திருலோகம் கவி ஆவணப் படம்(Post.11,312)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,312

Date uploaded in London – –    1 OCTOBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

திருலோகம் என்றொரு கவி ஆளுமை : ரவி சுப்ரமணியன் இயக்கத்தில் அற்புத ஆவணப் படம்!

ச.நாகராஜன்

காலம் சற்று கடந்து விட்ட போதும் கூட, ‘திருலோகம் என்றொரு கவி ஆளுமை’ படத்தைப் பார்க்கும் வாய்ப்பு திடீரென்று கிடைத்தது.

வாழ்கின்ற காலத்திலே உரிய விதத்தில் தமிழகத்தில் தமிழக மக்கள் கவிஞர்களையும் அறிஞர்களையும் மதித்துக் கொண்டாடுவதில்லை என்பது பெரிய உண்மை.

மஹாகவி பாரதியாரில் ஆரம்பித்து இன்று வரை ஆங்காங்கு உள்ள பல்வேறு அறிஞர்களை எளிதில் சுட்டிக் காட்டி விடலாம்.

இவர்களில் பெரும்பாலானோருக்கு அரசியல் பின்புலம் இருப்பதில்லை. பெயரையும் புகழையும் விலைக்கு வாங்கவோ வேறு விதத்திலோ அவர்கள் முயல்வதுமில்லை.

இப்படிப்பட்ட பெரும் கவிஞர்கள் கூட்டத்தில் ஒருவராக அமைபவர் திருலோக சீதாராம்.

அவரைப் பற்றிய ஆவணப் படம் :திரிலோகம் என்றொரு கவி ஆளுமை!

மறைந்து விட்ட ஒருவரைப் பற்றிய ஆவணப் படம் என்றால் முதலில் உண்மைகள் அனைத்தையும் சேகரிக்க வேண்டும்.

அவரைப் பற்றி நன்கு அறிந்த அவரது குடும்பத்தினரையும், நண்பர்களையும், ரசிகர்களையும் தொடர்பு கொள்ள வேண்டும்.

ஆதார பூர்வமாக உள்ள உரிய ஆவணங்களை பல்வேறு இடங்களிலிருந்து கஷ்டப்பட்டு ஒருங்கு திரட்ட வேண்டும்.

பின்னர் தான் அவற்றை ஒரு படமாக உருவாக்கத் தன் திறமையைக் காட்ட வேண்டும்.

இதில் சிறப்பான வெற்றியைப் பெற்றிருக்கிறார் திரு ரவி சுப்பிரமணியன் என்று தயங்காமல் கூறலாம்.

சிறந்த கவிஞர், சொற்பொழிவாளர், பல்துறை வித்தகர்களை வியக்க வைத்தவர், பத்திரிகை ஆசிரியர், நூல்களை இயற்றிய ஆசிரியர், புதிய எழுத்தாளர்களை அறிமுகப் படுத்தியவர், இயற்கையை ரசித்தவர், பெயர் புகழைத் தேடிப் போகாதவர், எளிமையாக வாழ்ந்தவர் என்று இப்படி பல்வேறு பரிமாணங்களைக் கொண்ட திருலோக சீதாராம் அவர்களை படம் மூலமாகப் பார்க்கும் போது பிரமிக்கிறோம்.

தனது குரலால் (மென்மையான, கம்பீரமான குரல்) நீண்ட நெடிய ஒரு வரலாற்றை சுமார் 73 நிமிடங்களில் சித்தரிக்கிறார்  ரவி சுப்பிரமணியன்- பல்வேறு உத்திகளால்.

சிறந்த எழுத்து, ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, தொகுப்பு, இயக்கம் கொண்ட படம் இது.

இதில் சேக்கிழார் அடிப்பொடி திரு டி.என்.ராமச்சந்திரன், திரு. சோ.சத்தியசீலன். திரு எஸ்.ராமகிருஷ்ணன் உள்ளிட்டவர்களின் நேரடி அனுபவங்களைக் கேட்கிறோம்.

மூன்று பாடகர்களின் பாடல்களும், குறும்படத்தில் நடிக்கும் நடிகர்களும் நம்மைக் கவர்கின்றனர்.

மகாகவி பாரதியாரின் குடும்பத்தோடு நல்லதொரு உறவைக் கொண்ட கவிஞரின் பாசம், பாரதியிலேயே அவர் வாழ்ந்த பாங்கு – இவை நம்மை பிரமிக்க வைக்கிறது!

இறுதியில் கவிஞர் பேசிய பேச்சை கனத்த குரலில் திரு ராமச்சந்திரன் குறிப்பிட்டுக் கண்களைத் துடைத்துக் கொள்ளும் போது மனம் உருகுகிறது.

பாவேந்தர் பாரதிதாசன் (நிதி அளிப்பு) ,  தொழில் மேதை ஜி.டி. நாயுடு (எதற்காக சந்திக்க வேண்டும்? பதில் “சும்மா”) என பல சந்திப்புகளைப் பார்க்கிறோம்.

இயக்குநர் ரவி சுப்பிரமணியத்தின் தனிச் சிறப்பு அவர் உருவாக்கும் படங்களில் பார்க்கும் ஆயிரக்கணக்கானோரின் மனம், அனுபவத்திற்குத் தக்க வகையில் ஒரு நீட்சியைத் தருவது தான்!

இது சிறந்த கலைஞர்களுக்கு மட்டுமே வரும் ஒரு அரிய திறன்.

(இந்த நீட்சியின் வீச்சை தாமரை படத்திலும் பார்க்கலாம்!)

ரவி சுப்பிரமணியன் தனது சொற்பொழிவில் தான் சேர்க்க முடியாமல் விடுபட்டுப் போனவற்றையும் சொல்கிறார்.

தொய்வின்றி ஒரு படத்தை, பார்ப்பவர்களின் ஆவலைத் தூண்டும் வகையில் ஒரு ஆவணப் படத்தைப் படைப்பது சிரமமான காரியமே.

மூலக் கனல் பாடல், கோவிலில் படப்பிடிப்பு, கணினி உத்திகள், வரைகலை கார்ட்டூன் உத்திகள் என எதைச் சொல்ல, எதை விட?!

சிவாஜி என்றொரு பத்திரிகையை அற்புதமாக நடத்தியதோடு மாற்றுக் கருத்துக்களைக் கொண்டோரும் மதிக்கும் படி நடந்து கொண்ட கவிஞரின் வாழ்க்கையை தமிழ் மக்கள் அறிதல் வேண்டும்.

அவரது புதல்வர் சுப்ரமணியன் சீதாராம் இதைப் படைப்பதற்கான பணத்தை வேண்டும் போதெல்லாம் கொடுத்ததை ரவி சுப்பிரமணியன் குறிப்பிட்டு தயாரிப்பாளருக்கும் இயக்குநருக்கும் அபூர்வமாக ஏற்படும் அற்புதமான உறவையும் குறிப்பிட்டு நெகிழ்கிறார்.

தயாரிப்பாளர் சுப்ரமணியன் சீதாராம், நல்ல திறன் கொண்டுள்ள ரவி சுப்பிரமணியன் மற்றும் அவரது குழுவினருக்குப் பாராட்டுகள்.

இந்தப் படத்தை YOUTUBE இல் https://www.youtube.com/watch?v=m9u2KOygB3g

என்ற தொடுப்பில் பார்த்து மகிழலாம்; பாராட்டலாம்!

***

புத்தக அறிமுகம் – 73

ஹா! ஹா! ஹாலிவுட்!

 நூலில் உள்ள அத்தியாயங்கள்

01) ஹா! ஹா! ஹாலிவுட்!!                      

02) ஹாலிவுட் பா(ர்)வை-ஜூலியா ராபர்ட்ஸ்     

03) ஹாலிவுட் பா(ர்)வை-நிகோல் கிட்மேன்       

04) ஹாலிவுட் பார்(ர்)வை-கேதி நோயல்     

05) ஹாலிவுட் பா(ர்)வை- காதரீன் ஜீடா ஜோன்ஸ்                    

06) மர்லின் மன்ரோவைக் கொன்றது யார்?  

 07) மர்ம மன்னன் வாழ்வில் மர்மங்கள்      

 08) புதிய ஜேம்ஸ் பாண்ட் யார்?        

 09) நிர்வாணம் பெறத் துடிக்கும் ஹாலிவுட் நடிகைகள்                          

 10) மாறுகின்ற உலகில் இனி ஹாலிவுட் படங்களும் மாறுமா?                 

 11) பிரிட்னி பெற்ற அதிர்ஷ்டக் குழந்தை    

  12) கவர்னரான நடிகரின் கவலை           

  13) புகை பிடிக்காத புதிய ஜேம்ஸ் பாண்ட்   

  14) ஜாக்கிசான் கடந்து வந்த பாதை         

  15) கிசுகிசுக்கள்                          

  16) உலகைக் கலக்க வரும் கிங்காங்         

  17) பாட்டர்ஜுரம் பரவுகிறது                                                                           18) ஹாலிவுட்டில் ஒரு மாயாஜால மாளிகை   

 19) கலக்கப் போவது யாரு?                

 20) 2005ல் கலக்கியது யார்?                

 21) வியர்வை ஊசி                                                                                  

  22) சார்லி சாப்ளின்                      

 23) ஹிட்ச்காக்

 24) எலிசபத் டெய்லர்

 25) ஜேம்ஸ் பாண்டி

  26)  ஜேம்ஸ்பாண்டுக்கு வந்த சோதனை

  27) ஏழு பேரில் எஞ்சியுள்ள ஒருவர்!

*

இந்த நூலைப் பற்றிய சிறு அறிமுகக் குறிப்பு:-

உலகின் மிகப் பெரிய கனவுத் தொழிற்சாலையான ஹாலிவுட் பற்றிய நூல். ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்கள் உருவான வரலாறு, எலிஸபத் டெய்லர், மர்லின் மன்ரோ போன்ற அந்நாளைய கனவுக் கன்னிகள், ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக் முதலான திரை மேதைகள் போன்ற ஹாலிவுட் பிரபலங்கள் பலரைப் பற்றிப் பல விவரங்கள் அடங்கிய நூல். ஆங்கிலத் திரையுலக ரசிகர்களுக்கு ஒரு விருந்து! திரைப்பட விரும்பிகளுக்குப் பரிசளிக்க ஏற்ற நூல்!

This is a book on the world’s biggest dream industry – HOLLYWOOD. A book that carries a lot of information about the history of the making of James Bond movies, on Yesteryears dream girls such as Elizabeth Taylor and Marlin Monroe, and movie legends like Alfred Hitchcock, this book is a feast for all Hollywood movie fans and is an amazing gift to movie lovers!

இந்த நூல் திருமதி நிர்மலா ராஜூ அவர்களால் அவரது www.nilacharal.com மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இதை (EBOOK) டிஜிடல் வடிவமாகப் பெற விரும்புவோர் www.nilacharal.com இணையதளத்தில் EBOOKS என்ற பகுதியில் AUTHOR-ஐ தேர்ந்தெடுத்தால் எழுத்தாளர் பகுதியில் ச.நாகராஜன் (61) என்ற பெயரைக் காணலாம்.

அங்கு சொடுக்கினால் ச.நாகராஜன் எழுதிய 61 புத்தகங்களின் விவரத்தைக் காண முடியும். ஹா! ஹா! ஹாலிவுட் நூலைப் பற்றிய  சிறுகுறிப்பு, விலை விவரத்தைக் காணலாம்; அதை வாங்கலாம்.

Singapore, National Library இல் நிலாச்சாரல் வெளியீடுகள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

**

Previous Post
31 திருக்குறளில் இந்துமதம்: அக்டோபர் 2022 ‘நற்சிந்தனை’ காலண்டர் (Post.11,311)
Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: