
Post No. 11,329
Date uploaded in London – 6 OCTOBER 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
கோபம் பற்றியும் அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றியும் வால்மீகியும் , பாரதியும் மக்களை நன்கு எச்சரிக்கின்றனர். வள்ளுவனும் கோபத்தை வருணிக்கையில் சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி என்பான் .
முதலில் பாரதி சொல்லுவதைக் கேளுங்கள்
கோபத்தால் நாடியிலே அதிர்ச்சி யுண்டாம்;
கொடுங்கோபம் பேரதிர்ச்சி:சிறிய கோபம்
ஆபத்தாம்,அதிர்ச்சியிலே சிறிய தாகும்;
அச்சத்தால் நாடியெலாம் அவிந்து போகும்;
தாபத்தால் நாடியெலாம் சிதைந்து போகும்.
கவலையினால் நாடியெலாம் தழலாய் வேகும்;
கோபத்தை வென்றிடலே பிறவற்றைத்தான்
கொல்வதற்கு வழியெனநான் குறித்திட் டேனே.
வள்ளுவன் சொல்லுவதில் நிறைய விஷயங்கள் உள்ளன
சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
ஏமப் புணையைச் சுடும்.–குறள் 306
[அறத்துப்பால், துறவறவியல், வெகுளாமை]
இந்த சேர்ந்தாரைக் கொல்லி என்பது சம்ஸ்க்ருதத்தில் உள்ள மரபுச் சொற்றொடர்
ஆஸ்ரயாச: = சேர்ந்தாரைக்கொல்லி
அமரகோசம் என்னும் புகழ்பெற்ற சம்ஸ்கிருத நிகண்டில் அக்னி பகவானுக்கு உள்ள 34 பெயர்களில் ஒன்று ஆஸ்ரயாச:. இதன் பொருள் சேர்ந்தாரைக் கொல்லி என்பதாகும். அதாவது தன்னுடன் சேர்ந்தாரையும் சேர்த்து அழிப்பது அக்னி.
இது முதல் முதலில், ரிக்வேதத்தில் அக்கினி பகவான் துதியில் வருகிறது. பெற்ற தாயையே அழிப்பவன் அக்கினி பகவான் என்று அவன் சக்தியைப் போற்றுகிறது வேதம் .
அக்னி பற்றிய பாடலில் வரும் வரிகள் (ரிக்வேதம்:10—79—4)
“இந்தப் புனித விதியை உனக்குச் சொல்கிறேன். பூமியும் வானமும்; –பிறந்த குழந்தை — தந்தை, தாயையே விழுங்கிவிட்டது.
இந்தக் கடவுள் பற்றி முழுதும் நான் அறியேன். நான் சாதரண மானுடன்– ஆனால் அக்னி பகவானுக்குத் தெரியும். அவர் எல்லாம் அறிந்தவர்.”
கம்பன் இதை இன்னும் அழகாக, விரிவாகச் சொல்கிறான்.
மூங்கில் காட்டில் இரண்டு மூங்கில்கள் உராய்ந்து தீ என்னும் குழந்தையைப் பெறுகிறது. அந்த பெற்ற குழந்தை அப்பா, அம்மா மட்டும் இல்லாமல் சுற்றத்தையே அழித்துவிடுகிறது. இதுதான் சேர்ந்தாரைக் கொல்லி.
கம்பராமாயணத்தில்
மூங்கிலிற் பிறந்து முழங்கு தீ மூங்கில்
முதலற முருக்குமாப் போலத்
தாங்கரும் சினத் தீ தன்னுள்ளே பிறந்து
தன்னுறு கிளையெல்லாம் தகிக்கும்;
ஆங்கதன் வெம்மை அறிந்தவர் கமையால்
அதனையுள் அடக்கவும் அடங்காது
ஓங்கிய கோபத்தீயினை ஒக்கும்
உட்பகை உலகில் வேறுண்டோ ?
உத்தரகாண்டம் – இலவிணன் -29
XXX
இப்போது கோபம் பற்றி லெட்சுமணன் வாயிலாக வால்மீகி கூறுவதைக் காண்போம்
निर्मनुष्यामिमां कृत्स्नामयोध्यां मनुजर्षभ।
करिष्यामि शरैस्तीक्ष्णैर्यदि स्थास्यति विप्रिये।।2.21.10।।
நிர்மனுஷ்யாம் இமாம் க்ருத்ஸ்னாம் அயோத்யாம் மனுஜர்ஷப
கரிஷ்யாமி சரைஹி தீக்ஷ்ணைஹிர் தி ஸ்தாஸ்யதி விப்ரியே
मनुजर्षभ O best among men, विप्रिये against you, स्थास्यति यदि if any one stands up, इमाम् this, कृत्स्नाम् entire, अयोध्याम् Ayodhya, तीक्ष्णैः with sharp, शरैः arrows, निर्मनुष्याम् depopulate, करिष्यामि I shall do.
இந்த அயோத்தி நகரம் முழுதும் உனக்கு எதிராக நின்றாலும் என் கூரிய அம்புகளால் அவர்கள் அனைவரையும் அழித்தொழிப்பேன்.
XXX
प्रोत्साहितोऽयं कैकेय्या स दुष्टो यदि नः पिता।
अमित्रभूतो निस्सङ्गं वध्यतां बध्यतामपि।।2.21.12।।
ப்ரோத் ஸாஹிதஹஅயம் கைகேய்யா ஸஹ துஷ்டஹ யதி நஹ பிதா அமித்ர பூதஹ நிஸ்ஸங்கம் பத்யதாம் பத்யதாமபி
கைகேயியால் தூண்டிவிடப்பட்ட நம்முடைய கெட்டுப்போன தந்தையே எதிரியாக மாறினாலும் , சொந்தபந்தம் பற்றிக் கவலைப் படாமல் அவரைச் சிறைப்படுத்தி கொன்றுவிடுவேன்
कैकेय्या by Kaikeyi, प्रोत्साहितः instigated, सः that, दुष्टः vicious, नः पिता our father, अमित्रभूतः यदि becomes enemy, निस्सङ्गं without caring for any relationship, अयम् I will, बध्यताम् shall be imprisoned, वध्यतामपि also shall be slain.
கோபத்தின் காரணாமாக அயோத்தி மக்கள் அனைவரையும், தந்தையையும் கூட கொன்று குவிப்பேன் என்று முழங்குகிறான் லெட்சுமணன் !
XXXX
ராமனைக் காட்டில் சந்தித்து எப்படியாவது அவனை மீண்டும் அயோத்திக்கு அழைத்துச் சென்று ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு பரதன் பெரும் படைகளுடன் வருகிறான். ஆனால் லட்சுமணனின் கோபம் அவனுடைய கண்களை மறைக்கிறது. பரதனை எதிரி என்று நினைத்து குமுறுகிறான் . பரதனையும் படைகளையும் கொன்று, காட்டு மிருகங்களுக்கு இரையாயாக்குவேன் ; அவனுடைய அம்மா கைகேயியையும் கொல்லுவேன் என்று கொந்தளிக்கிறான்.
அயோத்யா காண்டத்தில் வரும் ஸ்லோகங்கள் இவை
अद्य पुत्रं हतं संख्ये कैकेयी राज्यकामुका।
मया पश्येत्सुदुःखार्ता हस्तिभग्नमिव द्रुमम्।।2.96.26।।
அத்ய புத்ரம் ஹதம் சங்க்யே கைகேயீ ராஜ்யகாமுகா
மயாபஸ்யேத்ஸுதுக்கார்தாஹஸ்திமக்னம்இவத்ருமம்
राज्यकामुका greedy for the kingdom, कैकेयी Kaikeyi, अद्य today, संख्ये in a battle, मया by me, हतम् slain, पुत्रम् son, हस्तिभग्नम् felled by an elephant, द्रुमम् इव like a tree, सुदुःखार्ता extremely afflicted, पश्येत् let her see.
ஒரு யானை பெரிய மரத்தை வீழ்த்துவது போல, இன்றைய சண்டையில் பரதனை வீழ்த்துவேன். அவனுடைய தாய்- பேராசைக் காரியை —சோகத்தில் மூழ்கடிப்பேன்
XXX
कैकेयीं च वधिष्यामि सानुबन्धां सबान्धवाम्।
कलुषेणाद्य महता मेदिनी परिमुच्यताम्।।2.96.27।।
கைகேயீம் ச பதிஷ்யாமி ஸானு பந்தாம் ஸபாந்தவாம்
கலுஷேன அத்ய மஹதா மேதிநீ பரிமுச்யதாம்
கைகேயியையும் அவளுடைய உறவினர்களையும் இன்று கொன்று , இந்த உலகத்தைப் பாவத்திலிருந்து விடுவிப்பேன்
सानुबन्धाम् with her attendants, सबान्धवाम् with her relations, कैकेयीं च also Kaikeyi, वधिष्यामि will slay, अद्य today, मेदिनी the earth, महता by a great, कलुषेण of the sin, परिमुच्यताम् let it be cleansed.
