
Post No. 11,319
Date uploaded in London – 3 OCTOBER 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
(எச்சரிக்கை ; கட்டுரையின் உள்ளே என் சுய சரிதையும் உள்ளது )
65 ஆண்டுகளுக்கு முன்பு, மதுரையில் வடக்கு மாசி வீதியிலுள்ள யாதவாஸ் ஸ்கூலில் (யாதவர் ஆரம்பப் பள்ளி) படிக்கும்போது ஒரு அசட்டுப் பிசட்டு Nursery Rhyme நர்சரி ரைம் பாடுவோம். குறிப்பாக பெண் களை நோக்கி.!.
காந்தி வந்தாராம் பூந்தி தந்தாராம்
சாந்தி தின்னாளாம் வாந்தி எடுத்தாளாம்
இப்போது அதையே கொஞ்சம் மாற்றிப்படலாம்
காந்தி வந்தாராம் நம்ம நாட்டுக்கு
சாந்தி தந்தாராம்
ஏந்தி வந்தாராம் அஹிம்சை கொள்கையை
ஏந்தி வந்தாராம்
சந்தி சந்தி இடமெல்லாம் சிலையாய் நின்றாறாராம்
சுற்றிச் சுற்றிப் பார்த்தாலும்
‘காதி’யணிந்த மக்களைக் காணவில்லையாம்.
(என்னுடைய தந்தை தினமணி வெ . சந்தானம், தினமணி ஆசிரியர் ஏ.என். சிவராமன் ஆகியோர் எப்போதும் கதர் (காதி) ஜிப்பாதான் போடுவார்கள். இப்போது ‘காதி’ மறைந்துவிட்டது.)
அப்படியென்ன காந்திஜி சேவை செய்தார்? என்போருக்கு ஓரிரு பதில்கள்.
அரசியலில் காந்தீஜி படு தோல்வி அடைந்தார். அவர் முழு zero ஜீரோ . மற்ற துறைகளில் அவர் ஒரு Hero ஹீரோ . சுய வாழ்வில் உள்ளதைச் சொல்வேன், சொன்னதைச் செய்வேன்; வேறொன்றும் தெரியாது (சினிமாப்பாடல்) என்று பாடினார் . மற்றவர்களையும் பாட வைத்தார். முதலில் ஓரிரு சம்பவங்களைப் பார்ப்போம் . அவர் படித்ததோ வக்கீல் தொழிலுக்கு; அவருக்குப் பிடித்ததோ ‘அனைவருக்கும் சம உரிமை’.
தென் ஆப்பிரிக்காவில் சம உரிமைகளுக்குப் போராடியவர்தான், இந்தியாவுக்கு வந்தவுடன் தேச விடுதலைப் போராட்டத்தில் சேர்ந்து கொண்டார்.
HAIR CUT
காந்தி, தலை முடி அதிகம் வளர்ந்ததால் ஹேர்கட்டிங் சலூனுக்குப் (Hair cutting Saloon) போனார். அங்கு முடிவெட்டும் தொழிலில் வேலை செய்த நாவிதர்கள் கறுப்பர்கள்தான். அவர்கள் காந்திஜியை உள்ளே அனுமதிக்கவில்லை. பழுப்பு நிறத் தோல் உடைய இந்தியர்களுக்கு முடிவெட்டினால், வெள்ளையர்கள் விரட்டி விடுவார்களே என்று அஞ்சி , ‘போ , போ வெளியே போ’ என்று விரட்டிவிட்டனர். அவர் என்ன செய்தார்? தனக்குத் தானே முடி வெட்டிக்கொண்டார். பின்புறம் சரியாக வெட்ட முடியவில்லை. மறுநாள் வெளியே சென்ற போது வெள்ளைக்காரர்கள் கிண்டல் செய்தனர்.
“என்ன, காந்தி ? வீட்டில் எலிகள் அதிகமோ ? ராத்திரி தின்று மென்று விட்டது போல் இருக்கிறதே” என்று. அவர் கொஞ்சமும் திருப்பித் திட்டவில்லை ; உங்கள் நாட்டு கறுப்பர்கள் கூட எனக்கு முடிவெட்டப் பயப்படுகின்றனர் என்று உண்மையைச் சொல்லி அவர்கள் வாயை மூடினார். பின்னர் எப்போதும் தனக்குத் தானே முடிவெட்டிக்கொண்டார் (நல்ல வேளை ! பிற்காலத்தில் வழுக்கைத் தலை ! முடிவெட்டும் தேவையே இல்லை )
xxx
காந்திஜி சிறை செல்வதும் வீட்டுக்குத் திரும்பி வருவதும் தென் ஆப்பிரிக்காவிலேயே துவங்கிவிட்டது. அவருக்கு மிகவும் பிடித்தது — தானே ‘தக்ளி’யில் நூல் நூற்று ஆடை நெய்வது ஆகும். இப்படி நெய்த ஆடைகளை சிறைச்சாலை அதிகாரிகளுக்கு அன்பளிப்பாகவும் கொடுத்தார்.
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண
நன்னயம் செய்துவிடல் (குறள் 314)
கெட்டது செய்த ஒருவர், வெட்கப்படும்படி, அவருக்கு நன்மை செய்து விடு — என்ற வள்ளுவன் வாக்கினை வாழக்கையில் பின்பற்றினார் .
நான் மதுரையில், மஜூரா காலேஜில் (Madura College) பி.யூ.ஸி படித்தபோது ஒரு ஆங்கிலப் பாடம் இருந்தது. அதில் படித்தது இன்றுவரை மறக்கவில்லை . அது லூயி பிஷர் Louis Fisher என்பவர் காந்திஜி பற்றி எழுதிய கட்டுரை ; அவர் சொன்னார் ; 2000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த நாட்டில் காந்திஜி மட்டும் பிறந்திருந்தால் இந்துக்கள் இவ்வளவு நேரம் அவருக்கு கோவில் கட்டி இருப்பார்கள் ; ஏனெனில் அவர் சொன்னதைச் செய்தார்; செய்ததை சொன்னார் .
Had Gandhi born in this country 2000 years ago, Hindus would have built him a temple by this time; because he practised what he preached and preached what he practised.
இது முற்றிலும் உண்மை ; இன்றைய அரசியல்வாதிகளுக்கு முற்றிலும் நேர்மாறாக அவர் வாழ்ந்தார். வள்ளுவனும் இதை ஆதரிக்கிறான்
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்படும் (குறள் 50)
உலகத்தில் நேர்மையாக வாழ்பவன் மேலுலகத்தில் உள்ள கடவுளுக்கு சமம் அல்லது கடவுள் ஆகிவிடுவான் என்பது வள்ளுவன் கண்ட உண்மை.
அரசியலில் காந்தி சொன்னதை யாரும் கேட்கவில்லை. காங்கிரஸ் கட்சியைக் கலை என்றார் ; அதைச் செய்யாததோடு அதை வைத்து இன்று பிழைப்பே நடத்துகின்றனர். பசுக்களை ரட்சியுங்கள்; இந்தி படியுங்கள் என்றார் ; அதையும் பலரும் பொருட்படுத்தவே இல்லை. பாகிஸ்தான் உண்டானால் செத்துப்போவேன் என்று உண்ணாவிரதம் இருந்தவர் பாகிஸ்தான் கொடுக்காவிட்டால் செத்துப்போவேன் என்று உண்ணாவிரதம் இருந்தார் ; ஆக அரசியலில் அவர் சொல்லுக்கு மதிப்பில்லை. 1948-ல் இறக்காமல் இன்னும் பத்து, இருபது ஆண்டுகள் வாழ்ந்திருந்தால் அவரை யாரும் மதிக்காமல், ஆஸ்ரமத்தில் வைத்து ‘கும்பிடு மட்டும்’ போட்டு வைத்திருப்பார்கள் (வினோபாஜி போல).
போகட்டும் அரசியலை மறந்துவிட்டு அவர் வாழ்ந்த விஷயங்களை மட்டும் — வாழ்ந்த முறையை –மட்டும் பின்பற்றுவோம். தேவைகளைக் குறைத்துக் கொள்ளுங்கள் என்றார் ; நாமோ அடுத்த வீட்டுக் காரனைவிட இன்னும் விலை உயர்ந்த கார் வாங்க வேண்டும் என்று நினைக்கிறோம்; சொந்தக்காரனைவிட பெரிய சொகுசு வீடு கட்டவேண்டும் என்று நினைக்கிறோம்; அந்த நினைப்பையாவது கைவிடலாமே; எளிமை என்பதை கைக்கொள்ளலாமே !

(என் வாழ்க்கையில் நடந்த ஓரிரு சம்பவங்களையும் எழுதி வைக்கிறேன் ; என் மகன் என்னைக் காரில் அழைத்துச் செல்லும்போது DAD, DAD டாட் டாட் எதிரே வரும் காரைப் பாருங்கள். இதைப் போலத்தான் வாங்க எனக்கு ஆசை; ஆனால் இது வாங்கலாமா ? அல்லது அது (வேறு ஒரு மிக உயர்ந்த காரின் பெயரைச் சொல்லி) வாங்கலாமா ? What do you think? வாட் டூ யூ திங்க் ? என்பான் ; நான் சிரித்துக்கொண்டே,’ மகனே நாலு சக்கரம்; ஒரு கூரை ; நிற்காமல் போகவேண்டும்; டப்பா கார் ஆனாலும் பரவாயில்லை’ என்பேன்.
உண்மையில் இது நடக்கவும் நடந்தது..
20 ஆண்டுகளுக்கு முன்னர்
இலங்கையின் புகழ்பெற்ற அறிஞர் (காலம்சென்ற ) பேராசிரியர் . கைலாசநாத குருக்கள் வந்திருக்கிறார் ;டாக்டர் சுவாமிநாதன் வீட்டில் தங்கியிருக்கிறார். அவரை நீங்கள் அவசியம் தரிசிக்க வேண்டும் என்று ஒரு இலங்கைத் தமிழ் அன்பர் டெலிபோன் செய்தார். அடடா, அவர் எழுதிய வட மொழி இலக்கிய வரலாறு புஸ்தகம் என் தந்தை வைத்திருந்தார். அதை இப்போதும் லண்டனில் படித்து அவ்வப்போது கட்டுரைக்கு குறிப்புகள் எடுக்கிறேன். அவசியம் சந்திக்கவேண்டும் என்று சொன்னேன். ஒரு குறிப்பிட்ட லண்டன் ஸ்டேஷன் (Underground) வாசலில் குறிப்பிட்ட நேரத்துக்கு என் நண்பர் கார் வரும் ஏறிக்கொள்ளுங்கள் என்கிறார். அப்படியே காரும் வந்தது. அது கார் அல்ல; தகர டப்பா தான் ; பத்து முறை கதவை தடால், தடால் என்று அடித்த பின்னர் மூடிக்கொண்டது ; கட்டை வண்டி வேகத்தில் சென்றது. தடால், படால் சப்தத்தோடு இலக்கை அடைந்தது; இப்போது நினைத்தாலும் ஒரே சிரிப்பு. இது போன்ற சுவையான சம்பவங்கள் இருப்பதால்தான் மனத் தொய்வு இல்லாமல் வாழ முடிகிறது. இன்னொரு சம்பவம் .
எச்சரிக்கை 2
போர் (bore) அடித்தால் மேலே படிக்காமல் நிறுத்தி விடுங்கள்
லண்டனில் க்ராய்டன் Croydon பகுதியில் தமிழர்களுக்கு கோவிலே இல்லை ; ஒன்று துவங்க வேண்டும் என்று சிலர் முடிவு செய்தனர். (இப்போது அப்பகுதியில் கோவில்கள் வந்து விட்டன ). நான் உலக இந்து மஹா சங்கம்(WHMS) , தமிழ் மரபு அறக்கட்டளை (Tamil Heritage Foundation) , லண்டன் சத் சங்கம் (LSS), சவுத் இந்தியன் சொசைட்டி (SIS) எல்லாவற்றிலும் இருந்ததால் என்னையும் அந்தக் கமிட்டியில் போட்டனர். மாதத்துக்கு இரண்டு முறையாவது சந்திப்போம் .Croydon க்ராய்டன் அதிக தூரம் என்பதால் என்னை ஒரு டாக்டர் அவருடைய மிக விலை உயர்ந்த காரில் (Luxury Car) அழைத்துச் செல்லுவார்.
அவர்கள் (Doctors) சில ஆண்டுகளுக்கு ஒருமுறை இப்படி விலை உயர்ந்த கார் வாங்கினால் வரி கொடுப்பதில் தள்ளுபடி (Tax discounts) உண்டு. ஆகையால் அவர்களுக்கு விலை உயர்ந்த காரை வாங்குவதும் ‘பழைய’ கார்களை நண்பர் – உறவினருக்கு விற்பதும் சகஜம். அது மிக விலை உயர்ந்த கார் என்பதை அறியாத நான், ஒவ்வொரு முறையும் காரின் கதவைக் கையால் இழுத்து ‘தடால்’ என்று மூடினேன். அவர் பேச்சு வாக்கில் தனது காரின் மதிப்பு , அது என்ன கார் என்றெல்லாம் கார் புராண பிரவசனம் செய்து பார்த்தார். அப்போதும் என் டியூப் லைட் (Tube light- fluorescent bulb) போன்ற மூளையில் அது ஏறவில்லை. அடுத்த முறை அவரது காரின் கதவை தடால் என்று மூடியபோது அவருக்குப் (He lost his patience) பொறுக்கவில்லை.
‘நான் சொன்னேனே; இது அல்ட்ரா மாடர்ன் (Ultra modern features) அம்சங்களைக் கொண்டது . இது ஆட்டோமேட்டிக் டோர் (automatic door). நீங்கள் இறங்கிய பின்னர் கதவைத் தொட்டாலே போதும் அது தானாகவே மூடிக்கொள்ளும்’ என்று சொன்னார் ; நான் அவரிடம் அபால்ஜிஸ் (apologies) கொடுத்துவிட்டு, என் மகனிடம் அடிக்கும் டப்பா கார் ஜோக் Joke கைச் சொல்லி ஒருவாறு மழுப்பி சமாளித்தேன் .
எளிமை வாழ்க!!
— subham —-
Tags- காந்தி, பூந்தி, முடி, நூல் நூற்றல் , என் சுய சரிதை , டப்பா கார்