
Post No. 11,238
Date uploaded in London – 4 SEPTEMBER 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx

குஜராத்திலுள்ள கிர்னார் மலை மிகவும் சிறப்புடைய இடம். மெளரியர் , குப்தர்,சக வம்ச அரசர்கள் என பல வம்ச அரசர்களின் கல்வெட்டுகள் பாறைகள் தோறும் செதுக்கப்பட்ட பெருமை உடையது. அங்கேயுள்ள ருத்ரதாமன் (RUDRADAMAN INSCRIPTION) என்னும் சக வம்ச அரசனின் கல்வெட்டு சம்ஸ்க்ருத மொழியில் உள்ள சிறப்புடைத்து. ஏனெனில் பொது ஆண்டு (கி.பி) 150 தேதியுடைய இந்தக் கல்வெட்டு ஸம்ஸ்க்ருத மொழியில் உள்ள நீண்ட கல்வெட்டு ஆகும். இதில் 500ஆண்டு வரலாறு கிடைக்கிறது. அத்தோடு மேலும் சில ரகசியங்களை வெளிப்படுத்துகிறது.அதாவது அதுவரை சம்ஸ்க்ருத மொழியில் உள்ள விஷயங்கள் ஓலைச் சுவடிகளிலும் , மரப்பட்டைகளிலும் மட்டும் எழுதப்பட்டன. ருத்ரதாமன் முதல் தடவையாக அதைக் கல்வெட்டில் வடித்தான். 2000 ஆண்டுகளுக்கு முன்னர் மேற்குக் கோடியிலுள்ள குஜராத்தில் சம்ஸ்க்ருத மொழி எந்த அளவுக்கு வளர்ச்சி அடைந்தது என்பதையும் இது காட்டும். இது பழந் தமிழ்க் கல்வெட்டுகளைப் போல பிராமி லிபியில் /எழுத்தில் எழுதப்பட்டுள்ளது.
ஜூனாகட் என்னும் குஜராத் மாநில நகருக்கு அருகிலுள்ள கிர்னார்(GIRNAR INSCRIPTION) மலை இந்துக்கள், பெளத்தர்கள் , சமணர்கள் ஆகிய மூன்று மதத்தினருக்கும் புனிதமான கோவில்களை உடையது . மன்னர் அசோகன், சக வம்ச அரசன் ருத்ரதாமன், குப்த வம்ச அரசன் ஸ்கந்த குப்தன் ஆகியோரின் கல்வெட்டுகள் இங்கே செதுக்கப்பட்டுள்ளன. இது ஒரு அற்புதம். சுமார் 800 ஆண்டுக்காலம் ஆண்ட மூன்று வம்ஸங்களும் ஏன் இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தன என்பதை எண்ணி எண்ணி வியக்காமல் இருக்க முடியாது. உலகில் வேறு எங்கும் இப்படி ஒரு இடம் இருக்குமா என்பது சந்தேகமே.
ருத்ரதாமன் கல்வெட்டு அழகிய சம்ஸ்க்ருத உரைநடையில் அமைந்துள்ளது.
பாசனத்துக்கும் குடிநீருக்கும் பயன்பட்ட ஸுதர்சன (SUDARSANA LAKE) என்ற ஏரியின் பராமரிப்பு பற்றி இக்கல்வெட்டு கூறுகிறது. அந்தக் காலத்தில் மக்களுடைய தண்ணீர் தேவை பற்றி மன்னர்கள் எவ்வளவு அக்கறை கொண்டிருந்தனர் என்பதும், ஏரி உடைப்பை அடைத்த திறமையான என்ஜினீயர்கள் பற்றியும் இக்கல்வெட்டு பேசுகிறது. மெளரிய சந்திரகுப்தன் காலத்தில் (கி.மு .321-297) அவருடைய மாகாண கவர்னர் வைஷ்யர் புஷ்ய குப்தாவினால் இந்த ஏரி உருவாக்கப்பட்டது.. பின்னர் மன்னரின் பேரனான அசோக சக்ரவர்த்தி காலத்தில் யவனர் துஷாபிவினால் மேலும் செப்பனிடப்பட்டது . ஆயினும் ருத்ரதாமன் காலத்தில் வீசிய கடும் புயல்
மழையில் ஏரி உடைந்து சேதமானது. அதைச் செப்பனிடும் விஷயத்தை விளக்கமாக விளம்பும் கல்வெட்டு இது.
