பிரமிக்க வைக்கும் கர்ம பலன் சம்பவங்கள் மூன்று (Post No.11,299)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,299

Date uploaded in London – –    27 SEPTEMBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

கென்னடி – மிட்சுபிஷி – செர்னோபில் – பிரமிக்க வைக்கும் கர்ம பலன் சம்பவங்கள் மூன்று!

ச.நாகராஜன்

1

இந்த மூன்று உண்மைச் சம்பவங்களையும் ரஷிய மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழி பெயர்த்துள்ளவர் செய்ம் ஜெஹாவி (Chaim Zehavi)

இதைத் தமிழில் தருகிறேன்.

2

இரண்டாம் உலக மகா யுத்த காலம். யூதர்களின் தலை விதி பற்றிய உண்மை அறியப்பட்ட நேரம். ஆனால் இன்னும் கூட அவர்களைக் காப்பாற்ற முடியும் என்ற நிலை.

சில பணக்கார யூதர்கள் ஒரு கப்பலை விலைக்கு வாங்கினார்கள். அதன் மூலமாக தங்கள் குடும்பத்தினரை பத்திரமாக அமெரிக்காவிற்கு அனுப்பி விடலாம் என்பது அவர்கள் எண்ணம்.

ஆனால் அவர்களுக்கு அமெரிக்காவில் நுழைய விசா வேண்டுமே. ஆகவே அவர்கள் லண்டனில் உள்ள அமெரிக்க தூதரை அணுகினார்கள். அப்படி விசா வழங்குவது அவருக்கு ஒன்றும் கடினமான காரியம் அல்ல, ஆனால் அவர் தீர்க்கமாக மறுத்து விட்டார்.

ஆகவே தங்கள் குடும்பத்தினரைக் காப்பதற்காக அந்த யூதர்கள் விசா இன்றிப் பயணமானார்கள்.

அமெரிக்க தூதருக்கு இது தெரிந்தவுடன், அவர் உடனே வாஷிங்டனில் உள்ள அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு ஒரு கப்பலில் விசா இல்லாமல் சட்டத்திற்குப் புறம்பான முறையில் சிலர் அமெரிக்கா வருவதாகத் தகவலை அறிவித்தார். போரின் பயங்கரங்களை எல்லாம் மீறி ஒருவழியாக யூதர்கள் அமெரிக்காவை அடைந்தனர். ஆனால் அமெரிக்காவிற்குள் நுழைய அவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அந்த துரதிர்ஷ்டவசமான யூதர்கள் அனைவரும் லண்டனுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். லண்டன் எரிந்து கொண்டிருந்தது. அங்கே அகதிகள் முகாம்களில் அவர்கள் எரிந்து சாம்பலாயினர்.

இந்த விஷயம் தெரிந்தவுடன் லண்டனில் இருந்த யூத குரு  அங்கிருந்த அமெரிக்க தூதரிடம் வந்து கூறினார்:

“உங்களுடைய இந்த செய்கை உங்களது பதவிக்கு உகந்த ஒன்று அல்ல. நீங்கள் மனிதர் என்று அழைக்கப்படக் கூட லாயக்கில்லாத ஒருவர். நூற்றுக்கணக்கானோரின் மரணத்திற்கு காரணமாக இருக்கும் நீங்களும் உங்கள் வம்சாவளியினரும் பல தலைமுறைக்குச் சபிக்கப்பட்டவர்கள் ஆவீர்கள்”. இதைக் கூறிவிட்டு அவர் சென்றார்.

அந்த அமெரிக்க தூதரின் பெயர் ஜோ கென்னடி (JOE KENNEDY) அவர் தான் ஜாக் கென்னடியின் (JACK KENNEDY) தந்தை!

 3

இரண்டாம் உலகப் போரின் போது நடந்த இன்னும் ஒரு சம்பவம். லிதுவேனியா நகரம்.

அங்கிருந்த ஜப்பானிய தூதர் ஒரு கனவான். இரக்கமுள்ள மனிதர். நாஜிகள் செய்யும் அக்கிரமங்களை அவர் ஆதரிக்கவில்லை.  ஐரோப்பிய நீதி அமைப்பின் எதிர்காலம் பற்றி அவருக்குக் கவலையாக இருந்தது. அவர் தனது பதவி அதிகாரத்தை வைத்து யூதர்களுக்கு ஜப்பான் வருவதற்கான விசாக்களை வழங்கினார். ஜப்பானிலிருந்து அவர்கள் அமெரிக்காவிற்குச் சென்றனர். இதனால் பல்லாயிரக்கணக்கான யூதர்களை அவர் காப்பாற்றினார்.

இதைக் கண்டுபிடித்த ஜெர்மானிய அதிகாரிகள் உடனே அவரை அந்தப் பதவியிலிருந்து அகற்ற வேண்டும் என்று கோரினர்.

ஜப்பான் நாஜிகளின் கூட்டாளி. ஆகவே ஜப்பான் வேண்டுகோளை ஏற்றது.

ஆனால் அவர் பதவிக் காலம் முடிய இன்னும் இரு வாரங்கள் இருந்தது. அந்த இரண்டு வாரங்களையும் பயன்படுத்தி நிறைய பேரை பணிக்கு அமர்த்தி  இரவும் பகலுமாக வேலை செய்து இன்னும் நிறைய பேருக்கு விசாக்களை வழங்கச் செய்தார். இதனால் இன்னும் ஏராளமான யூதர்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டது.

இது மிகவும் அபாயகரமான ஒரு பணி தான். பிரமிக்க வைக்கும் ஒன்று!

வில்னா சினாகோக்கிலிருந்து (Vilna Synagogue) கிளம்புவதற்கு

முன்னர் யூதர்கள் அவருக்கு நன்றி சொல்ல அவரிடம் வந்தனர்.

“நீங்கள் யூதர்களுக்கு ஆற்றிய இந்தச் செயலை ஒரு போதும் மறக்கமாட்டோம். இந்தக் கடனை நாங்கள் நிச்சயம் உங்கள் வம்சாவளியினருக்கு ஈடு செய்வோம். கடவுள் உங்களையும் உங்கள் வம்சாவளியினரையும் ஆசீர்வதிப்பாராக” என்று உளமுருக அவர்கள் கூறிச் சென்றனர்.
இந்த அற்புதமான மனிதர் ஜப்பானுக்குத் திரும்பினார். அற்புதமான முறையில், அவருக்குத் தண்டனையாக அவர் வேலையிலிருந்து நீக்கப்பட்டதோடு அவர் பென்ஷன் மட்டுமே நிறுத்தப்பட்டது.


பதவியை இழந்த அவர் தனது குடும்பத்தினரைக் காப்பாற்றுவதற்காக ஒரு சிறிய பட்டறையை ஆரம்பித்தார்.

அவர் பெயர் மிட்சுபிஷி! (MITSUBISHI)
 
                                           4 

 
உக்ரேனின் சக்தி வாய்ந்த தலைவரின் சிலை ஒன்று கியவ் (KIEV) நகரின் மையத்தில் உள்ளது. அந்தத் தலைவரின் பெயர் போக்டன் கெமில்னிட்ஸ்கி.(BOGDEN KHMELNITSKY).

அவர் ஒரு அழகிய குதிரை மீது அமர்ந்து கொண்டிருக்கிறார். அவரது வலது கையில் ஒரு வாளைப் பிடித்திருக்கிறார். அந்த வாளின் நுனி ஆகாயத்தை நோக்கி இருக்கிறது. அவர் தான் உக்ரேனின் சுதந்திரத்திற்கான எடுத்துக்காட்டு. கெமில்னிட்ஸ்கி உக்ரேனியர்களின் பெருமிதத்திற்கான தலைவர். அங்கு வருகை புரிவோரெல்லாம் அந்த சிலையின் அழகைப் பார்த்து வியப்பர்.

ஆனால் பலருக்கும் அவர் செமிடிக் இனத்தவருக்கு எதிராக மிருகத்தனமாகச் செயல்பட்டவர் என்பது தெரியாது.

அவரது மனச்சாட்சிக்கு நன்கு தெரிந்தபடியே யூதர்களுக்கு எதிராக ஏராளமான நிகழ்வுகள் நடைபெற்றன. யூதர்களின் நகரங்களும் கிராமங்களும் எரிக்கப்பட்டன. அப்பாவியான ஏராளமான கொன்று குவிக்கப்பட்ட யூதர்களின் ரத்தம் கொட்டியது.

எதிர்காலத்தில் மேதைகளாகவும் சாதனையாளர்களாகவும் திகழக் கூடிய எத்தனை பேரை உலகம் இழந்ததோ!

அவரது இரக்கமற்ற அரக்க குணத்தால் பெண்களும் குழந்தைகளும் கூடத் தப்பவில்லை.

இது வரலாற்று உண்மை.

சபிக்கப்பட்ட கெமில்னிட்ஸ்கியால் உக்ரேனுக்கு பெரும் துயரம் ஏற்பட்டது.

ஆனால் ஒரு நகரத்தில் குறிப்பிடத்தகுந்த அளவு அவரது செயல் கொடூரமானதாக இருந்தது.

சினோகோக் என்ற அந்த நகரில் கெமில்னிட்ஸ்கியும் அவரது குண்டர் கூட்டமும் யூதர்களின் அனைத்து வீடுகளையும் தரைமட்டமாக்கியது. அவர்களின் சொத்துக்களைச் சூறையாடியது.

சிறுவர்களும் பெண்களும்சினாகோக்கிலிருந்து (Synagogue) தூக்கிச் செல்லப்பட்டு இரக்கற்ற முறையில் முற்றிலுமாக எரிக்கப்பட்டனர். ஒரு யூதர் கூட அங்கு உயிருடன் இல்லை; அங்கு மீதி இருந்தது அந்த நகரின் பெயர் மட்டும் தான்.

ஆனால் ஆண்டுகள் பல கழிந்து தண்டனை வந்தது.

அந்த நகரின் பெயர் செர்னோபில். அது தான் சினாகோக் இருந்த இடம்.

அங்கு தான் அணு உலைக் கூடம் அமைக்கப்பட்டது.

அங்கு தான் உலகின் மிக மோசமான அணு ஆயுத விபத்து ஏற்பட்டது.

ஆம், யூதர்கள் அழிக்கப்பட்ட அதே இடத்தில் தான் உலகின் மிக கோரமான விபத்து ஏற்பட்டது.

அது விளைவித்த அழிவு … வார்த்தைகளால் சொல்ல முடியாத ஒன்று!

5

மேலே குறிப்பிடப்பட்டுள்ள மூன்று சம்பவங்கள் வியப்பைத் தரும் உண்மை சம்பவங்கள்.

இவற்றினால் நாம் அறிந்து கொள்வது :-

நல்ல கர்மம் நல்லதைத் தரும்; தீய கர்மம் ஒரு போதும் அதைச் செய்தவரை விடாது. தீயதைத் தந்தே தீரும்!

இவற்றால் தனி நபர் விதி (Individual fate) மற்றும் கூட்டு விதி (Collective Fate) இரண்டையும் நன்கு அறிந்து கொள்ளலாம்.

பகவத்கீதையில் ஶ்ரீ கிருஷ்ணரின் ஒரு அருள் வாக்கை என்றும் நாம் மறக்கவே கூடாது :

ந ஹி கல்யாண க்ருத் கஶ்சித் துர்கதிம் கச்சதி …  

                 (அத்யாயம் 6 ஸ்லோகம் 40)

பொருள் : கல்யாண பாவனையுடன் – (நல்லதை விழையும் பாவனையுடன்) கர்மம் செய்பவன் (ஒரு நாளும்) – எந்த நிலையிலும் துர்கதியை அடைய மாட்டான்.

***

 Tags- கர்ம பலன்,  சம்பவங்கள்

புத்தக அறிமுகம் – 69

ஆங்கிலம் அறிவோமா?

நூலில் உள்ள அத்தியாயங்கள்

01)ஆங்கில மொழி விநோதங்கள்

02)சொற்கள் பிறந்த விதம்

03)பிழைகளைத் தவிர்ப்போம்

04)மரபுச் சொற்களும், மரபுத் தொடர்களும்

05)சில வினாக்களும் விடைகளூம்

முதல் அத்தியாயமான ஆங்கில மொழி விநோதங்களில் உள்ள தலைப்புகள்:

 1)நூல் அறிமுகம்

 2)எழுத்தின் சிறப்புகள்

 3)ஐந்து வௌவல்

 4)பொருள் பொதிந்த பத்து வார்த்தைகள்

 5)சிறிய சொற்களே சிறந்தவை!

 6)பெரிய்ய்ய்ய வார்த்தைகள், நீளமான வார்த்தைகள்

 7)சிறப்பான சில வார்த்தைகள்

 8)வாக்கிய அமைப்பு

 9)மீண்டும் மீண்டும் வரும் வார்த்தைகள்

10)சக்தி வாய்ந்த ‘கமா’

11)எப்படியும் மாற்றலாம்!

12)அடிப்படைச் சொற்கள் 850! மொத்தச் சொற்கள் எட்டு லட்சம்! 13)மொழிபெயர்ப்புக் கலை

14)குறுக்கெழுத்துப் புதிர்

15)ANAGRAM

16)ஆங்கில எழுத்திலக்கணமும் உச்சரிப்பும் (ALPHABET) 17)PALINDROME

18)ஆங்கில உச்சரிப்பு

19)சொற்களின் மகிமை

20)DOUBLETS

21)OXYMORONS

22)PANAGRAM

23)TONGUE TWISTERS

24)பொருத்தமான பேச்சுக்கு ஒரு முடிவே இல்லை!             

**.

நூலைப் பற்றிய சிறு அறிமுகக் குறிப்பு:-

உலக மொழியான ஆங்கிலத்தைக் கற்பதற்கான ஆர்வத்தைத் தூண்டும் நூல் இது! ஆங்கிலம் கற்பதற்கான ஆர்வத்தைத் தூண்டும் நூல்! ஆங்கில மொழி விநோதங்கள், சொற்கள் பிறந்த விதம், பிழைகளைத் தவிர்ப்போம், மரபுச் சொற்களும், மரபுத் தொடர்களும், சில வினாக்களும் விடைகளும் என்னும் ஐந்து அத்தியாயங்களில் ஆங்கில மொழியை அறிமுகம் செய்து வைக்கிறது இந்த நூல். அனாக்ராம், கிராஸ்வேர்ட் பஸில், கடினமான இருபது வார்த்தைகள், குயுக்தி வார்த்தைகள், Doublets, Oxymorons, Panagram, Tongue Twisters என ஆங்கில மொழியின் அருமையான பரிமாணங்களையும் ரொபாட், மெஸ்மரிஸம், சேண்ட்விச், ஏஒன், பிகினி, பாய்காட் போன்ற, ஏராளமான சொற்கள் தோன்றிய விதத்தையும் நூல் அழகுற விளக்குகிறது. ஆங்கில அறிவை வளர்த்துக் கொள்ள விரும்புபவர்கள் படிக்க வேண்டிய நூல்!

*

இந்த நூல் திருமதி நிர்மலா ராஜூ அவர்களால் அவரது www.nilacharal.com மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இதை (EBOOK) டிஜிடல் வடிவமாகப் பெற விரும்புவோர் www.nilacharal.com இணையதளத்தில் EBOOKS என்ற பகுதியில் AUTHOR-ஐ தேர்ந்தெடுத்தால் எழுத்தாளர் பகுதியில் ச.நாகராஜன் (61) என்ற பெயரைக் காணலாம்.

அங்கு சொடுக்கினால் ச.நாகராஜன் எழுதிய 61 புத்தகங்களின் விவரத்தைக் காண முடியும். ஆங்கிலம் அறிவோமா? நூலைப் பற்றிய  சிறுகுறிப்பு, விலை விவரத்தைக் காணலாம்; அதை வாங்கலாம்.

Singapore, National Library இல் நிலாச்சாரல் வெளியீடுகள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 ———–

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: