கேரள வெஜிட்டேரியன் முதலையும் மஹாபாரத முதலையும் (Post No.11,348)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,348

Date uploaded in London – 12 OCTOBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

 Xxx

கேரளத்திலுள்ள  ஒரு கோவில்குளத்தில் வசித்த சைவ (வெஜிட்டேரியன்) முதலை பபியா (Babia) இறந்த செய்தி நாட்டு மக்களின் கவனத்தைக் கவர்ந்துள்ளது. கோவில் பிரசாதத்தை மட்டுமே சாப்பிட்டு 70 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்த இந்த முதலை  பற்றிய செய்தி எல்லா முக்கிய பத்திரிகைகளிலும் வெளியாகியுள்ளது. இதன் பின்னணியைப் பார்ப்போம்.

தவறு செய்யும் மனிதர்கள் மிருகங்களாகப் பிறப்பார்கள் என்று மநு நீதி நூல் (Manu Smrti)  கூறுகிறது. என்ன என்ன தவறுக்கு என்ன என்ன பிறப்பு என்ற ஒரு பெரிய பட்டியலையும் (Manu 12-54 to 12-70) தருகிறது. மஹாபாரத முதலைக் கதைகளும் இது உண்மைதான் என்று விளம்புகிறது. முதலில் மஹாபாரத முதலைக் கதையைப் பார்ப்போம்.பின்னர் மனு ஸ்மிருதி ஸ்லோகங்களைக் காண்போம் .

மஹா பாரதக் கதை ஆதி பர்வத்தில் வருகிறது. பிராமணர்களுக்கு யாரும் தீங்கு செய்யக்கூடாது என்று  புறநானுற்றுப் புலவர் ஆலத்தூர் கிழாரும் (பாடல் 34- பார்ப்பார் தப்பிய கொடுமையோர் )எச்சரிக்கிறார். இது தெரியாமல் ஐந்து தேவ லோக அழகிகள்,  ஒரு பார்ப்பனனைக் கிண்டல் செய்து முதலைகள் ஆன கதை மிகவும் சுவையானது.

அப்சரஸ் என்னும் தேவ லோக அழகிகள் வர்கா, லதா, சமீச்சி , சவுரபேயி , புத்புதா  ஆகிய ஐந்து பேரும் குபேரன் வீட்டுக்குப் போய்க்கொண்டு இருந்தனர். வழியில் ஒரு பிராமணன் ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட்டிருந்ததைப் பார்த்தார்கள் . இளிச்சவாயனைக் கண்டால் எருதும் மச்சான் முறை கொண்டாடும்  என்பது தமிழ்ப் பழமொழி. ஆகையால்  சேட்டை மிகுந்த இந்த அழகிகள் அவருடைய தியானத்தைக் கலைப்பதற்காக பாடினர், ஆடினர் ; குப், குப் என்று அட்டஹாசச் சிரிப்பு சிரித்தனர். பிராமணர் விழித்தார். குணம் என்னும் குன்றேறி நினறவர்க்கு வெகுளி கணமேயும் காத்தல் அறிதன்றோ ?( வள்ளுவன் குறள் ) ஆகையால் பிடி சாபம் ; நீங்கள் ஐந்து பேரும் ஐந்து ஆண் முதலைகளாக 100 ஆண்டுகளுக்கு வசிக்கக்கடவது என்று சாபமிட்டார் . அப்போதுதான் அந்தப் பெண்கள் விளையாட்டு வினையானது என்பதை உணர்ந்தனர். உடனே கெஞ்சிக் கூத்தாடி சாப விமோசனம் கேட்டனர்.

இந்துமதத்தில் ஒரு பிரம்மாண்டமான உண்மை உள்ளது; அதாவது சத்தியம்தான் கடவுள் (God is Truth; Truth is God) ; அதை கடவுள்களாலும் மீற முடியாது. இதை எல்லாக்  கதைகளிலும் காணலாம். சொன்னது சொன்னதுதான். அதை வாபஸ் பெற முடியாது; ‘ஜகா’ வாங்க முடியாது. ஆனால் கொஞ்சம் தளர்த்தாலாம் .

சரி போ; ஒரு பெரிய  வீரன் வருகையில் நீங்கள் அவனைத் தாக்குங்கள்; அவன் உங்களுக்குச் சாப விமோசனம் கிடைக்கச் செய்வான் என்றார் அந்தப் பார்ப்பனர்.

பெண்கள் அழுதுகொண்டே நின்றபோது நாரதர் அந்தப் பக்கம் வந்தார். அவர்தான் திரிகால ஞானி ஆயிற்றே ; அவர் சொன்னார்; அஞ்ச வேண்டாம் அழகிகளே ; அர்ஜுனன் என்னும் மாவீரன் 13 ஆண்டுக் கால வனவாசம் அனுபவிக்கின்றான். அவன் இந்தக் குளத்திற்கு வந்து உங்களை விடுவிப்பான் என்று ஆறுதல் பகன்றார்.

அவர் செப்பியது போலவே அர்ஜுனனும் ஒரு காலத்தில் அவர்கள் வசித்த குளத்திற்கு அருகில் வந்தான்.; யாரையும் காணவில்லை ; அற்புதமான அழகுமிக்க இந்தக் குளத்திற்கு யாரும் குளிக்க வரவில்லையே; நான் மட்டும் போகலாமா என்று யோசித்துக் கொண்டு இருந்த காலையில் ஒருவர் வந்து சொன்னார். இந்தக் குளத்தில் மனிதர்களைத் தின்னும் அதிபயங்கர முதலைகள் (Man eating Crocodiles)  வசிக்கின்றன. ஆகையால் பிராமணர்கள் அனைவரும் ஓடிப் போய்விட்டார்கள் என்று. அதைக் கேட்டவுடன் அர்ஜுனன் குளத்தில் பாய்ந்தான்; பிராமணர்களை விரட்டிய முதலைகளை நான்  ஒரு கை பார்க்கிறேன் என்று சொல்லி குளத்தில் இறங்கினான்.

உடனே ஐந்து முதலைகளும் அவன் மீது பாய்ந்தன. அர்ஜுனன் அவைகளை விரட்டி வெற்றி பெற்றான். அபோது வர்கா என்னும் பேரழகி,  முதலை உருவத்தைவிட்டு,  மீண்டும் அழகியாக அர்ஜுனன் முன்னிலையில் நின்றாள்; வியப்புடன் வினவினான் அர்ஜுனன் : ‘மடக்கொடியே, யார் நீ’  ? உடனே அவள் பிராமண சாபம், பார்ப்பார் தப்பிய கொடுமை எல்லாவற்றையும்  விரித்துரைத்தாள் . சாப விமோசனம் பெற்ற ஐந்து அழகிகளும் தேவலோகம் ஏகினர் .

பின்னொரு காலத்தில் அர்ஜுனன், மாதலி என்பவன் ஒட்டிய ஸ்பேஸ் ஷட்டிலில் Space Shuttle – (விண்வெளிக்குச் சென்றுவிட்டுத் திரும்பும் ராக்கெட்) — இந்திர லோகம் சென்றான். அவன் செய்த விண்வெளி பயணம் பற்றிய கதை மகா பாரத வன பர்வத்தில் உள்ளது . அப்படிச் சென்ற போது ஐந்து தேவ லோக அழகிகளும் அர்ஜுனனை அடையாளம்   கண்டு கொண்டனர் ; உடனே செய் நன்றி மறவாமல் அர்ஜுனனுக்காக ஸ்பெஷல் டான்ஸ் ஷோ Special Dance showஏற்பாடு செய்து ஆடிப்பாடி மகிழ்வித்தனர்.

XXX

கழுகாகப்  பிறக்கும் பிராமணன்

தவறு செய்தவர்கள் கொடூரமான மிருகங்களாகப் பிறப்பார்கள் என்பதை மஹாபாரதம் பல இடங்களில் காட்டுகிறது. உலகில்  முதல் சட்டப் புஸ்தகம் எழுதிய மனுவும் இதைப் பல இடங்களில் பகர்கிறார். அவர் செப்பிய சில விஷயங்களை மட்டும் காண்போம்.

ஒரு பிராமணன், யாகத்துக்காக , பூஜைகளுக்காக பணத்தை வசூலித்துவிட்டு அதை வேறு விஷயங்களுக்காகப் பயன்படுத்தினால் அவன் காகம் அல்லது கழுகாகப் பிறந்து ‘கண்டது கடையதுகளைச்’ சாப்பிடுவான் என்கிறார் மநு .

திருக் கழுகுக் குன்றத்துக்கு வந்து, கோவில் பிரசாதத்தை மட்டும் சாப்பிட்டு இப்போது மறைந்து போன கழுகுகளும் இப்படிப்பட்ட பாவம் செய்த்த பிராமணர்களே என்பது எனது துணிபு. மாதா  கோவில் நாயும் மடத்து நாயும் என்ற கட்டுரையில் புனித இடங்களை மட்டுமே நாடிய இரண்டு நாய்க் கதைகளையும் கொடுத்துள்ளேன். அவைகளும் ஏதோ பாபம் செய்து விமோசனம் பெற வந்த பாவாத்மாக்களாக இருக்கலாம்.

xxxx

யார் மிருகங்களாய் பிறப்பார்கள் மனு சொல்கிறார்

பாம்புபல்லிபன்றிநாய்கழுதையாக யார் பிறப்பர் ?- மநு தரும் பட்டியல் (Post.7945)

மநு நீதி நூல் – பகுதி   51

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7945

Date uploaded in London – 9 May 2020   

மானவ தர்ம சாஸ்திரம் என்றும், மனு ஸ்மிருதி என்றும் அழைக்கப்படும் மநு நீதி நூலின் கடைசி அத்தியாயத்துக்கு – 12 ஆவது அத்தியாயத்துக்கு–  வந்துவிட்டோம். மொத்தமுள்ள 2685 ஸ்லோகங்களில் இன்னும் 126 பாடல்களே மீ தி உள்ளன. அவற்றில் 72 ஸ்லோகங்களை இன்று காண்போம். கடைசி இரண்டு மூன்று அத்தியாயங்கள் பிரமாணர்களுக்கானது. ஆயினும் சில விஷயங்கள் பொதுவானவை. முதலில் Bullet Points புல்லட் பாயிண்டுகளில் சில சுவையான விஷயங்கள்.

இதில் மனு பயன்படுத்தும் சில சொற்களுக்கு எவருக்குமே அர்த்தம் தெரியவில்லை.12-63, 12-64ல் பல பிராணிகளின் பெயர்களைச் சொல்கிறார். ‘அதில் தைல பாக’ என்ற உயிர் ஜீவனை ஒருவர் கரப்பான் பூச்சி என்பார். இன்னொருவர் பறவையோ பறக்கும் பிராணியோ என்பார் . அப்படியே மொழி பெயர்த்தால்  எண்ணெய்க்  குடியன் (oil drinker) என்று பொருள் வரும். இதை வைத்து சில வியாக்கியனக்காரர்கள், பாஷ்யக்காரர்கள் இதை ‘எண்ணெய் சாப்பிடும் பிராணி’ என்பர். மனுவின் நூல் எவ்வளவு பழமையானது என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம். பாபிலோனிய ஹமுராபிக்கும் முன்னர், உலகின் முதல் சட்டப் புத்தகம் எழுதிய வித்தகன் மனு என்று நான் இதுவரை 11 அத்தியாயங்களில் பல உதாரணங்களைக் கொடுத்துளேன்.

எலியாகநாயாககழுதையாகபன்றியாக பிறப்பவன் யார்?

இந்த அத்தியாயத்தில்  மநு முக்கியமாக கதைப்பது எந்த வகை பாவங்கள் செய்வோர் என்ன வகை பூச்சிகளாக , பிராணிகளாகப் பிறப்பர் என்னும் நீண்ட பட்டியலாகும் . மனிதர்கள் பிராணிகளாகவும், பிராணிகள் மனிதர்களாகவும் பிறக்க முடியும்; பேய்களாகத் திரிய முடியும் என்பார் மனு. இதை நாம் பல புராணக் கதைகளிலும் காண்கிறோம்.

என் கருத்து –

இதில் புரியாத பல சம்ஸ்கிருத சொற்களை மநு பயன்படுத்துவது நகைச்சுவைப் (humour)பகுதி என்றே நான் கருதுகிறேன். ‘பின்பக்க ஆசன வாயில் கண் இருக்கும் பேய்’ என்பதெல்லாம் JOKE ‘ஜோக்’ என்றே சொல்ல வேண்டும். தங்க நகைத் திருடன் பொற்கொல்லனாகப் பிறப்பான் என்று சொல்கிறார். அப்படியானால் பொற்கொல்லர் ஜாதியே பிராணிகளுக்கு நிகராக வந்துவிடும். இதையெல்லாம் அப்படியே பொருள் கொள்ளாது அதன் பின்னுள்ள அர்த்ததை புரிந்து கொள்ள வேண்டும். ஒரு பொற்கொல்லன் கோவலனுக்கு அநியாயமாக மரணதண்டனை வாங்கிக் கொடுத்ததற்க்காக ஆயிரம் பொற்கொல்லர்களை பாண்டியன் தீயில் எரித்துக் கொன்றான் என்று சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகள் சொல்கிறார். இதை அப்படியே பொருள் கொள்ளாது அவர்களைத் தண்டித்தார் என்று பொருள் கொள்வதே சாலப்பொருத்தம். அதே கொள் கையை மனுவிலும் பின்பற்றுக.

****

12-54 முதல் பாவாத்மாக்கள் எந்தப் பிராணியாக பிறப்பர் என்னும் பட்டிய ல்

12-61 பொற்கொல்லரும் பிராணிகள் பட்டியலில்! சிலர் இதை தட்டாரப் பூச்சி என்பர்

12-59, 12-60, 12-71 , 12-72 பேய் வகைகள்

மனு ஸ்ம்ருதி 12-55 முதல் 12-70 வரை

பிராமணனைக் கொன்றால் – நாய், பன்றி, கழுதை , ஒட்டகம், பசு, ஆடு வன விலங்கு, பறவை அல்லது சண்டாளனாகப் பிறப்பார்கள் .

மதுபானம் குடிக்கும் பிராமணன் – –புழு, பூச்சி, மலம் தின்னும்  வண்டுகள், பறவைகள்

திருட்டுப் பிராமணன்— ஆயிரம் பிறவிகளில் சிலந்தி, பாம்பு, பல்லி கடல் பிராணிகள் அல்லது வன்செயல் செய்யும் பேய்கள்

ஆசிரியரின் மனைவியைப் புணரும் மாணவன்– புல் , பூண்டு, கொடியவன், மிருகங்கள்

தூய்மையற்ற உணவைச் சாப்பிடும் பிராமணன் — புழுக்கள்

மாற்றான் மனைவியைப் புணரும் பிராமணன், திருடும் பிராமணன்- பிரம்ம ராக்ஷஸ் , அதாவது பிராமணப் பேய்  ஆகப் பிறப்பார்கள் .

ரத்தினங்களைத் திருடும் பிராமணர்கள் பொற்கொல்லர் ஆகப்   பிறப்பார்கள் .

தானியத் திருடர்கள் == எலிகள்

பித்தளை பாத்திரத் திருடர்கள் – வாத்து

தண்ணீரைத் திருடினால் – நீர் வாழ் பிராணிகள்

தேனைத் திருடினால்- கொட்டும் பூச்சி

பாலைத் திருடினால்- காகம்

வாசனைத் திரவியங்களைத் திருடினால்-  நாய்

வெண்ணெய் திருடினால்-  கீரி

மாமிசம் திருடினால்– கழுகு

இப்படி பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. அடுத்து வரும் ஸ்லோகங்களில் 10 அல்லது 15 பிராணிகளின் பெயர்கள் வருகின்றன.

இதில் நாம் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது நீர் வாழ் பிராணிகள். அதில் முதலையும் அடக்கம்

இப்போது 10ம் தேதி வந்த செய்தியைத் தருகிறேன்

இதைப்படித்துவிட்டு கேரள முதலை பபியா (Crocodile Babia) வாழ்க்கையைப் படித்தால் நன்றாக விளங்கும்

xxxx

கேரளாவில் 75 ஆண்டுக்கும் மேலாக கோயில் குளத்தில் வசித்த பபியா முதலை மரணம்: பல்வேறு கட்சியினர், பக்தர்கள் அஞ்சலி

10-10-2022

திருவனந்தபுரம்: கேரளாவில் 75 ஆண்டுக்கும் மேலாக கோயில் குளத்தில் வசித்து, பிரசாதத்தை மட்டுமே தின்று வளர்ந்த பபியா முதலை மரணமடைந்தது. கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் உள்ளது கும்பளா கிராமம்.  இது கர்நாடக மாநில எல்லையில் உள்ள பகுதியாகும். இங்கு பிரசித்தி பெற்ற  அனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் உள்ளது. குளத்தின் நடுவே கோயில்  அமைந்துள்ளது சிறப்பம்சமாகும். இந்த குளத்தில் கடந்த 75 வருடங்களுக்கு  மேலாக பபியா என்ற ஒரு முதலை வசித்து வந்தது. காலையும், மதியமும் கோயிலில் பூஜை முடிந்த பிறகு  பூசாரி வழங்கும் பிரசாதமான அரிசி சாதத்தை மட்டுமே முதலை சாப்பிடும். இந்த குளத்தின் வடக்கு  பகுதியில் 2 குகைகள் உள்ளன. பகல் நேரங்களில் இந்த குகைக்குள் தான் இந்த  முதலை இருக்கும்.இந்த முதலையை பார்ப்பதற்காக தினமும் ஏராளமான  பக்தர்கள் கோயிலுக்கு வருவது வழக்கம்.

கோயில் நடை திறந்திருக்கும் வரை முதலை  குளத்தை விட்டு வெளியே வராது. நடையை சாத்திவிட்டு அனைவரும் சென்ற பிறகு  தான் வெளியே வரும். ஆனாலும் குளத்தை ஒட்டியுள்ள இடத்தை விட்டு வேறு எங்கும்  செல்லாது. இந்த  நிலையில் இந்த பபியா முதலை நேற்று அதிகாலையில் குளத்தில் இறந்த நிலையில்  காணப்பட்டது. உடனடியாக கோயில் பூசாரிகள் சேர்ந்து முதலையின் உடலை வெளியே  எடுத்து கோயில் நடை முன் வைத்தனர். தகவல் அறிந்ததும் காசர்கோடு  எம்பி ராஜ் மோகன் உண்ணித்தான், எம்எல்ஏக்கள் அஷ்ரப், என்.ஏ.நெல்லிகுன்னு,  பாஜ மாநில பொதுச்செயலாளர் ஸ்ரீகாந்த் உள்பட ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு  சென்று அதன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் கோயில்  வளாகத்திற்குள்ளேயே முதலை அடக்கம் செய்யப்பட்டது. நேற்று மதியம் வரை  கோயிலில் எந்த பூஜைகளும் நடத்தப்படவில்லை. ஒரு முதலைக்காக இறுதி சடங்கு  நடத்தப்படுவதும், பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதும் இதுவே முதல்முறை ஆகும்.

* கடந்த 1945ம் ஆண்டு ஆங்கிலேயர்கள் குளத்தில் இருந்த ஒரு முதலையை சுட்டுக் கொன்றதாகவும், மறுநாளே இந்த பபியா முதலை அந்த குளத்தில் திடீரென தோன்றியது (Mysterious Appearance)  என்றும் நம்பப்படுகிறது.

* கோயில் பூசாரி அரிசி சாதத்துடன் குளத்தின் கரைக்கு சென்று பபியா என்று அழைத்தவுடன் பாய்ந்து  வந்து உணவை  சாப்பிட்டுவிட்டு மீண்டும் குளத்திற்குள் சென்று விடும்.  குளத்தில்  கிடக்கும் மீன்களை கூட பபியா முதலை சாப்பிடாது.

புரியாத புதிராகவே வாழ்ந்து மறைந்த பபியா முதலை”! – அப்படி என்ன ஸ்பெஷல்!

கேரளாவில் சைவ முதலையான பபியா மறைவு அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலத்தில் அமைந்துள்ள காசர்கோடு. இந்த மாவட்டத்தில் புகழ்பெற்ற அனந்தபத்மநாப சுவாமி ஆலயம் அமைந்துள்ளது. அனந்தபுரம் கிராமத்தில் அமைந்துள்ள இந்த ஆலயத்தைச் சுற்றியிலும் ஏரி ஒன்று அமைந்துள்ளது. இந்த ஏரியில் வாழ்ந்து வந்த புகழ்பெற்ற பபியா என்ற சைவ உணவுகளை மட்டுமே சாப்பிட்டு வாழ்ந்து வந்த முதலை இன்று உயிரிழந்தது. பெண் முதலையான பபியாவின் மறைவால் பக்தர்களும், மக்களும் மிகுந்த சோகம் அடைந்துள்ளனர்.

உயிரிழந்த பபியாவை கோவில் நிர்வாகத்தின் சார்பில் பராமரித்து வந்தனர்.

முதலை பபியாவின் உடல் மீட்கப்பட்டு சம்பிரதாய முறைப்படி இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இந்த இறுதிச்சடங்கில் ஏராளமான பக்தர்கள் கண்ணீருடன் பங்கேற்றனர்.

75 வயதான பபியா

ஒவ்வொரு நாளும் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்ற பிறகு பபியாவிற்கு பிரசாதம் உணவாக வழங்கப்படும். வேகவைதத அரிசியும், வெல்லமும் பெண் முதலையான பபியாவிற்கு வழங்கப்பட்டு வந்தது. மேலும், கோவிலுக்கு வரும் பக்தர்களும் பபியாவிற்கு பிரசாதம் வழங்கி வந்தனர்.

சுமார் 75 ஆண்டுகளாக இந்த கோவில் குளத்தில் வாழ்ந்து வந்த பபியா முதலை இதுவரை குளத்தில் வாழ்ந்து வந்த மீன்களுக்கு கூட எந்த இடையூறும் செய்யாமல் வாழ்ந்து வந்ததுதான் மிகவும் ஆச்சரியமான ஒன்றாக உள்ளது. சில சமயங்களில் கோவிலின் முன்பகுதிக்கு பபியா வருவதும், அது இறைவனை வணங்குவது போலவும் இருக்கும் காட்சிகள் முன்பு சமூக வலைதளங்களில் வைரலாகியது.

—subham—

 tags- பபியா , முதலை, மகாபாரத கதை, மனு, அப்சரஸ் தேவலோக அழகி , பிராமணன் 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: