கவிதை அழகு ‘சாமாயாமா மாயா மாஸா மாரா நாயா யானா ராமா’ (Post.11,221)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,221

Date uploaded in London – 25 AUGUST 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

ஸம்ஸ்க்ருதத்தில் ஒரே எழுத்தை வைத்து அமைக்கும் அழகான கவிதைகள் உண்டு. இவைகளை சித்திரபந்தம் என்பர். தண்டின் (Dandin) என்னும் புலவர், மொழி அறிஞர் , இலக்கண வித்தகர் , கதாசிரியர் சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தார். அவர் எழுதிய தச குமார சரித்திரம், அவந்தி சுந்தரி என்னும் கதை, காவ்யா தரிசனம் என்னும் செய்யுள் இயல் நூல்கள் மிகவும் பிரபலமானவை. அலங்கார சாஸ்திரம் என்னும் யாப்பு அணி நூல் வகையைச் சேர்ந்தது காவ்யாதர்ச என்னும் நூல்.

இவருடைய தச குமார சரித்திரத்தைப் பின்பற்றி இத்தாலிய கதாசிரியர் பொகாஸியோ (Boccaccio)  டெக்காமரன் (Decameron) என்ற கதையை எழுதியுள்ளார்.

காவ்யா தர்சன் ( தமிழில் காவ்யதரிசனம்) என்னும் நூலில் இவர் பல உதாரண செய்யுட்களைத் தந்துள்ளார். சித்ரபந்தம் என்பது எழுத்துக்களை    பலவகைகளில் வைத்து பொருள்படைத்த செய்யுட்களை இயற்றுவதாகும். இவைகளை சப்தாலங்காரம் என்னும் அத்தியாயத்தில் அவர் விளக்குகிறார். ஸ்வர என்னும் உயிர்/ ஓசை நய எழுத்துக்களை வைத்தோ, வர்ண என்னும் (உயிர்) மெய் எழுத்துக்களை வைத்தோ அல்லது சொற்கள் பிறக்கும் இடத்தை வைத்தோ இவைகளை இயற்றலாம்.

ஒரே ஸ்வரமுள்ள கவிதைக்கு எடுத்துக்காட்டாக தண்டின் தரும் செய்யுள் இதோ ,

ஸாமாயாமா மாயாமாஸா

மாராநாயா யாணா  ராமா

யாணா வாரா  ராவா நாயா

மாயா ராமா மாரா யாமா

xxx

ஒரே உயிர் மெய்யெழுத்தைப் பயன்படுத்தும் கவிதைக்கு எடுத்துக் காட்டாக அவர் தரும் செய்யுள் ,

நூனம் நுன்னானி நானேன நானநெனா நானானி நஹ

நானேன நனு நானூ நெனை நெனா நானினோ நினீஹி

xxx

ஒரே இடத்தில் பிறக்கும்  எழுத்துக்களை வைத்து (உச்சாரண ஸ்தானாணி) அமைத்த கவிதைக்கான எடுத்துக் காட்டையும் தண்டின் எழுதியுள்ளார் ,

அகா காங்கான் ககா காக காஹகாககஹ

அஹாஹாங்க கான் காக கன்கா கக காகக

இவை அனைத்தும் சம்ஸ்க்ருத இலக்கணததை ஒட்டி எழுதப்பட்டவை. பொருளும் உடையவை. வெறும் ஒலிகள்/ சப்தங்கள் அல்ல .

இவைகளை எடுத்துக்காட்டிய ஸ்ருதிதாரா சக்ரவர்த்தி இவற்றின் பொருளைத் தரவில்லை ‘சம்ஸ்க்ருத செய்யுள் இயலின் மீது பாணினியின் தாக்கம்’ என்ற ஆங்கில நூலில் இவற்றைத் தந்துள்ளார்.

(ஸம்ஸ்க்ருத மொழியை நன்கு கற்றோரிடமிருந்து  பொருளை அறிந்து எழுதுவேன்.)

XXX

ஆயிரம் பேர் வணங்குவோனை முப்பது என்பதா !!

எண்களை வைத்து இந்திரனுக்கு இரண்டு பெயர்கள் உண்டு

கண்ணாயிரம் – ஆயிரம் கண்களை உடையவன் ;

முப்பதின் தலைவன்  – த்ரி தச அதிபன் (த்ரிதசாதிப)

அதாவது 33 தேவர்களிள் தலைவன் .

அரசர்களை இந்திரன் என்று புகழ்வது உண்டு.

மஹேந்திர பல்லவன்

ராஜேந்திர சோழன்

நரேந்திர மோடி

என்பதை நாம் அறிவோம் .

ஒரு புலவர் இந்த எண்களை வைத்து கவி அமைத்து வியக்கிறார்!

மஹேந்திர துல்யம் கவயோ பவந்தம்

வதந்து  கிம் தான் இஹ வாரயாமஹ

பவான் ஸஹஸ்ரைஹி  ஸமுபாஸ்யமானஹ 

கதம் ஸமானஸ்  த்ரிதஸாதிபேன

பொருள்

அரசனை கவிஞர்கள் இந்திரனே என்று புகழ்கிறார்கள் ; அதாவது இந்திரனுக்குச் சமமானவன் என்ற பொருளில்.

ஆயிரம்  பேரால் வணங்கப்படும் அரசனை முப்பது பேரின் தலைவனுக்கச் சமம் என்று எப்படிக் கூற முடியும் ?

இதை எடுத்துக் காட்டகத் தரும் ஜகந்நாத பண்டிதர் இதுவும் பாணினி இலக்கணப்படி அமைந்த கவிதைதான் என்றும் பாணினியின் ஸமாஸ விதிகள் (பஹுவ்ரீஹி , தத்புருஷ சமாசங்கள்) இங்கே பயன்படுகின்றன என்றும் எழுதியுள்ளார் .

–சுபம்—

Tags- சித்திரபந்தம், ஜகந்நாத பண்டிதர், இந்திரன், காவ்யதரிசனம், தண்டின், Dandin, Kavyadarsa

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: