
Post No. 11,258
Date uploaded in London – – 12 SEPTEMBER 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
செப்டம்பர் 11 பாரதியார் நினைவு நாள். சிறப்புக் கட்டுரை!
பாரதம் பற்றிய மஹாகவி பாரதியாரின் 6 மற்றும் 7வது பாடல் : ஒரு பார்வை!
ச.நாகராஜன்
முந்தைய கட்டுரைகளின் தொடர்ச்சியாக தொடர் எண் 104லிருந்து தரப்படுகிறது.
எங்கள் நாடு என்ற பாடல்
104) உலகில் பெரிய சிகரத்தைக் கொண்ட என்றும் நிலைத்திருக்கும் மலையான இமயமலை எங்கள் மலை தான்! இது போன்ற ஒரு மலை புவியெங்கும் பார்த்தால் வேறு ஒரு மலையும் இல்லை.
105) இனிமையான அருமையான கங்கை நீரைக் கொண்ட கங்கா நதி எங்கள் நாட்டிலே தான் உள்ளது. இதன் மாண்புக்கு இணையாக உள்ள இன்னொரு நதி ஏது இந்தப் புவி மேல்?!
106) பல அரிய உபநிடத நூல்கள் எங்களது நூல்கள் தான்! இதில் ஒரே ஒரு நூலை எடுத்துக் கொண்டாலும் அதற்கு இணையான இன்னொரு நூல் கிடையவே கிடையாது.
107) பொன் போல் ஒளிர்கின்ற தேசம் எங்கள் பாரத தேசம். இந்த தேசத்தைக் கொண்ட எமக்கு இணையானவர் யாருமே இல்லை. இந்த தேசத்தைப் போற்றுவோம்.
108) ரதம் ஓட்டுவதில் அதிரதர் சிறந்தவர். அப்படிப்பட்ட அதிரதர்கள் அதிகம் உள்ளவர்கள் இந்த நாட்டில் மட்டுமே தான். (அதிரதர் என்பதை வாகனம் ஓட்டிகள், ஏன் விமான பைலட்கள் என்று கூட எடுத்துக் கொள்ளலாம், காலத்திற்குத் தகுந்தபடி!)
109) பெரிய மஹரிஷிகள் – மா முனிவர்கள் வாழ்ந்தபொன் நாடு இதுவே தான்.
110) கானங்களிலே சிறந்த கானம் நாரத மஹரிஷி பாடும் நாரத கானம் தான். அந்த நாரத கானம் நலம் தரும் கானம். அதைக் கொண்ட நாடு இது தான்!
111) இங்கு தீயவற்றை யாரும் நாடமாட்டார்கள். ஆனால் நல்லவை எங்கிருந்தாலும் யார் சொன்னாலும் அதை இங்குள்ளோர் நாடுவர். அப்படிப்பட்ட நல்லனவற்றை நாடும் நாடு இதுவே தான்!
112) ஞானங்களிலே பூரண ஞானமான ஆன்மீகத்தின் உச்சகட்ட ஞானத்தைப் பெற்றுள்ள நாடு இதுவே தான். இந்த ஞானம் பொலிந்திருக்கும் நாடு எங்கள் நாடு தான்!
113) புத்தர் பிரான் இங்கு தான் தோன்றினார். அவர் அருள் இந்த நாட்டிலே தான் பொங்கி வழிந்தது. அப்படிப்பட்ட நாடு இதுவே தான்!
114) பாரத நாடு இன்று நேற்று தோன்றிய நாடு அல்ல. பழம் பெரும் நாடு இது. இதற்கு ஈடு இணை என்று சொல்லக் கூடிய நாடு வேறு ஒன்றுமில்லை. இதைப் பெற்ற எமக்கு ஈடு யாரும் இல்லை என்று பாடுவோம்.
115) இன்னல் வருவது இயற்கை. அது வந்த போது அதைக் கண்டு பயப்பட மாட்டோம்.
116) வளங்கள் சுரண்டப்பட, அதனால் ஏழைகளாகி இனி உறங்க மாட்டோம்; உயிரை விட மாட்டோம்.
117) சுயநலத்தால் உந்தப்பட்டு இழி தொழில்களைப் புரிய மாட்டோம்.
118) தாய்த் திருநாட்டிற்கு ஒரு ஆபத்து என்றால் ‘என்னால் முடியாது’வெ என்று கையை இனி விரிக்க மாட்டோம்.
119) கரும்பு, தேன், கனி, இனிய பாலும், கதலியும், எந்தக் காலத்திலும் இல்லை என்று சொல்லாமல் நல்கும் ஆரிய நாடு இதுவே தான். இதற்கு இணை உலகில் வேறு எந்த நாடும் இல்லை என்று ஓதுவோம்.
ஜயபாரத பாடல்
120) சேனை பலம் இல்லாமல், சிறப்பான சிந்தனையை மட்டுமே கொண்டு நூற்றுக் கணக்கான தேசத்தை வென்றவள் எங்கள் தாய். மறம் தவிர்த்த நாடு இது. அறவழி நாடுகள் அதிசயித்த நாடு. பாழ்பட்டு, ஏழ்மை நிலையை அடைந்த போதிலும் அதன் இயல்பான அறத்தை விடாத நாடு. அப்படிப்பட்ட அன்னை நாடு இது. அது வெற்றியைக் கொள்க!
121) நூறு கோடிகளுக்கும் மேலாக நூல்களை நூற்றுக்கணக்கான தேசங்களில் இயற்றிய அறிஞர்கள் தாங்கள் உண்மையைத் தேர்ந்தபாடில்லையே என ஏக்கம் எது உண்மை என்று தேற இந்த நாட்டிற்குத் தான் தேடி வந்தனர். தங்களின் நுண்ணறிவெல்லாம் தீர்ந்து அது தேய்ந்து போக அனைத்தும் தீர்ந்து விட்ட போதிலும் கூட கடைசி கடைசியாக மீதியாக நிற்கும் உண்மையானது ஒரே ஒரு உண்மை தான். அதை மட்டும் இறைஞ்சி நிற்கும் தாய் எங்கள் தாய், அவள் வாழ்க.
122) வில்வித்தையில் தேர்ந்தவர்கள் தங்கள் வாழ்வு குன்றி ஓய்ந்து போக, வீர வாளைக் கொண்டவர்களின் வீரமும் மாய, அற்புதமான வெல்லக் கூடிய ஞான நூல்களின் மெய்மைத் தன்மை தேய, இப்படிச் சொல்லுகின்ற இந்த அனைத்துமே விடப்பட்டு, மற்றவை சூழ்ந்த காலத்திலும் நன்மை தர வல்ல நூலைக் கெடாமல் காப்பவள் எங்கள் அன்னை. அவள் வாழ்க!
123) தேவர்கள் உண்ணும் நன்மருந்தான அமிர்தம் போல, கடலின் கண்ணே உள்ள வெள்ள நீரைப் போல, பாவம் கொண்ட நெஞ்சினை உடையோர் அதைப் பறிக்க முற்பட்டு அந்தப் பறித்தலைச் செய்தாலும் கூட இன்னும் அழியாத செல்வத்தை மிகுதியாகக் கொண்டிருப்பவள் எங்கள் அன்னை. அவள் வாழ்க.
123) நன்மை தரக் கூடிய தொழில்களைச் செய் இந்த இரும் புவிக்கு நல்கினள் எங்கள் தாய். நமக்குப் பதத்தைத் தருவதற்குரிய பல மதங்களைக் கொண்ட நாட்டினள் எங்கள் தாய். விதம் விதமாய் உண்மைகள் கொண்ட வேறுள்ள பல நாட்டவர்களுக்கு இன்னும் ஒரு உண்மையைத் தெரிவிக்கும் படி இன்று சுதந்திரத்தில் ஆசை ஊட்டினாள். அப்படி சுதந்திர ஆசையை ஊட்டிய அன்னை வாழ்க!
***

அறிவியல் துளிகள் – பாகம் – 14
பொருளடக்கம்
339. ஈயத்தைத் தங்கமாக்கும் வித்தை – 1
340. ஈயத்தைத் தங்கமாக்கும் வித்தை – 2
341. ஈயத்தைத் தங்கமாக்கும் வித்தை – 3
342. ஈயத்தைத் தங்கமாக்கும் வித்தை – 4
343. ஈயத்தைத் தங்கமாக்கும் வித்தை – 5
344. இரஸவாதக்கலை நிபுணர்கள்? – 1
345. இரஸவாதக்கலை நிபுணர்கள்! – 2
346. இரஸவாதக்கலை நிபுணர்கள்! – 3
347. உலகின் ஒப்பற்ற வைரம் கோஹினூர், மீட்கப்படுமா? – 1
348. உலகின் ஒப்பற்ற வைரம் கோஹினூர், மீட்கப்படுமா? – 2
349. உலகின் ஒப்பற்ற வைரம் கோஹினூர், மீட்கப்படுமா? – 3
350. உலகின் ஒப்பற்ற வைரம் கோஹினூர், மீட்கப்படுமா? – 4
351. ஸூனிஷ்! உலகை மாற்றப் போகும் பத்து தொழில்நுட்பங்கள்!
352. கின்னஸ் சாதனை நிகழ்த்திய விண்வெளி வீராங்கனை!
353. டார்வினை எதிர்த்த பெண்மணி!
354. உலகின் முதல் விண்வெளி தேசம்!
355. மூன்று கண்டுபிடிப்புகளுக்கு வழி வகுத்த அமெரிக்க தீ விபத்து!
356. ஜிமிக்கி கம்மலின் பிரபலம்! ….. ஒரு கவிதை பிரபலமாவது எப்படி?
357. நலம். நலம் அறிய ஆவல்! உங்கள் நண்பன் ரொபாட்டின் கடிதம்!
359. கபுகதிகர் கசெகய்கதிகககளை கவிகடுகவிகத்கத கபெகண்கமகணிகககள்!
360 பரபரப்பூட்டும் விண்வெளி ஆய்வுத் தகவல்கள்!
361. மரபணு விஞ்ஞானிக்குத் தன் மரபணு ரகசியம் தெரியாத விசித்திரக் கதை!
362. ‘மெடிகல் மிராக்கிள்’ புகழ் ஸ்டீபன் ஹாகிங்கிற்கு வயது 76!
363. நிலவில் நடந்த முதல் மனிதன்: சுவாரசியமான தகவல்கள்!
364. மனிதன் கடவுளாகும் காலம்! – ஷோங் ஷோங்!, ஹுவா ஹுவா!!
365. 2018 விண்டர் ஒலிம்பிக்கில் ரொபாட்டுகள்!
*
நூலில் நான் வழங்கிய என்னுரை இது :
என்னுரை
இன்றைய நவீன உலகில் அறிவியலின் பங்கை அனைவரும்
அறிவோம்; உணர்வோம்.
ஆகவே அறிவியலில் எதையெல்லாம் முக்கியமாக உணர்கிறோமோ அதையெல்லாம் முடிந்த அளவு அறிந்து கொள்ள வேண்டியது சிறுவர் முதல் பெரியோர் வரை அனைவரது கடமையும் ஆகும். இந்த வகையில் பாக்யா வார இதழில் அறிவியல் சம்பந்தமான நூற்றுக் கணக்கான கட்டுரைகளை எழுதி வரலானேன்.எனது இனிய நண்பரும், மிகச் சிறந்த திரைப்பட கதாசிரியரும், நடிகரும், பாக்யா இதழின் ஆசியருமான திரு கே. பாக்யராஜ் அவர்களுக்கு அறிமுகமே தேவை இல்லை. அனைவர் உள்ளத்தையும் கொள்ளை கொண்ட பண்பாளர் அவர்.
அவர் தந்த ஊக்கத்தினால் பாக்யா வார இதழில் அறிவியல் துளிகள் என்ற தொடரை ஆரம்பித்தேன். 4-3-2011 இல் ஆரம்பித்து எட்டு வருடங்களுக்கும் மேலாக வெற்றி நடை போடும் அறிவியல் துளிகளை வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க பாகம் பாகமாக வெளியிட முடிந்தது.
இந்த நூல் – பதினான்காம் பாகம் – 339 முதல் உள்ள 27 அத்தியாயங்களின் தொகுப்பாகும். ஒவ்வொரு அத்தியாயமும் தனித்தனியே வெவ்வேறு அறிவியல் அம்சத்தை விளக்குவதால் இதை எந்தப் பகுதியிலிருந்தும் படிக்கலாம் என்பதே இந்த நூலின் தனிச் சிறப்பு.
இந்தப் புத்தகத்தை வெளியிட முன் வந்த Pustaka Digital Mediaவின்உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு
எனது நன்றி உரித்தாகுக. தொடராக வந்த போது என்னை ஊக்குவித்த பல்லாயிரக்கணக்கான வாசகர்களுக்கு எனது அன்பு கலந்த நன்றி.
அறிவியல் கற்போம்; அறிவியலைப் பரப்புவோம்!
நன்றி
பங்களூர் ச.நாகராஜன்
7-5-2022
*
நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.
இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.
சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in
என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்
தொடர்புக்கான தொலைபேசி எண் : 9980387852