
WRITTEN BY S NAGARAJAN
Post No. 11,255
Date uploaded in London – – 11 SEPTEMBER 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
செப்டம்பர் 11 பாரதியார் நினைவு நாள். சிறப்புக் கட்டுரை!
பாரதம் பற்றிய மஹாகவி பாரதியாரின் 5வது பாடல் : ஒரு பார்வை!
ச.நாகராஜன்
பாரத தேசம் பற்றிய மஹாகவி பாரதியாரின் 19 பாடல்களில் முதல் நான்கு பாடல்களில் அவர் தரும் செய்திகளைப் பார்த்தோம்.
இனி அடுத்து அவர் ஐந்தாவது பாடலில் கூறும் அற்புதமான செய்திகளைப் பார்ப்போம்.
பாரத தேசம் என்ற பாடல்
56) பாரத தேசம் என்று பெயரைச் சொன்னாலேயே போதும், வறுமை மற்றும் பயத்தைக் கொன்று விடுவர். செல்வமும் தைரியமும் தானே வரும்.
57) பாரத தேசப் பெயரைச் சொன்னவுடனேயே துயரமான
பகையை வெல்வர்.
58) நாம் வெள்ளிப் பனிமலையின் மீது உலவுவோம்
59) மேற்குக் கடல் முழுவதும் நமது கப்பல்களைப் பயணிக்க வைப்போம்.
60) நமது தேசத்தில் உள்ள பள்ளித் தலம் அனைத்தையும் கோவில்களாகச் செய்வோம்.
61) பாரத தேசம் என்று சொல்லி நமது வலிமை மிகுந்த தோள்களைக் கொட்டி ஆர்ப்பரிப்போம்.
62) நாம் சிங்களத் தீவினுக்கு ஒரு பாலம் அமைப்போம்.
63) சேதுவை மேடாக ஆக்கி ஒரு சாலையை அமைப்போம்.
64) வங்கத்தில் மிகையாகச் சேர்கின்ற நீரைக் கொண்டு நாட்டின் மையப் பகுதிகளில் விவசாயம் செய்து பயிர் வளர்ப்போம்.
65) சுரங்கங்கள் வெட்டி தங்கம் முதலிய கனிப்பொருள்களையும் வேறு பூமியில் புதைந்திருக்கும அரிய பொருள்களையும் வெளியில் எடுப்போம்.
66) எட்டுத் திசைகளிலும் சென்று இவற்றை விற்று எண்ணுகின்ற தேவையான அனைத்துப் பொருள்களையும் கொண்டு வருவோம்.
67) தென் கடலில் அரிய வகை முத்துக்கள் உள்ளன. அங்கு முத்துக் குளிப்போம்.
68) நமக்குத் தேவையான அனைத்துப் பொருள்களையும் பல நாட்டு வணிகர்களும் கொண்டு வந்து தமக்குத் தேவையானற்றை வேண்டிக் கொடுக்குமாறு நமது அருளை வேண்டி மேற்குக் கடற்கரையில் வரிசையாக நிற்பர். அவர்களுக்கு உதவுவோம்.
69) சிந்து நதியில் நல்ல முழு நிலா நாளிலே சேர நன்னாட்டு இளம் பெண்களுடன் சுந்தரமான தெலுங்கு மொழியில் பாட்டுப் பாடி தோணிகளை ஓட்டி விளையாடுவோம்.
70) கங்கைப் பகுதியில் விளைவது நல்ல கோதுமை. அதை காவிரியில் கிடைக்கும் வெற்றிலைக்கு மாறாகக் கொடுப்போம்.
71) சிங்க மராட்டியர் கவிதையைப் பெறுவோம். அவர்களுக்கு சேர நாட்டில் கிடைக்கும் தந்தங்களைப் பரிசாக அளிப்போம்.
72) காசி நகர் புலவர் அங்கிருந்து பேசுவதை காஞ்சிபுரம் உள்ளிட்ட நம்மிடங்களில் இருந்து கேட்க ஒரு கருவியைச் செய்வோம்.
73) ராஜபுதனத்து வீரர்களுக்கு கன்னடத்தில் வெட்டி எடுக்கப்படும் தங்கத்தை அளிப்போம்.
74) பட்டாடைகளையும் பஞ்சில் ஆடைகளையும் செய்து மலைகள் என வீதிகளில் குவிப்போம்.
75) திரவியங்களைக் கட்டிக் கொண்டு வரும் காசினி வணிகருக்கு அவற்றைக் கொடுப்போம்.
76) ஆயுதம் செய்வோம்.
77) நல்ல காகிதம் செய்வோம்.
78) ஆலைகள் வைப்போம்.
79) கல்விச் சாலைகளை அமைப்போம்.
80) ஓய்வே இல்லாமல் உழைப்போம்.
81) தலை சாயுதல் செய்ய மாட்டோம்.
82) உண்மைகள் சொல்வோம்.
82) அனைவரும் வியக்கும் பல அதிசயங்களைச் செய்து காட்டுவோம்.
83) குடைகள் போன்ற அனைத்துப் பொருள்களையும் செய்வோம்.
84) உழுவதற்குத் தேவையான கருவிகளைச் செய்வோம்.
85) கோணிகளைச் செய்வோம்.
86) இரும்பாணிகள் உள்ளிட்ட அனைத்தையும் செய்வோம்.
87) நடையும் பறப்பும் உணர் வண்டிகளைத் தயாரிப்போம்.
88) உலகமே நடுங்கும்படியான அதிரடி கப்பல்களைச் செய்வோம்.
89) மந்திர ஒலிகளைக் கற்போம்.
90) வினை ஆற்றும் தந்திரங்களையும் கற்போம்.
91) விண்ணியலில் முதலிடம் பெற்று வானை முழுவதுமாக அளப்போம்.
92) கடலில் உள்ள உயிர் வாழ் இனங்களைக் கணக்கிட்டு மீன் உள்ளிட்ட அனைத்தையும் பற்றித் தேறுவோம்.
93) சந்திரனைப் பற்றி முழுவதுமாக அறிந்து தெளிவோம்.
94) சுகாதாரத் துறையில் முன்னேறி சந்தியைப் பெருக்குத் துலக்கும் சாத்திரத்தைக் கற்றுத் தேறுவோம்.
95) காவியங்கள் பல இயற்றுவோம்.
96) நல்ல மழைக் காடுகளை வளர்ப்போம். சுற்றுப்புறச் சூழலை அதன் மூலம் பேணிக் காப்போம்.
97) கலைகள் எத்தனை உண்டோ அத்தனையையும் வளர்ப்போம்.
98) கொல்லர் உலையை வளர்த்து நல்ல நல்ல பொருள்களைச் செய்வோம்.
99) ஓவியங்களை வரைவோம்.
100) நல்ல ஊசிகளைச் செய்து நல்ல ஆடைகளைத் தயாரிப்போம்.
101) எந்தத் தொழிலானும் சர், உலகத்தில் இருக்கும் அத்தனை தொழில்களையும் பட்டியல் இட்டு அவை அனைத்தையும் இது உயர்வு இது தாழ்வு என்ற எண்ணமின்றி அனைத்தையும் மிகுந்த உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் செய்வோம்.
102) சாதி இரண்டே தான். இட்டார் பெரியோர். இடாதார் இழி குலத்தோர்.
தமிழ் மகள் ஔவையார் சொல்லிய இந்த சொற்களை அமிர்தம் என்று போற்றி அதைக் கடைப் பிடிப்போம்.
103) நீதி நெறி வழிப்படி நடப்போம். பிறருக்கு உதவுபவரே பெரியோர்;
நேர்மையானவர். அல்லாத மற்றோர் அனைவரும் கீழ் மக்களே.
எப்படி ஒரு அற்புதமான பாடல் பாருங்கள்.ஒரே பாடல் தான். அதில் 48 கருத்துக்களை அள்ளித் தெளிக்கிறார்.
பாரதியார் கூறுவதைப் பின்பற்றினால் பாரத தேசம் வெல்லும்; உலகத் தலைமையை ஏற்கும் என்பதில் இனி ஐயமும் உண்டோ!
வெல்க பாரதம்.
வாழ்க பாரதியின் திரு நாமம்!
**
Tags- பாரதம், மஹாகவி பாரதி,

புத்தக அறிமுகம் – 53
அறிவியல் துளிகள் – பாகம் – 13
பொருளடக்கம்
313. தகவல் கொள்கையின் தந்தை க்ளாட் ஷனான்!
314. இந்திய கடலோர நகரங்கள் மூழ்கப் போகின்றன!
315. பார்வை இருந்தும் பார்க்க முடியாத மாய கொரில்லா!
316. மனிதர்களின் இயல்பான ஆயுள் 150 ஆண்டுகள்!
317. அற்புதங்கள் எல்லாம் அற்புதங்களே அல்ல!
318. அற்புதங்கள் எல்லாம் அற்புதங்களே! தனக்குத் தானே அசெம்பிள் ஆகி பறந்த விமானம்!
319. மின்னல் வேகத்தில் கணக்கிட்ட மேதை ஜெடிடியா பக்ஸ்டன்!
320. பூவா தலையா போட்டுப் பார்க்கச் சொன்ன விஞ்ஞானி சிக்மண்ட் ஃப்ராய்ட்!
321. இயற்பியல் விஞ்ஞானி, கதாசிரியர், பூட்டைத் திறக்கும் நிபுணர் – ஃபெய்ன்மேன்!
322. விளம்பர குருவின் நல்ல அறிவுரை!
323. உடலின் லயம் அறியுங்கள்! உங்கள் ஆற்றலைக் கூட்டுங்கள்!!
324. பூமியைக் காப்பாற்ற நாஸாவின் புதுத் திட்டம்!
325. வெப்பத்தைக் கையில் உருவாக்கும் ‘சீன ரத்தினம்’
326. “ஆற்றல் புரட்சி” செய்யும் 13 வயதுச் சிறுவன்!
327. நாஜிகளுக்கு பலியானோரின் மூளை பற்றிய பிரம்மாண்டமான ஆராய்ச்சி!
330. அதிசய கண்டுபிடிப்பாளர் ; ‘பேடண்ட் கிங்’ யோஷிரோ நகாமட்சு!
331.செயற்கை அறிவின் தலை நகரம் சியோல்!
332. ஓளி மாசைத் தடுக்க உலகில் முதன் முதலில் சட்டம் இயற்றிய நாடு!
333. உலகின் அதி சிறந்த ரோபோ ஹ்யூபோ!
334. சந்திரனை எட்ட எத்தனை காளைகளின் வால்கள் வேண்டும்?
335. மூன்று கறுப்பு நிற பீன்ஸ்களை வெள்ளை நிறமாக்க எத்தனை பீன்ஸ்கள் வேண்டும்?
336. புறா எச்சம் தெரிவித்த பிரபஞ்ச ரகசியம்!
337. ஒரு அழகிய மனம் – கணித மேதை ஜான் நாஷ்!
338. வானத்தில் பறந்த போது மர்மமாக மறைந்த மங்கை!
*
நூலில் நான் வழங்கிய என்னுரை இது :
என்னுரை
இன்றைய நவீன உலகில் அறிவியலின் பங்கை அனைவரும் அறிவோம்; உணர்வோம்.
ஆகவே அறிவியலில் எதையெல்லாம் முக்கியமாக உணர்கிறோமோ அதையெல்லாம் முடிந்த அளவு அறிந்து கொள்ள வேண்டியது சிறுவர் முதல் பெரியோர் வரை அனைவரது கடமையும் ஆகும்
இந்த வகையில் பாக்யா வார இதழில் அறிவியல் சம்பந்தமான நூற்றுக் கணக்கான கட்டுரைகளை எழுதி வரலானேன். எனது இனிய நண்பரும், மிகச் சிறந்த திரைப்பட கதாசிரியரும், நடிகரும், பாக்யா இதழின் ஆசியருமான திரு கே. பாக்யராஜ் அவர்களுக்கு அறிமுகமே தேவை இல்லை. அனைவர் உள்ளத்தையும் கொள்ளை கொண்ட பண்பாளர் அவர்.
அவர் தந்த ஊக்கத்தினால் பாக்யா வார இதழில் அறிவியல் துளிகள் என்ற தொடரை ஆரம்பித்தேன்.
4-3-2011இல் ஆரம்பித்து எட்டு வருடங்களுக்கும் மேலாக வெற்றி நடை போடும் அறிவியல் துளிகளை வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க பாகம் பாகமாக வெளியிட முடிந்தது.
இந்த நூல் – பதிமூன்றாம் பாகம் – 313 முதல் உள்ள 26 அத்தியாயங்களின் தொகுப்பாகும். இந்தக் கட்டுரைகள் அனைத்தும் 17/2/2017 இதழிலிருந்து வாரா வாரம் வெளியானவை. அத்தியாயங்கள் தொடர்ச்சி கருதி சில அத்தியாயங்கள் இந்த பாகத்திலும் அடுத்த பாகத்திலும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு அத்தியாயமும் தனித்தனியே வெவ்வேறு அறிவியல் அம்சத்தை விளக்குவதால் இதை எந்தப் பகுதியிலிருந்தும் படிக்கலாம் என்பதே இந்த நூலின் தனிச் சிறப்பு.
இந்தப் புத்தகத்தை வெளியிட முன் வந்த Pustaka Digital Mediaவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக.
தொடராக வந்த போது என்னை ஊக்குவித்த பல்லாயிரக்கணக்கான வாசகர்களுக்கு எனது அன்பு கலந்த நன்றி.
அறிவியல் கற்போம்; அறிவியலைப் பரப்புவோம்!
நன்றி
பங்களூர் ச.நாகராஜன்
3-5-2022