
Post No. 11,316
Date uploaded in London – 2 OCTOBER 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
வணக்கம் ஐயா.
எனது பெயர் செ . மோ. நான் தமிழ்நாடு – கோ………….தில் வசித்து வருகிறேன். எனக்கு சமீபத்தில் இரண்டாவது மகன் பிறந்திருக்கிறான். அவனது பிறந்த நட்சத்திரம் சதயம்.
அவனுக்கு பெயர் வைப்பது தொடர்பாக தேடிய பொழுது, வித்தியாசமான பெயராக இருக்கிறதே என்று ‘சித்திரதன்’ எனும் பெயர் குறித்து தேடினேன்.
1. சித்திரதன் ஒரு கந்தர்வர்;
2. சனீஸ்வர பகவானுடைய மாமனார்;
3. ‘கந்தர்வர்களில் நான் சித்திரதன்’ என்று பகவத் கீதையில் விஷ்ணு கூறியது
ஆகிய மூன்று தகவல்கள் மட்டுமே கிடைத்தன.
தங்களுடைய வலைப்பக்கத்தில் சித்திரதன் பற்றி இருந்ததால் உங்களிடம் எனது கேள்விக்கு பதில் கிடைக்கும் என்று நம்பிக்கையில் இந்த கடிதத்தை எழுதுகிறேன். சித்திரதன் என்பவர் யார்?
அவரது பெயரின் அர்த்தம் என்ன?
குழந்தைக்கு இந்தப் பெயரை வைக்கலாமா?
பகவான் விஷ்ணு பகவத் கீதையில் கந்தர்வர்களில் நான் சித்திரதன் என்று கூறி இருப்பதால் சித்ரதன் என்பவர் ஒரு மகத்தானவராகத்தான் இருந்திருக்க வேண்டும். அவர் எந்த வகையில் மகத்தானவர்.
தங்களது மிகுந்த பணிச்சுமைக் கிடையில் எனக்காக உங்களது நேரத்தை கோருவதற்கு மன்னிக்கவும். தங்களுக்கு நேரம் கிடைக்கும் பொழுது பதில் எழுதவும். மிக்க நன்றி ஐயா.
இப்படிக்கு,
செ……………………….ன்.
MY ANSWER
NAME IS OKAY.
PLEASE USE CORRECT SPELLING.

சித்ரரதன் யார்?
மஹாபாரதத்தில் சித்ரரதன் பற்றி இரண்டு விஷயங்கள் வருகின்றன. இவன் கந்தர்வ இனத் தலைவன். இவன் தலைமையில் இருந்த படைகள் கௌரவர் படையைத் தாக்கவே கர்ணன் போன்ற பெருந் தலைவர்கள் உயிருக்குப் பயந்து ஓடி விட்டனர். துரியோதனனை கந்தர்வர்கள் கைது செய்தனர். அர்ஜுனன் போய் சமாதானம் பேசி மீட்டு வந்தான். ஏனெனில் சித்ரரதன் அர்ஜுனனின் நண்பன்.
கந்தர்வர்கள், ஒரு குறிப்பிட்டவகை போர்ப் பயிற்சியில் வல்லவர்கள். இசைக் கலையிலும் மன்னர்கள். அவர்களுடைய மனைவியரான அப்சரஸ் என்னும் அழகிகள் நாட்டியக் கலையில் வல்லவர்கள் ஆகவே இந்தியாவில் இசை-நடனக் கலைக்குப் பெயர் கந்தர்வ வேதம். இது ஆய கலைகள் 64-இல் ஒன்று. சிந்து சமவெளியில் கிடைத்த நாட்டியப் பெண்ணின் சிலை, கந்தர்வர் தொடர்பை உறுதி செய்கிறது.
இப்போது ஒரு சந்தேகம் எழும். தேவ லோக கந்தர்வர்களுக்கும் பூலோக கந்தர்வர்களுக்கும் என்ன தொடர்பு? இதற்கு விடை என்னவென்றால் கந்தர்வர் என்னும் சொல்லும் கின்னரர் என்ற சொல்லும் பூவுலகில் வேறு பொருள் உடைத்து. இந்தியாவில் உள்ள எல்லா ஜாதிகளும், தாங்கள் கடவுள் அல்லது தேவர்களிடம் தோன்றியதாகக் கூறும். அதாவது தேவலோகம் வேறு, அவர்களுடன் தங்களை அடையாளம் காண விழையும் பூலோக வாசிகள் வேறு. இதனைப் புரிந்து கொண்டு இரு மட்டங்களில் – இரு வேறு தளங்களில் இந்தச் சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன என்பதைத் தெளிதல் வேண்டும். தமிழ் மன்னர்கள் கூட சூரியகுலம், சந்திர குலம் என்று சொல்லி தங்களை தேவலோகத்துடன் தொடர்பு படுத்துகின்றனர்.
Xxxxxx
From one of my Posts:-
But in the Bhagavad Gita Krishna mentions Chitraratha whom we know.
Chitraratha tried to stop Pandavas on their way to Punjab, but Arjuna defeated him and later released him at the request of his wife Kumbhinasi. Chitraratha thanked him by teaching him the art of Gandharva style of warfare and gave him divine horses. This is in the Adiparva of Mahabharata. Another chief of Gandharvas, Chitrasena taught Arjuna music in the heaven where he stayed for sometime before the great war. Later it helped him to become a music teacher during the 13th year of his stay (incognito) in the forest. This is in the third section of the epic. The same section adds one more bit of information about the fight between the armies of Kauravas and the Gandharvas. Duryodhana was captured alive and Karna ran for his life. Arjuna came and released Duryodhana through his good offices with his old friend Chitraratha.
https://tamilandvedas.com › tag › க…
WRITTEN BY LONDON SWAMINATHAN. Post No. 10,636. Date uploaded in London – – 6 FEBRUARY 2022. Contact – swami_48@yahoo.com. Pictures are taken from various …
You’ve visited this page 3 times. Last visit: 31/08/22
கந்தர்வ கானம் | Tamil and Vedas
https://tamilandvedas.com › tag › க…
14 Feb 2013 — உலகத்தை முதலில் வலம் வந்தவர் யார்? கந்தனா? யூரி ககாரினா?
Swami
020 8904 2879
07951 370 697
Blog: swamiindology.blogspot.com
tags- கந்தர்வர் பெயர், சித்ரரதன்