிட்டதாம் !!
-சுபம்-
TAGS- விக்ரஹாராஜதேவ, ஆஜ்மீர் , கல்லூரி, சம்ஸ்க்ருத,, நாடகங்கள், ராமசந்திர சூரி.,தோல்கா, யசோதர்மன் , வாஸுல