யானை விரட்டிய கர்வம் பிடித்த கவிஞர் மனம் மாறிய கதை (Post 11,262)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,262

Date uploaded in London – 13 SEPTEMBER 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

ஹரிபத்ர (Haribhadra) என்ற கவிஞரின் கதை மிகவும் சுவையானது ; மஹாபாரதத்தில் வியாசர் செய்த தந்திரத்தை நாம்  எல்லோரும் அறிவோம். விநாயகரை மஹாபாரதத்தை எழுதித்தருமாறு வியாசர் அழைத்தார். உடனே அவர் இந்த மஹானிடமிருந்து தப்பிக்க வேண்டும் என்று கருதி ஒரு கண்டிஷன்/ Condition நிபந்தனை  போட்டார்.  நான் நிறுத்தவே மாட்டேன். அந்த வேகத்தில் உம்மால் கவிதை மழை பொழிய முடியுமா ?என்றார். அப்படி நிறுத்தும்படி ஆனால் நான் வீட்டுக்குப் போய்விடுவேன் என்றார் பிள்ளையார்.

வியாஸர் உலக மஹா மேதாவி. OK OK ஓகே! ஓகே! நான் ஒரு கண்டிஷன் Condition போடுவேன்  ; நான் சொல்லும் எதையும் புரிந்து கொள்ளாமல் எழுதக் கூடாது என்றார் ; பிள்ளையாரும் OK That’s all right; agreed ‘ஓகே. தட் ஸ் ஆல் ரைட். அக்ரீட்’ என்றார் . வியாஸர் வேண்டுமென்றே பல புதிர்கள் மிக்க ஸ்லோகங்களை உதிர்த்தார். பிள்ளையார் தலையைச் சொறிந்துகொண்டு யோசிப்பதற்குள் வியாசர் ஒரு லட்சம் கவிதைகளைச் செய்து ‘கின்னஸ்’ சாதனை புஸ்தகத்தில் நுழைந்தார். உலகியேயே நீண்ட இதிஹாசத்தைச் செய்து பெயரும் பெற்றார். இதற்கு நேர் மாறாக ஹரிபத்ர என்னும் கவிஞர் செய்தார்.

என்ன செய்தார்?

அவர் ஒரு பிராமணன். ராஜஸ்தானில் சித்தூர் என்னும் இடத்தைச் சேர்ந்தவர். மகா மேதாவி. சம்ஸ்க்ருதத்தில், பிராக்ருதத்தில் உள்ள எல்லாவற்றையும் கற்றவர். அவர் தன் இடுப்பில் ஒரு தங்கப்பட்டயம் கட்டிக்கொண்டார். எவனாவது ஒருவன் எனக்குப் புரியாத விஷயத்தை, தெரியாத விஷயத்தைச் சொன்னால், நான் அவனுக்கு அடிமை; அவர் காலில் விழுந்து மாணவன் ஆகி விடுவேன் என்று எழுதிக் கொண்டு திரிந்தார். அதாவது உலகிலுள்ள எல்லாம் தெரிந்த மேதாவி என்று நினைத்துக் கொண்டு இருந்தார். அவர் ஒருநாள் தெருவில் போய்க்கொண்டு இருந்தபோது மதம் பிடித்த யானை ஓடிவந்தது; ஹரிபத்ர நடுங்கிப் போய் ஒரு உயரமான கோவில் படியில் ஏறி பெருமூச்சு வீட்டுக் கொண்டிருந்தார். கோவிலில் உள்ளே பார்த்தால் சமண மத தீர்த்தங்கரர்  சிலை இருந்தது; ஒரே எரிச்சல்; சீ, சீ!!  என்று சொல்லிக்கொண்டு சமண முனிவரைத் திட்டி ஒரு கவிதையை உரத்த குரலில் சொல்லிவிட்டு, யானை போனவுடன் வீடு திரும்பினார்.

அவர் செய்த கவியின் பொருள்: ஓ சமண முனிவரே! உம்  வயிற்றைப் பார்த்தாலேயே தெரிகிறது ; நீர் இனிப்புகளை அதிகம் தின்பவர் என்று .

மறுநாள் அதே கோவில் வழியாகச் சென்றபோது அங்குள்ள சமண மத பெண் துறவி ஒரு ஸ்லோகத்தை உரத்த குரலிலே சொல்லிக்கொண்டு இருந்தாள் ; அவள் பெயர் யாக்கினி மஹத்தரா ; அவள் சொன்னாள் :

சக்கிதுகம்  ஹரிபணகம் பணகம் சக்கி ய கேசவோ சக்கி

கேசவ சக்கி கேசவ து  சக்கி கேசி ய சக்கி ய

Chakkidugam Haripanagam Panagam Chakki Ya Kesavo Chakki

Kesav Chakki Kesav Du Chakki Kesi Ya Chakki Ya

சமண மத ஆகமங்களின்படி 24 தீர்த்தங்கரர் 12 சக்கரவர்த்திகள் 9 வசுதேவர்/நாராயணன் உண்டு என்பதாகும். அதை அந்தப் பெண்மணி விளக்கிக் கொண்டு இருந்தார்.

இதைக் கேட்ட ஹரிபத்ராவுக்கு அர்த்தம் புரியவில்லை. அட, நாம் கற்றறியாத ஒரு விஷயத்தை இவள் சொல்கிறாளே என்று நினைத்து, முதல் நாள் சமண தீர்த்தங்கரைத் திட்டி எழுதிய பாட்டில் ஒரு சொல்லை மாற்றிப்போட்டு பாராட்டிவிட்டு, பெண்மணியிடம் சென்று, அம்மணி, என்னை சீடனாக ஏற்றுக்கொள்ளுங்கள் என்றார்.

அவர் எனக்கு அந்த அருகதை இல்லை. என் குரு ‘ஜின பட்ட சூரி’யிடம் அழைத்துச் செல் கிறேன் என்று கூறி , அவரிடம் அழைத்துச் சென்றார். அவரும் ஹரிபத்ரவை மாணவனாக ஏற்று ஸ்லோகத்தின் முழுப்பொருளையும் விளக்கி நூல்கள் செய்யுமாறு பணித்தார். சமண மதத்தில் அதுவரை இருந்த நூல்களைக் கற்ற ஹரிபத்ர , 1400 நூல்களுக்கு மேலாக இயற்றினார் என்று சொல்லப்படுகிறது; ஆயினும் 170 நூல்களே இப்போது கிடைத்துள்ளன. ஜின பட்ட சூரி இறந்தவுடன் இவரே அந்த ஆசார்ய நிலைக்கு உயர்த்தப்பட்டு ஹரிபத்ர சூரி என்று பெயர்பெற்றார்.

சம்ஸ்க்ருத, பிராக்ருத கவிஞர்கள் அடக்கமும் பணிவும் மிக்கவர்கள்; தங்களைப்  பற்றி எதுவுமே பாடவில்லை. இவர் 1500 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர்; ஆகையால் உலக மஹா கவிஞன் காளிதாசனைப் பற்றி பல கதைகள் இருப்பது போல வந்த செவி வழிக் கதைதான் யானை விரட்டிய கதையும் .

ஹரிபத்ர பற்றி இன்னும் ஒரு கதையும் உண்டு அவரிடம் சகோதரி மகன்கள் ஹம்ச , பரம ஹம்ச என்ற இருவர் கல்வி கற்றனர் ; அவர்கள் புத்த மத நூல்களைக் கற்றால் அவர்களை வாதத்தில் வெல்வது எளிதாகும் என்று கருதி புத்த துறவி போல வேஷம்போட்டுக் கொண்டு ஒரு புத்தமத துறவியிடம் சென்றதாகவும், உண்மையை அறிந்தபோது அந்த புத்தமதத் துறவி அவர்களை விரட்டி விட்டதாகவும் அப்போது அவ்விருவரும் உயிர் துறந்ததாகவும் இதனால் அவர்கள் மீது கோபம் கொண்டு வெறியாகத் திரிந்தபோது யாக்கினி மஹரத்தராவைச் சந்தித்து அஹிம்சை நெறியில் சென்றதாகவும் கதைகள் இருக்கின்றன.

அவரைப் பற்றிய கதைகள் உண்மையோ, பொய்யோ என்பது முக்கியமல்ல. அவர் எழுதிய நூல்கள் அவர்தம் பெருமையைப் பறை சாற்றுகின்றன. அவர் சம்ஸ்க்ருத, பிராக்ருத மொழிகளில் சமயம், உரைகள், விளக்க உரைகள், பிறமத தூஷண உரைகள், இலக்கண நூல்கள் என்று ஏராளமான விஷயங்கள் குறித்து நூல்களை யாத்ததிலிருந்தது பேரறிஞர் என்பது தெளிவாகிறது .

கர்வம் பிடித்த கவிஞர் பிற்காலத்தில் மனம் மாறி பணிவுக்கு எடுத்துக் காட்டாகத் திகழ்ந்தார்.

–subham —


Tags- பிராக்ருத மொழி, ஹரிபத்ர, ஜின பட்ட சூரி, சமண மத, யானை, கர்வம், கவிஞர்

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: