
Post No. 11,277
Date uploaded in London – 19 SEPTEMBER 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
Part 5
ஓவ்வொரு பெண்ணும் ஆண் மகனைப் பெற்று எடுத்தால் ஆனந்தம் அடைகிறாள். இதை ராமனைப் பெற்றெடுத்த கெளசல்யா, அவனைக் கண்டபோது அடைந்த மகிழ்ச்சியில் காணலாம்
सा चिरस्यात्मजं दृष्ट्वा मातृनन्दनमागतम्।
अभिचक्राम संहृष्टा किशोरं बडबा यथा।।2.20.20।।
ஸா சிரஸ்யாத்மஜம் த்ருஷ்ட்வா மாது நந்தனம் ஆகதம்
அபிசக்ராம ஸம்ஹ்ருஷ்டா கிசோரம் படவா யதா( வா.ரா.2-20-20)
सा அவள் , चिरस्य நீண்ட காலத்துக்குப் பின்னர் , आगतम् வந்த , मातृनन्दनम् தாயை மகிழ்விக்கும் , आत्मजम् அவளுடைய மகனை , दृष्ट्वा பார்த்தபோது , संहृष्टा பேரானந்தத்தில் திளைத்தாள் , बडबा பெண் குதிரையானது , किशोरं यथा ஈன்றெடுத்த குட்டியைப் பார்த்து , अभिचक्राम ஓடுவது போல மகனிடம் ஓடினாள்.
XXX
.
स मातरमभिक्रान्तामुपसंगृह्य राघवः।
परिष्वक्तश्च बाहुभ्यामुपाघ्रातश्च मूर्धनि।।2.20.21।।
ஸ மாதரம் அபிக்ராந்தாம் உபஸம்ஹ்ருஹ்ய ராகவஹ
பரிஷ் வக்தஸ்ச பாஹுப்யாம் உபா க்ரதாஸ்ச மூர்த்னி
सः राघवः அந்த ராமன்/ராகவன் , अभिक्रान्ताम् அவளிடம் வந்த போது , मातरम् அன்னையை , उपसंगृह्य மரியாதையுடன் வணங்கினான் , बाहुभ्याम् (அவள்) இரு கைகளாலும் , परिष्वक्तः கட்டி அனைத்து , मूर्धनि உச்சம் தலையில் , उपाघ्रातश्च முத்தம் கொடுத்தாள்.
xxxx
கடும் தவத்தினாலேயே ராமன் போன்ற ஒரு குழந்தை பிறக்க முடியும் என்றும் வால்மீகி காட்டுகிறார் 2-20-48
उपवासैश्च योगैश्च बहुभिश्च परिश्रमैः।
दुःखं संवर्धितो मोघं त्वं हि दुर्गतया मया।।2.20.48।।
உபவாஸைஸ்ச யோகைஸ்ச பஹு பி ஸ்ச பரிச்ரமைஹி
துக்கம் ஸம் வர்த்திதோ மோகம் த்வம் ஹி துர்கதயா மயா
त्वम् நீ , दुर्गतया मया துரதிருஷ்டம் மிக்க என்னால் , उपवासैश्च நோன் பிருந்தும் , योगैश्च யோகத்தைப் பின்பற்றியும் , बहुभिः பல , परिश्रमैश्च முயற்சிகள் செய்தும் , दुःखम् கஷ்டப்பட்டு , मोघम् வீணாகிப் போய்விட்டதே , संवर्धितः வளர்த்ததெல்லாம்
நோன்பு, தவம் மூலம் பெற்று உன்னைக் கஷ்டப்பட்டு வளர்த்ததெல்லாம் விழலுக்கு இறைத்த நீர் போல போய்விட்டது என் துர்பாக்கியம்தான் (கெளசல்யாவின் புலம்பல்)
இதையே வள்ளுவனும் எதிரொலிக்கிறான்
மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை
என்னோற்றான் கொல் எனுஞ் சொல் 70
மகனுடைய குண நலன்களைக் கண்டவர்கள் இவன் தந்தை எந்த அளவுக்கு நோன்பு இருந்து — தவம் செய்து — இவனைப் பெற்று இருக்கவேண்டுமென வியப்பர்.
xxx
பெண் சந்யாசிகள்
ஆண்களைப் போலவே பெண்களும் துறவற வாழ்க்கை வாழ்ந்ததையும் வால்மீகி நமக்குக் காட்டுகிறார். அவர்களை பிக்ஷுணி , தபஸ்வினி ,ப்ரவ்ரஜிதா என்ற சொற்களால் அழைக்கிறார் .
அத்தகைய சன்யாசினிகள் நடுக்காட்டில் ஆஸ்ரமத்தில் வசித்தனர். அவர்களுக்கும் முறையான குரு உண்டு. சபரி போன்ற தவசியர் இலை-தழை உடைகளையும் மான்தோலையும் அணிந்து வாழ்ந்தனர் பம்பா நதிக்கரையில் ஆஸ்ரமம் அமைத்து வாழ்ந்த சபரியின் குரு மாதங்க முனிவர்
2-29-13
3-74-22
कन्यया च पितुर्गेहे वनवास श्शृतो मया।
भिक्षिण्या स्साधुवृत्ताया मम मातुरिहाग्रतः।।2.29.13।।
கன்யயா ச பிதுர்கேஹே வனவாஸ ச்ருதோ மயா
பிக்ஷிண் யாஸ்து வ்ருத்தாயா மம மாதுரிஹ்ரதஹ
पितुः தந்தையினுடைய गेहे வீட்டில் कन्यया நான் சின்னப்பெண்ணாக இருந்தபோது , मया என்னால் , मम मातुःஎன்னுடைய தாயார் , अग्रतः முன்பாகவே, साधुवृत्तायाः சாதுவாக வாழும் , भिक्षिण्या ஒரு பெண் சந்நியாசி , इह இந்த உலகில் वनवासः காட்டில்தான் வாழமுடியும் என்று சொன்னதைக் , श्रुतः கேட்டேன் .
பெண் சன்யாசிகளும் காட்டில் வாழ்ந்ததை இது காட்டுகிறது.
xxxx
पश्य मेघघनप्रख्यं मृगपक्षिसमाकुलम्।
मतङ्गवनमित्येव विश्रुतं रघुनन्दन।।।3.74.21।।
பஸ்ய மேக கண ப்ரக்யம் ம்ருக பக்ஷி ஸமாகுலம்
மதங்க வனம் இத்யேவ விஸ்ருதம் ரகுநந்தன
रघुनन्दन ரகு குலத்தில் உதித்தவனே , मेघघनप्रख्यम् கரிய மேகம் போல இருண்டு கிடக்கும் , मृगपक्षिसमाकुलम् fபிராணிகளும் பறவைகளும் நிறைந்த இந்த இடம் , मतङ्गवनमित्येव மதங்க முனிவரின் வனம் /காடு , विश्रुतम् என்ற புகழ் பெற்றது , पश्य அதைக் காண்பாயாகுக.
அடர்ந்த காடு ; கரிய மேகக் கூட்டம் போல இருண்டு கிடக்கும் காட்டில் மிருகங்களும், பறவைகளும் கூட்டம் கூட்டமாக வசிக்கின்றன. இதுதான் மதங்க முனிவரின் வனம் /காடு என்று புகழ்பெற்றுள்ளது
இதிலிருந்து மதங்க முனிவரின் கீழ், அவரைக் குருவாக ஏற்று பெண் சன்யாசினியாகிய சபரி வசித்தது புலனாகிறது
इह ते भावितात्मानो गुरवो मे महावने।
जुहवाञ्चक्रिरे तीर्थं मन्त्रवन्मन्त्रपूजितम्।। 3.74.22
இஹ தே பாவிதாத்மனோ குரவோ மே மஹா வனே
ஜுஹ வாஞ் சக்ரிரே தீர்த்தம் மந்த்ர வன் மந்த்ரபூஜிதம்
महावने இந்தப் பெரிய காட்டில் , भावितात्मानः நமக்கு மேலுள்ளவனை நினைந்து ते அவர்கள் मे गुरुवः என்னுடைய குருமார்களான , इह இங்கே , मन्त्रवत् மந்திரங்களினாலும் , मन्त्रपूजितम् அந்த மந்திரங்கள் மூலம் , तीर्थम् புனித நீரோடு , जुहवाञ्चक्रिरे யாக்கங்களைத் செய்தனர் .
என்னுடைய குருமார்கள் இந்த பெரிய வனத்தில் பெரிய கடவுளைப் போற்றி மந்திரங்கள் சொல்லி யாக யக்ஞங்கள் செய்தனர்.புனித நீர் கொணர்ந்து யாக திரவியங்களால் பூஜித்தனர்
நடுக்காட்டில் அவர்கள் செய்த யாக யக்ஞங்களை இந்த ஸ்லோகம் வருணிக்கிறது. அது மட்டுமல்ல; ராமாயண காலத்தில் பெண்துறவிகளும் அத்தகைய இருண்ட காட்டில் வசித்தனர் என்பதையும் சொல்கிறது
To be continued…………………………………………..
tags- வால்மீகி , பெண்கள் 5, நிலை, ராமாயணம்