எப்போதும் உன்னைக் காப்பாற்றிக் கொள் (Post No.11,325)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,325

Date uploaded in London – –    5 OCTOBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

எப்போதும் உன்னைக் காப்பாற்றிக் கொள் – அடுத்தவரை பலி கொடுத்தாவது!

ச.நாகராஜன்

 ராபர்ட் க்ரீன் எழுதியுள்ள தி 48 லாஸ் ஆஃப் பவர் (Robert Greene – The 48 Laws of Power) வெற்றிக்கான விதிகளைச் சொல்லும் புத்தகம்.

 இது சர்ச்சைக்கு உள்ளான புத்தகம்; கடுமையாக விமரிசிக்கப்பட்ட புத்தகம் – இது கூறுகின்ற வழி முறைகளால்! அமெரிக்காவில் சிறைகளில் தடை செய்யப்பட்ட புத்தகமும் கூட.

இப்போது நாம் பார்க்கப் போவது அவர் கூறும் 26வது விதி.

உன் கையைச் சுத்தமாக வைத்துக் கொள் (Keep your hands clean) என்பது அவர் கூறும் விதி.

இதில் அவர் ஒரு நீதிக் கதையை எடுத்துக் காட்டாகக் காட்டுகிறார்.

ஜீன் டீ லா ஃபாண்டேன் (Jean De La Fontaine) கூறுகின்ற கதை இது.

கதை இது தான்:

ஒரு குரங்கும் ஒரு பூனையும் நண்பர்கள். குரங்கின் பெயர் பக்(Pug). பூனையின் பெயர் டாம் (Tom).

வீட்டில் இரண்டும் செய்யும் அட்டகாசத்திற்கு அளவே இருக்காது.

குறும்புச் செயல்கள் ஏராளம். ஒரு சமயம் எரிகின்ற விறகில் செஸ்ட்நட் வேக வைக்கப்பட்டுக் கொண்டிருந்தது.

வாசனையோ வாசனை.

குரங்கிற்கு அதை சாப்பிட ஆசை. பூனை நண்பனைப் பார்த்தது. பூனையின் அழகிய கைகளை எடுத்துக் கொண்டது. “அடடா! என்ன அழகிய கைகள்!. இந்த வாசனையைப் பார்த்தாயா! இதை இந்த வீட்டுக்காரி நமக்கு தரவா போகிறார். உன் கைகளைக் கொஞ்சம் கொடேன். அதை வைத்து சடக்கென்று இதை எடுத்து விடலாம்.” என்றது.

பூனையின் கையை எரியும் விறகில் விட்டு சடக்கென செஸ்ட்நட்டை எடுத்துத் தன் வாயில் போட்டுக் கொண்டது. பூனை நெருப்புச் சூட்டால் அலறியது. அந்தச் சமயம் பார்த்து வீட்டுக்காரி அங்கே வர குரங்கு பாய்ந்து வெளியில் ஓடியது. பூனை அடி வாங்கியது.

நீதி : எப்போதும் உன்னைக் காப்பாற்றிக் கொள் – அடுத்தவரை பலி கொடுத்தாவது!

‘அரசியலில் இதெல்லாம் சகஜம்’ப்பா’ என்ற வசனம் ஞாபகத்திற்கு வருகிறதா?

 சீனாவிற்குப் போவோம். ஆயிரத்தி தொள்ளாயிரத்து இருபதுகளில் சீனாவில் உள் நாட்டுப் போரால் ஒரே அமளி. 1927இல் சியாங்கே ஷேக் ஒரு முடிவுக்கு வந்தார். எப்பாடு பட்டேனும் எல்லா கம்யூனிஸ்டுகளையும் ஒழித்துக் கட்டுவது என்ற முடிவு. கடைசி கடைசியாக ஒரு கம்யூனிஸ்டு கூட உயிரோடு இருக்கக் கூடாது என்பது அவரது லட்சியம். லேசில் இது முடியவில்லை. வருடங்கள் ஓடின.

1934-35இல் அவர்களை ஒரு வழியாகப் பிடித்து தென்கிழக்கிலிருந்து வடமேற்கிற்கு 6000 மைல்கள் நடக்க வைத்தார்.

லாங் மார்ச்! நீண்ட நடைப் பயணம். இது தாங்காமல் உயிரிழந்தனர் கம்யூனிஸ்டுகள். 1936இல் கடைசி முயற்சியாக அவர்களை ஒரேயடியாக ஒழித்துக் கட்ட நினைத்த போது பெரிய கலகம் மூண்டது.

அவரை அவரது படைவீரர்களே காட்டிக் கொடுத்து விட்டனர்.

மாஸேதுங்கிடம் மாட்டிக் கொண்டார் சியாங்கே ஷேக்.

அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

தனக்கு தூக்கு தண்டனை நிச்சயம் என்ற முடிவுக்கு அவர் வந்து விட்டார்.

அப்போது சீனாவின் பரம்பரை எதிரியான ஜப்பான் சீனா மீது போர் தொடுத்தது.

தனக்கு மரணதண்டனை தான் என்று நினைத்த ஷேக்கிற்கு ஒரு ஆச்சரியமான விஷயம் நடந்தது.

மாஸேதுங் அவரிடம் ஜப்பானிற்கு எதிரான போரில் சீனப் படைகளுக்குத் தலைமை தாங்கச் சொன்னார்.

வியப்பில் மூழ்கிய ஷேக் அந்தப் பொறுப்பை ஏற்றார். நீண்ட கொடிய போர் நடந்தது. பல வருடங்களுக்குப் பின்னர் ஜப்பானை வெல்ல முடிந்தது.

ஆனால் போர் முடிவில் ஷேக்கின் சேனை பெரும்பாலும் அழிந்து விட்டது – நீண்ட போரால்.

கம்யூனிஸ்டுகள் இந்தப் போரை நேருக்கு நேர் சந்திக்காமல் கொரில்லா முறையில் அவ்வப்பொழுது தாக்கி விட்டு மறைந்தனர்.

ஜப்பான் போர் முடிந்தவுடன் மீண்டும் இப்போது உள்நாட்டுப் போர் துவங்கியது.

படை வலிமையை இழந்த சியாங்கே ஷேக்கை மாஸேதுங் குரங்கு பூனை கையால் செஸ்ட் நட் சாப்பிட்டதைப் போல வலிமை இழந்த ஷேக்கை அகற்றி விட்டு அதிகாரத்தைக் கைப்பற்றினார்.

மாஸேதுங்கைத் தவிர வேறு யாராவதாக இருந்திருந்தால் ஷேக்கைப் பிடித்த மறுநாளே அவரைத் தூக்கிலிட ஆணை பிறப்பிக்கப்பட்டிருக்கும்.

ஆனால் மாஸேதுங் குரங்கு-பூனை நீதிக் கதையை அறிந்த கம்யூனிஸ்ட் போலும்.

எதிரியை வலிமை இழக்கச் செய்தார்; தனது அதிகாரம் நிலை பெறுமாறு அவரைப் பயன்படுத்தியும் கொண்டார்.

ஆகவே வெற்றி பெற 26வது விதி:

எப்போதும் உன்னைக் காப்பாற்றிக் கொள் – அடுத்தவரை பலி கொடுத்தாவது!.

***

புத்தக அறிமுகம் – 77 

சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள்! (பாகம் 3) 

நூலில் உள்ள அத்தியாயங்கள் 

பொருளடக்கம்

1.   மஹாத்மா காந்தியும் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பும்  

2.   அனைத்து உயரினங்களுக்கும் தாவர வகைகளும் வாழட்டும்!

3.   சுற்றுப்புறம் மாசுபடும் வகைகள்

4.   தோரோவும் இயற்கைப் பாதுகாப்பும்  

5.   டாக்ஸிக் (நச்சூட்டும்) மாசுகள்   

6.   மரம் நடுவோம்; நம்பிக்கை விதைப்போம்!  

7.   சுற்றுப்புறம் காக்க சிறிய செயலையேனும் செய்வோம்!

8.   மறு சுழற்சிப் பொருள்கள்  

9.   பூமி வெப்பமாவதைத் தடுப்போம்

10.  சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்ச்சி பெறுவோம். 

11.  பசுமைக் கட்டிடம்    

12.  மழைக் காடுகள் இனி நம்மைக் காப்பாற்றுமா?   

13.  அரிய செல்வமான அமேஸான் மழைக்காடுகள்!  

14.  கார்பன் சேமிப்பகம்   

15.  சுற்றுப்புறச் சூழல் மாசுகள் – 1   

16.  சுற்றுப்புறச் சூழல் மாசுகள் – 2   

17.  மீன் வளம் காப்போம்!

18.  சுற்றுப்புறச் சூழல் மாசுகள் ஏற்படுத்தும் கேடுகள்-1

19.  சுற்றுப்புறச் சூழல் மாசுகள் ஏற்படுத்தும் கேடுகள் 2

20.  சுற்றுப்புறச் சூழலை பாதுகாக்க எளிய வழிகள்!   

21.  நீர் ஆதாரம் காப்போம்

22.  மரங்கள் அளிக்கும் நன்மைகள்  

23.  காற்று மாசுபடக் காரணங்கள்   

24.  மரங்களின் பெருமை 

25.  மாசுக்கான காரணங்கள்    

26.  பூங்காக்களின் சேவை.

27.  ஓஸோனின் துளை   

28.  பேரழிவு அலைகளிலிருந்து காத்த மரங்கள் 

29.  நமது கடமை – நம்மால் என்ன செய்ய முடியும் – 1    

30.  நமது கடமை – நம்மால் என்ன செய்ய முடியும் – 2    

31.  சுற்றுப்புறச் சூழ்நிலை மேம்பாட்டில் நிறுவனங்களின் பங்கு  

32.  வீடுகளில் சுற்றுப்புறச் சூழ்நிலை மேம்பாடு 

33.  காடு வளர்ப்போம் கடனை அடைப்போம்    

34.  ஆபத்தில்லா ரசாயனம் க்ரீன் கெமிஸ்ட்ரி   

35.  சுற்றுப்புறச் சூழ்நிலை மேம்படுத்த உலக சுகாதார நிறுவனத்தின்       முயற்சிகள்    

37.  சுற்றுப்புறச் சூழ்நிலை மேம்படுத்த பிரசார வழிகள்

38.  சின்னச் சின்ன செயல்கள். 

39.  காட்டுச் செல்வம்

40.  வீடுகளில் மாசு அகற்றுவோம்    

* 

இந்த நூலைப் பற்றிய சிறு அறிமுகக் குறிப்பு:- 

This book contains the third part of the discussion on the topic of environmental awareness, broadcasted on All India Radio. The world is slowly being exposed to the growing dangers of global warming, and this book attempts to create awareness amongst its readers in this regard. The hundreds of essays that spread across the three books on this topic of environmental awareness and protection are not only interesting reads but also wonderful educational tools.

 புவி வெப்பமயமாதலின் தாக்கம் உலகளாவிய வகையில் வெளிப்பட்டு வருகிறது. அதற்கான விழிப்புணர்வு அனைவரிடமும் ஏற்படுத்தப்பட வேண்டிய இந்நேரத்தில் வெளிவந்திருக்கிறது இந்த முக்கியமான நூல்! சென்னை வானொலி நிலைய நேயர்களால் பெரிதும் பாராட்டப் பெற்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளின் மூன்றாம் பாகம் இது! முந்தைய பாகங்களையும் சேர்த்து நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகள் கொண்ட இத்தொகுப்பு ஒவ்வொருவரும் கண்டிப்பாகப் படித்துக் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்று!

 இந்த நூல் திருமதி நிர்மலா ராஜூ அவர்களால் அவரது www.nilacharal.com மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இதை (EBOOK) டிஜிடல் வடிவமாகப் பெற விரும்புவோர் www.nilacharal.com இணையதளத்தில் EBOOKS என்ற பகுதியில் AUTHOR-ஐ தேர்ந்தெடுத்தால் எழுத்தாளர் பகுதியில் ச.நாகராஜன் (61) என்ற பெயரைக் காணலாம்.

அங்கு சொடுக்கினால் ச.நாகராஜன் எழுதிய 61 புத்தகங்களின் விவரத்தைக் காண முடியும். சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள் பாகம் – 3 நூலைப் பற்றிய  சிறுகுறிப்பு, விலை விவரத்தைக் காணலாம்; அதை வாங்கலாம்.

Singapore, National Library இல் நிலாச்சாரல் வெளியீடுகள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

**

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: