
Post No. 11,225
Date uploaded in London – – 30 AUGUST 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
செப்பு மொழி பத்தொன்பது!
ச.நாகராஜன்
1. நீங்கள் வாய் திறந்து சொல்லப் போகும் சொல் மௌனமாய் இருப்பதை விடச் சிறந்ததா?
2. மௌனம் என்பது காலம் காலமாக ‘அக உண்ணாவிரதம்’ எனக் கருதப்படும் ஒன்று. அது உங்களின் உண்மையை மட்டும் கேட்கும்.
3. சில சொற்களை மட்டும் சொல்பவரே மனிதரில் சிறந்தவர். – ஷேக்ஸ்பியர்
(Men of few words are the best men – Shakespeare)
4. உங்களை அனைவரும் நல்லவர் என்று நினைக்க வேண்டுமா? அப்படியானால் பேசாதீர்கள் – பாஸ்கல்
Do you wish people to believe good of you? Don’t Speak. – Pascal
5. நீ பேசும் சொற்களுக்கு தராசையும் எடைக் கற்களையும் வைத்துக் கொள்வதோடு உன் வாய்க்கு ஒரு கதவை மாட்டி அதற்கு தாழ்ப்பாளையும் போடு – (அபோர்க்ரிபா – எக்லெசியாஸ்டிகஸ்)
Make scales and weights for your words, and put a door with bolts across your mouth. (Apocrypha, Ecclesiasticus)
6. மற்றவர்களுடன் நீ தொடர்பு கொள்ளும் போது அவர்கள் மீது இரக்கம் கொண்டு குறைவாகப் பேசினால் அதன் பெரிய நன்மை அவர்கள் குறைவாக துன்பப்படுவார்கள் என்பது தான்!
7. அன்பாகப் பேச யாருக்கும் காசு கொடுக்க வேண்டாம் – வியட்நாம் பழமொழி’
8. பேசும் போது உரக்கப் பேசாதே; எதிர்மறையாகப் பேசாதே!
9. மௌனம் உன் உள்ளிருக்கும் கர்பக்ரஹத்திற்கான வாயில். அது இதயத்தின் கீதம்.
Silence is the threshold to the inner sanctum. Silence is the song of the heart.
10. சமன்பாடு சின்னது தான். கெட்ட பேச்சு வியாதியைத் தருகிறது. நல்ல பேச்சு ஆரோக்கியத்தையும் ஆறுதலையும் தருகிறது.
It is a simple equation. Wrong speech cause ill-being. Right speech brings about well-being and healing.
11. சந்தேகமாக இருக்கும் போது உண்மையைச் சொல்லி விடு – மார்க் ட்வெய்ன்
When in doubt, tell the truth. – Mark Twain
12. கிடைக்கின்ற எல்லா வாய்ப்புகளையும் உனக்கு நன்மை தரும்படி எடுத்துக் கொண்டு உன் வாயை மூடிக் கொள்.
Take advantage of all the opportunities to keep your mouth shut.
13. உனக்குப் புரியாததைப் பற்றிப் பேசாமல் இருப்பது உனக்கு மிகவும் நல்லது என்பதை நினைவில் கொள். – லாவோட்சு
Remember that it is better not to speak of things you do not understand. – Lao-tsu
14. நல்ல பேச்சின் இரண்டாவது பகுதி என்னவெனில் புதிதாகக் கண்டுபிடிப்பதிலிருந்தும் பெரிதுபடுத்துவதிலிருந்தும் விலகி இருப்பது தான்!
The Second part of Right speech is to refrain from inventing and exaggerating.
15. பேச்சை மற்றவர்களுக்கு விட்டு விடு!
Leave the talking to others.
16. சொல் என்பது ஒரு செயல் என்பதை நினைவில் கொள்.
Remember that a word is an action.
17. உன்னை நீயே கேட்டுக் கொள் : நிஜமாகவே சொல்வதற்கு ஏதாவது இருக்கிறதா?
Ask yourself: Does something really have to be said?
18. தப்பாகப் போகும் எந்த ஒரு விஷயத்திற்கும் ஆரம்பமே பேச்சு தான்!
Everything that goes wrong starts with speech.
19. நல்ல ஒரு நேர்மையான இதயத்தை உனது பேச்சு பின் தொடர்ந்து செல்லட்டும்!
Let your speech follow a good and honest heart.
***

புத்தக அறிமுகம் – 41
ஜோதிடம் பார்க்கும் முன் தெரிந்து கொள்ளுங்கள்!
பொருளடக்கம்
4. அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளுக்கு ஜோதிடரைக் கலந்து ஆலோசி!
5. ஜோதிடர் இல்லாத ஊரில் ஒரு நாள் கூட வசிக்காதே!
6. ஜோதிடம் பற்றியும் துர்நிமித்தம் பற்றியும் நாரதர் யுதிஷ்டிரருக்குக் கூறியது என்ன?
9. ஜோதிட மேதை ஸ்ரீ சூர்யநாராயண ராவ் – 1
10. ஜோதிட மேதை ஸ்ரீ சூர்யநாராயண ராவ் – 2
11. நுட்பமான ஜா கணிதம், சௌரமான ஸம்வத்ஸரம், சாந்திரமான ஸம்வத்ஸரம்!
14. விதி விளக்கம் – 3 வாரம், திதி, நட்சத்திரம், யோகம், கரணம்: பஞ்ச அங்க விளக்கம்
15. விதி விளக்கம் – 4 நட்சத்திர விளக்கம்
16. விதி விளக்கம் – 5 நட்சத்திர விளக்கத்தில் ராகுவும் கேதுவும்
17. விதி விளக்கம் – 6 சில முக்கிய குறிப்புகள்
18. காரிய வெற்றிக்கு எந்தக் கிழமைகளில் எதை ஆரம்பிக்கலாம்?
19.க்ருஹ ப்ரவேசம் செய்யும் போது கவனிக்க வேண்டியவை!
20. உங்களுக்கு மிக முக்கியமான ஜன்ம நட்சத்திரம்!
21. ராசிக்குரிய ராகங்களும், நவக்ரஹ கீர்த்தனை ராகங்களும்!
22. சாஸ்திரங்கள் கூறும் இரகசியங்கள்!
23. நல்ல சகுனங்களும் தீய சகுனங்களும்!
24. அறிவியல் வியக்கும் அங்க லட்சணம்!
25. நட்சத்திரங்கள் பூஜித்த தலங்கள்
26. நவக்கிரகங்கள் பூஜித்த தலங்கள்
27. பலன் தரும் நவக்ரஹ யந்திரங்கள்!
28. பலன் தரும் பரிஹார யந்திரங்கள்!
*
நூலில் நான் வழங்கிய என்னுரை இது :
என்னுரை
வாழ்க்கையில் நாம் காணும் பல அதிசயங்களுள் ஒன்று ஜோதிடம்.
பின்னால் நடப்பதை முன்னாலேயே ஒருவர் சரியாகக் கூறி விட்டால் பிரமிக்கிறோம்.
வேதாங்கம் ஆறு. அவற்றில் ஒன்று ஜோதிடம்.
இது உண்மையா? பலர் கூறுவது பலிப்பதே இல்லை. ஆகவே தான் இந்தக் கேள்வி எழுகிறது.
இதை மனதில் கொண்டு ஜோதிடத்தைப் பற்றி விரிவாக ஆராய ஆரம்பித்தேன்.
ஜோதிடம் உண்மையா?, ஜோதிட மேதைகளின் வரலாறு, நவகிரகங்கள், நட்சத்திர அதிசயங்களும் மர்மங்களும் ஆகிய புத்தகங்களையும் வெளியிட்டேன்.
எனது ஆய்வில் கிடைத்த முடிவு – ஜோதிடம் என்பது உண்மையே. ஆனால் மிக நுட்பமான இந்தக் கலையில் தேர்ச்சி பெற்றோர் மிகவும் குறைவானவரே! ஆகவே ஜோதிடர்கள் என்று கூறிக் கொள்வோரை சற்று கவனியுங்கள்.
பணத்திற்கு ஆசைப்பட்டு இயங்கும் போலி ஜோதிடர்களை அடையாளம் கண்டு ஒதுக்குங்கள்.
தொடர்ந்து ஶ்ரீ ஜோஸ்யம் உள்ளிட்ட இதழ்கள், www.tamilandvedas.com இணைய தள ப்ளாக் உள்ளிட்டவற்றில் பல கட்டுரைகளை எழுதி வந்தேன். அவற்றின் தொகுப்பே இந்த நூல்.
அன்றாடம் மனதில் எழும் பல அடிப்படையான கேள்விகளுக்கு விடை தருவது இந்த நூல்.
இந்தக் கட்டுரைகளை வெளியிட்ட ஞான ஆலயம் குழும ஆசிரியரான திருமதி மஞ்சுளா ரமேஷ், லண்டன் திரு சுவாமிநாதன் ஆகியோருக்கு எனது உளமார்ந்த நன்றி உரித்தாகுக.
இந்த புத்தகத்தில் வரும் ‘விதி விளக்கம்’ என்னும் நூலை எனக்கு அனுப்பி உதவியவர் எனது சம்பந்தி திரு ஆர்.சேஷாத்திரிநாதன் அவர்கள். ஏராளமான அருமையான எளிதில் கிடைக்காத பழைய நூல்களை அவ்வப்பொழுது எனக்கு அவர் அனுப்புவது வழக்கம். அவருக்கு எனது நன்றி.
இந்தக் கட்டுரைகள் வெளியான போது அவ்வப்பொழுது பாராட்டி மேலும் எழுத ஊக்கம் கொடுத்த அன்பர்களுக்கு எனது நன்றி.
இந்த நூலை அழகுற அமைத்து வெளியிட முன் வந்த Pustaka Digital Mediaவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக!
சான்பிரான்ஸிஸ்கோ
16-8-2022
ச.நாகராஜன்
*
நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.
இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.
சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in
என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்
தொடர்புக்கான தொலைபேசி எண் : 9980387852
**