எதிரிகளை ஒழிக்க வழி! (Post No.11,230)


WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,230

Date uploaded in London – –    1 SEPTEMBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

எதிரிகளை ஒழிக்க வழி!

ச.நாகராஜன்

 1

எதிரிகளை ஒழிக்க லிங்கனின் வழி!

 ஒரு முறை ஆபிரஹாம் லிங்கன் ஒரு கூட்டத்தில் தன்னை தீவிரமாக எதிர்த்தவர்களைப் பற்றி திட்டாமல் மிக்க அன்புடன் புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தார்.

இதைப் பார்த்த ஒரு பத்திரிகையாளருக்கு ஆச்சரியம் தாங்கவில்லை.

“ என்ன இப்படி உங்கள் எதிரிகளை நீங்கள் புகழ்ந்து பேசுகிறீர்களே! எதிரிகளை இல்லாமல் அல்லவா செய்ய வேண்டும்” என்று கேட்டார்.

உடனே லிங்கன், “அதைத் தானே நான் செய்து கொண்டிருக்கிறேன். எப்போது அவர்கள் எனது நண்பர்களாகி விடுகிறார்களோ அப்போதே எதிரி இல்லை என்று தானே அர்த்தம்” என்றார்.

 இது தான் லிங்கனின் வழிமுறை!

2

குழுவில் “நான்” இல்லை!

ஒரு தவளைக்குப் பறக்க ஆசை.

அது இரண்டு புறாக்களைப் பார்த்து தனது ஆசையைச் சொன்னது.

புறாக்களோ, “உன்னை எப்படி நாங்கள் தூக்கிச் செல்ல முடியும். நீ விழுந்து விடுவாயே” என்றன.

தவளை, “நாம் ஒரு குழுவாக செயல்பட்டால் இது முடியும். ஒரு ஐடியா சொல்கிறேன். ஒரு சின்ன குச்சியை உங்கள் வாயில் வைத்துக் கொண்டால் போதும். குச்சியின் ஒரு புறத்தை ஒருவரும் இன்னொரு புறத்தை அடுத்தவரும் வைத்துக் கொண்டு பறந்தால் போது. குச்சியின் நடுவில் என் வாயை வைத்து அதைக் கவ்விக் கொள்கிறேன். பறக்கலாம்” என்றது.

ஐடியா நல்ல ஐடியா என்று கூறிய புறாக்கள் ஆளுக்கு ஒரு பக்கம் குச்சியைக் கவ்விப் பிடிக்க தவளை ஜாம் ஜாமென்று குச்சியின் நடுவில் வாயை வைத்து அதைக் கவ்வியது.

புறாக்கள் பறக்க ஆரம்பித்தன.

மற்ற தவளைகளுக்கும் பறவை இனங்களுக்கும் இதர விலங்குகளுக்கும் ஒரே ஆச்சரியம்!  – எப்படி ஒரு தவளை பறக்கிறது என்று!

அதில் கீழே இருந்த ஒரு விலங்கு கூக்குரலிட்டுக் கத்தியது.

“அடடா! இந்த ஐடியாவை யார் சொன்னது!” என்று அது உரக்கக் கேட்டது.

“நான் தான்” என்று கம்பீரமாக தவளை கத்தியது.

அவ்வளவு தான்குச்சியை விட்டு விடவே அது தொபீர் என்று கீழே விழுந்தது.

பாடம்,

குழுவில் நான்” என்பதே கிடையாது! 

3

தலைமைப் பண்பு!

லூயிஸ் ஊர்ஸுவா என்பவர் வட சிலியில் இருந்த ஒரு தாமிர சுரங்கத்தில் போர்மனாக வேலை பார்த்து வந்தார்.

2010ஆம் ஆண்டில் ஒரு நாள்.

திடீரென்று சுரங்கம் சரிந்து இடிந்து விழுந்தது, உள்ளே 33 தொழிலாளர்கள் மாட்டிக் கொண்டனர். 700 மீட்டர் ஆழம் கொண்டது சுரங்கம். அதாவது  சுமார் 2296 அடி ஆழம்.

ஒரு நாள் அல்ல, இரு நாள் அல்ல 70 நாட்கள் அவர்கள் அதில் சிக்கி இருந்தனர்.

லூயிஸ் ஊர்ஸுவா (Luis Urzua) நிலைமையை உன்னிப்பாகக் கவனித்துத் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

அவர்களை மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் காப்பாற்ற உரிய வழிமுறைகளை அவர் மேற்கொண்டார்.

அத்தோடு தரையிலிருந்து அவர்களை மீட்க வந்த குழுவினருக்கு தக்க வழிமுறைகளையும் அவர் கூற ஆரம்பித்தார்.

சுரங்கத்தின் வரைபடத்தைக் கொண்டு அனைவருக்கும் தக்கபடி அறிவுரைகளை வழங்கிக் கொண்டே இருந்தார்.

அனைவரும் 70 நாட்கள் கழித்து பத்திரமாக மீண்டனர். அனைவரும் லூயிஸ் ஊர்ஸுவாவைப் பாராட்டினர்.

அவரோ சர்வ சாதாரணமாக, “இந்த ஷிப்ட் கொஞ்சம் நீண்ட ஷிப்டாக அமைந்து விட்டது!” என்றார்!

ஒரு தலைவருக்கு புத்தி கூர்மையும், வழிகாட்டும் தன்மையும், பொறுமையும் எல்லாவற்றிற்கும் மேலாக அடக்கமும் வேண்டும்.

அதைக் காண்பித்தார் அவர்!

**

புத்தக அறிமுகம் – 43

உலக வலத்தில் ஒன்பது நாடுகள்

(சியோல் முதல் ரோம் வரை)

பாகம் – 2 

பொருளடக்கம்

என்னுரை

1. செயற்கை அறிவின் சிறப்பு நகரம் சியோல்!

2. உலகை நடுங்க வைத்த நாடு!

3. உலக இயக்கத்திற்கு உதவும் நாடு!

4. உலகின் முக்கிய அதிசயத்தைக் கொண்ட நாடு!

5. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய மூன்று மந்திரங்களை உலகிற்கு வழங்கிய நாடு!

6. புத்த பூமி ஹாங்காங்!

7. இரு நாடுகளில் கொட்டும் ஒரு நீர்வீழ்ச்சி! கண்ணைக் கவரும் நயாகரா!

8. கோலாகல கோலாலம்பூர்!

9. இனிக்கும் இத்தாலி!

நூலில் நான் வழங்கிய என்னுரை இது :

என்னுரை

மாலைமலர் நாளிதழில் 22-3-2022 தொடங்கி வாரம் தோறும் உலகை வலம் வரும் விதமாக ஒவ்வொரு நாடு பற்றியும் எனது ‘உலக வலம்’ தொடர் வெளி வர ஆரம்பித்தது. தொடரில் இடம் பெற்ற முதல் ஒன்பது நாடுகள், ’உலக வலத்தில் ஒன்பது நாடுகள்’ என்ற நூலாக வெளி வந்தது.

இந்த முதல் பாகத்தில் ஸ்விட்ஸர்லாந்து, ஜப்பான், அந்தமான் (இந்தியா), அமெரிக்கா, சிங்கப்பூர், பெல்ஜியம், ஶ்ரீலங்கா, லண்டன் (இங்கிலாந்து), நேபாளம் ஆகிய நாடுகளின் அழகிய இடங்கள், காட்சிகள் மற்றும், வரலாறு பற்றி கண்டோம்.

அதைத் தொடர்ந்து வாரந்தோறும் மாலை மலர் இதழில் அடுத்த ஒன்பது நாடுகள் பற்றிய கட்டுரைகள் 7-6-2022 இதழ் தொடங்கி வெளியிடப்பட்டது.

அந்த அடுத்த ஒன்பது நாடுகள் பற்றிய நூலாக இந்த இரண்டாம் பாகம் அமைகிறது.

மாலைமலரில் உலகநாடுகள் பற்றி ஒரு தொடரை எழுத ஒரு நல் வாய்ப்பை அளித்த திரு பாலசுப்ரமண்யன் ஆதித்தன் அவர்களுக்கும், மாலைமலர் CEO திரு ரவீந்திரன் அவர்களுக்கும், வாசகர்கள் எதை எதிர்பார்க்கிறார்கள் என்பதைக் கூறி என்னை ஊக்குவித்த திரு வசந்த்ராஜ் உள்ளிட்ட மாலைமலர் ஆசிரியக் குழுவினருக்கும் எனது மனமார்ந்த நன்றி.

கட்டுரைகளைப் படித்து இன்னும் தொடருமாறு என்னை உற்சாகப்படுத்தி ஊக்குவித்த அனைத்து வாசகப் பெருமக்களுக்கும் எனது நன்றி.

இந்தக் கட்டுரைகளை நூலாக வெளியிட முன் வந்த Pustaka Digital Mediaவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக.

எங்கு பயணம் மேற்கொண்டாலும் உங்கள் பயணம் சிறப்பாக அமைய

எமது உளங் கனிந்த வாழ்த்துக்கள்!

சான்பிரான்ஸிஸ்கோ.
9-8-2022

ச.நாகராஜன்

 * 

நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.

இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.

சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in

என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்

தொடர்புக்கான தொலைபேசி எண் :   9980387852  

**

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: