
Post No. 11,284
Date uploaded in London – 21 SEPTEMBER 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
வால்மீகி ராமாயணத்தில் (வா.ரா) பெண்கள் -7 (இறுதிப் பகுதி)
அபூர்வமாக பெண்ணே வேறு ஒரு ஆடவனுடன் சேர்ந்ததை அஹல்யா- இந்திரன் சம்பவத்தில் காணலாம் . அஹல்யா தெரிந்தே தவறு செய்கிறாள்
பெண்கள் தவறு செய்ததாக வரும் பகுதி மிகமிகக் குறைவு; அப்படி நேர்ந்ததையும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக எழுதி அதை இன்றும் புராண , இதிகாசங்களில் நம்மை வாசிக்க வைத்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள் . இதில் இரண்டு உண்மை நமக்குத் தெரிகிறது
1.புராண, இதிஹாங்கள் அனைத்தும் உண்மையே. அவர்கள் கசப்பான உண்மைகளைக் கூட மறைக்கவில்லை. அப்படி மறைக்க வேண்டும் என்று நினைத்திருந்தால் இதை மறைத்து இருப்பார்கள். அது மட்டுமல்ல. அந்த அ ஹல்யாவும் , தனது தவறுக்கு வருந்தி தண்டனையை ஏற்றுக்கொண்டதால் இன்றுவரை உதாரணமான பெண்மணிகளின் பெயர்களில் அவள் பெயரையும் சேர்த்து போற்றி வணங்குகின்றனர் .
அஹல்யா, த்ரௌபதீ,சீதா,தாரா மண்டோதரி ததா
பஞ்சகன்யா ஸ்மரேன் நித்யம் சர்வ பாப விநாசனம்
இரண்டாவது உண்மை, இது மற்ற பெண்களுக்கும் ஆண்களுக்கும் எச்சரிக்கை! ஏனெனில் தவறிழைத்த இந்திரனும் தண்டிக்கப்பட்டான் . யானைக்கும் கூட அடி சறுக்கும் என்பது போல பெரியோரும்கூட தவறு செய்ய முடியும். துர்கா சப்த ஸ்லோகீயின் முதல் ஸ்லோகம் இதற்கு உதாரணம். ஞானிகளையும் கூட (அவர்கள் அகந்தை காரணமாக) ஒரு நிமிடத்தில் துர்கா தேவி விழுத்தாட்டிவிடுவாளாம் .ஞானீனாம் அபி சேதாம்ஸி தேவி பகவதி ஹி ஸா
பலாத் ஆக்ருஷ்ய மோஹயா மஹாமாயா பிரயச்சதி
XXX
EVERY SINNER HAS A FUTURE; EVERY SAINT HAS A PAST
ஒவ்வொரு ‘பாவி’க்கும் ஒளிமயமான எதிர்காலம் உண்டு
ஒவ்வொரு முனிவனுக்கும் (தவறான) கடந்த காலமும் உண்டு –என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள்.
இந்து மதத்தில் பாவமன்னிப்பு உண்டு என்பதற்கு அஹல்யா, அஜாமிளன் கதைகள் உதாரணம்.
XXXX
அஹல்யா சம்பவம் குறித்து வால்மீகி சொல்வதைக் காண்போம்:
1-48-18/19
ஓ பேரழகியே !ஆசைவயப்பட்டவர்கள் மாதவிலக்கு காலம் முடிவதற்காக காத்திருக்க மாட்டார்கள் ( குழந்தை பெறுவதற்கு உரிய தருணத்துக்காக); அழகிய இடை உடைய பெண்ணே நாம் இருவரும் சேருவதை நான் விரும்புகிறேன் — என்று இந்திரன் கூறுகிறான்.
ऋतुकालं प्रतीक्षन्ते नार्थिनस्सुसमाहिते
सङ्गमं त्वहमिच्छामि त्वया सह सुमध्यमे।।
ருது காலம் ப்ரதீக்ஷந்தே நார்த்தி நஸ் ஸுஸமமாஹிதே
ஸங்கமம் த்வஹம் இச்சாமி த்வயா ஸஹ ஸுமத்யமே (வா.ரா) 1.48.18
सुसमाहिते சமமான உறுப்புகளை உடைய அழகியே!, अर्थिन:ஆசை வயப்பட்டவர்கள் , ऋतुकालम् ருது காலம் வரும்வரை , न प्रतीक्षन्ते காத்திருக்கமாட்டார்கள் , सुमध्यमे அழகிய இடை உடையவளே , अहम् I, त्वया सह நான் உன்னோடு सङ्गमम् இணைவதற்கு , इच्छामि ஆசைப்படுகிறேன்.
XXXX
ரகு நந்தன! இந்திரன்தான் சந்நியாசி வேடத்தில் வந்திருக்கிறான் என்பதை அறிந்தும் அவனுடன் கூட விரும்பினாள்
मुनिवेषं सहस्राक्षं विज्ञाय रघुनन्दन।
मतिं चकार दुर्मेधा देवराजकुतूहलात्।।1.48.19
முனிவேஷம் ஸஹஸ்ராக்ஷம் விக்ஞாய ரகுநந்தன
மதிம் சகார துர்மேதா தேவராஜ குதூஹலாத் –1.48.19
रघुनन्दन ராமா , दुर्मेधा: தீய எண்ணம் கொண்ட , मुनिवेषम् முனிவர் வேடத்திலுள்ள , सहस्राक्षम् கண்ணாயிரம்/ இந்திரன் , विज्ञाय என்பதை அறிந்தும் , देवराजकुतूहलात् வானுலக வேந்தனின் ஆசைக்கு , मतिं चकार இணங்கிணாள் .
Xxx
விதவையர் வாழ்வு
கணவனை இழந்தோர், விரத வாழ்வு கடைப்பிடித்தனர். தலைவாரி பூச்சூட வில்லை. அணிகலன்களை அணியவில்லை. ஆயினும் அவர்கள் மரியாதையுடன் நடத்தப்பட்டனர் .பட்டாபிஷேகம், திருமணம், இறுதிச் சடங்கு ஆகிய அனைத்திலும் அவர்களும் பங்கு கொண்டதை வா. வருணிக்கிறார்.
na paryadevanvidhavA na cha vyAlakR^itaM bhayam |
na vyAdhijaM bhayan vApi rAme rAjyaM prashAsati || 6-128-99
ந பர்யதேவன் விதவா ந ச வ்யாலாக்ரிதம் பயம்
ந வ்யாதிஜம் பயன் வாபி ராமே ராஜ்யம் ப்ரஷாசதி 6-128-99
99. ராமே = ராமன் ; ப்ரஷஸ்தி = ஆட்சிபுரிகையில் ; ராஜ்யம் – அந்த நாட்டில் ந விதவாஹா பர்யதேவன் ; வருத்தம் அடைந்த விதவைகள் எவருமிலர்.;ந பயம் ஆஸீத் -பயம் என்பதே இல்லை ; வ்யாலாக்ரிதம் – வன விலங்குகளிடமிருந்து; ந பயம்- அச்சமே இல்லை. வ்யாதிஜம் -நோய்களிடம் இருந்தும் (பயமில்லை)’
கெளசல்யா தேவிக்கு ராம , லட்சுமண, சுக்ரீவன் ஆகியோர் உரிய மரியாதை செலுத்தும் காட்சி வா.ரா.வில் இருப்பதால் விதவைகள் புறக்கணிக்கப்பட்ட வில்லை என்பதை அறிய முடிகிறது.
–subham—
TAGS- ராமாயணம் , (வா.ரா) ,பெண்கள் ,பஞ்ச கன்யா ஸ்லோகம்