ஹிந்து ராஷ்டிரத்தின் தலைநகரம் வாரணாசி! (Post No.11,239)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,239

Date uploaded in London – –    5 SEPTEMBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஹிந்து ராஷ்டிரத்தின் தலைநகரம் வாரணாசி!

ச.நாகராஜன்

2022 ஆகஸ்ட் 13ஆம் தேதியிட்ட TNN செய்தி அறிக்கை இது:

உத்தர பிரதேசம் : ஹிந்து ராஷ்டிரம் டிராஃப்ட் காசியை தேசத்தின் தலைநகரமாக முன் வைக்கிறது.

பிரதானமான 30 அருளாளர்களும் அறிஞர்களும் ஹிந்து ராஷ்டிரத்தின் முதல் வரைவு அரசியல் சட்டத்தைத் தயாரித்துள்ளனர். ப்ரயாக் ராஜில்  பிப்ரவரியில் நடந்த தர்ம சம்ஸத்தில் இது முதன் முதலாக முன் வைக்கப்பட்டது.

32 பக்கமுள்ள இந்த வரைவுத் திட்டம் 2023இல் சங்கம் நகரில் நடக்கவுள்ள மகா மேளாவில் வைக்கப்படும். கல்வி, தற்காப்பு, சட்டம் ஒழுங்கு, ஓட்டுப் போடும் அமைப்பு முறை, அரசின் தலைமைக்கு உள்ள உரிமைகள் உள்ளிட்டவற்றை இந்த வரைவு வழங்குகிறது. இந்த அரசியல் சட்டத்தின் படி நியூ டெல்லிக்குப் பதிலாக தேசீய தலை நகரமாக வாரணாசி இருக்கும்.

இது தவிர காசியில் பார்லிமெண்ட் ஆஃப் ரெலிஜன்ஸ் அமைக்கப்படும். வரைவு, இஸ்லாமியர் மற்றும் கிறிஸ்தவர்கள் ஒரு குடிமகனுக்குரிய,  ஓட்டுப் போடுவதைத் தவிர உள்ள இதர அனைத்து உரிமைகளையும் அனுபவிப்பர். இது தவிர ஒவ்வொரு குடிமகனுக்கும் ராணுவ பயிற்சி கட்டாயமாக வழங்கப்படும். விவசாயத்திற்கு வரி விதிக்கப்பட மாட்டாது.

வரைவைத் தயாரித்த கமிட்டியின் போஷகர்கள் ஸ்வாமி ஆனந்த ஸ்வரூப், சாம்பவி பீடாதீஸ்வர் மற்றும் சங்கராசார்ய பரிஷத்தின் தலைவர்.

இதில் காமேஸ்வர் உபாத்யாய, தலைவர், சுப்ரீம் கோர்ட்டின் சீனியர் அட்வகேட் பி.என்.ரெட்டி, தற்காப்பு நிபுணர் ஆனந்த் வர்தன், சனாதன தர்ம அறிஞர் சந்த்ரமணி மிஸ்ரா, டாக்டர் வித்யாசாகர் உள்ளிட்டோரும் அங்கம் வகிக்கின்றனர்.

அரசியல் சட்டத்தின் முகப்புப் பக்கம் அகண்ட பாரதத்தின் வரைபடத்தைக் கொண்டுள்ளது. இந்தியாவிலிருந்து பிரிக்கப்பட்ட அனைத்து நாடுகளையும் காண்பிப்பதற்கான ஒரு முயற்சி இந்த படத்தின் மூலமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவை எதிர்காலத்தில் இந்தியாவுடன் இணையும். இந்தப் பக்கமானது சில கோவில்களின் உச்சியில் பறக்கும் காவிக் கொடியையும் காண்பிக்கிறது. உள்ளே சாம்பவி மாதாவின் படம் உள்ளது. இதர பக்கங்களில் அரசியல் சட்டம், மற்றும் மாதா துர்கா, இராமர், கிருஷ்ணர் உள்ளிட்டபல தெய்வங்களின் படங்கள், கௌதம புத்தர், குரு கோவிந்த சிங், ஆதி சங்கரர், சாணக்யர், வீர் சவர்கார், ராணி லக்ஷ்மிபாய், ப்ரித்வி ராஜ் சௌஹான், ஸ்வாமி விவேகானந்தார் போன்ற இந்தியாவின் பெரும் ஆளுமைகளைச் சித்தரிக்கிறது.

ஹிந்து ராஷ்டிரத்தின் அரசியல் சட்டம் 750 பக்கங்கள் கொண்டிருக்கும். அதன் அமைப்பு இப்போது விரிவாக விவாதிக்கப்படும். இந்த விவாதமானது மதம் பற்றிய அறிஞர்கள் மற்றும் பல்வேறு துறைகளில் உள்ள நிபுணர்கள் ஆகியோருடன் நடக்கும்.

“அரசியல் சட்டத்தின் ஒரு பாதி – 300 பக்கங்கள் – 2023இல் ப்ரயாக்ராஜில் நடக்கும் மகா மேளாவில் வெளியிடப்படும். இதற்கென தர்ம சம்ஸத் ஒன்று நடக்கும்” – இவ்வாறு டைம்ஸ் ஆஃப் இந்தியா இதழுக்காக வெள்ளியன்று வாரணாசியிலிருந்து போன் மூலமாக ஸ்வாமி ஆனந்த் ஸ்வரூப் கூறினார்.

அரசியல் சட்டத்தின் முக்கிய அம்சங்களைப் பற்றி ஸ்வரூப் கூறியதாவது : ஒரு தனி அமைப்பின் மூலம் ஹிந்துக்கள், சீக்கியர்கள், புத்தமதத்தினர் மற்றும் சமண மதத்தினர் தங்கள் ஓட்டுரிமையைப் பெறுவர். தேசத்தில் ஒவ்வொரு ஜாதியைச் சேர்ந்தவர்களுக்கும் வசதியும் பாதுகாப்பும் வாழவும் உரிமை உண்டு. 16  வயது முடிந்தவர்களுக்கு ஓட்டுரிமை உண்டு. தேர்தலில் போட்டியிட 25 வயது என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பார்லிமெண்ட் ஆஃப் ரெலிஜின்ஸ்குக்கு 543 பேர் தேர்ந்தெடுக்கப்படுவர். பிரிட்டிஷ் காலத்தில் இருந்த விதிகளும் கட்டுப்பாடுகளையும் இது நீக்கும். வர்ண அமைப்பின் படி அனைத்தும் நடக்கும்.

நன்றி : கொல்கத்தாவிலிருந்து வெளிவரும் ஆங்கில வார இதழ்

ட்ரூத் – தொகுதி 90, இதழ் 20 , 26-8-2022 தேதியிட்ட இதழ்

 **

ஆங்கிலத்தில் உள்ள இதன் மூலம் கீழே தரப்பட்டுள்ளது.

TNN reports on Aug. 13, 2022 from Prayagraj, under the caption, “Uttar Pradesh: ‘Hindu Rashtra’ draft proposes Kashi as national capital”, as follows: 

A group of 30 eminent seers and scholars has prepared the first draft of the constitution of the Hindu Rashtra, which was first proposed in February at the Dharma Sansad held in Prayagraj. The 32- page draft would be presented at the next Dharma Sansad to be held at Magh Mela–2023 in the Sangam city. The draft mentions in detail provisions in the field of education, defence, law and order, system of voting, rights of the head of state, etc. As per the constitution,Varanasi will replace New Delhi as the country’s capital

Besides, there is a proposal to build a ‘Parliament of Religions’ in Kashi (Varanasi). It also proposes that Muslims and Christians will enjoy all the rights of a common citizen, barring the right to vote. Besides, every citizen would be given compulsory military training and agriculture would be made completely tax free. 

The patron of the drafting committee is Swami Anand Swaroop, Shambhavi Peethadheeshwar and president of the Shankaracharya ParishadIt also consists of Kameshwar Upadhyay, chairman, senior advocate of Supreme Court BN Reddy, defence expert Anand Vardhan, Sanatan Dharma scholar Chandramani Mishra and Dr. Vidya Sagar, etc. 

The cover page of the constitution carries the map of the proposed ‘Akhand Bharat’. Through the map, an attempt has been made to show that the countries, which have been separated from India will be merged with it in the future. The page also shows a saffron flag waving atop some temples. Inside is the picture of Shambhavi Mata while the pages carry, besides text, pictures of deities and great personalities of India, including Maa Durga, Lord Ram, Lord Krishna, Gautam Buddha, Guru Gobind Singh, Adi Shankaracharya, Chanakya, Veer Savarkar, Rani Laxmibai, Prithviraj Chauhan, Swami Vivekananda, etc. “The constitution of the Hindu Rashtra will be of 750 pages and its format will be discussed extensively now. Discussions will be held with religious scholars and experts from different fields. Half of the constitution (around 300 pages) will be released at the Magh Mela 2023 to be held in Prayagraj for which Dharam Sansad will be held,” Swami Anand Swarup told TOI over phone from Varanasi on Friday. 

Talking of salient features of the constitution, Swaroop said: “There will be an executive system wherein Hindus, Sikhs, Buddhists and Jains will get the right to exercise their franchise. People of every caste will have the facility and security to live in the nation. In this, the right to vote will be given after completing the age of 16 years, while the age of contesting elections has been fixed at 25 years. Altogether 543 members will be elected for the Parliament of Religions. It will abolish the rules and regulations of the British period and everything will be conductedon the basis of the Varna System.” 

 Source Kolkata Weekly Truth -Issue dated 26-8-2022 (Vol 90 No 20)

Tags- Hindu Rashtra, Varanasi, ஹிந்து ராஷ்டிரம், காசி, வாரணாசி

புத்தக அறிமுகம் – 47

அறிவியல் துளிகள் – பாகம் – 7

பொருளடக்கம்

என்னுரை

157. மறக்கத் தெரிந்த மனமே வாழ்க! – 1

158. மறக்கத் தெரிந்த மனமே வாழ்க! -2

159. செத்துப் பிழைத்த சீனாவின் ‘யூடு’!

160. இரட்டையர் பற்றிய ஆராய்ச்சி!

161. மயக்கும் தங்கமும் வியக்கும் மனிதரும்! – 1

162. மயக்கும் தங்கமும் வியக்கும் மனிதரும்! – 2

163. இயற்கையில் கணித இரகசியம்! – 1

164. இயற்கையில் கணித இரகசியம்! – 2

165. இயற்கையில் கணித இரகசியம்! – 3

166. இடது கை செயலாற்றல் தவறல்ல!

167. மின்னல் வேகக் கணித முறையைக் கண்டறிந்த மேதை! – 1

168. மின்னல் வேகக் கணித முறையைக் கண்டறிந்த மேதை! – 2

169. நவீன தொழில்நுட்பத்தின் அபார கட்டிடக் கலை சாதனைகள்! – 1

170 நவீன தொழில்நுட்பத்தின் அபார கட்டிடக் கலை சாதனைகள்! – 2

171. நவீன தொழில்நுட்பத்தின் அபார கட்டிடக் கலை சாதனைகள்! – 3

172. மனிதர்களைக் கண்டு வெட்கப்பட்ட ஒரே விஞ்ஞானி!

173. வெற்றிக்கான கருத்துக்களை உருவாக்குவது எப்படி? – 1

174. வெற்றிக்கான கருத்துக்களை உருவாக்குவது எப்படி? – 2

175. வெற்றிக்கான கருத்துக்களை உருவாக்குவது எப்படி? – 3

176. விண்ணில் தொலைந்த விண்வெளி வீர்ர்கள்!

177. சந்தோஷம் அடைய எளிய வழிகள்! – 1

178. சந்தோஷம் அடைய எளிய வழிகள்! – 2

179. விண்வெளி வீராங்கனையின் இரகசியங்கள்!

180. மிருக உலக அதிசயங்கள்! – 1

181. மிருக உலக அதிசயங்கள்! – 2

182. அமெரிக்காவில் அயல்கிரகவாசி வாழ்ந்தாரா?

முடிவுரை

*

நூலில் நான் வழங்கிய என்னுரை இது :

என்னுரை

இன்றைய நவீன உலகில் அறிவியல் வகிக்கும் பங்கை அனைவரும் அறிவோம்; உணர்வோம்.

பணி, தகவல் தொடர்பு, போக்குவரத்து, மருத்துவம் உள்ளிட்ட நூற்றுக் கணக்கான துறைகளில் அறிவியல் இல்லாமல் ஒன்றும் சிறப்பாக நடக்காது.

ஆகவே அறிவியலில் எதையெல்லாம் முக்கியமாக உணர்கிறோமோ அதையெல்லாம் முடிந்த அளவு அறிந்து கொள்ள வேண்டியது சிறுவர் முதல் பெரியோர் வரை அனைவரது கடமையும் ஆகும்.

இந்த வகையில் பாக்யா வார இதழில் அறிவியல் சம்பந்தமான நூற்றுக் கணக்கான கட்டுரைகளை எழுதி வரலானேன்.

எனது இனிய நண்பரும், மிகச் சிறந்த திரைப்பட கதாசிரியரும், நடிகரும், பாக்யா இதழின் ஆசிரியருமான திரு கே. பாக்யராஜ் அவர்களுக்கு அறிமுகமே தேவை இல்லை. அனைவர் உள்ளத்தையும் கொள்ளை கொண்ட பண்பாளர் அவர்.

அவர் தந்த ஊக்கத்தினால் பாக்யா வார இதழில் அறிவியல் துளிகள் என்ற தொடரை ஆரம்பித்தேன்.

பல்லாயிரக்கணக்கான வாசகர்களின் பேராதரவு என்னை பிரமிக்க வைத்தது. 4-3-2011இல் ஆரம்பித்து எட்டு வருடங்களுக்கும் மேலாக

வெற்றி நடைபோடும் அறிவியல் துளிகளை வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க பாகம் பாகமாக வெளியிட முடிந்தது.

இந்த நூல் ஏழாம் பாகம் – 157 முதல் 182 முடிய உள்ள 26 அத்தியாயங்களின் தொகுப்பாகும்.

ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு அறிவியல் அம்சத்தை விளக்குவதால் இதை எந்தப் பகுதியிலிருந்தும் படிக்கலாம் என்பதே இந்த நூலின் தனிச் சிறப்பு.

இதன் முதல் பாகத்திற்கு திரு கே.ஜி. நாராயணன் அவர்கள் அணிந்துரை வழங்கிச் சிறப்பித்தார். எல்லா பாகங்களுக்கும் பொருத்தமாக அமைந்துள்ள அணிந்துரை அது.

முதல் பாகத்தில் அவரைப் பற்றிக் குறிப்பிட்டிருப்பதை இங்கு வழங்குகிறேன்.

“இந்த அறிவியல் துளிகளுக்கு இந்தியாவின் தலை சிறந்த விஞ்ஞானிகளில் ஒருவரும் எனது சிறந்த நண்பருமான திரு கே.ஜி. நாராயணன் அணிந்துரை அளித்துள்ளது எனது நற்பேறே! எனது இனிய நண்பரும் விஞ்ஞானியுமான திரு தேசிகன் மூலம் அறிமுகமான அவர் டிஆர் டி ஓ என அழைக்கப்படும் Defene R&D Organisation (DRDO) இல் பல்லாண்டுகள் பணியாற்றியவர். இயக்குநராக இருந்து வழி காட்டியவர். நமது பாரத தேசத்தின் பாதுகாப்பிற்கான முக்கிய சாதனங்கள் உருவாக வழி காட்டியவர்.

விமான இயலில் குறிப்பிடத் தகுந்த துறையான வான் பயண மின்னணுவியலில் (Avionics) போர் விமானத்தின் கட்டுப்பாடு சாதனத் துறையில் தேஜஸ் (Tejas) என்ற இந்திய இலகு ரக போர் விமானத்தின் (Indian Light Combat aircraft) பறத்தல் கட்டுப்பாடுகள் (flight control) மற்றும் பறத்தல் ஒப்புச்செயலாக்கத்தில் (flight simulation) அவரது சாதனை குறிப்பிடத் தகுந்தது.

இந்திய விமானப் படையின் முன்னணிப் போர் விமானங்கள் மற்றும் ஆளில்லா வான்வழிக் கலங்களுக்கான (front line fighters of India Air Force and Unmanned Air Vehicles) பறத்தல் கட்டுப்பாடுகள் மற்றும் ஒப்புச் செயலாக்கத்திலும் அவரது பணி மகத்தானது.

பெரிய விஞ்ஞானி என்றாலும் கூட இலக்கியத்தில் ஆர்வம் கொண்டு அதற்கும் நேரம் ஒதுக்குபவர். பழகுவதற்கு எளிமையானவர். அறிவியல் துறையில் இளைஞர்கள் முன்னேறுவ்தை வெகுவாக ஆதரிப்பதோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கு வழிகாட்டியாகவும் உறுதுணையாகவும் இருப்பவர். கிராமப்புறங்களில் அறிவியல் கல்வியை ஊக்குவித்து அதனைப் பரப்பும் அகஸ்தியா இண்டர்நேஷனல் பவுண்டேஷனில் ஆலோசகராக இருந்து அறிவியல் வளர்ச்சி முன்னேற்றத்தில் இன்றும் அவர் ஈடுபட்டிருப்பது ஒன்றே அவரது அறிவியலைப் பரப்புவதி அவருக்குள்ள ஆர்வத்தை எடுத்துக் காட்டச் சிறந்த சான்றாகும்.

அவரை அணுகி அணிந்துரை நல்க வேண்டியபோது மிகவும் மனமுவந்து அற்புதமான உரையை நல்கியுள்ளார். அவருக்கு எனது உளம் கனிந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.”

இப்படிப்பட்ட உயரிய, ஆகப் பெரும் விஞ்ஞானி தந்த அணிந்துரையில் ஒரு பகுதியை இங்கு வழங்குகிறேன்.

“அறிவியல் முன்னேற்றங்களால் மனித வாழ்க்கை மிகவும் – அளவிட முடியாத முறையில் – மாற்றப் பட்டிருக்கிறது. பொறியியல் துறையிலும் மருத்துவத் துறையிலும் வியக்கம் தரும் பெரும் சாதனைகள் மனிதனின் அன்றாட வாழ்வை மிக ஆழமான முறையில் மாற்றியிருக்கின்றன. அதே சமயத்தில் பிரபஞ்சம் எப்படி உருவாகியது போன்ற அன்றாட வாழ்விலிருந்து வெகு தூரத்தில் உள்ள கேள்விகளுக்கும் சில சின்ன சின்ன விடைகள் கிடைத்திருக்கின்றன. ஐந்தாயிரம் ஆண்டுகளாக அறிந்து கொண்ட பொருள்களைவிட பல மடங்குகள் அதிகமாக கடந்த முன்னூறு ஆண்டுகளில் அறிவியல் மூலமாக அறிந்து கொண்டிருக்கிறோம். இந்த மகத்தான முன்னேற்றங்களைப் பற்றி முடிந்தவரை தெரிந்து கொள்வது நாம் எல்லோருக்கும் தவிர்க்க முடியாத தேவை ஆகி விட்டது

திரு நாகராஜன் அவர்களின் அறிவியல் துளிகள் இந்தத் தேவையை பூர்த்தி செய்யும் முயற்சிகளில் தலையாயதாகத் திகழ்கிறது

நூற்றுக்கணக்கான அறிவியல் துளிகளை அனைவரும் அறியக்கூடுமாறு அன்றாட பழக்கத் தமிழில் பகர்ந்து கொண்டிருக்கிறார். தமிழருக்கும் தமிழுக்கும் நாகராஜன் செய்திருக்கும் பாராட்டுக்குரிய பெரும் சேவை இது.

மஹா விஞ்ஞானி நியூட்டன் சொல்கிறார்:

“நான் மற்றவர்களுக்கு எப்படித் தெரிகிறேன் என்று தெரியாது. ஆனால் எனக்கு நான் கடற்கரையில் விளையாடிக் கொண்டிருக்கும் சிறு பையன் போல் தான் தோன்றுகிறேன். பல கோடிக்கணக்கான விந்தைகள் மூழ்கியிருக்கும் பரந்த கடலுக்கு எதிரில் மணலில் கிடக்கும் சில சிப்பிகளையும் வண்ணக் கற்களையும் கண்டு வியப்பு அடைந்து கொண்டிருக்கிறேன்” அதே கருத்தை “கற்றது கை மண்ணளவு; கல்லாதது உலகளவு” என்று ஔவையார் சொன்னார்கள். அறிவியல் துளிகளும் அது போன்ற மற்ற முயற்சிகளும் எல்லோர்க்கும் கை மண் அளவாவது அறிவியல் அளிக்கின்றன. நம் நன்றிக்கும் பாராட்டுகளுக்கும் உரியவர் திரு நாகராஜன்.

திரு. கே.ஜி.நாராயணன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை மீண்டும் இங்கு பதிவு செய்கிறேன்.

இந்த புத்தகத்தை வெளியிட முன் வந்த Pustaka Digital Media வின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக.

தொடராக வந்த போது என்னை ஊக்குவித்த பல்லாயிரக்கணக்கான வாசகர்களுக்கு எனது அன்பு கலந்த நன்றி.

அறிவியல் காட்டும் வழியில் முன்னேறி பாரதத்தை உலகின் வல்லரசுகளில் முதன்மை அரசாக ஆக்கிக் காட்டுவோம். அதற்காக அறிவியல் கற்போம்; அறிவியலைப் பரப்புவோம்.

நன்றி.

பங்களூர்                                             ச.நாகராஜன்

9-3-2022

*

நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.

இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.

சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in

என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்

தொடர்புக்கான தொலைபேசி எண் :   9980387852   

**

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: