சக்தி பெற 48 விதிகள் : ராபர்ட் க்ரீன் நூல்!  – 2 (Post No.11,293)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,293

Date uploaded in London – –    25 SEPTEMBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

சக்தி பெற 48 விதிகள் : ராபர்ட் க்ரீன் எழுதியுள்ள நூல்! ஒரு அறிமுகம்! – 2

The 48 laws of power by Robert Greene

ராபர்ட் க்ரீன் எழுதியுள்ள The 48 laws of power! (by Robert Greene) புத்தகத்தில் உள்ள 48 விதிகளில் முதல் 24 விதிகளைப் பார்த்தோம்.

அடுத்த 24 விதிகள் இதோ:-

விதி 25 : உங்களைப் புதிதாக உருவாக்கிக் கொள்ளுங்கள்

Law 25: Re-Create Yourself

விதி 26 : தூய்மையானவராக இருங்கள்.

Law 26: Keep your hands clean

விதி 27 : மக்களின் தேவைக்குத் தக ஒரு புதிய கோட்பாட்டு முறை உருவாக்கப்படுவதாக அவர்கள் நம்பும்படி நடந்து கொள்ளுங்கள்.

Law 27: Play on people’s need to believe to create a cult like following

விதி 28 :தைரியமாகச் செயலில் இறங்குங்கள்.

Law 28: Enter action with boldness

விதி 29 : ஆரம்பம் முதல் கடைசி வரை அனைத்தையும் திட்டமிடுங்கள்.

Law 29: Plan all the way to the end

விதி 30 : உங்களது சாதனைகள் எல்லாம் பெரிய முயற்சிகளால் அடைந்தது போல இல்லாமல் காட்டுங்கள்.

Law 30: Make your accomplishments seem effortless

விதி 31 : விருப்பத்தேர்வுகளை கட்டுப்பாடுடன் வைத்திருங்கள். நீங்கள் விரும்பும் துருப்புச்சீட்டுகளைக் கொண்டு மட்டும் மற்றவர்களை விளையாட விடுங்கள்.

Law 31: Control the options, get others to play with the cards you deal

விதி 32 : மற்றவர்களின் கற்பனைக் கனவுகளை வைத்து விளையாடுங்கள்.

Law 32: Play to people’s fantasies

விதி 33  : ஒவ்வொருவரது பலஹீனம் என்ன என்பதைக் கண்டறியுங்கள்.

Law 33: Discover each man’s thumbscrew

விதி 34  : உங்களுக்கே உரிய தனிப் பாங்கில் மேலானவராக மிளிருங்கள். ஒரு அரசர் போல நடந்து அதைப் போலவே மற்றவர் உங்களை மதிக்கும்படி செய்யுங்கள்.

Law 34: Be royal in your own fashion. Act like a king to be treated like one

விதி 35  : எதை எப்போது செய்ய வேண்டும் என்ற டைமிங்’ கலையில் நிபுணராகத் திகழுங்கள்.

Law 35: Master the art of timing

விதி 36  : உங்களால் பெற முடியாததை அசட்டை செய்து புறக்கணியுங்கள். அவற்றைக் கண்டு கொள்ளாமல் விட்டு விடுவதே அவற்றைப் பழி தீர்த்தது போல ஆகும்.

Law 36: Disdain things you cannot have, ignoring them is the best revenge

விதி 37  : மற்றவர்கள் பார்த்தே ஆக வேண்டும் என்பது போன்ற வாண வேடிக்கைகளைச் செய்யுங்கள்.

Law 37: Create compelling spectacles

விதி 38  : உங்கள் பாணியில் உங்கள் விருப்பப்படி சிந்தியுங்கள் ஆனால் மற்றவர்களை போல நடந்துகொள்ளுங்கள்.

Law 38: Think as you like but behave like others

விதி 39 :  மீனைப் பிடிக்க குட்டையைக் குழப்புங்கள்.

Law 39: Stir up waters to catch fish

விதி 40  : வெட்டிச் சாப்பாடை – இலவசமாகப் பெறுவதை இகழுங்கள்.

Law 40: Despise the free lunch

விதி 41 : உங்களை விடப் பெரிய மனிதரின் சாம்ராஜ்யத்தில் அடி எடுத்து வைப்பதைத் தவிருங்கள்.

Law 41: Avoid stepping into a great man’s shoes

விதி 42  : ஆட்டிடையனை அடியுங்கள்ஆடுகள் சிதறி ஓடும்.

Law 42: Strike the shepherd and the sheep will scatter

விதி 43  : மற்றவர்களின் இதயம் மற்றும் மனத்தை அறிந்து செயல்படுங்கள்.

Law 43: Work on the hearts and minds of others

விதி 44  : கண்ணாடி பிரதிபலிப்பு யுக்தியைக் கையாண்டு எதிரியை செயலிழக்கச் செய்யுங்கள்!

Law 44: Disarm and infuriate with the mirror effect

விதி 45 :  மாற்றம் அடைய வேண்டியதன் அவசியத்தை உபதேசியுங்கள். ஆனால் ஏராளமான சீர்திருத்தங்களை உடனே செய்யாதீர்கள்.

Law 45: Preach the need to change, but never reform too much at once

விதி 46 : கொஞ்சம் கூடப் பிழை இல்லாதவராக, (குறையே இல்லாதவராக) ஒரு போதும் காட்டிக் கொள்ளாதீர்கள்.

Law 46: Never appear too perfect

 

விதி 47 : நீங்கள் கொண்டிருக்கும் லட்சியத்திற்கு அப்பால் செல்லாதீர்கள். வெற்றி பெறும் போது எப்போது  நிறுத்த வேண்டும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

Law 47: Do not go past the mark you aimed for. In victory, know when to stop

விதி 48 : வடிவமற்றவராக (தேவைக்குத் தக மாறி கொண்டே இருப்பவராக) உங்களைக் கருதிச் செயல்படுங்கள்.

Law 48: Assume formlessness

அருமையான வெற்றி பெறுவதற்கான விதிகள் 48ஐப் படித்து முடித்தால் உற்சாகம் பெறுவது உறுதி.

டேல் கார்னீகி, நெப்போலியன் ஹில், கோப் மேயர் கிறிஸ்டியன் டி. லார்ஸன் ஆகியோர் எழுதிய நூல்களுக்கும் இந்த புத்தகத்திற்கும் பெரிய வேறுபாடுகள் உண்டு.

ஏராளமான உண்மைச் சம்பவங்களை ஒவ்வொரு அத்தியாயத்திலும் பிரமிக்க வைக்கும் விதத்தில் தருகிறார் ராபர்ட் க்ரீன்.

அத்தோடு உலகெங்குமுள்ள நீதிக் கதைகள் வேறு எடுத்தாளப்படுகின்றன.

ஆனால் இதைக் கடுமையாக விமரிசனம் செய்பவரும் உண்டு.

மற்றவர்களை சூழ்ச்சித் திறத்துடன் கையாள வழி சொல்கிறது என்பது சிலரின் விமரிசனம்.

நாம் வாழ்கின்ற போட்டி மிகுந்த உலகில் எதை எப்படி யாரிடம் கையாள வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ள ஒரு புத்தகம் இது என்பது இதை ஆதரிப்போரின் பதில்.

ஆங்காங்கே தனித் தனியான உதிரிச் சம்பவங்களைக் காட்டி எப்படி அனைவருக்குமான ஒரு பொது விதியை உருவாக்க முடியும் என்பதும் இதை விமர்சிப்பவர்களின் கேள்வி.

ஆனால் இந்த 48 விதிகளைப் படிப்போர் தமக்கென தம் அளவில் ஒரு பாதையை வகுத்துக் கொண்டு முன்னேறலாம் என்பது மட்டும் உறுதி.

படியுங்கள்.

உங்கள் வழியை வகுத்துக் கொள்ளுங்கள்.

பயனடையுங்கள்.

**

புத்தக அறிமுகம் – 67

உலகின் அதிசய இடங்கள்

நூலில் உள்ள அத்தியாயங்கள்

1.நடந்தாய் வாழி அமேஸான்!

 2.வானவில் பாலம்

 3.பிரமிக்க வைக்கும் வானெர்ன் ஏரி

 4.உர்குப் கூம்புகள்

 5.வெர்டான் பள்ளத்தாக்கு

 6.மரகதத் தீவு

 7.  ப்ராசாஸி குகைகள்

 8.உயிருள்ள மியூசியம்

 9.கல் மரங்கள்

10.உலகின் உயரமான வெய்ல் நீர்வீழ்ச்சி

11.இயற்கையின் ஆனந்தக் கண்ணீர்

12.மிரள வைக்கும் சாவுக்கடல்

13.கெய்சர் வெந்நீர் ஊற்றுக்கள்

14.அண்டார்டிகா ஐஸ்

15.அழகிய ஆல்ப்ஸ்

16.இமயமலை நமது மலையே

17.பனி மனிதன் இருக்கிறானா?

18.பிரமிக்க வைக்கும் ஒட்டகச்சிவிங்கி

19.ஏஞ்சல் நீர்வீழ்ச்சி

20.அதிசயத் தீவு! ஈஸ்டர் ஐலேண்ட்

21.எட்னா எரிமலை சீறுகிறது

22.மனித இனம் தோன்றிய அதிசயங்களின் நாடு

23.மனிதன் தோன்றிய இடம்

24.லூர்தேஸ்- கிறிஸ்தவர்களின் அற்புத நகரம்

25.ஆதாம் ஏவாள் காதலித்த இடம் கண்டுபிடிப்பு

26.இமயமலைக் குகையில் வாழ்ந்த லண்டன் பெண்மணி!

27.பதினெட்டு பாலைவனங்களில் ஒரு பயணம்!

28.புலிக்கும் முதலைக்கும் அஞ்சாத அரசி

29.ஐஸ் ராணி

30.டயானா டூர்!

** 

நூலைப் பற்றிய சிறு அறிமுகக் குறிப்பு:-

 உலகில்தான் எவ்வளவு அதிசயமான இடங்கள்! அமேசான், வானவில் பாலம், உர்குப் கூம்புகள், வெர்டான் பள்ளத்தாக்கு, மரகதத் தீவு, ஃப்ராசாஸி குகைகள், கல் மரங்கள், உலகின் மிக உயரமான வெய்ல் நீர்வீழ்ச்சி எனப் பூமியின் அதிசய இடங்கள் பலவற்றைப் பற்றி விரிவாக விளக்கும் நூல்! நாமே பணம் செலவழித்துச் சென்றாலும் இத்தனை அதிசய இடங்களை நம்முடைய இந்த ஒரே வாழ்நாளில் பார்த்து விட முடியாது. ஆனால் தன் எழுத்தாற்றலால் இவை அனைத்தையும் ஒரே நாளில் நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார் ஆசிரியர்!

*

இந்த நூல் திருமதி நிர்மலா ராஜூ அவர்களால் அவரது www.nilacharal.com மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இதை (EBOOK) டிஜிடல் வடிவமாகப் பெற விரும்புவோர் www.nilacharal.com இணையதளத்தில் EBOOKS என்ற பகுதியில் AUTHOR-ஐ தேர்ந்தெடுத்தால் எழுத்தாளர் பகுதியில் ச.நாகராஜன் (61) என்ற பெயரைக் காணலாம்.

அங்கு சொடுக்கினால் ச.நாகராஜன் எழுதிய 61 புத்தகங்களின் விவரத்தைக் காண முடியும். உலகின் அதிசய இடங்கள் நூலைப் பற்றிய  சிறுகுறிப்பு, விலை விவரத்தைக் காணலாம்; அதை வாங்கலாம்.

Singapore, National Library இல் நிலாச்சாரல் வெளியீடுகள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

**

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: