
WRITTEN BY S NAGARAJAN
Post No. 11,244
Date uploaded in London – – 7 SEPTEMBER 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஹிந்துக்களே விழித்தெழுங்கள்!
வரலாற்றில் சரியான தருணத்தில் ஒரு பாடம்! – 1
ச.நாகராஜன்
சுப்ரீம் கோர்ட் அட்வகேட், டாக்டர் ஹரிபன்ஷ் மிஸ்ரா, ‘உங்களுக்குத் தெரியுமா?’ என்ற தலைப்பில், மேற்கின் போலித்தனம் பற்றி ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.
அதில் அவர் தரும் உண்மை கருத்துக்கள் இவை:
1. ஐரோப்பாவில் கிறிஸ்தவ மதத்தை வெவ்வேறு தரங்களில் 32 நாடுகள் அங்கீகரிக்கின்றன. ஒன்று அரசாங்க மதமாகவோ அல்லது வடிகனால் செய்யப்படும் சமய உடன்பாட்டாலோ அரசியல் சட்டத்தில் விசேஷ சலுகைகள் தரப்பட்டோ உள்ளன. வடிகனுடனான சமய உடன்பாட்டு ஒப்பந்தங்கள் சர்ச்சுகளின் நோக்கங்களை நிர்வகிக்க ஏதுவாக உள்ளவையாகும்.
2. இங்கிலாந்திற்கு ஒரு அதிகாரபூர்வமான அரசாங்க மதமான சர்ச் ஆஃப் இங்கிலாந்து ஏசு கிறிஸ்து ஒருவரே கடவுள் என நம்புகிறது. 21ஆம் நூற்றாண்டில் இன்னும் ஏன் இங்கிலாந்து ஒரு கிறிஸ்தவ ராஜ்யமாக இருக்கிறது? – என்று இப்படி எந்த ஒரு மேலை நாட்டு தாராளக் கொள்கை உடையவரும் கேட்கவில்லை. ஆனால் நான்கு மதங்களுக்குத் தாயகமான இந்தியா மட்டும் காலனியின் அடிச்சுவடான செகுலரிஸத்தைப் பின்பற்ற வேண்டுமாம்!
3. இங்கிலாந்தின் பிஷப்ஸ் ஆஃப் சர்ச்சுக்கு யுனைடெட் கிங்டம் பார்லிமெண்ட் 26 சீட்டுகளை ஒதுக்கி இருக்கிறது. 2015 முடிய கடந்த 400 வருடங்களாக ஒரு பெண் பிஷப்பும் அங்கு தேர்ந்தெடுக்கப்படவில்லை. ஆனால் நான்கு நூற்றாண்டுகளாக வெள்ளை கிறிஸ்தவ ஆண்களுக்கு மட்டும் அதன் ஒரு பகுதியை ஒதுக்கியுள்ள போதும் அதன் ஜனநாயக மதிப்பு ஒரு போதும் கேள்வி கேட்கப்பட்டதில்லை!
4. இந்தியா அதன் பாராளுமன்றத்தில் சில சீட்டுகளை மதத் தலைவர்களுக்கு ஒதுக்கியதாக வைத்துக் கொள்வோம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மோடி, ஜனநாயகத்தைப் புறம் தள்ளுகிறார் என்று சொல்லும் மேலை உலகம், இங்கிலாந்து நாட்டின் சட்டங்களை இயற்ற வல்ல 26 பிஷப்புகளை சர்ச் நேரடியாக நியமனம் செய்வதை மிகச் சரியானது என்று ஒப்புக் கொள்கிறது. இந்தியர்களுக்கு மட்டும் தான் செகுலரிஸம் போலும்!
5. 92 சீட்டுகள் யுனைடெட் கிங்டம் பாராளுமன்றத்தில் வம்ச அடிப்படையில் பூர்த்தி செய்யப்படுகிறது. ஆமாம், உண்மையிலேயே பிறப்புரிமையின் பேரில் இந்த 92 சீட்டுகள் அளிக்கப்படுகின்றன. இந்த சீட்டுகள் ‘பீயர்ஸ்’ (‘peers’) என அழைக்கப்படுகின்றன. இவை இங்கிலாந்தின் அரண்மனைக் குடும்பங்களுக்காக ரிஸர்வ் செய்யப்பட்டவையாகும். இந்திய ஜனநாயகத்திலோ ஒரு வார்டு கவுன்ஸிலர் கூட பிறப்பின் அடிப்படையில் நிரப்பப் பட முடியாது. என்ற போதிலும் இங்கிலாந்து முற்போக்கானது; இந்தியா பிற்போக்கானது! என்ன ஒரு விசித்திரம்!!
6. இங்கிலாந்தின் தேசீயக் கொடி செயின்ட் ஜார்ஜின் கிராஸை அடிப்படையாகக் கொண்ட ஒன்றாகும். கிறிஸ்தவ மதத்தின் மீது நம்பிக்கை கொண்ட ஜார்ஜ் ஒரு ராணுவ செயிண்ட்! சிலுவைப் போர்களுக்கு உத்வேகமூட்டிய ஒரு இட்டுக்கட்டப்பட்ட பழங்கதை அடிப்படையிலான ஒரு பாத்திரம் அது! அவ்வளவு தான்.
இப்போது இந்தியாவின் கொடியில் ஓம் என்று பொறிக்கப்பட்டதாக கற்பனை செய்து பாருங்கள். உடனேயே, மத சகிப்புத்தன்மை இல்லை என்று ஐ.நாவினால் அது கண்டனம் செய்யப்படும்!
-அடுத்த கட்டுரையுடன் முடியும்
ஆதாரம், நன்றி கொல்கொத்தாவிலிருந்து வாரந்தோறும் வெளிவரும்
ட்ரூத் இதழ்- 08-07-2022 TRUTH Vol 90 No 13
**
இதன் ஆங்கில மூலத்தைப் படிக்க விரும்புவோருக்கா கட்டுரை ஆங்கிலத்தில் அப்படியே தரப்படுகிறது.
A timely lesson in History – 1
Dr Haribansh Mishra, Advocate Supreme Court writes on the Duplicity of the West, under the caption– DidYou Know?
I. 32 Nations in Europe officially recognize Christianity, to varying degrees, either as state religion or with special privileges in constitution or through a Concordat with the Vatican. Concordats are agreements of nations with Vatican to govern and protect Church interests.
II. England has an official state religion, the Church of England, which believes Jesus is the only god. Why is England still a Christian state in 21st century? asked no western liberal ever. But India despite birthing 4 world religions has to bear colonial vestige of secularism.
III. UK Parliament has 26 seats reserved for Bishops of Church of England. Till 2015, for 400 years there was not one female Bishop chosen. But UK’s democratic reputation is untouched despite reserving a section of its Parliament exclusively for White Christian males for 4 centuries.
IV. Consider if India reserved seats in parliament for its religious heads. A Modi elected by popular vote is a sign of democratic backsliding for west but 26 Bishops nominated directly by Church to make national laws is fair game. Burden of secularism is only for brown shoulders.
V. 92 seats in UK parliament are filled on hereditary basis. Yes, based on birth. These hereditary seats called ‘peers’ are reserved for the royal families of UK. In Indian democracy, even a Ward councillor position can’t be filled based on birth. Yet UK is progressive, India is not.
VI. England’s national flag is based on the Saint George’s Cross. George is venerated as a military saint who died for Christian faith, a mythical inspiration for crusade wars. Imagine if India added a Om to its flag, probably it would get a UN condemnation for religious intolerance.
Source : 08-07-2022 TRUTH. Vol 90 No 13
**
புத்தக அறிமுகம் – 49
அறிவியல் துளிகள் – பாகம் – 9

பொருளடக்கம்
அத்தியாயங்கள்
209. விண்வெளியில் நடந்து சந்திரனையும் பூமியையும் பார்த்த ஒரே வீர்ர்!
210. இந்த ஆண்டு (2015) ஒரு லீப் விநாடி ஜூன் 30ஆம் தேதி சேர்வது ஏன்?!
211. இரு சிறப்புக் காட்சிகள் தரும் சுவையான உண்மைகள்!
212. எதிர்காலத்தில் நடப்பதை அறிய முடியுமா என்பது பற்றிய அறிவியல் முயற்சி!
213. பசிப்பிணி போக்கி நூறு கோடிப் பேரைக் காத்தவர்!
214. அலெக்ஸாண்டர் பற்றிய அறிவியல் அலசல்!
215. கன்னியருக்கும் இளைஞர்களுக்கும் அறிவியல் தரும் ஆலோசனை!
216. நடந்து வந்து விஞ்ஞானியிடம் கெஞ்சிய பிரேதம்! – 1
217. நடந்து வந்து விஞ்ஞானியிடம் கெஞ்சிய பிரேதம்! – 2
218. நூறு ஆண்டுகள் வாழ நூறு ஆண்டுகள் வாழ்ந்தோர் கூறும் ஆலோசனை!
219. ஐன்ஸ்டீன் வாழ்க்கை தரும் 10 பாடங்கள்!
220. முட்டாள்கள் தினக் கண்டுபிடிப்புகள்!
