டயபடீஸ் ஊட்டச் சத்து சர்ச்சை முடிவுக்கு வந்தது-2(Post.11235)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,235

Date uploaded in London – –    3 SEPTEMBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

டயபடீஸ் சம்பந்தமான 5 ஊட்டச் சத்து பற்றிய  சர்ச்சை கருத்துக்கள் முடிவுக்கு வந்து விட்டன!

பகுதி – 2

மூலம் : கிம்பர்லி பி. ஜுக்ஸ்டாட் Ph D (Kimberly B. Bjugstad PhD

தமிழில் : ச. நாகராஜன்

3. உணவு லேபிள்களில் உள்ள ‘நிகர கார்போ ஹைட்ரேட்’ (NET CARB) எனத் தரப்படும் எண்ணிக்கை அர்த்தமுள்ளதா?

1929ஆம் ஆண்டு ஆர்.டொ. லாரன்ஸ் மற்றும் ஆர் ஏ மக்கன்ஸி (RD Lawrence and RA McCance) ஆகிய இருவர் பிரிட்டிஷ் மெடிகல் ஜர்னலில் நிகர கார்போஹைட்ரேட் (NET CARB) என்ற வார்த்தையை புதிதாக உருவாக்கினர்.

1972இல் ராபர்ட் அட்கின்ஸன் எழுதிய ‘டாக்டர் அட்கின்ஸ் உணவுத் திட்ட புரட்சி (Robert Atkins book “Dr. Atkins’ Diet Revolution”) என்ற நூல் வெளியாகும் வரை இந்த வார்த்தை அகராதியில் வரும்படி அவ்வளவு பிரபலமாகவில்லை.

உணவில் உள்ள கார்போஹைட்ரேட்டில் பைபரும் இனிப்பு ஜீனி ஆல்கஹாலும் (fiber and sugar alcohols) உள்ள அளவு கழிக்கப்பட்டு நிகர கார்போ ஹைட்ரேட் என பெரும்பாலான லேபிள்களில் தரப்படுகிறது. ஆகவே கழிக்கப்பட்ட கார்போ ஹைட்ரேட் அளவை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் இன்னும் அதிகம் சாப்பிடலாம் என்று ஒருவரை எண்ண வைக்கிறது.

நிபுணர் கூற்று : உணவு லேபிள்களில் ‘கார்போ ஹைட்ரேட்’ மற்றும் ‘நிகர கார்போஹைட்ரேட்’ என்று குறிப்பிடப்பட்டதைப் படிக்கும் போது இரண்டு பிரச்சினைகள் எழுகின்றன என்று நிபுணர் எவர்ட் உறுதியாகச் சொல்கிறார்.

முதலாவதாக எல்லா பைபர் உணவுகளும்  சமமானதில்லை. கரையும் தன்மை உடைய பைபரானது தருவது போல கரையும் தன்மை இல்லாத (insoluble) பைபரானது கார்போஹைட்ரேட்டைத் தருவதில்லை. ஊட்டச்சத்தைக் காட்டும் லேபிள்கள் பைபரில் எவ்வளவு கரையும் எவ்வளவு கரையாதது என்பதைச் சொல்வதில்லை.

அடுத்து, இனிப்பு ஆல்கஹால் சத்து (Sugar alcohols) இனிப்பிலிருந்து (Sugar) முற்றிலுமாக வேறுபட்டதில்லை. இது இரவு உணவுக்கு முன்னும் பின்னும் உள்ள குளுகோஸ் அளவுகளைப் பாதிக்கக் கூடும். (glucose before and after eating, respectively).

மேலும் வெவ்வேறு வகையான் இனிப்பு ஆல்கஹால் வெவ்வேறு கலோரிகளைக் கொண்டிருக்கும். எடுத்துக்காட்டாக இனிப்பு இல்லாத பசையில் (Sugaless Gum) நிறைய இருக்கும் xylitol -இன் கலோரி அளவு  ஒரு கிராமுக்கு 2.6 ( 2.6 cal/gram ). அதே சமயம் இனிப்பு அற்ற சாக்லேட்டில் உள்ள malitol என்பது ஒரு கிராமுக்கு 2.1 கலோரி என்ற அளவை மட்டுமே கொண்டிருக்கும். (2.1 cal/gram)

இன்சுலின் டோஸ் தரப்படும் போது இனிப்பு ஆல்கஹாலையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நிபுணர் எவர்ட் யோசனை கூறினார். இந்த லேபிள்களைப் படிக்கும் போது அவர் தரும் இன்னொரு உதவிக் குறிப்பு – இன்னும் அதிக பைபரை உண்ணும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் என்பது தான். அதாவது உணவில் அதிகம் பைபர்; மற்றவை குறைவாக!

4.  கெடோஜெனிக் உணவுத் திட்டம் (ketogenic (KETO)) அதாவது குறைந்த கார்போஹைட்ரேட் உணவுத் திட்டம் பற்றி என்ன அறிய வேண்டும்?

குறைவான கார்போஹைட்ரேட் உணவுகளுக்கான பொதுவான விதி என்னவெனில் மொத்த கொழுப்பு சக்தியிலிருந்து 50% முதல் 80% வரை பெறுவது தான். மீதி கலோரிகள் புரோடினிலிருந்து பெறப்படும். கார்போஹைட்ரேட் குறைவாக பெறப்படும்.

கெடோஜெனிக் உணவுகள் தரும் விவரம் இது :- ஒரு நாளைக்கு 20 முதல் 50 கிராம் வரை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். அதாவது ஒரு கோப்பையில் உள்ள அரிசியை விடக் குறைவாக எடுத்துக் கொள்ள வேண்டும். கெடோ உணவுகள் டயபடீஸ் உள்ளவர்களிடமும் இதர பொது மக்களிடமும் பிரபலமாக உள்ளது.

நிபுணர் கூற்று : நிபுணர் எவர்ட் மிகக் குறைவான கார்போஹைட்ரேட்/ கெடோ (VLCKD – Very low Carb/Keto diet) உணவுத்திட்டத்தால் என்ன நடக்கிறது என்பதை குழுமி இருந்தவர்களிடம்  விளக்கினார்.

முதல் 3 முதல் 6 மாதங்களுக்கும் டயபடீஸ் உள்ளவர்கள் எடை குறைந்து போவதை  க்ளைசெமியா குறைவதையும் அனுபவிப்பர். A1C அளவு கூடுவதைத் தெரிந்து கொள்வர். இன்சுலின் அளவு மற்றும் மருந்து அளவையும் அவர்கள் குறைத்துக் கொள்ளலாம். ஆனால் இவை நீடித்து இருக்காது.

5 முதல் 12 மாதங்களுக்குள் எல்லா நன்மைகளும் குறையும் 12 மாதங்களுக்குள் இப்படிப்பட்ட உணவுத்திட்டத்தால் நன்மை ஒன்றும் விளையாது.

ஒரு மருத்துவத் துறை நிபுணரின் மேற்பார்வையில், ஒரு குறுகிய காலத் திட்டமாக டயபடீஸ் உள்ள நிறைய பேர்கள் இந்த VLCKD  (Very low Carb/Keto diet) எனப்படும் குறைந்த கார்போஹைட்ரேட்/ கெடோ உணவுத் திட்டத்தைப் பின்பற்றலாம்.  அவரது இன்சுலின் தேவைகளையும் லிபிட் மாறுதல்களையும் (Changes in lipid panels), எலக்ட்ரோலைட் அளவு மாறுதல்களையும் நிபுணர் கவனித்துக் கொண்டே இருப்பார். அத்துடன் குடலில் உள்ள மைக்ரோஃபோரா கூட்டுச் சேர்க்கையையும் (micorflora composition in the gut) அவர் கவனிப்பார். (இதில் மாறுதல் இருப்பின் அது மலச்சிக்கலில் கொண்டு போய் விட்டு விடும்).

முழங்கால் அறுவை சிகிச்சை செய்ய ஒருவருக்கு அவசியம் நேர்ந்தது எனில் அவருக்கு எடை குறைப்பு செய்வது அவசியமாகலாம். அப்போது  இந்த VLCKD நல்ல ஒரு திட்டமாக அவருக்கு இருக்கும்.

மற்றவர்களுக்கு இந்த திட்டம் பொருந்தாது. ஏனெனில் இதற்கான தகுந்த ஆதாரங்கள் இதுவரை இல்லை.

 5. செயற்கை இனிப்பூட்டிகள் (Artificial Sweeteners) உங்கள் ஆரோக்கியத்திற்குக் கேடு பயக்குமா?

இந்தக் கேள்விக்கு எளிதான விடை இல்லை. செயற்கை இனிப்பூட்டிகளை (Artificial Sweeteners) உணவில் இனம் காண்பது கடினம். இதில் இன்னும் சிக்கல் என்னவெனில் இவை தனியாகச் சாப்பிடப்படுவதில்லை. மற்ற உணவு வகைகளுடனும் பானங்களுடனும் கலக்கப்பட்ட நிலையில் சாப்பிடப்படுவதால் சிக்கல் ஏற்படுகிறது.

2017இல் கனடிய மெடிகல் அசோஸியேஷன் ஜர்னலில் பிரசுரிக்கப்பட்ட ஆய்வறிக்கை, இந்த செயற்கை இனிப்பூட்டிகள் தரும் நன்மைகள் பற்றி ஒன்றும் தெளிவாகத் தெரியவில்லை என்று குறிப்பிடுகிறது. மாறாக இவை அதிக கார்டியோ மெடபாலிக் அபாயத்தை ஏற்படுத்துவதோடு நாளடைவில் பாடி மாஸ் இண்டெக்ஸையும்  (Body Mass Index BMI) கூட்டுகிறது.

நிபுணர் கூற்று:  செயற்கை இனிப்பூட்டிகளைப் பற்றிய தெளிவான வழிகாட்டுதல் இல்லாத நிலையில் இவற்றிற்கு பதிலாக தண்ணீர், காபி அல்லது இனிப்புச் சேர்க்காத தேநீர் ஆகியவற்றை ஒவ்வொரு நாளும் எடுத்துக் கொள்ளலாம் என்று நிபுணர் எவர்ட் தனது அபிப்ராயத்தைக் கூறுகிறார்.

கடைசி கடைசியாக பெறப்படுவது இது தான் : டயபடீஸ் உள்ளவர்கள் தன்கள் அடைய வேண்டிய இலட்சிய இலக்கு என்ன என்பதை முதலில் வகுத்துக் கொள்ள வேண்டும். என்ன உணவுத் திட்டத்தை தான்  மேற்கொள்ள வேண்டும் என்பதை அவர்கள் தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.

உங்களுக்கு ஒத்து வரும் ஒரு திட்டத்தை மேற்கொள்ளுங்கள். டயபடீஸ் நிலை மாறும் போது உங்கள் திட்டத்தையும் மாற்றுங்கள். திறந்த மனதுடன் டயபடீஸை அணுகி அதைத் தீர்க்கும் வழியைக் காணுங்கள்!

மூலம் : கிம்பர்லி பி. ஜுஸ்டாட் Ph D (Kimberly B. Bjugstad PhD)

நன்றி : Kimberly B. Bjugstad PhD

**

புத்தக அறிமுகம் – 45

ஸம்ஸ்கிருத சுபாஷிதம்  200! 

பொருளடக்கம்

என்னுரை

அத்தியாயங்கள்

1. ஸம்ஸ்கிருதத்தின் உயர்வு; அதில் சுபாஷிதத்தின் பெருமை!

2. தேவ நிர்மிதம் தேசம் ஹிந்துஸ்தானம்!

3. நிகழ்காலத்தில் வாழ்க!

4. சிறந்த தானம் மூன்று, விடக் கூடாதவர்கள் மூவர், மதிப்பு போடவே முடியாதவர் மூவர்…!

5. அன்னமும் வெள்ளை நிறம், கொக்கும் வெள்ளை நிறமே, இரண்டிற்கும் என்ன வித்தியாசம்?

6. பதினெட்டு புராணங்களின் சாரம் இரண்டே வரிகளில்!

7. சந்தோஷம் அடைவது எப்படி?

8. என்னே விதியின் கொடுமை!

9. நுண்ணறிவு நான்கு வழிகளில் கிடைக்கிறது!

10. ஆன்ம முன்னேற்றத்திற்காக உலகையே தியாகம் செய்க!

11.நாளை செய்ய வேண்டியதை இன்றே செய்க! நாளை என்ன நடக்குமோ, யார் அறிவார்!

12. நாக்கே செல்வத்தைத் தரும் அல்லது சிறைக்கும் இட்டுச் செல்லும்!

13. எப்போதும் சந்தோஷமாக இல்லாத இருவர்; எப்போதும் ஸ்வர்க்க புகழை விட அதிகம் கொள்ளும் இருவர்!

14. நரகத்திற்குச் செல்பவன் யார்? ஸ்வர்க்கமும் போற்றுபவன் யார்?

15. காட்டிலே அனாதையாக கை விடப்பட்டாலும் விதி இருப்பின் அது குழந்தையைக் காக்கும்!

16. கோடி விஷயங்களை விட்டு விட்டு ஹரி பஜனைக்குச் செல்!

17. கிடைத்தற்கரிய ‘பஞ்ச ஜகாரம்’, நல்ல வாழ்க்கைக்கு வழி!

18. உயர்ந்தவர்களின் உள்ளம்!

19. எவனால் உலகம் ஜெயிக்கபடுகிறது?

20. தேவர்களே கவிஞர்களாகப் புவியில் இறங்குகின்றனர்!

21. உருவத்தைக் கண்டு எடை போடாதே!

22. நிலத்திற்கு அழகு விவசாயம்! பெண்ணுக்கு அழகு நல்ல கணவன்!!

23. வாழும் வழி காட்டும் சுபாஷிதம்!

24. பிறரிடமும் தன்னைப் போன்ற குணங்கள் இருப்பதைக் கண்டு மகிழ்பவன் அரிதே தான்!

25.தோட்டத்தில் நுழைந்தாலும் கள்ளிச் செடியையே தான் தேடும் ஒட்டகம்!

26. எவன் உண்மையான சாது?

27. முயற்சியே வெற்றி தரும்!

28. ஒழுக்கமே எல்லா இடத்திலும் செல்வமாகும்!

29. நல்ல ஒரு நண்பனின் குணங்கள் யாவை?

30. சுபாஷிதங்களின் பெருமை!

31. பிரம்மாவினால் கூட ரகசியம் கேட்கப்பட மாட்டாது! எப்போது?!

32. ஒருவனுக்குப் பிடித்திருந்தால் அதுவே அவனுக்கு அழகு!

33. காக்கைகள் கூவும் போது குயில் ஓசை எடுபடுமா?

34. ஸ்வர்க்கத்தை விட உயரத்தில் இருக்கும் இருவர் யார்?

35. மலையின் உயரம், கடலின் ஆழம் ஆகிய இரண்டும் ஒரு புத்திசாலியிடம் உள்ளது!

36. பிறப்பினால் அடைவதல்ல உயர்நிலை! குணங்களினால் அடையப்படுவது அது!

37. யானையே சிங்கத்தின் பலத்தை அறிய முடியும்: ஒரு பலசாலியே இன்னொரு பலசாலியை அறிய முடியும்!

