
WRITTEN BY S NAGARAJAN
Post No. 11,314
Date uploaded in London – – 2 OCTOBER 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
அக்டோபர் 2. காந்தி ஜெயந்தி!
மஹாத்மாவிற்கு அஞ்சலி!
மஹாத்மாவின் இறுதி நாள் : ஜனவரி 30, 1948!
ச. நாகராஜன்
ஜனவரி 30, 1948. வெள்ளிக்கிழமை.
வழக்கம் போல அதிகாலை மூன்று முப்பது மணிக்கு காந்திஜி விழித்தெழுந்தார். வேப்பங்குச்சியால் பல் துலக்கினார்.
தனது அறையில் தனது பணியைத் துவக்கினார். காங்கிரஸுக்கு ஒரு புதிய சட்டத்தை வகுக்க ஆரம்பித்தார். அது தான் அவரது தேசத்திற்கான கடைசி உயில்.
மணி 4.45 வெந்நீரில் எலுமிச்சை சாறை தேனுடன் கலந்து அருந்தினார்.
அரை மணி நேர நடைப் பயிற்சி! தனது கடிதத் தொடர்பு ஃபைலைப் பார்க்க ஆரம்பித்தார்.
அன்று கிராம்பு பொடி தீர்ந்து விட்டது. ஆகவே அதை மனு தயாரிக்க ஆரம்பித்தார். “நான் சீக்கிரமே இதை முடித்து விட்டு காலை நடைப் பயிற்சியில் கலந்து கொள்கிறேன். இது இரவில் தேவைப்படும் போது இல்லாமல் போய் விடும்” என்றார் அவர். காந்திஜி உடனே, “இரவுக்குள் என்ன நடக்கப் போகிறது என்பது யாருக்குத் தெரியும்? நான் உயிரோடு இருப்பேனோ இல்லையோ! நான் இரவு உயிரோடிருந்தால் அப்போது சுலபமாக இன்னும் கொஞ்சம் தயார் செய்து விடலாம்!” என்றார்.
காலை 7 மணி. ரஜன் நேரு என்ற பெண்மணி அமெரிக்கா செல்லவிருந்தார். அவருடன் பேசினார் காந்திஜி.
காலை 8 மணி. வழக்கம் போல மசாஜுக்கு ரெடியானார். பியாரிலாலிடம் காங்கிரஸ் புதிய சட்டத்தைப் பார்த்து ஏதேனும் சேர்க்கத் தேவை என்றால் அதைச் சேர்க்கச் சொன்னார்.
பிறகு குளியல். மனு காந்திஜியின் எடையை எடுத்தார். 109 ½ பவுண்டுகள். உண்ணாவிரதம் இருந்தால் அவர் இழந்த எடை இப்போது சீராகிக் கொண்டிருந்தது.
மணி 9.30 காலை உணவு. பின்னர் வங்காள மொழி பயிற்சி. அதில், “பைரபின் வீடு நைஹாதியில் இருக்கிறது. ஷைலா அவரது மூத்த மகள். இன்று ஷைலாவிற்கு கைலாஷுடன் கல்யாணம்” என்று எழுதினார்.
12 அவுன்ஸ் ஆட்டுப் பால். சற்று சமைக்கப்பட்ட கறிகாய். ஆரஞ்சு, 4 தக்காளி, காரட் ஜூஸ். இஞ்சி ரஸம். எலுமிச்சை. உணவு முடிந்தது.
பியாரிலால் காங்கிரஸ் சட்டத்தை அவரிடம் காண்பிக்க அவர் அதில் சில திருத்தங்களைச் செய்யலானார்.
மதியத்தில் சிறிய தூக்கம். சில முஸ்லீம் முல்லாக்கள் டில்லியிலிருந்து அவரைப் பார்க்க வந்தனர். வார்தாவுக்கு அவர் செல்லலாம் என்று அவர்கள் கூறவே, காந்திஜி, “கொஞ்ச நாள் தான் அங்கு இருக்க மாட்டேன்” என்று கூறிவிட்டு “கடவுள் வேறு மாதிரியாக நினைத்தாலோ அல்லது வேறு ஏதேனும் நிகழ்ந்தாலோ அன்றி” என்பதைச் சேர்த்துக் கூறினார்.
பின்னர் பிஷனைப் பார்த்து முக்கிய கடிதங்களைக் கொண்டு வரச் சொன்னார். “இன்றே நான் பதில் எழுத வேண்டும். நாளை இருப்பேனோ, மாட்டேனோ” என்று கூறினார்.
அவரது உதவியாளர் மஹாதேவ் தேசாயின் வாழ்க்கைச் சரிதம் எழுதப்பட வேண்டி இருந்தது. ஆனால் நிதி பற்றி சிக்கல். அதில் தனது ஏமாற்றத்தைக் காட்டினார் அவர். அதை யார் எழுதலாம் என்பதைப் பற்றிப் பேசினார்.
ஜவஹர்லால் நேருவிற்கும் சர்தார் வல்லப பாய் படேலுக்கும் இடையே சற்று மனக் கசப்பு ஏற்பட்டிருந்தது. ஆகவே அதை மதியம் படேலுடனும் ப்ரேயர் கூட்டம் முடிந்தவுடன் நேருவுடனும் பேச அவர் திட்டமிட்டிருந்தார்.
சிந்தி குழு ஒன்று அவரைச் சந்தித்தது.
மணி 2.15 இரு பஞ்சாபிகள் அவரைச் சந்திதனர். இரு சிந்திகள், சிலோனிலிருந்து ஒரு பிரதிநிதி. சிலோனிலிருந்து வந்தவரது மகள் காந்திஜியிடம் ஆடோகிராப் கேட்க அவர் கையெழுத்திட்டார். அது தான் அவர் இட்ட கடைசி கையெழுத்து!
3 மணி. ஒரு பேராசிரியர் அவரைச் சந்தித்தார். அவரது உபதேசம் புத்தருடையது போலவே இருக்கிரது என்றார்.
3.15. பிரான்ஸை சேர்ந்த போட்டோகிராபரான ஹென்றி கார்டியர் ப்ரெஸன் தனது போட்டோ ஆல்பத்தை காந்திஜியிடம் அளித்தார்.
4 மணிக்கு சர்தார் படேலுடனான சந்திப்பு. அவர் மனிபென் மற்றும் தனது மகளுடன் வந்தார்.
4.30.காந்திஜி தனது கடைசி உணவை எடுத்துக் கொண்டார்.
சில பார்வையாளர்கள் அவரைப் பார்க்க விருப்பப்பட்டனர். படேலின் முன்னிலையில் காந்திஜி, “ப்ரேயர் முடிந்தவுடன் நான் பார்க்கிறேன். அதுவும் நான் உயிரோடு இருந்தால்” என்றார்.
தனது சர்க்காவைக் கேட்டார். அதை ஆசையோடு (கடைசிமுறையாக) பார்த்தார்.
மணி 5. தனது சப்பலை மாட்டிக் கொண்டார். “நான் 10 நிமிடம் லேட்” என்றவர் மனுவை வலது பக்கமும் ஆபாவை இடது பக்கமும் அணைத்துக் கொண்டு குறுகலான குறுக்கு வழியில் நடக்கலானார்.
200 கஜ தூரம் நடக்க வேண்டும் – ப்ரேயர் மேடைக்கு.
20 போலீஸ்காரர்கள் சாதாரண உடையில் காவல் காக்க இருந்தனர்.
கூட்டம் கூடி இருந்தது.

கோட்ஸே எதிரில் வந்தான். அவன் தனது திட்டத்தை திடீரென்று (நேருக்கு நேராகச் சுடுவது என்று) மாற்றிக் கொண்டான் போலும். மஹாத்மா வழக்கம் போல இரு கரம் கூப்பி கும்பிட்டவாறே செல்ல எதிரில் வந்த அவன் இரு கரமும் குவித்துக் கும்பிட்டான். நமஸ்தே காந்திஜி என்றான். காந்திஜியும் கரத்தைக் குவித்தார்.
மனு அவன் எங்கே காந்திஜியின் காலில் விழுந்து கும்பிடப்பார்க்கிறானோ என்று நினத்தவர், “பையா! (சகோதரர் என்று அர்த்தம்) பாபுஜி ஏற்கனவே கொஞ்சம் லேட். ஏன் தொந்தரவு செய்கிறீர்கள்” என்றார்.
மனுவை ஒரு புறமாகத் தள்ளிய கோட்ஸே மறைத்து வைத்திருந்த தனது இத்தாலிய பிஸ்டலை எடுத்தான். சுட்டான்.
5.17.
காந்திஜி மார்பில் குண்டுகளை ஏந்தினார். ஹே ராம், ஹே ராம் என்றார்.
