வால்மீகி ராமாயணத்தில் பெண்கள்-1 (Post No.11,268)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,268

Date uploaded in London – 15 SEPTEMBER 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

வேத காலம் முதல் இந்தக் காலம் வரை பெண்களை வழிபடும் மதம் இந்துக்களின் மதம் மட்டுமே. பெண்களின் பெயரில் பல விரதங்களும் பண்டிகைகளும்  இருப்பது இதற்குச் சான்றாகும். மேலும் பெண்களை அழும்படி செய்தால் அந்தக் குடும்பம் வேரோடு அழியும் என்று மநு நீதி நூல் கூறுகிறது. மேலும் பெண்களுக்கு அவர்களுடைய சகோதரர்கள் ஏராளமான நகை நட்டுக்கள், துணி மணிகளை வாங்கிக் கொடுத்து அவர்களை எப்போதும் மகிழ்ச்சிக் கடலில் மிதக்கவிட வேண்டும் என்றும் மநு ஸ்ம்ருதி சொல்கிறது . பெண்களை சின்ன  வயதில் பெற்றோர்களும் இளம் வயதில் கணவர்களும் முதிய வயதில் மகன்களும் காப்பாற்றுவதை இன்றுவரை காண்கிறோம். ( இலங்கைத் தமிழர்கள் மட்டும் சிறிது மாற்றி இருக்கிறார்கள். முதிய வயதில் பெண்கள், மகள் (daughters)களுடன்தான் வாழவேண்டும்)

பெண்களை இந்துக்கள் பல கோணங்களில் அணுகுகிறார்கள். இதை சம்ஸ்க்ருத நூல்களிலும் தமிழ் நூல்களிலும் காணலாம். தாய் (Mother) என்ற நிலையில் வைத்துப் பார்க்கும்போது மிகவும் புகழ்வார்கள். மனைவி (wife) என்ற நிலையில் வைத்துப் பார்க்கையில் அழகு, அன்பு, காதல் கதைகளை வீசுவார்கள்; விலைமகள் (Prostitute) என்னும்போது சகதியை வாரி வீசுவார்கள். இதைத் திருக்குறள், கம்பராமாயணத்தில் கூடக் காண்கிறோம்.

வேத காலம் முதல் இதிஹாஸ காலம் வரை பெண்கள் கொடிகட்டிப் பறந்தார்கள் .கார்கி அபாலா விஸ்வ வாரா விஸ்பலா லோபாமுத்ரா ஆகிய வேதகாலப் பெண்கள் அக்காலப் பெண்களை நமக்குப்  படம்பிடித்துக் காட்டுகின்றனர். சுமார் 20 பெண்களுக்கு மேலாக வேத மந்திரங்களை இயற்றியள்ளனர் . அவற்றை இன்று வரை ஆண்கள், வேத பாட சாலைகளில் மனப்பாடம் செய்யவேண்டும் !

மஹாபாரத காலத்தில் சூதாட்டம் என்னும் கொடுமையில் சிக்கிய திரவுபதி எழுப்பும் கேள்விகள் பெண்களின் உரிமைப் போராட்டத்தைக் காட்டுகிறது. இந்தக் கட்டுரையில் வால்மீகி  ராமாயண (வா.ரா ) காலப் பெண்களின் நிலையைக் காண்போம் .சீதைஅனுசுயா (அனசூயா என்பது சரியான உச்சரிப்பு )அருந்ததி ஆகியோர் மிகவும் போற்றப்படுகின்றனர். இன்றுவரை பெண் குழந்தைகளுக்கு அந்தப் பெயர்களும் சூட்டப்படுகின்றன. அவர்களுக்கும் முன்னர் வாழ்ந்த தமயந்திசாவித்ரி பெயர்களும் இன்றுவரை புழக்கத்தில் உள்ளன.

Women in Valmiki Ramayana

வா .ரா . காலத்தில் பெண்கள் அந்தப்புரத்தில் ஒதுங்கி வாழவில்லை. வேத காலம் போலவே சுதந்திரப் பறவைகளாக இருந்தனர். ராமனை அயோ த்திக்குத் திரும்பி வாருங்கள் என்று கெஞ்சிக் கேட்க பரதன் சென்றான். அப்போது அவனுடன் தாய்மார்கள் , அதாவது இறந்துபோன தசரதனின் மனைவிமார்கள், அனைவரும் சித்ரகூடத்துக்குச் சென்றனர். புற நானூற்றில் காணப்படும் ‘சதி’ என்னும் உடன்கட்டை ஏறும் வழக்கம் இல்லை. ஆகையால் தசரதனுடன் அவர்கள் இறக்கவில்லை. மநு நூலும் ‘சதி’ பற்றி ஒரு விதியும் இயற்றவில்லை.

விளையாட்டுப் போட்டிகளில் பெண்கள்

வேதகாலத்தில் பெண்கள் அலங்காரம் செய்துகொண்டு விழாக்களுக்குச் சென்ற காட்சிகள் உள்ளன. இதை வா.ரா. விலும் காணலாம் இளம்பெண்கள் நகை நட்டுக்களை அணிந்துகொண்டு தெருக்களில் திரிந்த காட்சிகளை வால்மீகி நம் கண் முன் வைக்கிறார்.அத்தகையோரைக் காண்பது சுப சகுனம் என்றும் கருதப்பட்டது.

பட்டாபிஷேக விழாவானாலும், பெரியோரை வரவேற்கும் நிகழ்ச்சியானாலும், பெரிய யாக யக்ஞங்களானாலும் சரி, இளம் பெண்கள் அங்கே இருந்ததை  வா . ரா  குறிப்பிடுகிறது

அரசர் என்பவர்கள், தனக்குப்பின்னர் ஆட்சி புரிய வாரிசு வேண்டும் என்று விரும்புவது இயற்கையே. ஆகையால் மகனுக்கு தசரதன் ஏங்குவதை வால்மீகி முதலிலேயே சித்தரிக்கிறார். தற்கால அரசியலில் கூட, ஜனநாயக நடைமுறைகள் இருந்தாலும் கூட , தலைவர்களின் மகன்களுக்கே பதவி கிடைக்கிறது ; மகன் இல்லாவிடில்தான் புதல்விகள் தலை எடுக்கின்றனர்.

பெண் குழந்தைகளை யாரும் வெறுக்கவில்லை. ஆனால் என்றோ ஒருநாள் அவள் கல்யாணம் ஆகி வேறு ஒருவனுடன் வாழப்போகிறாள்; தன்னுடன் கடைசிவரை இருக்கப்போவதில்லை என்பதை அறிந்த தாய்மார்கள் புத்திராக்களுக்காக ஏங்கியதில் வியப்பில்லை. மேலை நாடுகளைப் போல அல்லாமல், கூட்டுக்குடும்பம் நடத்தினர் இந்துக்கள். மேலை நாடுகளில் வயதான பெண்கள், முதியோர் இல்லங்களில் தனிமையில் (Lonely) வாடி வதங்குகின்றனர்.அல்லது கிழவிகளாகக் கூடி பிங்கோ, (Bingo, Playing Cards) சீட்டாட்டமாடிப் பொழுதைக் கழிக்கின்றனர் .

சீதை மீது ஜனகன் அன்பு மழை பொழிந்ததை வா.ரா. வில் காண்கிறோம் .குஷ நாப என்னும் சந்திரவம்ச அரசன் ஒரு நாட்டிய தாரகை மீது காதல் கொண்டு அவளை மணந்து சீரும் சிறப்புடனும் ஆட்சி செலுத்தினான். நாட்டிய பேரழகியின் பெயர் கிருதாச்சி. அவனுக்கு 100 பெண் குழந்தைகள் பிறந்தன. அவர்கள் ஆடல், பாடல் , விளையாட்டுக்களில் ஈடுபட்டதை வா.ரா . வருணிக்கிறது 1-32-13

कुशनाभस्तु राजर्षि: कन्याशतमनुत्तमम्।

जनयामास धर्मात्मा घृताच्यां रघुनन्दन।।1.32.11।।

குச நாபஸ்து ராஜரிஷிஹி கன்யாசதம் அநுத்தமம்

ஜனயாமாஸ தர்மாத்மா க்ருதாச்யாம் ரகுநந்தன

ஓ ரகு நந்தன!

க்ருதாச்சி என்னும் தேவதை மூலம் ராஜரிஷி போல ஆண்டுவந்த குஷனாபன் மிகவும் அழகான நூறு பெண்களைப் பெற்றான் 1-32-11

तास्तु यौवनशालिन्यो रूपवत्य स्स्वलङ्कृता:।

उद्यानभूमिमागम्य प्रावृषीव शतह्रदा:।।1.32.12।।

தாஸ்து யெளவன சாலின்யோ  ரூபவத்ய ஸ்வலங்க்ருதா

உத்யான பூமிம்  ஆகத்ய பிராவ்ருஷீவ சதஹ்தாஹா 

गायन्त्यो नृत्यमानाश्च वादयन्त्यश्च सर्वश:।

आमोदं परमं जग्मुर्वराभरणभूषिता:।।1.32.13।।

காயந்த்யோ ந்ருத்யமாநாஸ்ச வாதயன்த்யஸ்ச ஸர்வசஹ

ஆமோதம் பரமம் ஜக்முவர் ராபர்ண பூஷிதாஹா

நன்கு அலங்காரம் செய்துகொண்ட அந்த ரூபவதிகள்/அழகிகள்

 கேளிக்கைப் பூங்காக்களில்  பாடிக்கொண்டும்ஆடிக்கொண்டும்,

வாத்தியங்களை வாசித்துக்கொண்டும் அணிகலன்களை அணிந்தவாறு

 எல்லா திசைகளிலும் ஆடி,ஓடித் திரிந்தனர் மழைக்கால

 மின்னல்கொடிகள் போன்று தோன்றிய அவர்கள் இன்பம் அடைந்தனர்.  1-32-12/13

अथ ताश्चारुसर्वाङ्ग्यो रूपेणाप्रतिमा भुवि।

उद्यानभूमिमागम्य तारा इव घनान्तरे।।1.32.14।।

அத தாஸ் சாரு சர்வாங்கம்யோ ரூபேணா ப்ரதிமா புவி

உத்யான பூமிமாகத்ய தாரா இவ கணாந் தரே

இந்தப் பூவுலகில் ஈடு இணையற்ற உடல் உறுப்புகளை பெற்ற அப்பெண்கள், பூங்காக்களில் உலவியது மேகங்களுக்கு இடையில் பளிச்சிட்ட நடசத்திரங்ககளைப் போல இருந்தது (1-32-14)

சமுதாயத்தில் பெண்கள் தடையின்றி உலவியதுடன்  தோழிகளுடன் , பல இடங்களுக்குச் சென்று வந்ததையும் படிக்கிறோம் வா.ரா (.7-2-9)

அந்தக் காலத்தில், குழந்தை இல்லாதவர்கள், பெண் குழந்தைகளை தாராள மாக , மனமுவந்து சுவீகாரம்/ தத்து  எடுத்தனர். லோமபாதர் (ரோமபாத என்றும் சொல்லுவர்) என்பவருக்கு வாரிசுகள் இல்லை. ஆகையால் அவர் தசரதன் மகளான சாந்தாவை, தத்து எடுத்து தனது சொந்த மகளாக வளத்தார் (வா.ரா .1-11-5, 1-11-19)

ஆயினும் பெண்களைக் கல்யாணம் செய்துதரும் வரை பெற்றோர்கள் கவலைப்பட்டதையும் வால்மீகி நமக்குக் காட்டுகிறார். வயதுக்கு வந்துவிட்ட சீதையை மணம் முடித்துத் தர ஜனகன் பட்ட கஷ்டத்தை வ ருணிக்கையில்  வறுமையில் வாடியவனுக்கு பணமே கிடைக்காத நிலையை உவமையாகப் பயன்படுத்துகிறார் வால்மீகி (வா.ரா .7-9-9)

சங்க நூல்களில் ஒன்றிலும் இதே கருத்து வருகிறது. வீட்டை விட்டு ஓடிப்போன, ஒரு  பெண்ணைத் தேடி வரும் தாய், வழியில் ஒரு பெரியவரைச் சந்தித்து இந்த அங்க அடையாளம் உடைய ஒரு பெ ண்ணைக்  கண்டீர்களா? என்று கேட்டபோது அவள் நல்ல ஆடவனுடன் செல்கிறாள்; கவலைப்படாதே; என்றோ ஒரு நாள் அவள் இப்படி மணம் முடித்துச் செல்ல வேண்டியவள்தானே என்று ஆறுதல் கூறுகிறார்.

To be continued…………………………………

 tags- பெண்கள், வால்மீகி , ராமாயணம், குசநாபன், இன்பம், மகிழ்ச்சி 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: