
Post No. 11,226
Date uploaded in London – 30 AUGUST 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
ஸத்ய பாமா – கிருஷ்ணன் உரையாடல்
ஸம்ஸ்க்ருதத்தைக் கற்க எளிதான வழி அந்த மொழியில் இருக்கும் வேடிக்கைக் கவிதைகளை கற்பதாகும். ஒரு ஆசிரியர் பதம் பிரித்துச் சொல்லுகையில் அதைப் புரிந்துகொண்டு கவிதையை மனப்பாடம் செய்தால் போதும் .
கிருஷ்ணனுடைய எட்டு மனைவியரில் இருவர் முக்கியமானவர்கள். ருக்மிணி , ஸத்ய பாமா ஆகிய இருவரும் பட்ட மஹிஷிகள் – அதாவது மஹா ராணிகள்.
அங்குல்யா கஹ கபாடம் ப்ரஹரதி விசிகே மாதவஹ கிம் வஸந்தோ
நோ சக்ரீ கிம் குலாலோ ந ஹி தரணீதரஹ கிம் த்விஜிஹ்வக பணீந்திரஹ
நாஹம் கோரா ஹிமர்தோ கிமுத கக பதிர்நோ ஹரிஹி கிம் கபீந்த்ரஹ
இத்யேவம் ஸத்யபாமா பிரதி வசன ஜிதஹ பாது வ சக்ரபாணி ஹி
ஸத்யபாமா – ஓ விசிக, கதவைத் தட்டுவது யார் என்று பார்.
கிருஷ்ண – நான் மாதவன்
ஸத்யபாமா ஓ , வஸந்தமா ? (மாதவ என்பதற்கு மற்றொரு பொருள் வசந்த காலம்)
கிருஷ்ண- நான் சக்ரீ , சக்கரத்தைக் கையில் ஏந்தியவன்.
ஸத்யபாமா – ஓஹோ, பானை செய்யும் குயவனா?
(சக்ரீ என்பதன் மற்றொரு பொருள் குயவன்)
கிருஷ்ண – இல்லை, நான் தரணீதரன் இந்த உலகையே தாங்கி நிற்பவன்)
ஸத்யபாமா– அப்படியானால் நீ ஒரு பாம்பா ?
(புராணக் கதைகளின்படி இந்த பூமி தரணீதர/ சேஷ நாகம் என்னும் பாம்பின் தலையில் உள்ளது)
கிருஷ்ண – இல்லை; நான் விஷப் பாம்பினைக் கொன்றவன்
(காளீய என்ற பாம்பினைக் கொன்றவன் கிருஷ்ணன் என்பதை எல்லோரும் அறிவர்)
ஸத்ய பாமா – ஓஹோ, நீ பாம்புகளைக் கொல்லும் கருடன்தானே?
கிருஷ்ண – இல்லை ; நான் ஹரி
ஸத்ய பாமா – ஓஹோ நீ குரங்கா? (ஹரி என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லுக்கு மற்றொரு அர்த்தம்- குரங்கு)
கவிஞர்- ஸத்ய பாமாவால் தோற்கடிக்கப்பட்ட பகவான் கிருஷ்ணன் உங்களைக் காப்பாற்றட்டும்.
சம்ஸ்க்ருத மொழியில் நிறைய வேடிக்கைக் கவிதைகள் இருக்கின்றன. அவற்றை ஆசிரியர் மூலம் பதம் பிரித்து கற்கும்போது அவை மறக்கவே மறக்காது.

XXX
வெண்ணை திருடிய கிருஷ்ணனும், அவனைப் பிடித்த கோபியும் நடத்திய உரையாடல்
ஸம்ஸ்க்ருத மொழியில் சுவையான சம்பாஷணைக் கவிதைகள் (உரையாடல்கள்) உண்டு. இதோ ஒரு கோபி- கிருஷ்ணன் உரையாடல்:
கஸ்த்வம் பால பலானுஜஹ த்வமிஹ கிம் மன்மந்திர சங்கயா
புத்தம் தம் நவநீதகும்ப விவரே ஹஸ்தம் கதம் ந்யஸ்யஸி
கர்தும் தத்ர பிபீலிகா பனயம் சுப்தாஹா கிமுத் போதிதா
பாலா வத்ச கதிம் விவேக்துமிதி ஸஞ்ஜல்பன் ஹரிஹி பாது வஹ
கோபி ; சின்னப் பையா, நீ யார் ?
கிருஷ்ணன் : நான் பலராமனின் தம்பி
(பல ராமனுக்கு எப்போதும் நல்ல பெயர் உண்டு; அதனால் அண்ணன் பெயரை உபயோகித்து தப்பிக்க கிருஷ்ணன் முயற்சிக்கிறான்)
கோபி : நீ ஏன் இங்கே இருக்கிறாய்?
கி: நான் இது என்னுடைய வீடு என்று நினைத்துவிட்டேன்
கோ: அது சரி, வெண்ணெய்ப் பானைக்குள் ஏன் கையை நுழைத்தாய்?
கி- அங்கேயிருந்த எறும்புகளை அகற்ற …
கோ- தூங்கிக் கொண்டிருந்த கன்றுக்குட்டியை ஏன் எழுப்பினாய்?
கி- அது எப்படி நகர்ந்து செல்லும் என்று பார்ப்பதற்காக …
கவிஞர் – இப்படி உளறிய கிருஷ்ணன் எல்லோரையும் காப்பாற்றுவானாகுக
இப்படிப்பட்ட கவிகள் மூலம் ஸம்ஸ்க்ருதம் கற்பது எளிதாகும் .
SOURCE: THE WONDER THAT IS SANSKRIT, SAMPAD & VIJAY, SRI AUROBINDO SOCIETY, PNDICHERRY, 2002
TRANSLATED FROM ENGLISH INTO TAMIL BY LONDON SWAMINATHAN
–சுபம்—
TAGS- சத்ய பாமா , ஸத்ய பாமா, ருக்மிணி , வெண்ணெய், கோபி, உரையாடல், கவிதை, சம்ஸ்க்ருதம்