ஒரு வினாடி நின்றவர் அப்படியே விழுந்தார்.
கூட்டம் ஸ்தம்பித்தது.
ஒரே குழப்பம். மஹாத்மா சில விநாடிகளில் அமரர் ஆனார்.
மருத்துவர்கள் வந்து அவரது நாடியைப் பார்த்தனர்.
அவர் அமரர் ஆனதை உறுதிப் படுத்தினர்.
தேசமே சோகக் குரலில் அழுதது!
அவரது மெசேஸ் என்ன?
MY LIFE IS MY MESSAGE என்றார் அவர்.
அவரது வாழ்க்கையை – சத்திய சோதனையை – ஆழ்ந்து படிப்போம், கவனிப்போம், உணர்வோம்.
அப்போது தான் அவரது செய்தி என்ன என்பதை உணர முடியும்!
இந்த வையத்து நாட்டில் எல்லாம் விடுதலை தவறிக் கெட்டு, பாழ்பட்டு நின்ற பாரத தேசம் தன்னை வாழ்விக்க வந்த மகான் காந்திஜி!
வாழ்க நீ எம்மான்! நீவீர் காட்டிய வழி நடப்போம்.
உன்னத பாரதத்தைப் படைப்போம்!
உங்களுக்கு எமது சிரம் தாழ்ந்த உளமார்ந்த அஞ்சலி!
***
புத்தக அறிமுகம் – 74
BREAKTHROUGH TO SUCCESS

நூலில் உள்ள அத்தியாயங்கள்
CONTENTS
I SELF IMPROVEMENT
1. Thoughts Determine Your Success
2.Think Positively to Get Whatever You Want
3.Power of Positive Thought Energy
4.Auto Suggestion for Achievement
5.Every Little Helps!
6.Formula Thirteen for Success
7.Success in your Pocket
8. Success Techniques
9.The One Word That Makes The Difference Between Success And Failure!
10.In Praise of ‘If’
11.Power of Words-Use it to Make You or Mar You
12. Serendipity And How Could You Make It Work For You 13.Power of Pyramid – Use it For Your Success Part 1
14.Power of Pyramid – Use it For Your Success – Part 2
II Spiritual Growth
15. The Mind Body Connection 16. Fate and Free will
17.Power Bead That Beats Failure and Gives Wealth, Health, Success. 18.Meditation: The Power that Lifts 19.The Benefits of Meditation 20.Power of Prayer
21.God Has Never Broken Any Promise Ever Spoken!
22.Greatest Secret Of Life
23.How to Make Your Aura Bright and Divine?
24.Hypnosis Works!
25.Intuitive power of Maharishi Aurobindo
26.Intuition Through Yoga
27.Yoga for Mind Development
28.The Secret of Karma Yoga
29.The Story of the Mind 30.Zen Way For Perfect Peace and Harmony
III CREATIVITY AND INTELLIGENCE
31. Can IQ be Increased?
32.Dreams and Creativity
33.How to Unlock Your Creativity?
34.What is Memory and How You Can Increase Your Memory Power – Part I
35.What is Memory and How You Can Increase Your Memory Power – Part II
36. The wonderful and complicated organ called Brain
!V. Success tools
37. Power of Mantras
38.Power of Gayatri Mantra to Achieve All Round Success
39.The Power of Gayatri Mantra – Part II – Power of Each Syllable
40.The Power of Sound 41.Power of Music
42.Thousand names of God – The secrets of Vishnu Sahasranama Part I
43.Thousand names of God – The secrets of Vishnu Sahasranama Part II
44.Get Feng Shui – Vastu Combined Benefits!
V Book Reviews
45.Puranic Encyclopaedia by Vettam Mani
46.Gayatri Rahasya By His Holiness Shri Prabhu Ashrit Swamiji
47.Hinduism and Modernity by David Smith
48.Master Your Memory by Tony Buzan; Book Review
49.Thinking for Results
vi.REFERENCE BOOKS
*
இந்த நூலுக்குத் தக்கதொரு முன்னுரையை பாரிஸ் வாழ் அறிஞரான பேராசிரியர் பெஞ்ஜமின் லீ பா அவர்கள் தந்து கௌரவித்துள்ளார்.
அதைக் கீழே காணலாம் :
FOREWORD
You believe in positive thinking? Then this e-book will enhance your beliefs. You are a skeptic? This will convince you and convert you to positive thinking. Sure, positive thinking and optimism go hand in hand ; deeds without (positive) thoughts are seeds without life – they do not grow to bear fruits. If we think that ‘positive thinking’ is a product of the 20th century (thanks to Dale Carnegie, James Allen and or Norman Vincent Peale…), then Mr.S.Nagarajan, the author of ‘BREAKTHROUGH TO SUCCESS’ has aptly proved that it is an Indian product that existed ever since thousands and thousands of years. Saint Thiruvalluvar, the greatest Tamil poet and philosopher has allotted a chapter (Cf;fKilik) for the ‘positive thinking’. For example, in Thirukural N° 596 – Chapter 60: ‘Enthusiasm’) Saint Thiruvalluvar says,
‘உள்ளுவது எல்லாம் உயர்வுஉள்ளல் மற்று அது தள்ளினும்
தள்ளாமை நீர்த்து‘
(‘Let thoughts be always great and grand
Though they fail, their virtues stand’ – Translation: Yogi Suddhanantha Barathiar).
So, Mr.S.Nagarajan in the first chapter of his book ‘SELF IMPROVEMENT’, insists upon the importance of ‘positive thinking’ quoting Swami Vivekananda, James Allen and Buddha. The latter declared ‘We are what we think with our thoughts we make the world’. It is exactly the same kind of thinking that made René DESCARTES, the famous French mathematician and father of modern philosophy, declare ‘Cogito, ergo sum’. ( ‘Je pense, donc je suis’ French ; ‘ I think, therefore I am’ – English).
Having shown the importance of ‘positive thinking’ the ‘Breakthrough to Success’ proceeds to other related topics such as ‘Think Positively to Get Whatever You Want’, ‘Power of Positive Thought Energy’ and so on. All the fourteen chapters in this first chapter deal with ideas that help improve oneself. Here and there, the author gives great maxims in a single sentence with few and simple words. Just to quote a few:
‘…the mind can both create and cure disease’,
‘Noble thought will bring happiness’,
‘Every great journey starts with a small step’
(This can be compared to Shakespeare’s – Julius Ceasar Act I Sc III
‘Those that …make a mighty fire
begin it with weak straws’ )
Progressively Mr.S.Nagarajan develops the ways of achieving success and in chapter No. 9, he gives the one word that makes the difference between success and failure. And that word is nothing but the title – name of the 60th Chapter in Thirukural! Yes, that word is ‘enthusiasm’. That chapter ends with a quote from Emerson: “Nothing great was ever achieved without enthusiasm’. He closes the Part No. 10 with the following words: ‘Every fall is to rise again with some gain’ which reminds the famous quote from Confucius : ‘Our greatest glory is not in never falling, but in rising every time we fall‘. In the 11th chapter, the author shows that…’correct words at the right moment’ will bring success! Here what Jonathan Swift said of a true style ‘Proper words in proper places make the true definition of style’ is true and applicable to success also!
The next chapter deals with spiritual growth. The author praises the virtues of ‘rudraksha’. Though many may not agree with him but all will concord with his point of view that meditation helps improve the health both mental and physical.
The third chapter is allotted to creativity and intelligence. Here the 32nd chapter ‘Dreams and Creativity’ is interesting and instructive. To the incidents cited by the author can be added the discovery of the structure of benzene. The German scientist Friedrich August von Stradonitz, Kekulé,in 1866 tried hard but in vain to figure out the benzene structure. One night he dreamt of ‘Ouroboros’ – the serpents which bite their own tails – and solved the problem by proposing ‘hexogonal structure’. However, the scientific world had to wait Linus Pauling, the double laureate of the Nobel Prize, whose orbital hybrides theory explained in full and justified once for all, the hexagonal structure. In the light of this and other incidents cited, one has to agree with the author when he says that ‘Each and every one of us …is creative. We have to unlock the creativity hidden within ourselves’. To attain this we have to obtain self realization. This is achieved by meditation, yoga…The 34th chapter is dedicated to memory and the techniques to improve it.
The fourth chapter speaks about Success Tools – Mantras, Feng Shui and Vastu. Feng Shui and Vastu are exactly like astrology, numerology, palmistry…certain people have faith in them; others, discard them as spurious sciences or irrational. More over the informations the author gives are not at all convincing. The author exalts prayer and explains in detail its mystical power quoting from the Book of aphorisms by Narada Munivar, a well known but fictive character from the Puranas. Then he quotes Alexis Carrel, a real character, the famous French doctor and Nobel laureate: ‘Prayer generates miracles’ (The excat French version is ‘La prière est la forme d’énergie la plus puissante que l’on puisse susciter’ i.e Prayer is the most powerful form of energy one can generate). Thus Mr. Nagarajan unites the two extremes by concluding that ‘Narada explains the ultime benefits of prayer. Dr Alexis Carrel explains the power of prayer’. Just to add more value he could have quoted the poem of Lord Alfred Tennyson: “More things are wrought by prayer than this world dreams of ‘ So, no doubt prayer is the most important one to develop one’s self improvement. But alas, the author gives neither the definition of prayer nor the mode of praying! He then passes on to other less important articles such as Aura, Hypnosis… which may or may not help improve one’s self-improvement.. However, no one can deny his ascertainment that “Yoga increases the creative capacity of man in all spheres and domains of life, gives him the possibility of direct penetration into the mysteries of nature, discloses to him the secret of eternity and the enigmas of existence.” Sure, prayer and yoga will certainly boost the morale and help the self improvement.
Another chapter talks about chanting the ‘mantras’ which are to be initiated properly by a genuine Guru. Who is genuine guru? How to find him? Such questions arise but nowhere in the book the answers peep! The author then goes on to explain the power of Gayatri mantra which’ is proclaimed in the Gita as a Universal Prayer, irrespective of a person’s caste, creed or sex. It is a prayer meant to protect every individual and when uttered with immense devotion and concentration will protect the person. However proper pronunciation is a must and the person is expected to be a strict vegetarian’ (http://en.wikipedia.org/wiki/Gayatri_Mantra). How many will be eligible to fulfill these conditions? How many recite this enchanting mantra twice a day during the ‘sandhya vandhanam’? Such questions arise regarding another mantra ‘Vishnu Sahasranama’ : this being a vaishnava mantra, no saivte will recite it. How then one could expect the faithfuls of other religions to recite these mantras?
In short, the book seems to be a cocktail of many individual articles previously published in ezines of the internet. The author certainly armed with patience collected quite a number of quotations & citations and skillfully used them to support his points of view. In many places Mr. Nagarajan gives the gist of the articles in a sentence with simple words and that is his plus point. On the other hand, as the proverb says ‘too many cooks spoil the broth’, so do his innumerous lists (Formula thirteen, Frank Bettger’s list, 5o virtues/skills, 5o or more catch words … and so on!). And this is his weak point. The author, perhaps a bibliophil merits applauses because he has imbibed in so many books. Bravo!
by
(Paris) Professor Benjamin LE BEAU
*
இந்த நூலைப் பற்றிய சிறு அறிமுகக் குறிப்பு:-
Success has innumerable definitions. It is a basic human instinct to desire success. But what does success mean? People have divergent views on success, some see success as an index of material growth and others as inner peace, Strength and values. But success is a balanced blend of both. They are not mutually exclusive. The e book by Mr S. Nagarajan, on Breakthrough to success combines both the spiritual wisdom of great eastern seers like Vivekananda and the thoughts on material advancement by westerners like M. R. Kopmayer. Articles in this book are beautifully arranged in 4 chapters – Self improvement, Spiritual growth, Creativity and Iintelligence and Success tools – are a harmonious package deal for leading a successful life, both materially and spiritually. It is a ready reckoner reference book for everyone who craves to move up on the success ladder.
*
இந்த நூல் திருமதி நிர்மலா ராஜூ அவர்களால் அவரது www.nilacharal.com மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இதை (EBOOK) டிஜிடல் வடிவமாகப் பெற விரும்புவோர் www.nilacharal.com இணையதளத்தில் EBOOKS என்ற பகுதியில் AUTHOR-ஐ தேர்ந்தெடுத்தால் எழுத்தாளர் பகுதியில் ச.நாகராஜன் (61) என்ற பெயரைக் காணலாம்.
அங்கு சொடுக்கினால் ச.நாகராஜன் எழுதிய 61 புத்தகங்களின் விவரத்தைக் காண முடியும். BREAKTHROUGH TO SUCCESS நூலைப் பற்றிய சிறுகுறிப்பு, விலை விவரத்தைக் காணலாம்; அதை வாங்கலாம்.
Singapore, National Library இல் நிலாச்சாரல் வெளியீடுகள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.