XXX
நான் அடக்கி வைத்த கோபம் காட்டுத் தீ போல இன்று எதிரிகளின் படைகள் மீது பாய்ந்து அவர்களை மட்டம்தட்டும் 2.96.28।।
XXX
இன்று நான் என் அம்புகளால் , எதிரிகளின் உடல்களைத் துண்டாக்கி சித்ர கூடக் காடுகளை ரத்தத்தால் தெளிப்பேன் 2.96.29।।
XXX
शरैर्निर्भिन्नहृदयान्कुञ्जरांस्तुरगांस्तथा।
श्वापदाः परिकर्षन्तु नरांश्च निहतान्मया।।2.96.30।।
शरैः with arrows, निर्भिन्नहृदयान् with hearts transfixed, कुञ्जरान् elephants, तथा and, तुरगान् horses, मया by me, निहतान् killed, नरांश्च also men, श्वापदाः also wild beasts, परिकर्षन्तु let them drag off.
சரைஹி நிர்பின்ன ஹ்ருதயான் குஞ்சரான் துரகான் ததா
ஸ்வா பதாஹா பரி கர்ஷந்து நராம் ஸ் ச நிஹாதான்மயா
என்னுடைய அம்புகள் இருதயத்தில் பாய்ந்து கிடக்கும்போது, காட்டு மிருகங்கள், என்னால் கொல்லப்பட்ட யானைகளையும், குதிரைகளையும் மனிதர்களையும் இழுத்துச் செல்லட்டும்.
Xxx
அயோத்யா காண்டத்தின் 73ஆவது சர்க்கத்தில், பரதனும் தன்னுடைய தாயாரான கைகேயீ மீது கோபக் கனலை அள்ளி வீசுகிறான். அவளைத் திட்டுவதற்கு பரதன் வாய் மூலமாக வால்மீகி பயன்படுத்தும் உவமைகளும் குறிப்பிடத்தக்கவை . என் அப்பா தசரதன் உன் அழகில் மயங்கி எரியும் கனலைக் கட்டிக்கொண்டுவிட்டானே , ஏ பாவத்தின் மூட்டையே என்று ஏசுகிறான். ராமன் மட்டும் உன்னை அம்மா என்று கருதாமல் இருந்திருந்தால் உன் கதி சகதி ஆகியிருக்கும் என்று எச்சரிக்கிறான். 27 ஸ்லோகங்களை வால்மீகி பயன்படுத்துகிறார். ஓரிரு சுலோகங்களில் மட்டும் கோபத்தைக் காண்போம் :
दुःखे मे दुःखमकरोर्व्रणे क्षारमिवादधाः।
राजानं प्रेतभावस्थं कृत्वा रामं च तापसम्।।2.73.3।।
राजानम् king, प्रेतभावस्थम् reducing to a corpse, रामं च also Rama, तापसम् as an ascetic, कृत्वा having made, मे to me, दुःखे in one sorrow, दुःखं another sorrow, (मे) अकरोः you have caused, व्रणे in the wound, क्षारम् salt, आदधाः इव like putting.
துக்கே மே துக்கம் அகரோஹோ வ்ரணே க்ஷரரம் ஆததாஹா இவ
ராஜானம் ப்ரேத பாவஸ்தம் க்ருத்வா ராமம் ச தாபஸம்
அரசனின் மரணத்துக்கும் ராமனின் சந்நியாசி வாழ்வுக்கும் நீயே காரணம். துக்கத்துக்கு மேல் துக்கங்களைக் கொண்டு வந்திருக்கிறாய்; வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிவிட்டாயே.
Xxx

குலத்தை அழிக்க வந்தவளே ! யமன் போன்ற இருளே ! எரியும் அனலைக் கட்டிக்கொள்வது என் தந்தைக்குத் தெரியவில்லையே !
कुलस्य त्वमभावाय कालरात्रिरिवाऽगता।
अङ्गारमुपगूह्य स्म पिता मे नावबुद्धवान्।।2.73.4।।
குலஸ்யத்வம் அபாவாய காலராத்ரிர் இவ ஆகதா
அங்காரம் உப கூஹ்யஸ்ம பிதா மே நாவபுத்தவான்
त्वम् you, कुलस्य family’s, अभावाय for destruction, कालरात्रिरिव like a fatal night, आगता have arrived, मे पिता my father, अङ्गारम् a live charcoal, उपगूह्य having embraced, नावबुद्धवान् did not realize.
இவ்வாறு பல இடங்களில் வால்மீகி, நமக்கு கோபத்தி ன் வேகத்தைக் காட்டுகிறார். அப்போது அவர் பயன்படுத்தும் உவமைகள் அதற்குப் பொருத்தமாகவும் அமைகின்றன.
-subam –
Tags- கோபம், சேர்ந்தாரைக் கொல்லி, சினம், வால்மீகி , பரதன், லெட்சுமணன்