221. உயரத்தில் ஏறத் தடை ஏதும் இல்லா இன்றைய உலகம்! – 1
222. உயரத்தில் ஏறத் தடை ஏதும் இல்லா இன்றைய உலகம்! – 2
223. விண்ணகத்தில் விண்வெளிக் கொண்டாட்டங்கள்!
224. ஒரு விண்வெளி வீரரின் சுவையான சரிதை!
225. விண்வெளி ஆர்வத்தை ஊட்டிய ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் டாம் க்ரூஸ்!
226. செவ்வாய் கிரகத்தில் ஓய்வெடுக்கத் துடிக்கும் இலான் மஸ்க்!
227. இதோ பாரு இன்பலோகம், இரண்டாயிரத்து இருபத்தைந்தில்!
228. வெற்றி பெற நீங்கள் ஒரு ‘ஐடியா மெஷின்’ ஆகலாமே! – 1
229. வெற்றி பெற நீங்கள் ஒரு ‘ஐடியா மெஷின்’ ஆகலாமே! – 2
230. அமெரிக்காவிற்கு வந்த நாஜி விஞ்ஞானிகள் – “ஆபரேஷன் பேப்பர் க்ளிப்!” – 1
231. அமெரிக்காவிற்கு வந்த நாஜி விஞ்ஞானிகள் – “ஆபரேஷன் பேப்பர் க்ளிப்!” – 2
232. மூன்றே நிமிடங்களில் மூளை ஆற்றலைக் கூட்டலாம்!
233. இளமைப் பொலிவுடன் இருக்கலாம்! மூப்பைத் தடுக்கலாம்!!
234. விண்வெளி வீரர்களின் சுவையான நூல்கள்!
விண்வெளிப் பயணம் மற்றும் கிரகங்கள் பற்றிய ஒரு க்விஸ்!
*
நூலில் நான் வழங்கிய என்னுரை இது :
என்னுரை
இன்றைய நவீன உலகில் அறிவியல் பங்கை அனைவரும் அறிவோம்; உணர்வோம்
ஆகவே அறிவியலில் எதையெல்லாம் முக்கியமாக உணர்கிறோமோ அதையெல்லாம் முடிந்த அளவு அறிந்து கொள்ள வேண்டியது சிறுவர் முதல் பெரியோர் வரை அனைவரது கடமையும் ஆகும்
இந்த வகையில் பாக்யா வார இதழில் அறிவியல் சம்பந்தமான நூற்றுக் கணக்கான கட்டுரைகளை எழுதி வரலானேன்.
எனது இனிய நண்பரும், மிகச் சிறந்த திரைப்பட கதாசிரியரும், நடிகரும், பாக்யா இதழின் ஆசியருமான திரு கே. பாக்யராஜ் அவர்களுக்கு அறிமுகமே தேவை இல்லை. அனைவர் உள்ளத்தையும் கொள்ளை கொண்ட பண்பாளர் அவர்.
அவர் தந்த ஊக்கத்தினால் பாக்யா வார இதழில் அறிவியல் துளிகள் என்ற தொடரை ஆரம்பித்தேன்.
4-3-2011இல் ஆரம்பித்து எட்டு வருடங்களுக்கும் மேலாக வெற்றி நடை போடும் அறிவியல் துளிகளை வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க
பாகம் பாகமாக வெளியிட முடிந்தது.
இந்த நூல் ஒன்பதாம் பாகம் – 209 முதல் 234 முடிய உள்ள 26 அத்தியாயங்களின் தொகுப்பாகும். இந்தக் கட்டுரைகள் அனைத்தும் பிப்ரவரி 2015 முதல் ஜூலை 2015 முடிய வாரா வாரம் வெளியானவை. கூடவே ஒரு க்விஸ்- கடைசியில் இணைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு அத்தியாயமும் தனித்தனியே வெவ்வேறு அறிவியல் அம்சத்தை விளக்குவதால் இதை எந்தப் பகுதியிலிருந்தும் படிக்கலாம் என்பதே இந்த நூலின் தனிச் சிறப்பு.
இந்தப் புத்தகத்தை வெளியிட முன் வந்த Pustaka Digital Mediaவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக.
தொடராக வந்த போது என்னை ஊக்குவித்த பல்லாயிரக்கணக்கான வாசகர்களுக்கு எனது அன்பு கலந்த நன்றி.
அறிவியல் கற்போம்; அறிவியலைப் பரப்புவோம்!
நன்றி
பங்களூர்
18-3-2022
ச.நாகராஜன்
*
நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.
இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.
சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in
என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்
தொடர்புக்கான தொலைபேசி எண் : 9980387852
**