38. கல்வியறிவு பெறுவதைத் தடுக்கும் ஆறு தடைகள் யாவை?

39. ஈனர்களை ஒரு போதும் அண்டாதே!

40.குவித்த கரங்களில் இருக்கும் மலர்களின் வாசனை!

41. ஹரியோ, ஹரனோ யாரானாலும் நெற்றியில் எழுதியதை அழிக்க முடியாது!

42. கள் குடித்த குரங்கைத் தேள் கொட்ட, பேயும் பிடித்தால் அது போடும் ஆட்டம், அடடா!

43. சுபாஷித நூல்களின் பட்டியல்! – 1

44. சுபாஷித நூல்களின் பட்டியல்! – 2

45. முடிவுரை

சுபாஷித ஸ்லோகங்களின் முதல் குறிப்பு அகராதி

*

நூலில் நான் வழங்கிய என்னுரை இது :

என்னுரை

குமரி முதல் இமயம் வரை உள்ள பாரத தேசத்தில் பல்லாயிரம் ஆண்டுகளாக ஏராளமான கவிஞர்கள் இயற்றியுள்ள சுபாஷிதங்கள் லக்ஷக்கணக்கில் உள்ளன.

இவற்றைத் தொகுப்பதில் ஆர்வம் ஏற்பட்டு சுமார் 30000 சுபாஷிதங்களைத் தொகுத்தேன்.

சிறந்த சம்ஸ்கிருத சுபாஷிதங்களுக்கான தமிழ் அர்த்தம் கொண்ட நூல்கள் பெரிய அளவில் இல்லை.

இந்தக் குறையை நீக்க அவ்வப்பொழுது சுபாஷிதங்களின் அர்த்தத்தை தமிழில் சிறு கட்டுரைகளாக www.tamilandvedas.com இணையதள ப்ளாக்கில் எழுதி வந்தேன்.

இதை வெளியிட்டு ஊக்கம் தந்த லண்டன் திரு ச.சுவாமிநாதன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.

சுபாஷிதங்களை சேகரித்து அச்சிட தன் வாழ்க்கையையே அர்ப்பணித்த லுட்விக் ஸ்டெர்ன்பாக் (Ludwik Sternbach – Hon Professor of Dharmasastra, College of France, Paris) அவர்களின் வாழ்க்கை ஆச்சரியகரமானது. அவரை இங்கு பணிவுடன் வணங்கி நினைவு கூர்கிறேன்.

அவருக்கு உறுதுணையாக இருந்து மஹாசுபாஷித சங்க்ரஹா என்ற எட்டு தொகுதிகள் அடங்கிய நூலை திரு எஸ். பாஸ்கரன் நாயர் அவர்கள் ஹோஷியார்பூர் விஸ்வேஸ்வரானந்த் வேதிக் ரிஸர்ச் இன்ஸ்டிடியூட் சார்பாக வெளியிட்டுள்ளார். சுபாஷிதங்களை ஆங்கிலத்தில் திரு A.A.R உள்ளிட்ட அறிஞர்கள் மொழி பெயர்த்துள்ளனர்.

இது உலகளாவிய விதத்தில் சுபாஷிதங்களைக் கொண்டு சேர்த்துள்ளது. இவர்களை எவ்வளவு போற்றினாலும் தகும்.

இது தவிர சிறு சிறு புத்தகங்களாக அவ்வப்பொழுது பல ஆண்டுகளாக ஆங்காங்கே சுபாஷிதங்கள் ஆங்கில மொழி பெயர்ப்புடன் வெளியாகி வந்துள்ளன.

குறிப்பிடத்தகுந்தவையாக அமைந்துள்ளவை கீழ்க்கண்ட நூல்கள்:

Gems of Speech – Manohar Jai (1998)

Subhasita Collection Anthology – N.V.Nayudu (1992)

Subhasita Shatakam – Saroja Bhate (1991)

Subhasitas – RSS வெளியீடு

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: