காளிம்பன் வாழ்ந்த தொண்டை மண்டலம்! (Post.11,288)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,288

Date uploaded in London – –    23 SEPTEMBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

தொண்டை மண்டல சதகம் பாடல் 28

காளிம்பன் வாழ்ந்த தொண்டை மண்டலம்!

ச.நாகராஜன்

காளிம்பன் என்ற வேளாள குல  பிரபு ஒருவன் யானை சேனையுடன் புகழ் பெற்று தொண்டை மண்டலத்தில் வாழ்ந்து வந்தான்.

 அவனை ஒரு புலவர் அற்புதமாக ஒரு பாடலைப் பாடிப் புகழ்ந்தார்.

அந்த சிறப்புடைய பாடலை ‘யாப்பருங்கலக்காரிகை’ என்னும் தமிழ் இலக்கண  நூல் உதாரணப் பாடலாக எடுத்துக் காட்டியது.

அந்தப் பாடல் வருமாறு:-

விடஞ்சூழரவி னிடைநுடங்க வில்வாள் வீசி வெறியார் வேங்

கடஞ்சூழ் நாடன் காளிம்பன் கதிர்வேல்பாடு மாதங்கி

வடஞ்சூழ் கொங்கை மலைதாந்தாம் வடிக்கணீல மலர்தாந்தா

தடந்தோளினைமேல் வேய்தாந்தா மென்னுந்தன்கைத் தண்ணுமையே

இப்படிப்பட்ட அருமையான பிரபுவாகிய காளிம்பனைத் தன்னிடத்தே கொண்டதும் தொண்டை மண்டலம் தான் என தொண்டை மண்டல சதகம் தனது 28ஆம் பாடலில் கூறிப் புகழ்கிறது.

பாடல் இதோ:

இடஞ்சூழுங்காரிகை யாப்பிற்குதாரண மென்றுகொண்ட

விடஞ்சூழரவென் றெவாயிற்றோற்றி வெறிகமழ்வேங்

கடஞ்சூழ்கரடக் கடாக்களிற்றானியற் காளிம்பன்மேல்

வடஞ்சூழெனச்சொன்ன பாமாலையுந்தொண்டை மண்டலமே

பாடலின் பொருள்;

தமிழ் உலம் அனைத்திலும் சூழ்ந்திருக்கின்ற யாப்பருங்கலக் காரிகை என்னும் இலக்கண நூலில் உதாரணமாக எடுத்தாளப் பட்ட பாடலான

‘விடஞ்சூழரவு’ என்று  தொடங்கி ‘வடஞ்சூழ்’ என்பதைப் பின்னால் கொண்டு முடிந்த பாடலானது பழமை வாய்ந்த புலவர் ஒருவரால்  பாடப்பெற்றது. அந்தப் பாமாலையைப் பெற்ற, மதம் பொருந்தித் தன் நிழலைச் சூழ்ந்து மலையும் கடாக் களிற்றுச் சேனையை உடையவனும் வேங்கட மலையைச் சூழ்ந்த தமிழ் நாட்டுக்கு அதிபனுமாகிய ‘காளிம்பன்’ என்னும் இயற்பெயரை உடைவனும் தொண்டை  வேளாளப் பிரபுக்களில் ஒருவனேயாம்.

ஒரு பிரபுவை தமிழ்ப் புலவர் அருமையாகப் பாட, அந்தப் பாடலை தமிழின் சிறந்த இலக்கண நூல்களுள் ஒன்றான யாப்பருங்கலக்காரிகை உதாரணச் செய்யுளாக எடுத்துக் காட்ட, அப்படிப்பட்ட புலவரையும், புலவர் பாடிய வள்ளலையும் கொண்டது தொண்டை மண்டலம்!

***

புத்தக அறிமுகம் – 65

விந்தை மனிதர்கள்

நூலில் உள்ள அத்தியாயங்கள்

1.மேஜிக் மன்னன் ஹௌடினி

 2.மேஜிக் நிபுணர் அலெக்ஸாண்டர் ஹெர்மன்

 3.ஸ்டாலினை மயக்கிய விந்தை மனிதர் வுல்ப் மெஸ்ஸிங்

 4.ரஷிய சாமியார் ரஸ்புடீன்

 5.அற்புதமனிதர் எட்கர் கேஸ்

 6.மெஸ்மரிஸத்தை உருவாக்கிய மேதை மெஸ்மர்

 7.சைக்கோ சிகிச்சையின் தந்தை க்விம்பி

 8.வெறும் கத்தியால் ஆபரேஷன் செய்தவர் – அரிகோ

 9.அந்தரத்தில் மிதக்கும் அற்புத மனிதர் ஹோம்

10.ஆவிகளைக் காட்டிய அதிசய மனிதர் – எக்லிங்டன்

11.உடலை விட்டு உயரே உலவியவர் – முல்டூன்

12.காலத்தை வென்ற ஓவியர் – லியனார்டோ டா வின்சி

13.ஒரு லட்சம் ஜாதகங்களை ஆராய்ந்தவர் – மைக்கேல்

14.கைரேகை மூலம் எதிர்காலம் சொன்னவர் – சீரோ

15.007ன் மூலகர்த்தா- விந்தை ஜோதிடர் ஜான் டீ

16.உலக பலன்களை விளக்கியவர் – நாஸ்டர்டாம்

17.சைக்கிக் டிடெக்டிவ் – நெல்ஸன் பால்மர்

18.பெண்டுலம் மூலம் கொலையைத் தடுத்து நிறுத்தியவர்- ராபின் வின்போ

19.அதிசய சம்பவங்களை ஆராய்ந்தவர் – சார்லஸ் ·போர்ட்

20.யூரி கெல்லர் – பார்வையாலேயே ஸ்பூனை வளைப்பவர்

21.நெப்போலியனை பிரமிக்க வைத்த பெண் -ஆருட ராணி லெனார்மனா

22.கென்னடி கொலையை முன்கூட்டியே சொன்னவர்- ஜீன் டிக்ஸன்

23.ஆவிகளின் தோழிகள்-·பாக்ஸ் சகோதரிகள்

24.விஞ்ஞானியை வியக்க வைத்தவர்- ·ப்ளோரன்ஸ் குக்

25.மேடம் ப்ளாவட்ஸ்கி – தியாஸபிகல் சொஸைடியை நிறுவியவர்

26.பெட்டி ஷைன் – கால்பந்து வீரர்களைக் காப்பவர்

27.ஜோன் குய்க்லி – ரீகனின் ஜோதிடர்

28.ஜோயன்னா சௌத்காட் – சுவர்க்கத்திற்கு பர்மிட் வழங்கியவர்

*

நூல் பற்றிய சிறு குறிப்பு இது :

அதிசயங்கள் கோடி உள்ள அண்டத்தில் மனிதன், இறைவனின் மகத்தான படைப்பு! ஐம்புலன்களால் அவன் ஆற்றும் செயல்கள் பிரமிப்பைத் தருகின்றன! ஆனால் ஐம்புலன்களையும் மீறிய விந்தைகளை நிகழ்த்தும் மனிதர்களைப் பற்றி அறியும்போதோ பிரமிப்பின் உச்சத்திற்கே நாம் செல்கிறோம்! இப்படிப்பட்ட 28 பேரின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகளையும் அவர்கள் விந்தை மனிதர்களாகத் திகழ்வதற்கான காரணத்தையும் விளக்கும் விந்தை நூல் இது! தமிழில் இதுவரை வெளிவராத புதிய விஷயங்களைக் கொண்டுள்ள நூல்!! அதிசயமான சாதனைகள் படைத்தவர்களைப் பற்றி அற்புதமாக நூலாசிரியர் எழுதியிருப்பதைத் தனது அணிந்துரையில் தமிழறிஞர் திரு சு.ஸ்ரீபால் அவர்கள் பாராட்டியுள்ளார்!

*

இந்த நூல் திருமதி நிர்மலா ராஜூ அவர்களால் அவரது www.nilacharal.com மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இதை (EBOOK) டிஜிடல் வடிவமாகப் பெற விரும்புவோர் www.nilacharal.com இணையதளத்தில் EBOOKS என்ற பகுதியில் AUTHOR-ஐ தேர்ந்தெடுத்தால் எழுத்தாளர் பகுதியில் ச.நாகராஜன் (61) என்ற பெயரைக் காணலாம்.

அங்கு சொடுக்கினால் ச.நாகராஜன் எழுதிய 61 புத்தகங்களின் விவரத்தைக் காண முடியும். விந்தை மனிதர்கள் நூலைப் பற்றிய  சிறுகுறிப்பு, விலை விவரத்தைக் காணலாம்; அதை வாங்கலாம்.

Singapore, National Library இல் நிலாச்சாரல் வெளியீடுகள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

**

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: