தாததோ துத்த துத்தாதீ தாததோ தூததீத தோ-கிருஷ்ணன் கவிதை (Post No.11,251)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,251

Date uploaded in London – 9 SEPTEMBER 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

ஸம்ஸ்க்ருதம் விந்தைகள் நிறைந்த மொழி. தமிழைத் தவிர, வேறு எந்த மொழியிலும் செய்ய முடியாத விந்தைகளைச் செய்ய வல்ல மொழி  . பிற்காலத்து தமிழில் இத்தகு விந்தைக் கவிதைகள் உண்டு. ஆனால் சம்ஸ்க்ருத விற்பன்னர்கள் அதற்கும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்த அலங்காரங்களைச் செய்தனர். இதோ மேலும் சில கவிதைகள்

மெய் எழுத்துக்களில் ஒரே எழுத்தை –  வர்க்கத்தை — மட்டும் பயன்படுத்திய கவிதையை ‘மாக’ (MAAGA) என்னும் புலவர் இயற்றிய சிசுபாலவதத்தில் (Shisupaalavadha)  காணலாம் :

தாததோ துத்த துத்தாதீ தாததோ தூததீத தோ

துத்தாதம் தததே துத்தே தாதாததததோ ததஹ

சிசுபாலவதம் 19-114

மாக என்னும் புலவர் ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் ; குஜராத் பகுதியைச் சேர்ந்தவர்.

பொருள்

கிருஷ்ணன் , எல்லா வரங்களையும் தருபவன்; கள்ள மனம் படைத்தோருக்கு கசையடி கொடுப்பவன்.நம்மைத் தூய்மைப் படுத்துபவன். மற்றவர்களுக்குத் துன்பம் தருவோரைத் துடைத்தழிக்கும் புஜங்களை உடையோன். எதிரி மீது வலி ஏற்படுத்தும் அம்பினை எய்தான்.

XXX

ஸம்ஸ்க்ருதத்தில் 33 மெய்யெழுத்துக்கள் இருக்கின்றன.அவைகளை அதே வரிசையில் வைத்து உருவாக்கிய கவிதையை போஜனின் சரஸ்வதி கண்டாபரணம்  என்னும் நூல் தருகிறது:

கஹ ககெள காங்சிச் செளஜா ஜாஞ்ஞோ  அடேளடீ டடண்டணஹ 

ததோததீன் பFபபாபிர்  மயோ அரில்வாசிஷாம்  ஸஹக

பொருள்

பறவைகளை நேசிக்கிறானே, யார் அவன்? அறிவில் சிறந்தவன் ; மற்றவர்களின் பலத்தைத் திருடுவதில் நிபுணன் ; எதிரிகளை அழி ப்பவனின் தலைவன்; உறுதியுடையோன்; பயமற்றவன் ; கடலை நிரப்பியவன்? அவன்தான் மயன் என்னும் அரசன். எதிரிகளை அழிக்கும் வரங்களின் பெட்டகம்/கிடங்கு.

XXXX

சம்ஸ்க்ருத மொழியின் 33 மெய்யெழுத்துக்களில் — த , வ , ந/ன  — ஆகிய மூன்றை மட்டும் பயன்படுத்திய கவிதை :

தேவானாம் நந்தனோ தேவோ நோதனோ வேத நிந்தினாம்

திவம் துதாவ நாதேன  தானே தானவ நந்தினஹ

—காவ்ய தர்ச , புலவர் தண்டின் 3-93; போஜன் நூலிலும் உளது.

தண்டின் ஆறாம் நூற்றாண்டுக் கவிஞர்

பொருள்

கடவுள் (விஷ்ணு) வேதத்தை நிந்திப்பவர்களுக்கு துயரத்தையும் ஏனைய தேவர்களுக்கு இன்பத்தையும் அளிக்கிறார்.ஒரு அசுரனைக் கொன்றபோது (ஹிரண்யகசிபு) வானம் முழுதும் சப்தம் நிரம்பியது .

சம்ஸ்க்ருத மொழிக்கு இத்தகைய கவிதைகள் அழகு சேர்த்தாலும்  இந்தப் புலவர்களை ‘அதம கவி’கள் என்றே அழைப்பர். அதாவது தாழ்வான நிலையில் உள்ளோர். காளிதாசன் , வால்மீகி , வியாசர் போன்ற உயர் நிலையில் உள்ளவர்கள் அல்ல. ஏனெனில் இவர்கள் செயற்கை முறையில் கவிகள் இயற்றி சொற் சிலம்பம் ஆடுபவர்கள் என்பது சான்றோர் துணிபு .

—SUBHAM—

 Tags- தாததோ துத்த, காவ்ய தர்ச , புலவர் தண்டின், சிசுபாலவதம் ,

மாக

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: