
image of Kenneth Petera, American wrestler
Post No. 11,281
Date uploaded in London – 20 SEPTEMBER 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
பல நூல்கள் 32 சாமுத்ரிகா லக்ஷணம் பற்றிக் குறிப்பிட்டாலும் அவை என்னவென்ன என்று சொல்லுவதில்லை. பரஞ்சோதி முனிவர் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய திருவிளையாடல் புராணத்தில் உக்கிர குமார பாண்டியன் திரு அவதார படலத்தில் இது பற்றித் தெளிவாகப் பாடி இருக்கிறார்..
சாமுத்திரிகா லட்சணம் என்ற சாஸ்திரம் 64 கலைகளில் ஒன்று. உடல் உறுப்புகளின் அமைப்பைக் கொண்டு ஒருவனின் குணாதிசயங்களை சொல்லும் அபூர்வ இந்து சமய அறிவியல் உண்மை ஆகும். இதை மேல் நாட்டினர் கூட இன்னும் சரிவர ஆராயவில்லை. அவ்வப்போது வரும் கட்டுரைகள் மூலம் சில செய்திகளை மட்டும் வெளியிடுவார்கள். ஆனால் இந்துக்கள் இதுபற்றி நூல்களே எழுதிவிட்டனர். பிரிட்டிஷ் லைப்ரரியில் கிடைத்த பழைய தமிழ் நூலின் பல பக்ககங்களை பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளேன்.
ராம பிரானை வருணிக்கும் வால்மீகியும் கம்பனும் அவருக்கு முழங்காலைத் தொடும் அளவுக்கு நீண்ட கைகள் இருந்ததைச் சொல்ல தவறுவது இல்லை. ஆஜானு பாஹு, அரவிந்த லோசனம் (தாமரைக் கண்ணான் உலகு- குறள் ) என்று வருணிப்பர். நீண்ட கண்கள் இருப்பதைத் தாமரை இதழ்க்கண் போன்ற கண் என்பர். வள்ளுவன் கூட அதைச் சொல்லிவிட்டான் (குறள் 1103).
இதை விஞ்ஞான ரீதியிலும் விளக்கலாம். ஆதி காலத்தில் ஈட்டி, வேல் வருவதற்கு முன்னர் மனிதர்கள் வில், அம்பு களைப் பயன்படுத்தி வேட்டை ஆடினார்கள்; பகைவரை மாய்த்தார்கள் ; அதில் வெற்றி பெறுபவன் நீண்ட கைகளை உடையவனா கத்தான் இருப்பான். அம்பினை இழுத்து இழுத்து கைகள் நீண்டுவிடும்; அவனுக்குப் பிறக்கும் சந்ததியினரும் அப்படியே ஆஜானு பாஹு வாகப் பிறப்பர் ; அவர்களே வில் வித்தைக் கலையில் , போரில், சிறந்து விளங்கியிருப்பார்கள் என்பது வெள்ளிடை மலை என விளங்கும். சாமுத்ரிகா சாஸ்திரம் இப்படி அனுபவ ரீதியில் கண்டு பிடிக்கப்பட்டதே.
பரஞ்சோதி முனிவர் சொல்கிறார் :
அவயவ உறுப்புகளில் உன்னத உறுப்பு ஆறு , நீண்ட உறுப்பு ஐந்து, சூக்கும உறுப்பு ஐந்து, குறுக்க உறுப்பு நான்கு, அகல உறுப்பு இரண்டு, சிவந்த உறுப்பு ஏழு, ஆழ்ந்த உறுப்பு மூன்று ஆகிய 32 உறுப்புகள் அதற்கான இலக்கண நூலில் சொல்லப்பட்டுள்ளன . அவைகளை விரித்துரைப்பின் ,
வயிறு, தோள் , நெற்றி , நாசி, மார்பு, கையடி இவை (6) ஆறும் உயர்ந்திருப்பின் அவன் இந்திரன் ஆவான்.
ஒளியைக் கிரகிக்கின்ற கண், கபோலம் , செங்கை, நாசி, நடு மார்பு, இவ்வைந்தும் (5) நீண்டு இருக்குமாயின் நன்மையாம் .
தலை மயிர், உடல், விரற்கணு , நகம், பல் (5) இவ்வைந்தும் சிரியதாயிருப்பின் ஆயுள் விருத்தி .
கோசம்( ஜனன உறுப்பு), கணைக்கால், நாக்கு, முதுகு, இந்த (4) நான் கும் குறுகி இருக்குமாயின் செல்வப் பெருக்காம்.
சிரம், நெற்றி இவ்விரண்டும்(2) அகன்றிருக்குமாயின் இதுவும் நன்றாகும் .
உள்ளங்கால் ,உள்ளங்கை , கண்கள், இதழ்க்கடை, அண்ணம் , நாக்கு, நகம் இவை ஏழும் (7) சிவந்திருக்குமாயின் மிகுந்த இன்பம் உண்டாகும்.
இகல் வலி , ஓசை, நாபி என்று சொல்லுகின்ற இவை மூன்றும் (3) ஆழ்ந்திருப்பின் எவர்க்கும் மேலான நன்மையுண்டாகும் .
xxxx
திருவிளையாடல் புராணம்
உன்னத ஆறு நீண்ட உறுப்பும் ஐந்து சூக்கம் தானும்
அன்னது குறுக்க நான்காம் அகல் உறுப்பு இரண்டு ஏழ் ஆகச்
சொன்னது சிவப்பு மூன்று கம்பிரம் தொகுத்த வாறே
இன்னவை விரிக்கின் எண் நான்கின் இலக்கண உறுப்பாம் என்ப.
960
வயிறு தோள் நெற்றி நாசி மார்பு கை அடி இவ் ஆறும்
உயிரில் வான் செல்வன் ஆகும் ஒளி கவர் கண் கபோலம்
புயல் புரை வள்ளல் செம்கை புது மணம் கவரும் துண்டம்
வியன் முலை நகுமார்பு ஐந்து நீண்ட வேல் விளைக்கும் நன்மை.
961
நறிய பூம் குஞ்சி தொக்கு விரல் கணு நகம் பல் ஐந்தும்
சிறியவேல் ஆயுள் கோசம் சங்க நா முதுகு இந் நான்கும்
குறியவேல் பாக்கியப் பேறாம் சிரம் குளம் என்று ஆய்ந்தோர்
அறியும் இவ் உறுப்பு இரண்டும் அகன்றவேல் அதுவும் நன்றாம்.
962
அகவடி அங்கை நாட்டக் கடை இதழ் அண்ணம் நாக்கு
நகம் இவை ஏழும் சேந்த நன்மை நாற் பெறுமா இன்பம்
இகல் வலி ஓசை நாபி என்று இவை மூன்றும் ஆழ்ந்த
தகைமையால் எவர்க்கும் மேலாம் நன்மை சால் தக்கோன் என்ன.
963
எல்லை இன் மூர்த்தி மைந்தன் இலக்கண நிறைவினோடு
நல்ல ஆம் குணனும் நோக்கிப் பொது அற ஞாலம்
காக்க
வல்லவன் ஆகி வாழ் நாள் இனி பெற வல்லன் என்னா
அல் அணி மிடற்றான் பின்னும் மனத்தினால் அளந்து
சூழும்.
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
முன்னர் வெளியான சாமுத்ரிகா லக்ஷண கட்டுரைகள்
32 சாமுத்ரிகா லக்ஷணம் | Tamil and Vedas
https://tamilandvedas.com › tag › 32-…
20 Jul 2018 — WRITTEN by London swaminathan. Date: 20 JULY 2018. Time uploaded in London – 18-29 (British Summer Time). Post No. 5240.
தெய்வீகப் பெண்களின் சாமுத்ரிகா லக்ஷணங்கள் …
https://tamilandvedas.com › தெய…
26 Sept 2020 — ஜோதிடம், சகுனம், நிமித்தம், கைரேகை, கால் ரேகை, சாமுத்ரிகா லக்ஷணம் என இப்படிப் …
சாமுத்ரிகா லட்சணம் | Tamil and Vedas
https://tamilandvedas.com › tag › ச…
((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com … சாமுத்ரிகா லட்சணம்: கம்பன் தரும் தகவல் (Post No.3142).
Missing: லக்ஷணம் | Must include: லக்ஷணம்
You’ve visited this page 3 times. Last visit: 20/09/22
TAGS- திருவிளையாடல் புராணம், சாமுத்ரிகா லட்சணம், 32 உறுப்பு, பரஞ்சோதி முனிவர்