
WRITTEN BY S NAGARAJAN
Post No. 11,337
Date uploaded in London – – 9 OCTOBER 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
கம்பனை முழுதும் காண முயன்ற கே.என்.சிவராஜ பிள்ளை!
ச.நாகராஜன்
கவிச் சக்கரவர்த்தி கம்பனை முழுவதுமாகக் கற்க ஒரு ஆயுள் போதாது.
தன் வாழ்நாள் முழுவதும் கம்பனைக் கற்று ஆனந்தம் அடைந்த பெரியோர் ஆயிரக் கணக்கில் உள்ளனர்.
இவர்களில் ஒருவர் கே.என்.சிவராஜ பிள்ளை (1879-1941).
இவர் திருவனந்தபுரத்தில் வாழ்ந்து வந்த தமிழ் அறிஞர். இளமை முதலே இவர் கம்பனைக் கற்று வரலானார். இவருடைய தமையனாரும் கம்பராமாயண சொற்பொழிவுகள் ஆற்றுவதில் வல்லவர். கம்பராமாயணம் குமரேசப் பிள்ளை என்று நாடு போற்ற நல்வாழ்வு வாழ்ந்தவர்.
கம்பராமாயணத்தின் பெருமையை விளக்க முயன்ற பேரறிஞர் கே.என். சிவராஜ பிள்ளை அவர்கள் கம்பராமாயண கௌஸ்துபம் என்னும் ஒரு அரிய நூலை இயற்றினார். 1927ஆம் ஆண்டு இந்த நூல் இயற்றப்பட்டது.
இதில் 422 பாக்கள் உள்ளன. கம்பனுடைய பாடல்களில் 39 பாடல்களை உதாரணத்திற்காக ஆங்காங்கே எடுத்துக் காட்டியுள்ளார். ஆக மொத்தம் 461 விருத்தப் பாக்கள் இந்த நூலில் உள்ளன.
காரைக்குடியிலிருந்து வெளியாகி வந்த குமரன் என்ற பத்திரிகையில் 1927ஆம் ஆண்டே முதல் பன்னிரெண்டு பாடல்கள் வெளியாகி உள்ளன. பின்னர் மதுரைத் தமிழ்ச் சங்க வெளியீடாக வந்த ‘செந்தமிழிழ்’ பத்திரிகையில் 28ஆம் தொகுதியில் 105 பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
முழு நூலையும் 1979இல் இவரது நூற்றாண்டு விழாவை ஒட்டி சென்னைப் பல்கலைக் கழகம் மு.சண்முகம் பிள்ளை அவர்களைப் பதிப்பாசிரியராகக் கொண்டு வெளியிட்டு ஒரு அரும் பணியை ஆற்றியது.
இந்த நூல் பத்துப் படலங்களைக் கொண்டுள்ளது.
1. முன்னுரைப் படலம் – 18 பாக்கள் – 1 -18 முடிய
2. ஆக்கியோன் படலம் – 64 பாடல்கள் – 19-82 முடிய
3. உவமைப் படலம் 23 பாடல்கள் – 83-105 முடிய
4. இயற்கை வருணனைப் படலம் 44 பாடல்கள் – 106-149 முடிய
5. கதை மக்கட் படலம் 65 பாடல்கள் – 150-214 முடிய
6. மெய்ப்பாட்டு வருணனைப் படலம் 63 பாடல்கள் – 215-277 முடிய
7. சொல், நடை, வனப்புப் படலம் 43 பாடல்கள் – 278-320 முடிய
8. புலமைத் திறன் படலம் 54 பாடல்கள் – 321-374 முடிய
9. அறவுரைப் படலம் 12 பாடல்கள் – 375-386 முடிய
10. கவி இலக்கணப் படலம் 36 பாடல்கள் – 387-422 முடிய
பேரறிஞர் சிவராஜ பிள்ளை அவர்கள் சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்த் துறையின் முதல் தலைவராக விளங்கினார்.
கம்பனின் காவியத்தில் உள்ள 1) மாதுரியம் 2) தெளிவு 3) வளம் 4) பாவிகம் (Idealisation) 5) அணி 6) இசை ஆகிய நயங்களை கவி இலக்கணப் படலத்தில் காணலாம்.
கம்பன் காவியத்தைக் கடலாகவும், விரிந்து பரந்த ஆகாயமாகவும் பிள்ளை அவர்கள் காண்பதோடு அதற்கான காரணங்களையும் விளக்குகிறார்.
கம்பன் பாவிசையைத் தேவர்களே செவி மடுக்கும் போது ஏனையோர் ஏற்றுக் கொள்வதில் என்ன வியப்பு என்று இவர் கேட்பதில் அர்த்தமுள்ளது.
கம்பனைக் கற்க விருப்பமுள்ளவர்கள் இந்த நூலையும் படித்து இவர் காட்டுகின்ற வழியில் செல்வதோடு அதற்கு அப்பாலும் சென்று ஆழ்ந்திருக்கும் கடலில் நல் முத்துக்களை எடுக்கலாம்.
**
Tag- கே.என்.சிவராஜ பிள்ளை!
புத்தக அறிமுகம் – 81

விஜயதீபம்
(சரித்திர நாவல்)
நாவலில் உள்ள அத்தியாயங்கள்
1. இரண்டு நிலவுகள்
2.மல்ல சபை
3. இவரும் மன்னரே
4. பேரரசருக்குச் செய்த பெரும் பிழை
5.பயங்கரியின் சபதம்
6. மயங்கிய மங்கை
7.குள்ளசிவத்தின் பயணம்
8.ப்ருத்விமாணிக்கம்
9.கன்னியும் காவலனும்
10. கண்களின் சந்திப்பு
11. பிட்சுவின் சதித்திட்டம்
12. பிட்சுவின் கெஞ்சல்
13. பூம்புகார் காவல்
14. பாண்டியன் தந்த பிரமிப்பு
15. பயங்கரியின் பரிசு
16. புகார் போர்
17. சிவிகைக்குள் இருந்த ஸ்படிகம்
18. பிட்சுவின் போர்க்குரல்
19. தஞ்சைப் போர்
20. நிசும்பசூதனி ஆலயம்
21. முடிவுரை
இந்த நாவலைப் பற்றிய சிறு அறிமுகக் குறிப்பு:-
The great hero Vijayalayan was the founder of the great Cholaempire He was a great emperor who built the NisumbaSudani temple of Durga Devi in Tanjore. He fought with the emperor Nrupathungavarman in the battle and proved his valour to lay down the foundation of the great Cholaempire. With this historical basis, the novel is woven with interesting and imaginary incidents in 21 chapters. The specialty of this novel is centered around Kancheepuram, Tanjore, Poompuhar, which were in full bloom during the Pallava and Chola periods with picturesque depictions.
மகத்தான சோழப் பேரரசுக்கு அடிகோலியவன் மாமன்னன் விஜயாலயன். துர்க்கைக்கு எனத் தஞ்சையில் நிசும்பசூதனி கோயிலை எழுப்பியவன். அந்த மாவீரன் பல்லவப் பேரரசனான நிருபதுங்க வர்மனைச் சந்தித்துத் தனது வீரத்தால் மாபெரும் சோழ சாம்ராஜ்யத்திற்கு அஸ்திவாரம் அமைத்ததை வரலாற்று ஆதாரங்களோடு, சுவையான நிகழ்வுகளுடன் புனைந்திருக்கும் வரலாற்றுப் புதினம். காஞ்சிபுரம், தஞ்சை, பூம்புகார் எனக், கதை நிகழும் இடங்கள் பழைய, புகழோங்கிய பல்லவ நாட்டையும் சோழ நாட்டையும் நம் கண் முன்னே கொண்டு வருகின்றன!
*
இந்த சரித்திர நாவல் திருமதி நிர்மலா ராஜூ அவர்களால் அவரது www.nilacharal.com மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இதை (EBOOK) டிஜிடல் வடிவமாகப் பெற விரும்புவோர் www.nilacharal.com இணையதளத்தில் EBOOKS என்ற பகுதியில் AUTHOR-ஐ தேர்ந்தெடுத்தால் எழுத்தாளர் பகுதியில் ச.நாகராஜன் (61) என்ற பெயரைக் காணலாம்.
அங்கு சொடுக்கினால் ச.நாகராஜன் எழுதிய 61 புத்தகங்களின் விவரத்தைக் காண முடியும். விஜயதீபம் நாவலைப் பற்றிய சிறுகுறிப்பு, விலை விவரத்தைக் காணலாம்; அதை வாங்கலாம்.
Singapore, National Library இல் நிலாச்சாரல் வெளியீடுகள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
**