சரணாகதி உத்தியைக் கையாள் : பலவீனத்தைச் சக்தியாக மாற்று! (Post No.11,296)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,296

Date uploaded in London – –    26 SEPTEMBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

மானேஜ்மெண்ட் வழிகள்!

சரணாகதி உத்தியைக் கையாள் : பலவீனத்தைச் சக்தியாக மாற்று!

ச.நாகராஜன்

உலகெங்குமுள்ள பல்லாயிரக்கணக்கானோர் விரும்பிப் படித்துள்ள

புத்தகம் ராபர்ட் க்ரீன் எழுதியுள்ள The 48 laws of power! (by Robert Greene).

இதில் அவர் வெற்றி பெற 48 விதிகளைக் கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்துகிறார்.

48 விதிகளில் 22வது விதி சரணாகதி உத்தி.

அதை விளக்க அவர் கூறும் அருமையான இரு எடுத்துக்காட்டுகளை இங்கே பார்ப்போம்.

பிரெஞ்சுக்காரர்களைக் கண்டாலே பிடிக்காமல் அவர்கள் மீது வெறுப்புற்று லண்டனில் இருந்தோர் அவர்களைக் கண்ட இடத்தில் தாக்கிக் கொண்டிருந்த காலம் அது.

பிரபல பிரெஞ்சு மேதையான வால்டேர் லண்டனில் ஒரு இடத்தில் மறைந்து வாழ்ந்து கொண்டிருந்தார்.

ஒரு நாள் தெருவில் அவர் நடந்து சென்று கொண்டிருந்த போது சிலர் அவரை பிரெஞ்சுக்காரர் என்று இனம் கண்டு கொண்டு, “இதோ இருக்கிறான் பிரெஞ்சுக்காரன். பிடி, அவனை” என்று கோபத்துடன் அவரைச் சூழ்ந்து கொண்டனர். கூட்டத்தினரின் கோபத்திற்கு எல்லையே இல்லை.

வால்டேர் பார்த்தார். “அன்பார்ந்த இங்கிலாந்து மக்களே! நான் ஒரு பிரெஞ்சுக்காரன் என்று தானே என்னைக் கொல்லப் பார்க்கிறீர்கள்.

நான் இங்கிலாந்தில் ஒரு ஆங்கிலேயனாகப் பிறக்காமல் போனதே எனக்கு அளிக்கப்பட்ட கொடும் தண்டனை! இதை விட இன்னொரு கொடுமையான தண்டனை இருக்க முடியுமா, என்ன?” என்றார்.

இதைக் கேட்ட கூட்டத்தினர் மிகுந்த சந்தோஷமுற்று ஆரவாரம் செய்தனர்.

அவரை ஒன்றும் செய்யவில்லை.  பத்திரமாக அவர் தனது இருப்பிடம் செல்ல உதவி செய்தனர்.

எந்த இடத்தில் எதிர்க்க வேண்டும் எங்கு சரணாகதி அடைய வேண்டும் என்பதைத் தெரிந்து கொண்டால் தான் இந்த உலகில் இந்தக் காலத்தில் வாழ்க்கையை வெற்றிகரமாக ஆக்கிக் கொள்ள முடியும்!

இன்னொரு சம்பவம்.

ஆயிரத்தி தொள்ளாயிரத்து இருபதுகளைத் தொடர்ந்து வந்த வருடங்களில் கம்யூனிஸ கொள்கை நன்கு பரவ ஆரம்பித்தது.

ஜெர்மானிய எழுத்தாளரான பெர்டால்ட் ப்ரெஸ்ட் (Bertolt Brecht) கம்யூனிஸ கொள்கையின் பால் ஈர்க்கப்பட்டு தனது கவிதைகள் மற்றும் எழுத்துக்களில் புரட்சி சிந்தனையை விதைத்துக் கொண்டே இருந்தார்.

பின்னால் ஹிட்லர் ஜெர்மனியில் சர்வாதிகாரியான போது அவர் மீது நாஜிக்களின் பார்வை சென்றது.

ஆகவே 1941 வாக்கில் அவர் அமெரிக்காவிற்கு புகலிடம் தேடிச் சென்றார்.

அங்கே ஹாலிவுட்டில் தனது திறமையைக் காட்டலானார். ஆனால் தனது முதலாளித்துவ எதிர்ப்பு சிந்தனையை அவர் விடவே இல்லை.

ஹாலிவுட்டில் அவரால் வெற்றி பெற முடியவில்லை.

ஆகவே 1947ஆம் ஆண்டில் அவர் ஐரோப்பாவிற்கே திரும்பிச் செல்ல எண்ணி அதற்கான ஏற்பாட்டைச் செய்தார்.

அந்த சமயத்தில் ஹாலிவுட்டில் அமெரிக்காவிற்கு எதிராக ஏராளமானோர் புகுந்து அமெரிக்காவை பாழ்படுத்துகின்றனர் என்று அமெரிக்க காங்கிரஸ் தீர்மானித்து அப்படிப்பட்டோரை விசாரிக்க ஒரு கமிட்டியை அமைந்த்தது.

ப்ரெஸ்ட் உட்பட்ட நிறைய பேருக்கு கமிட்டி முன்னால் ஆஜராகுமாறு சம்மன் வந்தது.

இதனால் வெகுண்ட பல ஹாலிவுட் சிந்தனையாளர்கள் ஒன்று சேர்ந்து இந்த கமிட்டியைப் புறக்கணிக்கத் தீர்மானித்தனர்.

அவர்கள் அனைவரும் ஒரு குழுவாக ஒன்று சேர்ந்தனர். அந்தக் குழு ஹாலிவுட் 19 என்று அழைக்கப்பட்டது.

19, செப்டம்பர் 1947, அன்று அவருக்கு கமிட்டி முன்னால் ஆஜராக உத்தரவு வந்தது. இன்னும் ஒரு மாதத்தில் அவர் ஐரோப்பா திரும்ப திட்டமிட்டிருந்தார். என்ன செய்வது?

ஹாலிவுட் 19 இல் இருந்த குழுவினர் அனைவரும் கமிட்டியுடன் ஒத்துழைக்காமல் தாறுமாறாய் பேசுவதோடு கமிட்டியினரை ஏளனம் செய்தவாறு இருந்தனர்.

பெர்ஸ்ட்டுக்கு இது பிடிக்கவில்லை. ‘சீப் பப்ளிசிடிக்காக’ கமிட்டியை எதிர்த்து என்ன பிரயோஜனம்? என்று அவர் கேட்டார்.

கமிட்டியில் இருப்பவர்கள் புத்திசாலிகள் என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

ஹாலிவுட் 19 குழுவினர் அவர் பேச்சைக் கேட்கவில்லை. ‘உங்கள் வழியில் நீங்கள் போகலாம்’ என்று சொல்லி விட்டனர்.

செப்டம்பர் 30. கமிட்டி முன் ஆஜராக, குறித்த நாள் வந்தது. கமிட்டியின் முன் பெர்ஸ்ட் ஆஜரானார்.  நல்ல அழகிய சூட் அணிந்து கொண்டு கமிட்டியின் சேர்மனுக்குப் பிடித்தமான சிகார் ஒன்றையும் எடுத்துக் கொண்டார். சேர்மன் ஒரு சிகார் பிரியர்.

கூடவே ஒரு மொழிபெயர்ப்பாளரையும் அழைத்துக் கொண்டு சென்றிருந்தார் பெர்ஸ்ட்.

ஏராளமான கேள்விகளை கமிட்டியினர் கேட்டனர்.

பொறுமையாக மெதுவாக பதில் சொன்னார் ப்ரெஸ்ட். ஒரு மணி நேரம் கழிந்தது.

கமிட்டியில் ஒருவர் ஒரு ஆங்கில கவிதையைக் காட்டி இந்த கவிதை முதலாளித்துவத்தை எதிர்த்து நீங்கள் எழுதியது தானே என்று கேட்டார்.

“இல்லை என்று பதில் சொன்ன பெர்ஸ்ட் தான் ஜெர்மானிய மொழியில் தான் கவிதை எழுதியதாகச் சொல்லி அதை மெதுவாகப் படிக்க ஆரம்பித்தார். மொழி பெயர்ப்பாளருக்கு அதன் அர்த்தத்தையும் சொல்லிக் கொடுத்தார்.,

‘பிறகு அடுத்த கேள்வியை இன்னொருவர் கேட்ட போது தான் ஹிட்லரை எதிர்த்து எழுதியதை அவர்கள் ஏன் பார்க்கவில்லை’ என்று கேட்டார்.

அவரது பேச்சு அனைவருக்கும் பிடித்து விட்டது. அவரை மட்டும் ஒரு வித நிபந்தனையும் இன்றி திரும்பிப் போக கமிட்டி அனுமதித்தது. அவர் ஐரோப்பா திரும்பவும் கமிட்டியினர் உதவி செய்தனர்.

‘எதிர்க்கக் கூடாத நபருடன் எதிர்க்கக் கூடாத இடத்தில் எதிர்க்காதே; சரணாகதி அடைந்து விடு’ என்பதை நன்கு உணர்ந்து கொண்டு நடந்தார் பெர்ஸ்ட். அமெரிக்க அரசின் கோபத்திற்கு ஆளாகாமல் தண்டனையிலிருந்து தப்பித்தார்.

இதர ஹாலிவுட் 19 குழுவினர் பல இன்னல்களுக்கு ஆளானார்கள்.

ஆகவே சரணாகதி அடைய வேண்டிய சமயத்தில் சரணாகதி அடை என்பது தான் சரியான உத்தி.

ராபர்ட் க்ரீன் கூறும் 22 விதி இது:-

விதி 22 : சரணாகதி உத்தியைக் கையாள்: பலவீனத்தைச் சக்தியாக மாற்று.

Law 22: Use the surrender tactic: transform weakness into power

***

 புத்தக அறிமுகம் – 68

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

 நூலில் உள்ள அத்தியாயங்கள்

1.போஸின் பிறப்பு

 2.பள்ளிப் படிப்பு

 3.கல்லூரி வாழ்க்கை

 4.மீண்டும் கல்கத்தா

 5.கேம்பிரிட்ஜில்

 6.இந்திய தேசீய காங்கிரஸ்

 7.புதிய கட்சி உதயம்

 8.மாந்தளை சிறையில்..

 9.இளைஞர்களின் தலைவர்

10.வியன்னா வாழ்க்கை

11.போஸின் திருமணம்

12.காங்கிரஸ் தலைவரானார்

13.மகாத்மாவுடன் கருத்து வேறுபாடு

14.பார்வேர்டு பிளாக்

15.போஸ் தப்பி விட்டார்

16.·ப்ரீ இண்டியா செண்டர்

17.ஆஜாத் ஹிந்த் ரேடியோ

18.இந்திய தேசீய ராணுவம்

19.சப்மரீன் பயணம்

20.ராஷ்பிஹாரி போஸின் அழைப்பு

21.தற்காலிக சுதந்திர அரசு

22.தற்காலிக இந்திய அரசின் மந்திரிசபை

23.இம்பால் பிடிபடுமா?

24.வீரர்களின் துன்பம்

25.ஜப்பானின் சரணாகதி

26.கடைசிப் பயணம்

27.துயரச் செய்தி

28.நடந்தது என்ன?

29.அஸ்திக்கு அஞ்சலி

30.ஜப்பானிய டாக்டரின் அறிக்கை

31.நேதாஜி இறந்தாரா?

32.செங்கோட்டை விசாரணை

33.நேதாஜியின் அன்றாட வாழ்க்கை

34.செயல்முறையும் குணநலன்களும்

35.இந்தியா விடுதலை அடையும்

36.ஒப்பற்ற தலைவர்

**

நூலைப் பற்றிய சிறு அறிமுகக் குறிப்பு:-

இந்திய சுதந்திரத்தைப் பெறுவதற்காக அஹிம்சை வழியின் மூலம் அண்ணல் காந்தியடிகள் பெரும் முயற்சி செய்தபோது இன்னொரு முகமாக அந்த சுதந்திரத்தைச் சீக்கிரம் அடைய சிங்கப்பூரில் ஒரு ராணுவத்தையே உருவாக்கி ஆங்கில ஏகாதிபத்தியத்தை நடுநடுங்க வைத்த மாவீரன் நேதாஜி. இளைஞர்களுக்கு உத்வேகம் தரும் அவரது வாழ்க்கை வரலாறு 36 அத்தியாயங்களில் விளக்கப்பட்டுள்ளது. அவரது ராணுவம் பற்றிய சுவையான தகவல்கள், அவரது மறைவு குறித்து எழுந்த சந்தேகங்கள் ஆகியவற்றை விரிவாக இந்த நூலில் படிக்க முடியும்.

*

இந்த நூல் திருமதி நிர்மலா ராஜூ அவர்களால் அவரது www.nilacharal.com மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இதை (EBOOK) டிஜிடல் வடிவமாகப் பெற விரும்புவோர் www.nilacharal.com இணையதளத்தில் EBOOKS என்ற பகுதியில் AUTHOR-ஐ தேர்ந்தெடுத்தால் எழுத்தாளர் பகுதியில் ச.நாகராஜன் (61) என்ற பெயரைக் காணலாம்.

அங்கு சொடுக்கினால் ச.நாகராஜன் எழுதிய 61 புத்தகங்களின் விவரத்தைக் காண முடியும். நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் நூலைப் பற்றிய  சிறுகுறிப்பு, விலை விவரத்தைக் காணலாம்; அதை வாங்கலாம்.

Singapore, National Library இல் நிலாச்சாரல் வெளியீடுகள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

**

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: