சிவன் ஏன் பிச்சை எடுக்கிறார் ?(Post.11,291)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,291

Date uploaded in London – 24 SEPTEMBER 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

சுபாஷித ரத்ன பாண்டாகாரம் என்ற சம்ஸ்க்ருத நூலில் ஆயிரக்கணக்கான ஸம்ஸ்க்ருத பொன்மொழிகளும் தனிப்பாடல்களும் இருக்கின்றன. சிவ பெருமானைக் கிண்டல் செய்வது போல போற்றித் துதிக்கும் கவிகளும் அதில் இடம்பெறுகின்றன .

இதோ இரண்டு கவிதைகள் :

பார்வதி எப்படித்தான் சமாளிக்கிறாளோ ? என்று பார்வதியைப் புகழ்கிறார் ஒரு கவிஞர்

ஸ்வயம் பஞ்சமுகஹ புத்ரெள கஜானனஷடானநெள 

திகம்பரஹ கதம் ஜீவேத அத்ர பூர்ணோ  ந சேத் க்ருஹஹ

அவருக்கோ ஐந்து முகங்கள் ; அவருக்கு இரண்டு மகன்கள் ; ஒருவனுக்கு யானைத் தலை; இன்னொரு பையனுக்கு ஆறு தலைகள் ; அந்த வீட்டில் மட்டும் அன்னபபூரணி (பார்வதி) இல்லாவிடில் சிவன் எப்படி வாழ முடியும்?

ஐந்து தலைகள் உள்ள சிவனுக்கு + யானைத் தலை உடைய ஒருவனுக்கு+  ஆறுதலை கொண்ட ஒருவனுக்கு  (12 வாய்களுக்கு) போஜனம் சமைக்கும் பார்வதி எப்பேற்பட்ட பெண்ணாக இருக்கவேண்டும்? அவள் அன்ன பூரணியே — என்று  துதிக்கும் கவிதை இது.

XXX

மற்றொரு  கவிஞருக்கு சிவன் பிச்சை எடுப்பது வியப்பை ஏற்படுத்துகிறது. இறைவனுடைய லீலா வியூதிகளை யாரே அறிவார் ?

ஸ்வயம் மஹேசஹ ஸ்வ சுரோ நகேஷஹ ஸகா தனேசஹ தனயோ கணேசஹ

ததாபிக்ஷஆடனமேவ  சம்போஹோ பலீயஸீ  கேவலமீச்வரேச்சா 

அவரே கடவுளர்க்கெல்லாம் கடவுள்(மஹா+ ஈசன் ); அவருடைய மாமனாரோ இமய மலைக்கே தலைவர் !அவருடைய நண்பரான குபேரனோ செல்வத்துக்கு எல்லாம் அதிபதி! மகனோ கணங்களுக்கு  எல்லாம் அதிபதி; அப்படி இருந்தும் இந்த சிவன் பிக்ஷை எடுத்து உண்ணுகிறாரே ! இறைவனின் விருப்பம் இவர்களுக்கு எல்லாம் மேலானதன்றோ

பிற்காலத்தில் காளமேகம் போன்ற புலவர்கள் இப்படி புகழ்வது போல இகழ்வது அல்லது  இகழ்வது போல புகழ்வது என்ற தொனியில் செய்யுட்களை இயற்றியுள்ளனர் .

XXX

மாணிக்கவாசகரும் கூட சிவபெருமானை கிண்டல் செய்வது போலப் புகழ் கிறார் ;

ஏய் சிவா ! நீ சரியான ஏமாந்த சோணகிரி ! ஒண்ணுமே இல்லாத என்னை எடுத்துக்கொண்டு உன்னையே  எனக்கு தந்துவிட்டாயே ; இப்ப சொல்லு : யாரப்பா புத்திசாலி ? நீயா, நானா ? என்று சிவனின் எல்லையற்ற கருணையைப் புகழ்கிறார் திருவாசகம் என்னும் நூலில்:

தந்தது உன் தன்னைக் கொண்டது என்தன்னை

சங்கரா யார்கொலோ சதுரர்

அந்தமொன் றில்லா ஆனந்தம் பெற்றேன்

யாதுநீ பெற்ற தொன்று என்பால்” — திருவாசகம்

Xxx

சந்தி பிரிக்காமல் , அதே பாடல் :-

“தந்ததுன் றன்னைக் கொண்டதென் றன்னைச்

     சங்கரா யார்கொலோ சதுரர்

 அந்தமொன் றில்லா ஆனந்தம் பெற்றேன்

    யாதுநீ பெற்றதொன் றென்பால்”

–  கோயிற்றிருப்பதிகம், 10திருவாசகம்

–SUBHAM—

Tags- சிவன் ஏன் பிச்சை, யார்கொலோ சதுரர், , திருவாசகம்

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: