
Post No. 11,343
Date uploaded in London – – 11 OCTOBER 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஹெல்த்கேர் அக்டோபர் 2022 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை
நடைப் பயிற்சியினால் அதிக நன்மை பெறுவது எப்படி?
ச. நாகராஜன்
இதய நோய் அபாயங்கள், கொலஸ்ட்ரால் அளவு கூடுதலாக இருப்பதால் ஏற்படும் அபாயங்கள், கூடுதலான ரத்த அழுத்தம், கூடுதலான உடலில் இருக்கும் கொழுப்பினால் ஏற்படும் அபாயங்கள் இவற்றிற்கு உரிய அற்புதமான தீர்வு நடைப் பயிற்சியே!
நடைப்பயிற்சி மூளையைக் கூர்மையாக வைத்திருக்கிறது. மூளைக்குச் செல்லும் இரத்தத்தை அதிகப் படுத்துகிறது. ஆகவே அல்ஜெமிர் வியாதி உள்ளிட்ட பல வியாதிகள் வருவது தடுக்கப்படுகிறது. ஒரு விஷயத்தில் முடிவை எடுப்பதில் மூளை ஆற்றலை மேம்படுத்துகிறது.
உடலில் நோய் தடுப்பு ஆற்றலை அது அதிகரிக்கிறது.
மாரத்தான் ஓட்டம் போல ஓட வேண்டாம். சாதாரணமாக சுறுசுறுப்பான நடை ஒன்றே போதும் கூடுதலாக உள்ள எடையைக் குறைத்து விடும்.
உடலில் உள்ள கலோரிகள் கரைய நடையே சிறந்த வழி.
வேகமாக நடப்பது, மலை மீது ஏறுவது உள்ளிட்டவை அதிக கலோரிகள் கரைவதை அதிகரிக்கும் என்பது உண்மை.
நடப்பதால் உடலில் உள்ள கொழுப்பும் கரைகிறது.
மனதிற்கும் உடலுக்கும் உள்ள தொடர்பு அற்புதமானது; நுட்பமானது; சிக்கலானது.
மன ஆரோக்கியம் சரியாக இல்லையெனில் உடல் ஆரோக்கியமும் சீர் கெடும். இதே போல உடல் ஆரோக்கியம் சீராக இல்லையெனில் நிச்சயமாக மன ஆரோக்கியமும் சீர் கெடும்.

ஏமாற்றம், மனச்சோர்வு ஆகியவைக்கு நடைப் பயிற்சி ஒரு அருமருந்து.
அது உடல் சக்தியைக் கூட்டும்; உற்சாகத்தைத் தரும்.
உணர்ச்சி பூர்வமாக மேம்படுவதை உடனே உணரலாம். ஆகவே தூக்கம் எளிதில் வரும்.
ஒரு வாரத்திற்கு குறைந்த பட்சமாக 150 நிமிடங்கள் நடைப் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.
உடல் தளர்ச்சியாக இருப்பதாக உணர்ந்தால் கார்போஹைட்ரேட் மற்றும் புரோடீன் சரியான அளவில் இல்லை என்று அர்த்தம்.
ஆப்பிள், பாதாம் ஆகியவற்றை அவ்வப்பொழுது சாப்பிடலாம்
பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை கடையிலிருந்து வாங்காமல், வீட்டில் அன்றாடம் தயாரிக்கப்படும் உணவு வகைகள் மிகச் சிறந்தவை.
போதுமான அளவு நீரைக் குடித்தல் அவசியம்.
நடப்பதை ஒரு சுமையாகக் கருதக் கூடாது. அதை உற்சாகம் தரும் ஒன்றாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.
உற்சாகம் தரும் இசையைக் கேட்டுக் கொண்டே நடப்பது ஒரு சிறந்த வழி.
பசுமையான இடங்களைத் தேர்ந்தெடுத்து அந்த வழியில் நடப்பது உற்சாகமூட்டும் ஒரு வழி.
இதற்கான திட்டத்தை முன்னதாகவே வகுத்துக் கொள்ள வேண்டும்.
உங்களுக்கு உற்சாகத்தைத் தரும் நண்பர்களுடன் இணைந்து செல்வது நல்ல ஒரு வழியாகும்.
இது பழக்கமாக ஆகி விடும் போது ஏராளமான நன்மைகள் ஏற்படுவது கண்கூடு.
முடிந்தால் நடப்பவர்கள் அனைவரும் இணைந்து குழுவாக அமைந்து நடைப் பயிற்சியை மேற்கொள்ளலாம்.
சார்ஜ் வாக் (Charge Walk) புதிதாக ஏற்பட்டிருக்கும் ஒரு நடைமுறை.
மூவ் (MOVE) போன்ற ஆப்ஸ்களை நீங்கள் டவுன் லோட் செய்து கொள்ளலாம்.
நடைப்பயிற்சி என்பதோடு சில கூடுதலான எளிய உடல் பயிற்சிகளையும் இணைத்துக் கொண்டால் அது அற்புதமே.
இந்த ஒரு செலவில்லாத எளிய பயிற்சி உங்களை மனிதரிலிருந்து சூப்பர்மேனாக ஆக்குவது நிச்சயம்!
வியாதி வந்து அதைத் தடுப்பதை விட வியாதியே வராமல் செய்யும் ஒரு வழிமுறை நமக்கு மிக நல்லதல்லவா!
இனி சில முக்கியமான ஆய்வுகள் நடைப் பயிற்சி பற்றி கண்டறிந்துள்ள முடிவுகளைப் பார்ப்போம்.
1) ஹார்வர்ட் ஆய்வாளர்கள் மரபணு பற்றிய ஒரு ஆய்வை நடத்தினார்கள். உடல் எடையை அதிகரிக்கும் 32 மரபணுக்கள் பற்றிய ஆராய்ச்சி அது. 12000 பேர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். அதில் கண்டுபிடிக்கப்பட்ட அதிசயமான முடிவு என்னவெனில் ஒரு நாளைக்கு அரைமணி நேர நடைப்பயிற்சியை மேற்கொண்டிருப்போருக்கு அந்த எடைகூட்டும் மரபணுக்கள் பாதியாகக் குறைந்து விடுகிறது என்பது தான்!
2) எக்ஸடர் பல்கலைக்கழகம் (Univiersity of Exeter) ஒரு நாளைக்கு 15 நிமிடம் நடைப் பயிற்சியை மேற்கொள்வது சாக்லட் சாப்பிட வேண்டும் என்ற உணர்வை பாதியாகக் குறைக்கிறது என்று தனது ஆய்வு முடிவைச் சொல்கிறது! நடப்பதானது இனிப்பான உணவுப் பொருள்களை உண்ண வேண்டும் என்ற ஏக்கத்தைக் குறைக்கிறது.
3) அமெரிக்க கான்ஸர் சொஸைடி ஒரு ஆய்வை மார்பகப் புற்று நோய் சம்பந்தமாக நடத்தியது. பெண்மணிகள் யாரெல்லாம் வாரத்திற்கு 7 மணிகள் அல்லது அதற்கு மேலும் நடக்கிறார்களோ அவர்களுக்கு 14 சதவிகிதம் மார்பக புற்றுநோய் சம்பந்தமான அபாயம் குறைகிறது என்ற முடிவைச் சொல்கிறது அந்த ஆய்வு.
4) பல ஆய்வுகள் யாரெல்லாம் வாரத்திற்கு ஐந்து முதல் ஆறு மைல்கள் நடைப் பயிற்சியை மேற்கொள்கிறார்களோ அவர்களுக்கு மூட்டு வலி வருவதில்லை என்பதைக் கண்டறிந்துள்ளன. நடைப்பயிற்சி மூட்டுகளை வலிமைப் படுத்துகிறது. குறிப்பாக இடுப்பு, முழங்கால் மூட்டு இவற்றின் வலிமை கூடுகிறது.
5) ப்ளூ, ஜலதோஷம் ஆகியவை அதிகமாகப் பரவும் பருவ காலங்களில் தினமும் நடப்பவர்களை அது அதிகம் பாதிப்பதில்லை. இயல்பாகவே அவர்களுக்கு நோய் தடுப்பாற்றல் கூடுகிறது என்பதே உண்மை. ஒரு வேளை அவர்கள் நோய்வாய்ப்பட்டாலும் கூட உடனடியாக நிவாரணம் அடைகிறார்கள்.
இவை அனைத்தும் நடைப் பயிற்சியின் மூலமாக ஒவ்வொருவரும் பெறும் நன்மைகளாகும்.
நடப்போம்; நல்ல ஆரோக்கியமான வாழ்வை வாழ்வோம்!
***
புத்தக அறிமுகம் – 83
உலகின் பிரபல சின்னத்திரை சீரியல்கள்

பொருளடக்கம்
நூலில் உள்ள அத்தியாயங்கள்
01.அதிரடிப் பெண்மணிகளின் அட்டகாச சீரியல்!
02.எப்படிப் படம் எடுக்கிறார்கள்?
03.சிரித்து மகிழ மிஸ்டர் பீன்
04.தொலக்காட்சியைப் பார்க்க விடாதீர்கள்!
05.பாண்ட், ஜேம்ஸ்பாண்ட், கலக்கறய்யா, கலக்கறே!
06.உலகைச் சிரிக்க வைக்கும் எலியும் பூனையும்!
07.ஸ்டார் வார்ஸ் – புதிய தொடர் வருகிறது!
08. உலகைக் கலக்க வைக்கும் ஸ்பைடர்மேன்
09.இரண்டு திரைகளிலும் மின்னும் ஒரே
சூப்பர் ஸ்டார் ஜாக்கிசான்
10. பிரமிக்க வைக்கும் கின்னஸ் உலக சாதனைகள்
11.’பார்முலா ஒன்’ பார்க்காத கண் என்ன கண்ணே!
12.உயிரைப் பணயம் வைத்து எடுத்த அதிசயத் தொடர்!
13.அற்புதம், அதிசயம், அமானுஷ்ய சக்தி படைத்த ஹீரோஸ்!
14.ரெஸில்மேனியா! ரெஸில்மேனியா! ரெஸில்மேனியா!
15. அபாய இடங்களிலிருந்து தப்பிக்கும் உண்மையான
ஒரே சூப்பர்மேன்!
16. உலக அழகி 2007 யார்?
17.கொஞ்சம் சிணுங்கல், கொஞ்சம் சீண்டல், கொஞ்சம் சீறல்!
18.மீண்டும் தொலைக்காட்சிக்கு வரும் பெரிய்..ய்..ய
கவர்ச்சி மங்கை!
19.நம்பினால் நம்புங்கள், நம்பாவிட்டால் இந்தத் தொடரைப்
பாருங்கள்!
20.சானியா மேனியா!
21.தொ(ல்)லைக் காட்சியைக் கண்டுபிடித்தவர்
22.அச்சமற்றவருக்கு ஐம்பதினாயிரம் டாலர் பரிசு!
23.நிஜங்களைக் காட்டும் நிழல் காட்சிகள்
24.நிழலுக்குப் பின்னால் உள்ள நிஜங்கள்
25.அம்பத்திஅஞ்சு வருஷமா நடக்கும் ஒரே சீரியல்!
26.டிவியில் தொடங்கி விசுவரூபம் எடுத்தவர்கள்!
27.அக்கரையிலும் ஒரு தசாவதாரம் – பென் டென்!
*
நூலைப் பற்றிய சிறு குறிப்பு இது:
Television serials are ever on the increase and this interesting book discusses the famous television serials inciting a longing for more of such good ones, a book that will be surely relished by avid television watchers.
நாளுக்கு நாள் உலகெங்கிலும் உள்ள தொலைக்காட்சி நிலையங்கள் பல்வேறு ரசனையான தொடர்களை ஒளிபரப்பி வருகின்றன. உலகின் பிரபலமான சின்னத்திரை சீரியல்களைச் சுவைபட விளக்கும் இந்த நூல், நம் தமிழ்த் தொலைக்காட்சிகள் எப்பொழுது இப்படிப்பட்ட சீரியல்களையெல்லாம் வழங்கப் போகின்றன எனும் ஏக்கத்தைத் தோற்றுவிக்கிறது. மீண்டும் மீண்டும் ஒரேவிதமான கதைத்தொடர்களையே அலுக்காமல் பார்த்துக் கொண்டிருக்கும் நம் வீட்டுப் பெண்மணிகளுக்குப் பரிசளிக்கவும் அவர்களின் ரசனைத் தரத்தை உயர்த்தவும் ஏற்ற நூல்!
*இந்த நூல் திருமதி நிர்மலா ராஜூ அவர்களால் அவரது www.nilacharal.com மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இதை (EBOOK) டிஜிடல் வடிவமாகப் பெற விரும்புவோர் www.nilacharal.com இணையதளத்தில் EBOOKS என்ற பகுதியில் AUTHOR-ஐ தேர்ந்தெடுத்தால் எழுத்தாளர் பகுதியில் ச.நாகராஜன் (61) என்ற பெயரைக் காணலாம்.
அங்கு சொடுக்கினால் ச.நாகராஜன் எழுதிய 61 புத்தகங்களின் விவரத்தைக் காண முடியும். ‘உலகின் பிரபல சின்னத்திரை சீரியல்கள்’ நூலைப் பற்றிய சிறுகுறிப்பு, விலை விவரத்தைக் காணலாம்; அதை வாங்கலாம்.
Singapore, National Library இல் நிலாச்சாரல் வெளியீடுகள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
**