
Post No. 11,280
Date uploaded in London – 20 SEPTEMBER 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
கணவனுடன் சிதைத்தீயில் பாய்ந்து உடன்கட்டை ஏறும் “சதி” (SATI) என்னும் வழக்கத்தை ரிக் வேதமோ, மனு நீதி நூலோ குறிப்பிடவில்லை. வால்மீகி ராமாயணமும் (வா.ரா. ) இது பற்றிப் பேசவில்லை. இடைச் செருகல் என்று கருதப்படும் உத்தர காண்டத்தில் மட்டும் வேதவதி , அவருடைய தாயார் இப்படி இறந்ததாகக் கூறுகிறார். அந்த ஒரு இடத்தைத் தவிர வேறு எங்கும் இல்லை. தசரதன் மனைவியரோ, வாலியின் மனைவியரோ அப்படி இறக்கவுமில்லை.
Xxx
விலை மாதரும் ஆடல் அழகிகளும்
ஆண்களை மகிழ்விக்கும் “கணிகா” மகளிர் (COURTESANS) பற்றியும் வால்மீகி பாடி இருக்கிறார்.அயோத்தியில் ராமர் பட்டாபிஷேகத்துக்கு கணிகா” மகளிர் அழைத்து வரப்பட்டனர்.
ராமர் வனவாசத்திலிருந்து திரும்பி வந்தபோது வரவேற்பு கொடுத்தவர் அணியில் அவர்களும் இருந்தனர்.
கலைகளில் வல்லவர்களான அவர்களை அரண்மனை சேவைக்கும் அழைத்தனர் (2-3-17,6-127-3/4, 1-10-5)
சில ஸ்லோகங்களை மட்டும் காண்போம்
पताकाः च பாவட்டாக்களும் , आबध्यन्ताम् கட்டப்படட்டும் , राजमार्गः च தேசீய நெடுஞ்சாலை முழுதும் , सिंच्यतां च தண்ணீர் தெளித்து சுத்தம் செய்யப்படட்டும் सर्वे எல்லா , तालावचराः நடிகர், நடிகையரும் , स्वलङ्कृताःநன்கு அலங்கரிக்கப்பட்ட , गणिकाः च ஆடல் அழகிகளும் , नृपवेश्मनःஅரண்மனை , द्वितीयाम् இரண்டாவது , कक्ष्याम् அறைக்கு , आसाद्य அழைத்துவரப்பட்டு , तिष्ठन्तु அமரும்படி செய்யுங்கள்
(ராமர் பட்டாபிஷேகத்துக்காக ) சாலைகள் முழுதும் தோரணம் கட்டுங்கள் ; தண்ணீர் தெளித்து சுத்தம் செய்யுங்கள்;நடிகர், நடிகையர், அலங்காரம் செய்துகொண்ட ஆடல் அழகிகளை அரண்மனையின் இரண்டாவது அறையில் அமர்த்துங்கள்
आबध्यन्तां पताकाश्च राजमार्गश्च सिंच्यताम्।
सर्वे च तालावचरा गणिकाश्च स्वलङ्कृताः।।2.3.17।।
कक्ष्यां द्वितीयामासाद्य तिष्ठन्तु नृपवेश्मनः।
ஆபத்யந்தாம் பதாகாஸ் ச ராஜமார்கஸ்ச்ச ஸிஞ்சயதாம்
ஸர்வே ச தாலா வசரா கணிகாஸ் ச ஸ்வலங்க்ருதாஹா
கக்ஷ்யாம் த்விதீயாமாஸாத்ய திஷ்டந்து ந்ருபவேஸ்மனஹ
XXX
गणिकास्तत्र गच्छन्तु रूपवत्यस्स्वलङ्कृता:।
प्रलोभ्य विविधोपायैरानेष्यन्तीह सत्कृता:।।1.10.5।।
கணிகாஸ் ச கச்சந்து ரூப வத்யஸ்வலங்க்ருதாஹா
ப்ரலோப்ய விவிதோ பாயை ரானே ஷ் யந்தீஹ ஸத் க்ருதாஹா
ஆடல் அழகிகளை அனுப்பி ரிஷ்ய ச்ருங்கர் என்னும் கலைக்கோட்டு முனிவரை ஏமாற்றி அழைத்துவர ஏற்பாடு:-
रूपवत्य: அழகான , स्वलङ्कृता: அலங்காரம் செய்துகொண்ட/ மேக் அப் போட்டுக்கொண்ட , गणिका: கவர்ச்சிக் கன்னிகள் , सत्कृता: தகுந்த மரியாதையோடு , तत्र அங்கே , गच्छन्तु போகட்டும் , विविधोपायै: பல்வேறு சேஷ்டைகள் செய்து , प्रलोभ्य மயக்கி , इह இங்கே , आनेष्यन्ति அழைத்துவாருங்கள்
அழகிய, அலங்காரம் செய்துகொண்ட ஆடல் அழகிகளை அனுப்பிவையுங்கள் அவர்கள் பலவகையான வழிகளில் ஆசை காட்டி மரியாதையுடன் இங்கே (கலைக்கோட்டு முனிவரை) கொண்டுவரச்செய்யுங்கள்.
இதிலிருந்து அக்காலத்தில் ஆண்களை மயக்கி, சொக்கவைத்து இழுக்கும் ஆடல் அழகிகள் இருந்ததை அறியலாம் ; சிலப்பதிகார மாதவியிடத்திலும் இதைக் காண்கிறோம். சங்க இலக்கியத்தில் அக நானூறு, குறுந்தொகை, நற்றிணை , கலித்தொகை முதலிய நூல்களில் ஏராளமான பரத்தையர் (கவர்ச்சிக் கன்னிகள்) பற்றிய விஷயங்கள் வருகின்றன என்பதையும் குறிப்பிடுதல் பொருத்தம்
காம சூத்திரம் நூல் எழுதிய வாத்ஸ்யாயனரும் வேசியர் 64 கலைகளிலும் நிபுணர்களாக இருக்க வேண்டும் என்பார். (காம சூத்திரம் 1-3-20)
XXXX
ராம- ராவண யுத்தம் முடிந்து ராமருக்குப் பட்டாபிஷேகம் செய்யும் போதும் ஆடல் அழகிகள் பற்றிய குறிப்பைக் காண்கிறோம் : ” புராண கதைகளைச் சொல்லும் , அரசர்களின் வம்ச புகழ்பாடும் பாணர்கள் , இசைக்கலை வல்லுநர்கள், ஆடல் அழகிகள் எல்லோரும் வரட்டும்.ராமனுடைய சந்திரன் போன்ற குளிர்ச்சிமிக்க, ஒளிபொருந்திய முகத்தைக் காண, ராஜமாதாக்கள் , மந்திரிகள் , பிராமண, க்ஷத்ரிய, வைஸ்யர்கள் சங்கத்தினரும் குடும்பத்தினரும் இங்கே கூடட்டும் என்று வால்மீகி பாடியிருப்பதையும் காணலாம்.
TO BE CONTINUED…………………………………
Tags- வால்மீகி , ராமாயணத்தில், பெண்கள்-6,ஆடல் அழகி, கணிகா