இந்தக் கல்வெட்டை ஆராய்வோர் மேலும் பல அற்புத உண்மைகளைக் கண்டுள்ளனர். இது 500 ஆண்டு கால வரலாற்றைக் கூறுவதால் இந்துக்கள் எந்த அளவுக்குத் துல்லியமாக வரலாற்றுக் குறிப்புகளை நினைவு வைத்திருந்தனர் என்பது தெரிகிறது. அதுமட்டுமல்ல ருத்ராதமனின் புகழ்பாடும் பகுதி (பிரசஸ்தி) அவன் காவியம் செய்வதில் வல்லவன், போர்க்களம் தவிர வேறு எங்கும் உயிர்வதை செய்யாதவன், மக்கள் அனைவரும் அவனை நேசித்தனர், அவன் மகாராஷ்டிரம் வரை ஆண்டவன் என்றும் கூறுகிறது. 2000 ஆண்டுகளுக்கு முன்னர் உள்ள இந்தியாயவைக் காட்டும் இடம் இது, ஜூனாகட் (JUNAGADH) நகரின் பழைய பெயரை கிரிநாகர என்றும் கிர்னார் மலையின் பழைய பெயர் ஊர்ஜயத் என்றும் சொல்கிறது கல்வெட்டு.
கல்வெட்டு சொல்லும் செய்தி: புயல் மழை வெள்ளத்தில் சுதர்சன ஏரி இருந்த இடம் தெரியாமல் போகவே மக்கள் சாகுபடி பற்றியும் விளைச்சல் பற்றியும் கவலைகொண்டனர். ருத்ரதாமன் பலரை அனுப்பியும் ஏரி உடைப்பை அடைக்க முடியவில்லை. . குலைப என்பவனின் மகனான பஹ்லவன் சுவிசகனை செளராஷ்டிர பிரதேசத்தின் கவர்னராக ருத்ரதாமன் நியமித்தான்; இறுதியில் அந்தப் பஹ்லவன் முயற்சியால் சுதர்சன ஏரி அடைக்கப்பட்டது
இருபது நீண்ட வரிகளில் செதுக்கப்பட்டுள்ள இந்த அதிசயக் கல்வெட்டு நமக்குக் காட்டும் உண்மைகள் என்ன?
1.இந்துக்களுக்கு வரலாற்று உணர்வு இல்லை என்று சொல்லும் மேலை நாட்டினரின் தலையில் குட்டுவைக்கும் சாசனம் இது. ஏனெனில் 500 ஆண்டுக் காலத்தில் ஒரு ஏரிக்கு மட்டும் நிகழ்ந்த வரலாற்றை இயம்பும் ரிக்கார்ட் (RECORD) இது.
2.மேலும் 2000 ஆண்டுக்கு முன்னர் ருத்ராதமன் ஆண்ட பகுதிகளைச் செல்லுகையில் அவன் தென்னாட்டை ஆண்ட சதகர்ணியைத் தோற்கடித்த விஷயத்தையும் சொல்கிறது.
3.அதுமட்டுமல்லாமல் இந்துக்களின் பொறியியல் திறமைக்கும் சான்று பகர்கிறது. புராணத்தில் இந்துக்களின் என்ஜினீயரிங் (ENGINEERING FEATS) சாதனைகள் பற்றி நாம் படித்தாலும் கல்வெட்டு முதலியனதான் வரலாற்றுச் சான்றுகளாக ஒப்புக்கொள்ளப்படுகிறது.
பகீரதன் என்ற மாமன்னன் கங்கை நதியைப் புதிய வழியில் திருப்பிவிட்டு பாசனத்துக்கு உதவியதை நாம் அறிவோம். அதை பார்த்து அகஸ்தியர், காவிரி நதியை, கேரளத்தில் பாய்ந்து கடலில் வீணாவத்தைத் தடுக்க, தமிழ்நாட்டுக்குள் திருப்பிவிட்டதையும், விந்திய மலை வழியாக சாலை அமைத்ததையும், தமிழ் மன்னர்களை வியட்நாம் வரை அழைத்துச் சென்றதையும் நாம் அறிவோம் (இதை புராண பாஷையில் அகஸ்தியர் விந்தியமலைய கர்வ பங்கம் செய்தார் என்றும் அகஸ்தியர் கடல் நீரைக் குடித்தார் எனும் சொல்லுவர்). இதை எல்லாம் அரைவேக்காடுகள் புராணக்கதைகள் என்று ஒதுக்கித் தள்ளும். அத்தகையோரின் வாயை அடைக்கும் ஆற்புதக் கல்வெட்டு கிர்னார் மலை ருத்ரதாமனின் கல்வெட்டு. இந்தியாவின் மேற்குப் பகுதியில் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் சம்ஸ்க்ருத மொழி இவ்வளவு வளர்ச்சி கண்டதையும் எண்ணி வியக்கலாம்..
—SUBHAM—
TAGS- ருத்ரதாமன், கல்வெட்டு., சம்ஸ்க்ருத, ஸுதர்சன ஏரி, சுதர்சன, கிர்னார் மலை, ஜூனாகட்,