நான் கண்ட ஸ்பானிய அரண்மனை (Post No.11,233)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,233

Date uploaded in London – 2 SEPTEMBER 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

ஸ்பெயின் நாட்டின் தலைநகர் மாட்ரிட் (Madrid, Capital of Spain). அங்கே அனைவரும் பார்க்கவேண்டிய  முக்கிய சுற்றுலா இடங்களில் ஒன்று பிரம்மாண்டமான அரண்மனை  (Royal Palace) ஆகும். நாங்கள் ஆகஸ்ட் 27ம் தேதி (2022) அரண்மனைக்குச் சென்றோம். லண்டனிலுள்ள  பக்கிங்ஹாம்  அரண்மனை போல இரு மடங்கு பெரியது. அரண்மனைக்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை. ஆயினும் முன்பகுதியில் புகைப்படம் எடுக்கலாம். வெளிநாடுகளில் எல்லா சுற்றுலாத் தலங்களிலும் புஸ்தகங்கள், நினைவுப் பொருட்களை விற்பார்கள். இது போல இந்தியாவிலும் செய்யவேண்டும். பிரிட்ஜி Fridgeல் பொருத்தக் கூடிய காந்தத்தில்(Fridge Magnets)  படம் இருக்கும். அங்கே விற்கும் பென்சில், பேனாக்களில் கூட அந்த இடத்திலுள்ள முக்கிய பொருட்களின் படம்தான் இருக்கும்.

ஸ்பானிய அரண்மனையில் 1,50,000 க்கும் மேலான பொருட்கள் இருக்கின்றன. எல்லா முக்கியப் பொருட்களின் படங்களும் இருக்கும் புஸ்தகத்தைத் தேடினேன். அப்படி  ஒரு புஸ்தகமும் இல்லை. கிடைத்த புஸ்தகம் ஒன்றை மட்டும் வாங்கினேன் . அதிலுள்ள விஷயங்களையும் நான் கண்ட விஷயங்களையும் சுருக்கி வரை கிறேன்.

ஸ்பானிய அரண்மனையில் 3400க்-கும் மேலான அறைகள் இருக்கின்றன.இப்போதும் அங்கே ஸ்பானிய அரச குடும்பத்தினர் வசிக்கின்றனர். ஆகையால் எல்லா இடங்களுக்கும் நாம் செல்ல முடியாது. உலகத் தலைவர்கள் வரும்போதும், அரசாங்க நிகழ்ச்சிகளின் போதும் அரண்மனைக்குள் செல்லமுடியாது.

எல்லா அரண்மனைகள் போலவே இங்கும் அனுமதிக்க கட்டணம் (Entrance fee) உண்டு. ஆயினும் ஏராளமான பொக்கிஷங்களை காணமுடிகிறது. பக்கிங்ஹாம் அரண்மனைக்குள் இப்படிச் செல்ல முடியாது. ஆண்டுக்கு ஒரு முறை கோடைகாலத்தில் ஒரே ஒரு அறையை மட்டும் திறந்துவைத்து காசு வாங்கிவிடுவார்கள் !

மாட்ரிட்டில் உள்ள இந்த அரண்மனையில் அந்த நாட்டின் பிரபல ஓவியர்கள் வரைந்த படங்கள் இருக்கின்றன ; அது மட்டுமின்றி உலகப் புகழ்பெற்ற ஓவியர்கள் வரைந்த படங்களும் பல அறைகளை அலங்கரித்தன. இப்போது அவை ப்ராடோ மியூஸியத்தில் (Prado Museum, Madrid) காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

மன்னருக்குச் சொந்தமான அரண்மனைக் கட்டிடங்கள், வழிபாட்டு இடங்கள், தோட்டங்கள் 20, 500 ஹெக்டேரில் பரந்து விரிந்து கிடக்கின்றன.

அரண்மனைக்குள் நுழைந்தவுடன் உயரமான படிக்கட்டுகளைக் காணலாம்.அதில் ஏறும்போதே மேலேயும் சுவர்களிலும் தீட்டப்பட்ட வண்ண ஓவியங்களைக் காணலாம். உயரமான பளிங்குச் சிலைகளையும் காணலாம். எங்கு நோக்கினும் ராஜா  ராணி சிலைகள்தான். ஒவ்வொன்றின் பின்னாலும் ஒரு கதை உண்டு. ஏலத்தில் விட்டால் ஒவ்வொரு சிலையும் பொருளும் மில்லியன் கணக்கில் விலை க்குப் போகும்.அடுத்த அறை ஆடல், பாடலுக்காகக் கட்டப்பட்டது ஆனால் மூன்றாம் சார்லஸ் இதை காவலர்களுக்கான அறையாக மாற்றிவிட்டார். ஓவியங்கள் அனைத்தும் தத்ரூபமாக இருக்கும். அடுத்தாற்போல் ஹால் ஆப் காலம்ஸ்- HALL OF COLUMNS  அதாவது தூண்கள் அறை ; இதன் வழியாக மஹாராணி வசிப்பிடத்துக்குப் போகலாம்.

அடுத்தது மகாராஜாவின் ANTEROOM ஆன்டி ரூம் ; முக்கிய மண்டபத்துக்கு  முன்னாலுள்ள அறை ஆன் டிரூம் ; இங்குதான் மூன்றாவது சார்லஸ் சாதாரணக் குடிமகன்களை சந்திப்பாராம். மத்திய உணவு அருந்தும் இடமும் இதுதான் இது பற்றி 1782ம் ஆண்டு வந்த ஒரு யாத்ரீகர் எழுதிவைத்துள்ளார் ; அவர் எழுதியதாவது:-

இங்கேதான் மன்னர் மதிய உணவை சாப்பிடுவார் ; அப்போது மந்திரிகள் வந்து வாழ்த்துவார்கள். அவர் சாப்பிடத் துவங்கியவுடன் இளவரசர் அறைக்குச் சென்று, அங்கே சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் இளவரசரை வாழ்த்துவர்; மன்னர் சாப்பிட்டு முடிக்க ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆகும். மன்னர் சாப்பிட்டு முடித்த பின்னர் சிலருடன் மட்டும் பேசுவார். முதலில் சாப்பாட்டுத் தட்டுகள் வரும். அதை, ஒருவர் மன்னர் முன்னே வைப்பார். ஒயினும் WINE தண்ணீரும் குடுவையில் வைக்கப்படும். அதை மன்னர் குடிக்கும்போது அதைக் கொண்டுவந்த சேவகர் மண்டியிட்டு வணக்கம் சொல்லுவார். மன்னர் சாப்பிடுகையில், அரசாங்கத்துக்கான போப்பாண்டவர் தூதர் (NUNCIO)  அவருக்கு சற்று பின்னே நிற்பார். சாப்பிடும்போது மன்னன் பேசக்கூடிய ஒரே நபர் அவர்தான்.எல்லோரும் நீல உடை அணிந்திருப்பார்கள். மன்னர் கிறிஸ்தவர்கள் சொல்லும் மந்திரத்தைச் (GRACE)  சொன்னபின்னர் உடம்பின் முன் சிலுவை அடையாளம் போடுவார்”.–இது யாத்ரீகர் எழுதிய குறிப்பு ஆகும்.

இதற்குப்பின் இருப்பது சம்பாஷணை/ உரையாடல் அறை (Conversation hall ; இதுதான் மன்னரின் இரவுச் சாப்பாடு அறை . இங்கே மன்னருக்கு முன்னர் வட்டமாக அமர்ந்து வெளிநாட்டு தூதுவர்கள் பேசுவர்.

 கட்டிடம் முழுவதும் விதவிதமான கடிகாரங்கள், பிரம்மாண்டமான அலங்கார விளக்குகளைக் காணலாம். பல இடங்களில் தங்கம் உ ள்ளது தங்க முலாம் பூசப்பட்ட அ லங்காரப் பொருட்கள் இருக்கும். மஹாராணி அறையில் பெரிய ஓவியங்களும் மன்னரின் சிம்மாசன அறையில் சிங்கச் சிலைகளும்   இருக்கும்   சிம்மானமும் இருக்கும். ஸ் பிங்ஸ் தா ங்கும் பெரிய மேஜைகள் பார்க்க மிக அழகானவை

மன்னர் கேளிக்கையுடன் விருந்து வைக்கும் மேஜையில் ஒரே நேரத்தில் 100 பேருக்கு மேலாக அமர்ந்து சாப்பிடலாம். கிரேக்க புராணங்களில் மற்றும் பைபிளில் வரும் பெரியோர்களும் கதாபாத்திரங்களும் ஓவியங்களிலும் சிலைகளிலும் இருக்கும். அவைகளின் கதை தெரிந்தால் நன்கு பார்த்து ரசிக்கலாம்.

இந்த அரண்மனையின் புதிய கட்டிடங்கள் 300 ஆண்டுப் பழமையானவை . அதற்கு முன்னர் இதற்கு அல் கஸார் (Alazar) என்று பெயர்.மூர்(Moor) மக்களின் கோட்டை ன்று பொருள். வட ஆப் பிரிக்காவில்  வாழ்ந்த முஸ்லீம்கள் மூர் இன மக்கள் ஆவர். அந்த முஸ்லீம்கள் சுமார் 1000 ஆண்டுகளுக்கு ஐபீரிய தீபகற்பத்தை ஆண்டார்கள். ஐபீரிய தீபகற்பம் என்பது போர்ச்சுக்கல்லும் ஸ்பெயினும் சேர்ந்த பிரதேசம். ஸ்பானியர்கள் தென் அமெரிக்காவைக் கொள்ளையடித்தனர். அங்குள்ள அஸ்டெக், மாயன் நாகரீகங்களை அழித்து தங்கத்தைக் கொள்ளை அடித்தனர். போர்ச்சுகல் இந்தோனேஷியா, இலங்கை, இந்தியவரை கொள்ளை அடித்தனர். தென் அமெரிக்க நாடுகளில் பிரேசில் மட்டும் போர்ச்சுகீசிய மொழி பேசும் நாடு. ஏனைய அனைத்தும் ஸ்பானிய மொழி பேசும் நாடுகள்..இதே போல ஆப்பிரிக்காவிலும் இந்த இரு மொழிகள் பேசும் நாடுகள் உண்டு. தென் ஆப்பிரிக்கைவை மட்டும் டச்சுக்காரர்கள் கொள்ளை அடித்தனர். எங்கெங்கு தங்கமும் வைரமும் இருக்கிறதோ அங்கெல்லாம் சென்று கொள்ளை அடிப்பது ஐரோப்பியர்களின் குல வழக்கம்..

–subham–

tags- மாட்ரிட், ஸ்பெயின், அரண்மனை, மூர் இனம் பொக்கிஷம் 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: