
Post No. 11,237
Date uploaded in London – – 4 SEPTEMBER 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
SNR Article Index : AUGUST 2022
AUGUST 2022
1-8-2022 11156 விண்வெளி நிலையத்தில் வீரர்களின் வாழ்வில்..!
புத்தக அறிமுகம் 15 நோயில்லா வாழ்வு பெற சில
ரகசியங்கள்!
2-8-2022 11159 இரு நாடுகளில் கொட்டும் ஒரு நீர்வீழ்ச்சி – கண்ணக்
கவரும் நயாகரா (மாலைமலர் 19-7-22)
புத்தக அறிமுகம் 16 மகான்களின் சரிதம் பாகம் 1
3-8-2022 11161 SNR Article Index JULY 2022
புத்தக அறிமுகம் 17 மகான்களின் சரிதம் பாகம் 2
4-8-2022 11163 களப்பாளன் பாடிய அந்தாதி! – தொண்டை மண்டல
சதகம் பாடல் 30!
புத்தக அறிமுகம் 18 புராணத் துளிகள் பாகம் 2
5-8-2022 11166 செப்பு மொழி இருபத்தி ஐந்து
புத்தக அறிமுகம் 19 புராணத் துளிகள் பாகம் 3
6-8-2022 11170. திதி, வார நாட்கள் ஒரு விளக்கம்!
புத்தக அறிமுகம் 20 சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள்
பாகம் 5
7-8-2022 11173 திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் – கொங்கு மண்டல
சதகம் பாடல் 13 – புத்தக அறிமுகம் 21 சுற்றுப்புறச்
சூழல் சிந்தனைகள் – பாகம் 6
8-8-2022 11175. உங்களின் பாராசூட்டை பாக் செய்வது யார்?
புத்தக அறிமுகம் 22 – வெற்றிக்குத் திருக்குறள்!
9-8-2022 11178 செப்பு மொழி இருபத்தியேழு
புத்தக அறிமுகம் 23 – ரிஷிகள் பூமி!
10-8-2022 11181. துணிவே எனது தோழன்
புத்தக அறிமுகம் 24 – Psychic Wonders and Pathway to Success
11-8-2022 11184. அறிவியல் அறிஞர் வாழ்வில் – 1
புத்தக அறிமுகம் 25 – கீதை வழி!
12-8-2022 11187 அறிவியல் அறிஞர் வாழ்வில் – 2 -பால்
எரொடோஸின் தனி அகராதி – புத்தக அறிமுகம் 26
ஸ்வாமி விவேகானந்தரின் வாழ்க்கையில்
சுவையான சம்பவங்கள்!
13-8-2022 11189 இனிக்கும் இத்தாலி மாலைமலர் 4-8-22 கட்டுரை
புத்தக அறிமுகம் 27 – வைணவ அமுதத் துளிகள்
14-8-2022 11192 விண்வெளிச் சாலை மற்றும் சந்திரன் பற்றிய
திரைப்படங்கள் – 1 – – புத்தக அறிமுகம் 28 –
மாக்ஸ்முல்லர் மர்மம்
15-8-2022 11195 தினமணி திரு வெ.சந்தானம் 75 (1911-1998)
15-8-2022 11196 விண்வெளிச் சாலை மற்றும் சந்திரன் பற்றிய
திரைப்படங்கள் – 2 – – புத்தக அறிமுகம் 29 –
முட்டாள்தனமான கேள்விகளைக் கேட்காதீர்கள்
16-8-2022 11198 விண்வெளிச் சாலை மற்றும் சந்திரன் பற்றிய
திரைப்படங்கள் – 3 – புத்தக 30 ஜென் காட்டும்
வாழ்க்கை நெறி
17-8-2022 11201. விண்வெளிச் சாலை மற்றும் சந்திரன் பற்றிய
திரைப்படங்கள் – 4 – புத்தக அறிமுகம் 31 Saints,
Wonderful Temples, Scriptures and God’s Ways!
18-8-2022 11203. விண்வெளிச் சாலை மற்றும் சந்திரன் பற்றிய
திரைப்படங்கள் – 5 – புத்தக அறிமுகம் 32 – புத்தரின்
போதனைகளும் ஜென் குட்டிக் கதைகளும்
19-8-2022 11205 விண்வெளிச் சாலை மற்றும் சந்திரன் பற்றிய
திரைப்படங்கள் – 6 புத்தக அறிமுகம் 34 மாறி வரும்
பெண்கள் உலகம்
20-8-2022 11208 விண்வெளிச் சாலை மற்றும் சந்திரன் பற்றிய
திரைப்படங்கள் – 7 புத்தக அறிமுகம் 35 வெற்றிக்
கலை உத்திகள்!
21-8-2022 11210 விண்வெளிச் சாலை மற்றும் சந்திரன் பற்றிய
திரைப்படங்கள் – 8 – புத்தக அறிமுகம் 33 –
திரைப்படங்களில் ராமர் பாடல்கள்
22-8-2022 11212 மூளை ஆற்றலைக் கூட்ட 10 திரைப்படங்களைப்
பாருங்கள்! புத்தக அறிமுகம் 36 கொங்கு மண்டல
சித்தர்கள், புலவர்கள், தலங்கள் – பாகம் 1
23-8-2022 11215 அதிசய ஒற்றுமைகள் – 1 புத்தக அறிமுகம் 37 கொங்கு
மண்டல சித்தர்கள், புலவர்கள், தலங்கள் – பாகம் 2
24-8-2022 11217 அதிசய ஒற்றுமைகள் – 2 புத்தக அறிமுகம் 38
மஹாபாரத மர்மம் பாகம் 1
25-8-2022 11220 அதிசய ஒற்றுமைகள் – 3 புத்தக அறிமுகம் 39
மஹாபாரத மர்மம் பாகம் 2
29-8-2022 11223 (மூட) நம்பிக்கைகள்?! – புத்தக அறிமுகம் 40 -மஹாகவி
பாரதியார் பற்றி அறிய உதவும் நூல்களும்
கட்டுரைகளும்
30-8-2022 11225 செப்பு மொழி பத்தொன்பது! – புத்தக அறிமுகம் 41 :
ஜோதிடம் பார்க்கும் முன் தெரிந்து கொள்ளுங்கள்!
31-8-2022 11228 சதகங்கள் கூறும் நோயில்லா நெறி – புத்தக அறிமுகம்
42 : மஹாகவி பாரதியார் பற்றி அறிய உதவும்
நூல்களும் கட்டுரைகளும்

***
புத்தக அறிமுகம் – 46
உலகின் ஒப்பற்ற நூல் யோக வாசிஷ்டம்!

பொருளடக்கம்
1. உயர்வுக்கு வழிகாட்டும் ஒப்பற்ற ஒரு நூல்!
2. ஆன்ம ஞானம் பெற அதி சுலபமான அதிசய வழி!
3. உலகின் அதிசய நூல் யோகவாசிஷ்டம்! – 1
4. உலகின் அதிசய நூல் யோக வாசிஷ்டம்! – 2
5. உலகின் அதிசய நூல் யோக வாசிஷ்டம்! – 3
6. உலகின் அதிசய நூல் யோக வாசிஷ்டம்! – 4
7. உலகின் அதிசய நூல் யோகவாசிஷ்டம் ! – 5
8. யோக வாசிஷ்டம் – 6 பிரகரணங்களும் 55 கதைகளும்!
9. வசிஷ்டர் தரும் காலத்தை வென்ற இரகசியம்!
10. யோக வாசிஷ்டத்தில் வரும் பகீரதன் கதை!
11. மனம் பற்றிய யோக வாசிஷ்ட கதை!
12. மாறுகின்ற மனம் பற்றிய இரகசியம்!
13. யோக வாசிஷ்டம் கூறும் வேதாளத்தின் கதை!
14. மனம் என்னும் மகோன்னத சக்தி பற்றிச் சொல்லும் லவணன் கதை!
15. மரணம் என்னும் மாயை! உலகத்திற்குள் உலகங்கள்!! அற்புதமான லீலா கதை!
16. சித்த ஜெயம் ஒன்றே மாயையிலிருந்து விடுபட வழி: காதியின் கதை!
17. மனமும் உலக அனுபவங்களும் – மலரும் அதன் மணமும் போல!
18. விதியா மதியா! மதியையே விதியாக்கு, வெல்வாய்!
19. அத்யாத்ம விசாரம் என்னும் அதி அற்புத ரகசியம்!
21. மோக்ஷம் அடைவது எப்படி? வஸிஷ்டர் கூறிய விதஹவ்யன் கதை!
22. சித் பூஜையும் மூர்த்தி பூஜையும்: சிவபிரானின் அருளுரை!
23. கல்லுக்குள் இருக்கும் வடிவங்களை சிற்பியே அறிவார்!
24. யோக வாசிஷ்டம் கூறும் மனம் பற்றிய ரகசியங்கள்!
*
நூலில் நான் வழங்கிய என்னுரை இது :
சமர்ப்பணம்
திரு வெ.சந்தானம்
(தோற்றம் 4-9-1911 மறைவு 15-8-1998)
இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றவர்.
ஆன்மீகத்தை உயிர் மூச்சாகக் கொண்டு வாழ்ந்தவர்.
பத்திரிகை துறையில் ஒரு புது நெறியைக் காட்டியவர்.
1998 ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று, “கொடி ஏற்றியாச்சா?” என்று கேட்டு ‘ஆம்” என்ற பதிலைக் கேட்ட பின்னர் உயிர் துறந்த தேசபக்தர்.
எனது தந்தையார் தினமணி திரு வெ. சந்தானம் அவர்களுக்கு இந்த நூல் சமர்ப்பணம்.
ச. நாகராஜன்
என்னுரை
ஹிந்து மதத்தின் ஆணி வேராக அமைபவை வேதங்கள், இதிஹாஸங்கள், உபநிடதங்கள் மற்றும் சாஸ்திரங்கள்.
இவை விளக்கும் மர்மங்கள் கணக்கிலடங்கா.
இவற்றை முற்றிலுமாகப் படித்து உணர ஒரு ஆயுள் போதாது.
இவற்றின் சாரத்தை எங்கே படிக்கலாம்? இந்த சிக்கலான கேள்விக்கு சிறந்த விடையாக அமைவது யோக வாசிஷ்டம் என்ற நூல்!
வாழ்க்கையில் நாம் அறிய வேண்டிய அனைத்தின் சாரமும் இதில் உள்ளது; அத்துடன் இன்றைய நவீன அறிவியல் கூறும் உளம் சார்ந்த உண்மைகளும், அதீத உளவியல் பற்றிய வியத்தகு செய்திகளும் அன்றே இந்த நூலில் கூறப்பட்டிருப்பது நம்மை பிரமிக்க வைக்கும்.
விதியா, மதியா என்ற கேள்விக்கு இந்த நூல் தரும் விடை நம்மை வாழ்வியலில் முன்னேற வைக்கும்.
பல காலமாக ஆர்வத்துடன் இந்த நூலைப் பயின்று வருபவன் நான்.
ஆகவே இது பற்றிய கட்டுரைகளை ஆன்மீக மாத இதழான ஞான ஆலயம் இதழிலும், www.tamilandvedas.com ப்ளாக்கிலும் எழுதி வந்தேன். அந்தக் கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல்.
இந்தக் கட்டுரைகளை வெளியிட்ட ஞான ஆலயம் ஆசிரியர் திருமதி மஞ்சுளா ரமேஷ் மற்றும் லண்டன் திரு சுவாமிநாதன் ஆகியோருக்கு எனது உளம் கனிந்த நன்றி.
இந்த நூலை அழகுற அமைத்து வெளியிட முன் வந்த Pustaka Digital Mediaவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக!
கட்டுரைகளாக வெளி வந்த போது இவற்றைப் படித்து என்னை மேலும் எழுத ஊக்குவித்த அனைவருக்கும் எனது நன்றி!
சான்பிரான்ஸிஸ்கோ. ச. நாகராஜன்
15-8-2022
*
நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.
இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.
சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in
என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்
தொடர்புக்கான தொலைபேசி எண் : 9980387852
**