
WRITTEN BY S NAGARAJAN
Post No. 11,223
Date uploaded in London – – 29 AUGUST 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
(மூட) நம்பிக்கைகள்?!
ச.நாகராஜன்
ஒவ்வொரு நாகரிகத்திலும், ஒவ்வொரு இனத்திலும், ஒவ்வொரு மதத்திலும் வெவ்வேறு நம்பிக்கைகள் காலம் காலமாக இருந்து வருகின்றன.
இவற்றை மூட நம்பிக்கைகள் என்று பொதுவாகச் சொல்லி விடுவார்கள். ஆனால் கடைப்பிடிப்பதை என்னவோ குறிப்பிட்ட இனத்தையோ இடத்தையோ மதத்தையோ சார்ந்தவர்கள் விடுவதில்லை.
ஐயோனா ஓபி (Iona Opie)மற்று மரியா டாடெம் (Moria Tatem) ஆகிய இரு பெண்மணிகள் உலகெங்கும் கடைப்பிடிக்கப்படும் நம்பிக்கைகளைத் தொகுத்து டிக்ஷனரி ஆஃப் சூபர்ஸ்டிஷனஸ் என்ற நூலை வெளியிட்டுள்ளனர்.
உலகெங்கும் கடைப்பிடிக்கப்படும் இந்த (மூட) நம்பிக்கைகளைப் பார்த்து வியக்கிறோம். அதைக் கடைப்பிடிக்காவிடில் ஏற்படும் ஆபத்துக்கள், விபத்துக்கள், மரணங்கள் பற்றியும் விளக்கங்களைக் காண்பிக்கும் போது பிரமிக்கிறோம்.
அவற்றைக் கடைப்பிடிக்காததால் ஏற்பட்ட விபத்துக்களையும், மரணங்களையும் பற்றிய விவரங்களும் கூட சில இடங்களில் இந்த நூலில் தரப்பட்டுள்ளது.
சில நம்பிக்கைகள் இதோ:
1) திங்கள் கிழமை : திங்களன்று எதையும் ஆரம்பிக்காதே. அயர்லாந்தில் எந்தக் கிழமையில் காலை நேரத்தில் எதை வேண்டுமானாலும் ஆரம்பிக்கலாம். ஆனால் திங்கள் கிழமையன்று மட்டும் எதையும் ஆரம்பிக்கக் கூடாது!
2) திங்கள் கிழமை என்று ஒரு பெண்மணி ஒரு கம்பெனியில் சொல்லி விட்டால் அந்தக் கம்பெனிக்கு துரதிர்ஷ்டம் தான்; அதையே ஆண் சொல்லி விட்டாலோ அந்த கம்பெனிக்கு அதிர்ஷ்டம் தான்!
3) செவ்வாய் : உழுதல், நடுதல், அறுவடை செய்தல் எல்லாவற்றிற்கும் உகந்த நாள் செவ்வாய்கிழமை தான்!
4) ஞாயிற்றுக்கிழமை செய்யும் எந்த வேலையும் திங்களோடு முடிந்து போகும். எதையும் ஞாயிறு அன்று செய்யாதே.
5) ஞாயிற்றுக்கிழமை எதையும் செய்யாதே; செய்தால் அதில் ஒவ்வொரு முறையும் ஒரு கோளாறு ஏற்படும்.
6) வெள்ளிக்கிழமை வந்தது என்றால் போதும், பெண்மணிகள் எல்லோரும் வாரத்தின் துரதிர்ஷ்டமான நாள் வந்து விட்டது என்று கூறுவார்கள்.
7) வெள்ளிக்கிழமை பயணத்தைத் தொடங்காதே. தொடங்கினால் எந்த உல்லாசப் பயணமும் வெற்றி பெறாது.
8) சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் துரதிர்ஷ்டமான நாட்கள். வேலைக்காரர்கள் தங்கள் இடங்களுக்குப் போகவே மாட்டார்கள். அதனால் தான் பழமொழியே வந்தது இப்படி – Saturday servants never stay ; Sunday servants runaway!
9) 13 என்பது மிகவும் மோசமானது. ஒரு அறையில் 13 பேர் கூடினார்கள் என்றால் அதில் ஒருவர் ஒரு வருடத்திற்குள் இறந்து போவார்.
10) ஒரு டேபிளில் பதிமூன்றாவது ஆளாக உட்காராதே; உட்கார்ந்தால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை.
11) பச்சை: பச்சை நிறம் மிகவும் துரதிர்ஷ்டமான நிறம். புது மணத் தம்பதிகள் நீல உடையையே தேர்ந்தெடுக்க வேண்டும். பச்சை நிறம் இடம் பெற்றாலோ, அவ்வளவு தான்!
12) பெண்மணிகளைப் பாதுகாப்பது நீல நிறம் தான். பெண்மணிகள் அனைவரும் கழுத்தைச் சுற்றி நீல நிற கம்பளித் துணியைச் சுற்றிக் கொள்வர். நீல நிற நெக்லஸ் மாலைகள் பெரும் பாதுகாப்பைத் தரும்.
13) மணப்பெண் ஒரு போதும் திருமண நாளன்று அழக்கூடாது; சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு திருமணம் நடந்தால் வாழ்வில் இன்பம் இருக்காது; குழந்தைகள் நிலைக்காது.
14) மூன்று முடிச்சுகள் போடுவது உண்மை அன்பிற்கு அடையாளம். மெதுவாக அவள் காதில் இப்படி முணுமுணுத்துச் சொல் : She will, or She will not”
15) மே மாதம் மிகவும் ஆபத்தான மாதம்; அந்த மாதத்தில் தான் மந்திரவாதிகளும் ஆபத்தான பெண்மணிகளும் தங்கள் மாய வித்தைகளைக் காண்பிப்பர்.
16) மே மாதம் கல்யாணம் செய்து கொள்ளாதே; விதவையாகத் தான் போவாய். பழமொழி கூட உண்டு – Marry in May, rue for aye’ ; Of all the months It is worst to Wed in May; Of the marriages in May, The bairns die of a decay. ஏப்ரலிலும் ஜுனிலும் கல்யாணம் செய்யலாம்.
17) மூக்கு அரிக்கிறதா, உடனே ஒய்னைக் குடி.
18) சர்ச்சில் வடக்குப் புறம் உள்ள வாயில் பிசாசின் வாயில். பாப்டிஸம் சடங்கு நடக்கும் போது மட்டும் அது திறக்கப்படும். மற்ற வேளைகளில் மூடியே இருக்கும். திருமண தம்பதிகள் தெற்கு வாயிலின் வழியே தான் உள்ளே வர வேண்டும். ஒரு போதும் வடக்குப் பக்கத்திலிருந்து வரக் கூடாது.
19) உப்பு என்ற வார்த்தையை ஒரு போதும் கடலில் சொல்லக் கூடாது. உப்பு வேண்டுமென்றால் அந்தச் சொல்லக் கூடாத வார்த்தையை எடுத்துக் கொண்டு வா என்று தான் சொல்ல வேண்டும்.
20) கண் அரிக்கிறதா? ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு மாதிரியான நம்பிக்கை!
இடது கண் அரித்தால் அன்புக்குரியவரைப் பார்க்கலாம். இன்னொரு இடத்தில் வலது கண் அரித்தால் அதிர்ஷ்டம்!
ஷேக்ஸ்பியர் – ஒதெல்லோ – iv – iii – Mine eyes do itch; Doth that boade weeping?
N. Homes Daemonologie – “If their right eye itchth, it betokens sorrowful weeping, if the left …. Joyful laughter!
21) மூட நம்பிக்கைகள் பற்றிப் பலரும் பலவிதமாகச் சொல்லி இருக்கிறார்கள்!
A whole universitie of Doctors cannot roote these superstitious observations out of their minde. – John Milsot, Astrologer
Freedom from superstition is not necessarity a form of Widson – Robert Lnd, Solomon in All His Glory
***
புத்தக அறிமுகம் – 40
மஹாகவி பாரதியார் பற்றி அறிய உதவும் நூல்களும் கட்டுரைகளும்
பாகம் – 1

பொருளடக்கம்
2. யதுகிரி அம்மாள் – பாரதி நினைவுகள்
4. வெ.சாமிநாத சர்மா – நான் கண்ட நால்வர்
5. ரா.அ.பத்மநாபன் – பாரதி புதையல் மூன்றாம் தொகுதி
6. அமுதன் – பாரதியார் பிறந்த நாள்
8. P. Mahadevan – Subramania Bharati – Patriot and Poet
9. ரா.அ.பத்மநாபன் – பாரதியார் கவிநயம்
10. கு.ப.ராஜகோபாலன், பெ.கோ.சுந்தரராஜன் – கண்ணன் என் கவி
11. பி.ஸ்ரீ. – பாரதி நான் கண்டதும் கேட்டதும்
13. பெ.நா.அப்புஸ்வாமி – பாரதியை ஒட்டிய நினைவுகள்
14. பெ.நா.அப்புஸ்வாமி – பாரதியை ஒட்டிய நினைவுகள்
15. விஜயா பாரதி – ‘பாரதியாரின் Annotated Biography (With a National Historical Background) ’
16. ஏ.கே.செட்டியார் – குமரி மலர் கட்டுரைகள் – 1
17. ஏ.கே.செட்டியார் – குமரி மலர் கட்டுரைகள் – 2
18. ஏ.கே.செட்டியாரின் குமரி மலர் கட்டுரைகள் – 3
19. ஏ.கே.செட்டியாரின் குமரி மலர் கட்டுரைகள் – 4
20. ஏ.கே.செட்டியாரின் குமரி மலர் கட்டுரைகள் – 5
21. ஏ.கே. செட்டியாரின் குமரி மலர் கட்டுரைகள் – 6
22. ஏ.கே. செட்டியாரின் குமரி மலர் கட்டுரைகள் – 7
23. ஏ.கே. செட்டியாரின் குமரி மலர் கட்டுரைகள் – 8
24. ஏ.கே. செட்டியாரின் குமரி மலர் கட்டுரைகள் – 9
25. ஏ.கே. செட்டியாரின் குமரி மலர் கட்டுரைகள் – 10
26. ஏ.கே. செட்டியாரின் குமரி மலர் கட்டுரைகள் – 11
27. உ.வே.சாமிநாதையர் -பாரதியார் பற்றி நினைவு மஞ்சரி
28. ஹரிகிருஷ்ணன் – பாரதியும் ஏவிஎம்மும் – சில உண்மைகள்!
29. சின்ன அண்ணாமலை – சொன்னால் நம்ப மாட்டீர்கள்!
30. எஸ்.ஜி. ராமானுஜலு நாயுடு : சென்று போன சில நாட்கள்
*
நூலில் நான் வழங்கிய என்னுரை இது :
என்னுரை
பாரதியார் காலத்தை வென்ற மஹாகவி. அவரது சரித்திரம் ஆதாரபூர்வமாக, முழுமையாக இன்னும் வெளி வரவில்லை. ஆனால் அவரது மனைவி, மகள், அவருடன் பழகியவர்கள், அவரை நேசித்தவர்கள், அவரை அறிந்தவர்கள், அவரது நூல்களைப் படித்தவர்கள் அவ்வப்பொழுது பல செய்திகளைக் கட்டுரைகள் வாயிலாகவும் நூல்கள் வாயிலாகவும் தெரியப்படுத்தி வந்துள்ளனர்.
இந்த பாரதி இலக்கியம் பற்றிய கட்டுரைகளையும் நூல்களையும் படித்தால் பாரதியாரை அறிவதற்கான ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்.
சுமார் அறுபது ஆண்டுகளாகப் பாரதியைப் பயில்பவன் நான். அவருடைய கதைகள், கட்டுரைகள், கவிதைகளைச் சேர்த்து வைத்திருப்பதோடு மட்டுமல்லாமல் அவரைப் பற்றி வந்த கட்டுரைகளையும், கவிதைகளையும், நூல்களையும் சேர்த்து வருகிறேன்.
அவரைப் பற்றி போற்றிப் பாடிய கவிதைகள் ஆயிரத்தைத் தொகுத்து பாரதி போற்றி ஆயிரம் என்று ஒரு தொடரில் அவற்றை வெளியிட்டேன்.
பாரதியார் பற்றிய நூல்கள் என்ற தலைப்பில் www.tamilandvedas.comஇல் ஒரு தொடரில் அவரை அறிமுகப்படுத்தும் முக்கிய கட்டுரைகள் மற்றும் நூல்களையும் எழுதி வந்தேன். அவற்றில் முதல் முப்பது அத்தியாயங்களின் தொகுப்பே இந்த நூல்.
இதை பாரதி அன்பர்கள் படித்தால் ஒரு பேரின்பத்தை அடைவது நிச்சயம். மூல கட்டுரைகளையும் நூல்களையும் வாங்கிப் படிப்பதும் நிச்சயம்.
இதை வெளியிட்ட லண்டன் திரு சுவாமிநாதன் அவர்களுக்கு எனது நன்றி.
இந்தப் புத்தகத்தை வெளியிட முன் வந்த Pustaka Digital Mediaவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு என் நன்றி உரித்தாகுக!
இந்தத் தொடர் வெளிவந்த போது ஏராளமான பாரதி அன்பர்களும் தமிழ் இலக்கியத்தில் பற்றுக் கொண்டோரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் பாராட்டுகளை நல்கினர். அவர்கள் அனைவருக்கும் எனது நன்றி.
பாரதியைப் பயில உதவும் இலக்கியத்தைக் காண வாருங்கள் என அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன். நன்றி.
பங்களூர் ச.நாகராஜன்
3-3-2022
*
நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.
இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.
சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in
என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்
தொடர்புக்கான தொலைபேசி எண் : 9980387852
**