ரஸவாத வித்தை கற்ற நாகார்ஜுனர்! (Post No.11334) 

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,334

Date uploaded in London – –    8 OCTOBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

 ரஸவாத வித்தை கற்ற நாகார்ஜுனர்!

ச.நாகராஜன்

 கௌதம புத்தர் தான் வாழ்ந்த காலத்திலேயே தன் சீடர்களிடம், ‘வரும் காலத்தில் நாகார்ஜுனர் என்பவர் தோன்றுவார்’ என்பதைக் கூறி அவர் பெரும் ஆசாரியராக இருப்பார் என்பதை அறிவித்தார்.

அதன் படியே பின்னால் நாகார்ஜுனர்  தென்னிந்தியாவில் அந்தணர் குலத்தில் அவதரித்தார்.

குழந்தை பிறந்தவுடன் அதன் ஜாதகத்தைக் கணித்துப் பலன் பார்க்க ஆரம்பித்தனர் பெற்றோர். ஜாதகத்தைப் பார்த்த ஜோதிடர், அதிக பட்சமாக ஏழு வருடங்களுக்கு மேல் அந்தக் குழந்தை வாழவே முடியாது என்று உறுதி படக் கூறி விட்டார். மனம் மிக வருந்தினர் பெற்றோர்.

ஏழாவது வருடம் நடக்கும் போது பெற்றோர், மகனை யாத்திரை ஒன்றை மேற் கொள்ளுமாறு  சொல்லி அவனைத் தனியே அனுப்பி விட்டனர்.

அவர்களுக்குத் தாங்கள் உயிரோடிருக்கும் போது தங்கள் மகன் உயிரற்ற சவமாய் இருப்பதைப் பார்க்கப் பிடிக்கவில்லை.

நாகார்ஜுனர் நடைப் பயணம் மேற்கொண்டு நாலந்தா மடாலயத்திற்கு வந்தார்.’

அங்கு சரகரைப் பார்த்து அவர் வணங்கினார்.

சரகர் அவரிடம், “அகால மரணமடைந்து சாகாமல் இருக்க ஒரு வழி உண்டு. உடனடியாக சந்யாசம் மேற்கொண்டால் மரணம் வராது” என்று கூறினார்.

அதற்கு இணங்கிய நாகார்ஜுனர் சந்யாசத்தை மேற்கொண்டு புத்த துறவியானார்.

அங்கேயே பல நூல்களையும் கற்றுத் தேறினார். தீவிர மந்திர ஜபத்தை மேற்கொண்டு ஜெபிக்கலானார். ஏழாவது வருடம் முடிந்த கடைசி நாளன்று அவருக்கு மரண பயம் முற்றிலுமாக நீங்கி விட்டது.

அடுத்த ஒரு வருடத்தில் அனைத்து தர்ம சாஸ்திரங்களிலும் தேறிய அவர் ஹீனயானம் மற்றும் மஹாயான சூத்ரங்களில் அபார மேதையாக விளங்கினார்.

சரகர் அவருக்கு மஹாயானத்தில் உள்ள பல ரகசியங்களை உபதேசித்தார்.

எல்லாவற்றையும் கற்றுத் தேர்ந்த நாகார்ஜுனர் சரகரிடம் விடை பெற்றுத் தன் இல்லம் திரும்பினார். பெற்றோர்களைச் சந்தித்து வணங்கினார்.

பின்னர் முழு நேரமும் மடாலயத்தில் தங்கலானார்.

பிரமிக்க வைக்கும் அற்புதங்களை அவர் தனது வாழ்க்கை முழுவதும் நிகழ்த்திக் கொண்டே இருந்தார்.

அவற்றில் குறிப்பிடத் தகுந்த சம்பவம் இது>

ஒரு முறை மகத ராஜ்யத்தில் தொடர்து கொடிய பஞ்சம் ஒன்று ஏற்பட்டு 12 வருட காலம் நீடித்தது.

சரகர் நாகார்ஜுனரை அழைத்து மடாலயத்தில் உள்ள துறவிகள் உணவுக்கு மிகவும் கஷ்டப்படுவதைச் சொல்லி ஏதேனும் செய் என்று கட்டளையிட்டார்.

நாகார்ஜுனர் யோசித்தார். அவர்களின் துன்பம் போக தங்கத்தை எப்படிச் செய்வது என்பதைத் தெரிந்து கொள்வது என்று தீர்மானித்தார்.

தங்கம் உருவாக்கும் ரஸவாதத்தில் தேர்ந்த ஒருவர் தொலைவில் உள்ள தீவில் வாழ்ந்து வருவதை அறிந்தார் நாகார்ஜுனர்.

உடனே அங்கு செல்ல விரும்பினார்.

இரண்டு சந்தன மர இலைகளை உரிய மந்திரங்களை ஜெபித்துப் பறித்தார். அந்த இலைகள் நினைத்த இடத்திற்கு ஒரு க்ஷணத்திற்குள் ஒருவரைக் கொண்டு செல்லும் ஆற்றல் உடையவை.

ஒரு இலையைத் தன் கையிலும் இன்னொன்றை தனது காலணியிலும் வைத்துக் கொண்டு புறப்பட்டார் நாகார்ஜுனர்.

கடல் வழியே சென்று ஒரு கணத்தில் நினைத்த தீவை அடைந்தார்.

அங்கு ரஸவாத நிபுணரை வணங்கி தனது நோக்கத்தைக் கூறினார்.

ரஸவாத நிபுணர் பிரமிப்புடன் நாகார்ஜுனரைப் பார்த்தார்.

கடல் வழியே ஏதோ ஒரு ரகசிய உத்தியின் மூலமாக அவர் வந்திருக்க வேண்டும் என்று ஊகித்தறிந்தார் ரஸவாத நிபுணர்.

ஆகவே நாகார்ஜுனரிடம், “சரி, இந்த ரஸவாத வித்தையை உங்களுக்குக் கற்றுத் தருகிறேன். ஆனால் நீங்கள் வர முடியாத இந்த இடத்திற்குக் கடல் வழியே வந்து சேர்ந்த ரகசிய வித்தையை அதற்குப் பதிலாக எனக்குக் கற்றுத் தர வேண்டும். சம்மதமா?” என்று கேட்டார்.

நாகார்ஜுனர் தன் கையிலிருந்த இலையைக் கொடுத்து உரிய மந்திரத்தையும் உபதேசித்தார்.

மனம் மகிழ்ந்த ரஸவாத நிபுணர் அந்த இலையை  வாங்கித் தன்னிடம் பத்திரமாக வைத்துக் கொண்டார்.

இனி நாகார்ஜுனர் அந்த இலை இல்லாமல் மீண்டும் தன் இடத்திற்குச் செல்ல முடியாது என்று நினைத்த அவர் எப்படியும் தனது தீவில் தானே அவர் நிரந்தரமாக இருக்கமுடியும் என்று நினைத்து ரஸவாத வித்தையை முற்றிலுமாகக் கற்பித்தார்.

அந்தக் கலையைக் கற்றுத் தேறிய நாகார்ஜுனர் அவரை வணங்கினார்.

தன் காலணியில் மறைத்து வைத்திருந்த இலையை எடுத்தார்.

அந்தக் கணத்திலேயே தனது இருப்பிடமான மடாலயத்திற்குச் செல்ல நினைத்தார்.

உடனே இருப்பிடம் மீண்டார்.

அங்கு ஏராளமான இரும்புத் துண்டுகளை தங்கமாக மாற்றினார்.

துறவிகளின் உணவுப் பஞ்சம் நீங்கியது. அனைவரும் மகிழ்ந்தனர்.

காலம் சென்றது.

நாலந்தாவின் தலைமைப் பொறுப்பை ஏற்றார் நாகார்ஜுனர்.

நாகாலாந்தில் புத்தரின் உபதேச மொழிகளும் சூத்திரங்களும் இருப்பதை உணர்ந்த நாகார்ஜுனர் அங்கு சென்று நாகா அரசனுக்கு நல்லுபதேசம் நல்கினார். நாகாலாந்து மக்களும் மகிழ்ந்தனர்.

புத்த சூத்ரங்கள் அனைத்தையும் அவர் மீட்டார்.

ஒரு லட்சம் செய்யுள் அடங்கிய ப்ரக்ஞான பராமிதா என்ற அந்த நூல் அனைவருக்கும் கிடைத்தது.

அவர் தனது வாழ்நாளில் பல அபூர்வ நூல்களை இயற்றினார்.

இன்றளவும் அவை உலகில் பெரிதும் போற்றப்பட்டு வருகின்றன.

நாகார்ஜுனரின் வாழ்க்கை ஏராளமான சம்பவங்களை உள்ளடக்கிய ஒன்று.

அவரது வரலாறு மிக்க சுவையான ஒன்று என்பதைச் சொல்லவும் வேண்டியதில்லை!

*** 

Tags- ரஸவாத வித்தை, நாகார்ஜுனர்,

புத்தக அறிமுகம் – 80

அறிவுக்கும் அப்பால்! 

நூலில் உள்ள அத்தியாயங்கள் 

01)       புதிய யுகம்

02)       நாம் காணும் கனவுகள்

03)       வருவதைக் காட்டும் கனவுகள்

04)       கனவுப் படைப்பாளிகள்

05)       ஒருவரே இரு இடங்களில் தோன்றுதல்

06)       இரு இடங்களில் தோற்றம்

07)       கிருஷ்ண விஜயம்

08)       டெலிபதி

09)       டெலிபதி – ஸ்டாலினின் சோதனைகள்

10)       டெலிபதி நிபுணர் – மெஸ்ஸிங்கின் அதிசய வாழ்க்கை

11)       உலகம் வியந்த மெஸ்ஸிங்

12)       மென்டல் ரேடியோ

13)       தூர திருஷ்டி

14)       அமெரிக்க நிறுவன ஆராய்ச்சிகள்

15)       தூர திருஷ்டி சோதனைகள்

16)       தொலைதூரச் சோதனைகள்

17)       விதி வெல்லுமா?

18)       மதியால் வெல்லலாம்!

19)       காலம் பற்றிய உண்மைகள்

20)       விஞ்ஞான நகரில் விந்தை சோதனைகள்!

21)       உணர்ச்சிகளையும் டெலிபதி போல அனுப்பலாம்

22)       சுவை உணர்ச்சியை அனுப்பிய செக் விஞ்ஞானிகள்

23)       மனதின் அதிசய ஆற்றல்

24)       வாங்கா டிமிட்ரோவா

25)       முடிவுரை                     

* 

இந்த நூலைப் பற்றிய சிறு அறிமுகக் குறிப்பு:-

In Western countries like Czechoslovakia, Bulgaria, Britain and America mind and the human thought process has always been a subject of research.. The fact findings of such researches are astonishing and still so much unexplored.. In this book there are 25 chapters which depicts some of the extraordinary psychological facts in a simple and lucid manner which can be easily comprehended by all.

மனம், எண்ணம் ஆகியவை பற்றிய ஆராய்ச்சிகள் ரஷியா, செக்கோஸ்லேவேகியா, பல்கேரியா, பிரிட்டன், அமெரிக்கா போன்ற பல நாடுகளில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த ஆராய்ச்சிகளில் கண்டுபிடிக்கப்பட்ட முடிவுகள் பிரமிப்பூட்டுபவை! இவற்றில் முக்கியமான பலவற்றை இந்த நூல் விளக்குகிறது. அதீத உளவியல் பற்றியும் மனம் பற்றியும் எளிய நடையில் சுவையான சம்பவங்களுடன் எழுதப்பட்டுள்ள இந்த நூலை அனைவரும் ரசிக்கலாம்.

இந்த நூல் திருமதி நிர்மலா ராஜூ அவர்களால் அவரது www.nilacharal.com மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இதை (EBOOK) டிஜிடல் வடிவமாகப் பெற விரும்புவோர் www.nilacharal.com இணையதளத்தில் EBOOKS என்ற பகுதியில் AUTHOR-ஐ தேர்ந்தெடுத்தால் எழுத்தாளர் பகுதியில் ச.நாகராஜன் (61) என்ற பெயரைக் காணலாம்.

அங்கு சொடுக்கினால் ச.நாகராஜன் எழுதிய 61 புத்தகங்களின் விவரத்தைக் காண முடியும். அறிவுக்கும் அப்பால் நூலைப் பற்றிய  சிறுகுறிப்பு, விலை விவரத்தைக் காணலாம்; அதை வாங்கலாம்.

Singapore, National Library இல் நிலாச்சாரல் வெளியீடுகள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

**

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: