
Post No. 11,234
Date uploaded in London – 2 SEPTEMBER 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
ஸம்ஸ்க்ருதத்திலும் தமிழிலும் நிறைய விநோதக் கவிதைகள், விசித்திரக் கவிதைகள் இருக்கின்றன. இதோ மேலும் ஒரு கவிதை :
யா யா யா யா யா யா யா யாயா யா யா யா யா யா யா யா
யா யா யா யா யா யா யா யாயா யா யா யா யா யா யா யா
–வேதாந்த தேசிகர் எழுதிய பாதுகா சஹஸ்ரம், கவிதை எண் 936
இதில் ‘ய’ என்ற (உயிர்) மெய் எழுத்தும் ‘ஆ’ என்ற உயிர் எழுத்தும் மட்டுமே உள்ளன.
ஸம்ஸ்க்ருத மொழியை நன்கு கற்றோர் இதை பின் வருமாறு பிரித்துப் பொருள் காண்பர்:
யா யா யா, ஆய, ஆயாய , அயாய, அயாய, அயாய, அயாய, ( 4 முறை), அயாயா, யாயாய, ஆயாயாய ,
ஆயாயா ,யா யா யா யா யா யா யா யா (8 முறை)
விஷ்ணுவின் பாதுகைகளை (காலணிகளை)ப் போற்றும் துதி பாதுகா சஹஸ்ரம். இதில் ஆயிரம் ஸ்லோககங்கள் இருக்கின்றன.
பொருள் –
ஸ்ரீ ரெங்க நாதனின் பாதுகைகள் அவரது கால்களை அலங்கரிக்கின்றன. (அவை எப்படிப்பட்டவை என்றால் ) நல்ல, மங்களகரமான எல்லாவற்றை யும் அடைய எவை உதவுமோ, எவை ஞானத்தைத் தருமோ, எவை இறைவனை தன்னுடைமை ஆக்கிக்கொள்ளும் ஆசையை உண்டாக்குமோ ,எதிர்ப்புகள் அனைத்தையும் அகற்றுமோ, எவை இறைவனை அடைந்தனவோ, எவை உலகெங்கிலும் போக, வர உதவுமோ, இத்தகைய பாதுகைகளே .

XXX
ஆகஸ்ட் 25ம் தேதி இரண்டு ஸ்லோகங்களை வெளியிட்டேன். அவைகளின் பொருளை இப்போது காண்போம் :-
ஒரே உயிர் மெய்யெழுத்தைப் (Consonant) பயன்படுத்தும் கவிதைக்கு எடுத்துக் காட்டாக தண்டின் (Poet Dandin) தரும் செய்யுள் ,
நூனம் நுன்னானி நானேன நானநெனா நானானி நஹ
நானேன நனு நானூ நெனை நெனா நானினோ நினீஹி
“கடையன் ஒருவனால் தாக்கப்பட்ட மனிதன் மனிதனே அல்ல .கடையனாக இருப்பவனைத் தாக்குவோனும் மனிதன் அல்ல. ஒருவருடைய தலைவன் தாக்கப்படாதவரை, தாக்கப்பட்ட கீழோனும் தாக்குண்டவன் இல்லை.ஏற்கனவே காயம் அடைந்தவனைத் தாக்குவோனும் மனிதன் அல்ல” .
—பாரவி எழுதிய கிராதார்ஜுனியம் 15-15
என் கருத்து
செத்த பாம்பை அடிப்பவன் வீரன் அல்ல. பலமற்றவனைத் தாக்கும் பலசாலியும் வீரன் இல்லை. வீரன், காயம் அடைந்தாலும் அரசன் (உயிருடன் ) இருக்கும் வரை அவன் காயம் அடைந்தவன் அல்ல. தனக்கும் கீழேயுள்ளவன் தாக்கிவிட்டால் அது அவமானம். அதைப் பொறுத்துக்கொண்டு வாழ்பவனும் மனிதன் அல்ல. (சிறைப்பட்ட சேர மன்னன் கணைக்கால் இரும்பொறைக்கு சிறைக் காவலன் தண்ணீர் கொண்டுவர தாமதித்ததால் அவமானம் தாங்காமல் உயிர் நீத்தான் சேரன்).
xxx
ஒரே இடத்தில் பிறக்கும் எழுத்துக்களை வைத்து (உச்சாரண ஸ்தானாணி) அமைத்த கவிதைக்கான எடுத்துக் காட்டையும் தண்டின் எழுதியுள்ளார் ,
அகா காங்கான் ககா காக காஹகாககஹ
அஹாஹாங்க கான் காக கன்கா கக காகக
–போஜன் எழுதிய ஸரஸ்வதீ கண்டாபரணம்
பொருள்-
பல நாடுகளுக்குச் சென்றுவரும் பயணியை நோக்கிச் சொல்லும் வாசகம் :
“சுழன்று ஓடும் வேகம் மிக்க கங்கையில் குளித்துவிட்டு வரும் ஓ பயணியே! கஷ்டத்தினால் ஓலமிடும் அவலக்குரல் பற்றி உனக்கு ஒன்றும் தெரியாது.மேரு மலையையே உழும் திறமை உனக்கு உண்டு. விழுத்தாட்டும் புலன்களின் கட்டுப்பாட்டில் நீ இல்லை. பாவங்களை அகற்றுவோனான நீ இந்த தேசத்துக்கு வந்துள்ளாய்.”
இவை அனைத்தும் சம்ஸ்க்ருத இலக்கணத்தை ஒட்டி எழுதப்பட்டவை. பொருளும் உடையவை. வெறும் ஒலிகள்/ சப்தங்கள் அல்ல .
xxx subham xxx
tags- சம்ஸ்க்ருத கவிதை, மெய் எழுத்து, பாதுகா சஹஸ்ரம் , வேதாந்த தேசிகன் , யா யா யா ,