
Post No. 11,232
Date uploaded in London – – 2 SEPTEMBER 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஹெல்த்கேர் ஜூலை 2022 இதழில் வெளி வந்துள்ள கட்டுரை
டயபடீஸ் சம்பந்தமான 5 ஊட்டச் சத்து பற்றிய சர்ச்சை கருத்துக்கள் முடிவுக்கு வந்து விட்டன!
பகுதி – 1
மூலம் : கிம்பர்லி பி. ஜுக்ஸ்டாட் Ph D (Kimberly B. Bjugstad PhD)
ஜூன் 15,2022 தேதியிட்ட கட்டுரை
தமிழில் : ச.நாகராஜன்
செயற்கை இனிப்புகளைச் சாப்பிடலாமா? கூடாதா? அமெரிக்க டயபடீஸ் சங்கத்தைச் சேர்ந்த (American Diabates Association ADA) இரண்டு நிபுணர்கள இது பற்றிய அடிப்படையான கருத்துக்களை முன் வைத்து சர்ச்சையை ஒருவாறாகத் தீர்த்துள்ளனர்.
ஊடகங்களில் உடலின் எடைக் குறைப்பு பற்றியும் ஆரோக்கிய மேம்பாடு பற்றியும் வரும் செய்திகளால் நாம் தாக்கப்படுகிறோம், குற்ற உணர்ச்சிகளுக்கு ஆளாகிறோம், குழப்பமடைகிறோம் – நாம் செய்வது தவறா இல்லையா என்று. குழம்பிப் போகிறோம்; அதிலும் குறிப்பாக டயபடீஸுக்கு ஆளானவர்கள் படும் அவஸ்தை சொல்லி மாளாது.
ஐந்து சர்ச்சைக்குரிய ஊட்டச்சத்து பற்றிய கருத்துக்களுக்கு டயபடீஸ் பற்றிய இரண்டு நிபுணர்கள் 2022இல் ஜூன் முதல் வாரத்தில் நியூ ஆர்லியன்ஸில் நடந்த அமெரிக்கன் டயபடீஸ் சங்கத்தின் வருடாந்திர கூட்டத்தில், அதற்கான விளக்கத்தைத் தந்துள்ளனர். இவர்கள் சியாட்டில் நகரைச் சேர்ந்த பெரும் நிபுணர்கள் என்பத் குறிப்பிடத்தகுந்தது.
இந்த இரு நிபுணர்களில் ஒருவர் மௌரீன் சொம்கோ என்பவர். இவர் சியாட்டிலைச் சேர்ந்த மருத்துவர். இன்னொரு பெண் மருத்துவரின் பெயர் ஆலிஸன் எவர்ட். இவரும் சியாட்டிலைச் சேர்ந்த மருத்துவரே,
(The presenters were Maureen Chomko, RDN, CDCES, from Neighborcare Health in Seattle, and Alison Evert, RDN, CDCES, FADCES, from University of Washington Medicine, also in Seattle.)
1. எப்போது சாப்பிட வேண்டும், எத்தனை முறை சாப்பிட வேண்டும்?
விஷயம் சாதாரணமானது தான். ஆனால் எப்போது உணவு எடுத்துக் கொள்வது என்பது பற்றிய ஏராளமான கேள்விகள் உள்ளன. டயபடிஸால் பாதிக்கப்பட்டவர்கள் அடிக்கடி சாப்பிட வேண்டும் – 3 தடவை உணவும் 3 தடவை நொறுக்குத் தீனியும் (3 meals and 3 snacks) எடுத்துக் கொள்ளுமாறு சொல்லப்படுகிறது. ஆனால் இது ஒருவேளை உங்களது வாழ்க்கைமுறைக்கு சரிப்பட்டு வராததாக இருக்கலாம். அல்லது ஒருவேளை உங்களுக்கு இத்தனை முறை உண்ண, பசி எடுக்காமல் இருக்கலாம். ஆகவே ஒரு தடவை உணவையோ அல்லது நொறுக்குத் தீனியையோ விட்டு விடலாமா? காலை உணவைத் தவிர்க்கலாமா?
நிபுணர் சொம்கோ (Chomko) கூறுகிறார் :- இத்தனை தடவை இப்படித் தான் சாப்பிட வேண்டும் என்பது பற்றிய முடிந்த முடிபான ஆராய்ச்சி முடிவுகள் உடல் நலம் பற்றியோ அல்லது குளுகோஸ் மேலாண்மை பற்றியோ இது வரை ஒன்றும் இல்லை.
அடிக்கடி சாப்பிடுவது தேவையற்ற கலோரியிலோ அல்லது தொடரும் ஹைபர்க்ளைசெமியாவிலோ (Chronic hyperglycernia)) கொண்டு விடப்படலாம். மாறாக நிறைய ஆனால் அடிக்கடி சாப்பிடாமல் குறைந்த தடவைகள் சாப்பிடும் உணவு குளுகோஸ் அளவில் விபரீதமான ஏற்ற இறக்கத்தை உருவாக்கக் கூடும். காலை உணவைத் தவிர்ப்பதானது வழக்கமாக அப்படிச் செய்ப்வர்களுக்கு நாளின் பிற்பகுதியில் குளுகோஸைக் கட்டுப்படுத்துவதில் உதவக்கூடும் – ஆனால் காலை உணவை வழக்கமாக எடுத்துக் கொள்பவர்கள் இப்படி அதைத் தவிர்த்தால் கலோரி இழப்பைச் சரிக்கட்டுவதற்காக நாளின் பிற்பகுதியில் சாப்பிட வேண்டி நேரலாம்.
பகல் உணவின் போது இன்னும் கொஞ்சம் கூடச் சாப்பிட வேண்டி நேரலாம். இது கார்டியோவஸ்குலர் அபாயம் எனப்படும் இதயநோய் அபாயத்தை (Cardiovascular risk) அதிகரிக்கக்கூடும்.
டயபடீஸ் டைப் 2 உள்ளவர்களுக்கு உணவை மருந்துடன் இணைத்துச் சாப்பிடுவது முக்கியமாகும். மருந்தானது சில உணவு வகைகளுடன் எடுத்துக் கொண்டால் தான் செயல்படும். அந்த உணவுகள் வயிற்றுக் குமட்டல் மற்றும்
இரத்தத்தில் மாவுச்சத்துக் குறை தடையம் ஆகிய (nausea and hypoglycemia) பக்க விளைவுகளை குறைக்கும். மருந்தை உணவு உட்கொள்ளும் வேளைகளில் எடுத்துக் கொள்வது அது உடலில் சேர்வதை மேம்படுத்தும்.
டயபடீஸ் டைப் 1 உள்ளவர்களுக்கு வழக்கமான ஆனால் சிறிய அளவிலான உணவுத் திட்டம், இடையில் நொறுக்குத் தீனி இல்லாமல் இருப்பது குளுகோஸ் கட்டுப்பாட்டு மேலாண்மையை (Glucose management) மேம்படுத்தும்.
இது தவிர எப்போது சாப்பிடுவது எத்தனை முறை சாப்பிடுவது என்பது பற்றிய அனைவருக்கும் பின்பற்றும்படியான ஒரே மாதிரியான விதி என்று ஒன்று இல்லை.
இப்படித் தெளிவு படுத்தினார் சொம்கோ.
2. எதை உண்ண வேண்டும் – அதாவது எவ்வளவு கொழுப்புச் சத்து Vs புரோடீன் Vs கார்போ ஹைட்ரேட்டுகளை எடுத்துக் கொள்வது?
அமெரிக்க டயபடீஸ் சங்க 2019 அனைவராலும் ஏற்கப்பட்ட ஊட்டச்சத்து அறிக்கை கூறுவது இது: “
கார்போஹைட்ரேட், புரோடீன், கொழுப்புச் சத்து பற்றிய, டயபடீஸ் அபாயம் உள்ளவர்களுக்க்கும் அல்லது அந்த அபாயம் இல்லாதவர்களுக்குமான அனைவருக்கும் பொருந்தும் படியான, ஒரு தீர்க்கமான கலோரி விழுக்காடு இல்லை என்று ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. ஆகவே மாக்ரோநியூட்ரியண்ட் விநியாகமானது ஒவ்வொருவரது தனிப்பட்ட அப்போதுள்ள உணவு எடுத்துக் கொள்ளும் முறை, தனிப்பட்ட விருப்பங்கள், மெடபாலிக் பற்றிய இலட்சிய அளவு ஆகியவற்றைப் பொருத்துத் தீர்மானிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.”
நேஷனல் ஹெல்த் அண்ட் நியூட் ரிஷன் எக்ஸாமினேஷன் சர்வே (National Health and Nutrition Examination Survey) தெரிவிப்பது இது:
“அமெரிக்கர்களுக்கு கடந்த 20 ஆண்டுகளில் சக்தி உள் எடுத்தல் (Energy Intake) 33% கொழுப்பு, 16 % புரோடீன், 50% கார்போஹைட்ரேட்டைக் கொண்டதாக இருக்கிறது.”
இந்த விகிதாசாரமானது டயபடீஸால் பீடிக்கப்பட்டவர்களுக்கும் சுமாராக அப்படியே தான் உள்ளது.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக சாதாரணமான ஒருவரின் 42% கார்போ ஹைட்ரேட் பொருள்கள் குறைந்த தரம் உள்ளவையாக உள்ளன. அல்லது சுத்திகரிக்கப்பட்ட மாவு அல்லது சர்க்கரையிலிருந்து பெறப்படுவதாக உள்ளது. அவை உடனடி ஆற்றலைத் தருகிறது ஆனால் மிகக் குறைவாகத் தருகிறது.
முக்கிய குறிப்பு : உங்கள் டாக்டரைக் கலந்து ஆலோசிப்பது முக்கியம் : எத்தனை விகிதம் கொழுப்பு, புரோடீன், கார்பன் ஹைட்ரேட்ஸ் ஆகியவை உங்கள் உடலுக்கு எந்த விகிதத்தில் இருக்க வேண்டும் என்பதை உங்கள் டாக்டரோடு ஆலோசிக்க வேண்டும். அதுவும் அவை நல்ல தரத்துடன் இருப்பதை நீங்கள் உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும்.
** (அடுத்த பகுதியுடன் முடியும்)
புத்தக அறிமுகம் – 44
சம்ஸ்கிருதச் செல்வம்
பாகம் 2
(132 நியாயங்கள் பற்றிய விளக்கம்)

பொருளடக்கம்
1. தராசு முதல் கரும்பு வரை சில நியாயங்கள்!
2. ஆடு முதல் காடு வரை சில நியாயங்கள்!
3. நெக்லஸ் முதல் கிணறு வரை சில நியாயங்கள்!
4.வீட்டு வாசற்படியில் வைக்கும் விளக்கு!
5.மரத்தை அசைத்தால் மற்றதும் தானே அசையும்!
6.குருடன் குருடனுக்கு வழி காட்டினாற் போல!
8.பிறக்காத பிள்ளைக்குப் பெயர்!
9.இறுதியில் என்ன நினைக்கிறாயோ அதுவாகவே ஆவாய்!
11.குரங்குக் குட்டி நியாயமும் பூனைக்குட்டி நியாயமும்!
12.கௌந்தேய கர்ணன் ராதேயன் ஆனான்!
13.எவ்வழி உலகம் அவ்வழியே அனைவரின் வழியும்!
14. பிச்சை எடுத்தேனும் உயிரைக் காத்துக் கொள்வதே தர்மம்!
16. இளமையும் முதுமையும் சேர்ந்து இருக்க முடியுமா!
17. குடத்தினுள் இருக்கும் குத்துவிளக்கு!
18. நீரில் அமிழ்ந்த சுரைக்காய்!
19. எண்ணெய் இல்லாமல் விளக்கை எரிப்பது எப்படி?
20. மாந்தோப்பில் உள்ள மரங்கள்!
21. முள்ளைத் தின்று மகிழும் ஒட்டகம்!
22. வரியை ஏய்க்க நினைத்தவன் வசூலிப்பவன் முன்னால் வந்த கதை!
23. காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்த கதை!
26. வசந்த கால வருகையும் புண்ணிய பலனும்!
27. தேங்காய்க்குள் இளநீர் எப்படி வந்தது?
28. கொக்கின் தலையில் வெண்ணையை வைத்துப் பிடிக்கலாமா?
29. விதை ஒன்று போட சுரை ஒன்று முளைக்குமா?
*
நூலில் நான் வழங்கிய என்னுரை இது :
என்னுரை
சம்ஸ்கிருத செல்வம் அள்ள அள்ளக் குறையாதது. ஒரு போதும் வற்றாத ஜீவ நதி அது.
நியாயங்கள் அந்தச் செல்வத்தின் ஒரு துளி. சான்பிரான்ஸிஸ்கோவில் 2015ஆம் ஆண்டு இருந்த போது ஒரு சில நியாயங்களைத் தொகுத்து எழுதி ஜனவரி முதல் அவ்வப்பொழுது Www.Tamilandvedas.Com இல் வெளியிட்டு வந்தேன்.
இதை வெளியிட்டு என்னை கௌரவப்படுத்திய லண்டன் திரு ச.சுவாமிநாதன் அவர்களுக்கு எனது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த நூலை நல்ல முறையில் வெளியிட முன் வந்த Pustaka Digital Media வின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு எனது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
900க்கும் மேற்பட்ட நியாயங்கள் உள்ளன. இதுவரை தொகுக்க முடிந்தது 132 நியாயங்கள் மட்டுமே தான்! வாய்ப்புக் கிடைக்கும்போது மேலும் பல நியாயங்களைத் தொகுத்துத் தமிழ் உலகிற்கு அளிக்க வேண்டுமென்பது என் அவா.
இதைப் படித்து அவ்வப்பொழுது என்னை ஊக்குவித்த அனைவருக்கும் எனது நன்றி உரித்தாகுக.
பங்களூர் ச,நாகராஜன்
11-1-2022
*
நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.
இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.
சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in
என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்
தொடர்புக்கான தொலைபேசி எண் : 9980387852
**