
Post No. 11,254
Date uploaded in London – 10 SEPTEMBER 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
புலவர் மாக எழுதிய புகழ்மிகு சிசுபால வாதம் நூலிலிருந்து மேலும் ஒரு கவிதையைக் காண்போம் .
மெய்யெழுத்துக்களில் ப -வர்க்கமும், ர -வர்க்கமும் மட்டும் பயன்படுத்தப்படுகிற ஒரு செய்யுளைக் காண்போம் –
பூரிபி பாரிர்பி பீரார் பூபாரை ரபிரே பிரே
பேரீரே பிபிரப்
ராபைர பீரு பிரி பைரிபாஹா
–மாக கவியின் சிசுபால வதம் 19-66
பொருள்
இந்தப் பூமிக்கு பாரம் போல எடை உடைய , பயமே இல்லாத , முரசு ஒலிப்பது போல சப்தம் உடைய, , கரிய மேகம் போன்ற யானை, எதிரியின் யானையைத் தாக்கியது.
Xxx
ஜ ஜெள ஜோ ஜாஜி ஜிஜ்ஜாஜீ
இதில் முதல் வரியில் ஜ – வர்க்கமும், இரண்டாவது வரியில் த – வர்க்கமும், மூன்றாவது வரியில் ப -வர்க்கமும், நாலாவது வரியில் ர -வர்க்கமும் மட்டும் பயன்படுத்தப்படுகிறது
ஜ ஜெள ஜோ ஜாஜி ஜிஜ்ஜாஜீ
தம் ததோ அதிததாததுத்
பாபோஅபீபா பிபூ பாபூ
ராராரிரரிரீ ரரஹ
–மாக கவியின் சிசுபால வதம் 19-3
பொருள்
பெரிய வீரனும், பெரிய யுத்தங்களில் வெற்றி பெற்றவனுமான பலராமன் , சுக்கிரன், பிருகஸ்பதி கிரகங்களைப் போல பிரகாசிக்கிறான். சுற்றித் திரியும் எதிரிகளை அழிக்கும் அவன் , சிங்கம் போல போர்க்களம் ஏகி , நாற்படை உடைய எதிரிகளைத் தடுத்து நிறுத்தினான்.
Xxx
க்ஷிதி ஸ்திதி மிதி க்ஷிப்தி விதிவின்நிதி
உயிர் எழுத்துக்கள் இல்லாத சொற்களை மட்டுமே வைத்து கவிதை எழுதுவது இயலாது. ஆனால் ஒரு சில உயிர் எழுத்துக்களை மட்டும் வைத்து எழுதலாம். அ – மற்றும் இ – ஆகிய இரண்டு உயிர் எழுத்துக்களை மட்டும் பயன்படுத்தும் கவிதை இதோ …..
போஜ மஹாராஜனின் ஸரஸ்வதீ கண்டாபரணம் 2-278 நூலிலிருந்து எடுக்கப்பட்டது .
க்ஷிதி ஸ்திதி மிதி க்ஷிப்தி விதிவின்நிதி ஸித்தி லிட்
மம த்ரயக்ஷ நமத்ரக்ஷ ஹர ஸ்மர ஹர ஸ்மர
–ஸரஸ்வதீ கண்டாபரணம் 2-278
பொருள்
ஓ மூன்று கண்களை உடைய சிவ பெருமானே , உலக நிலையை அறிந்தவனே , உலகத்தை அளப்பவனே , அழிப்பவனே , அஷ்டமா சித்திகளையும் , குபேரனின் நவநிதிகளையும் அனுபவிப்போனே ,தக்ஷனையும் காம தேவனையும் கொன்றவனே , ஓ கடவுளே , என்னை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டுகிறேன்
Xxx
உருகும் த்யுகுரும் யுத்ஸு சுகுசு
உ – என்னும் உயிர் எழுத்தை மட்டும் பயன்படுத்தும் கவிதை இதோ-
உருகும் த்யுகுரும் யுத்ஸு சுகுசு ஸ்துஷ்டுவுஹு புரு
லுலுபுஹு புபுஷு முர்த்ஸு முமு ஹுர்னு முஹுர் முஹுஹு
–ஸரஸ்வதீ கண்டாபரணம் 2-276
பொருள்
போர்க்களத்துப் போனபோது ,வாக்கிற்கு அதி தேவதையான, தேவ குருவான பிருஹஸ்பதியிடம் தேவர்கள் அடைக்கலம் புகுந்தனர். அவர் உற்சாகத்துடனும் பலத்துடனும் இருக்கவும் மீண்டும் மீண்டும் நினைவு தப்பிவிடாமல் இருக்கவும் தேவர்கள் பிரார்த்தித்தனர்.
இவ்வாறு செயற்கையாகச் சுற்றிவளைத்துக் கவிதை இயற்றினாலும் படிக்கும்போது வரும் ஆனந்தம் அளப்பரியது
–சுபம்–
Tags- விந்தைக் கவிதைகள், ஸரஸ்வதீ கண்டாபரணம், மாக கவி, சிசுபால வதம்