செப்பு மொழி முப்பத்தி இரண்டு! (Post No.11,347)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,347

Date uploaded in London – –    12 OCTOBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

செப்பு மொழி முப்பத்தி இரண்டு!

ச.நாகராஜன்

 1. ஒரு தவறான ஆரம்பம் தவறான முடிவையே தரும்.

A bad beginning makes a bad ending.

2. ஒரு மோசமான தொழிலாளி தனது கருவிகளுடன் சண்டை தான் போடுவான்.

 A bad workman quarrels with his tools.

3. ஒரு பேரம் பேரம் தான்!

 A bargain is a bargain

4. ஒரு பிச்சைக்காரன் ஒரு நாளும் திவாலாக மாட்டான். (அவனால் திவால் நோட்டிஸ் கொடுக்க முடியாது)  

A beggar can never be bankrupt

5. கையில் இருக்கும் ஒரு பறவை புதரில் இருக்கும் இரண்டை விடச் சிறந்தது!

A bird in the hand is worth two in the bush

6. ஒரு பறவையை அது பாடும் பாட்டை வைத்தே இன்ன பறவை என்று அறிந்து விடலாம்.

 A bird may be known by its song

7. உடைபட்ட நட்பு ஒட்டப்படலாம். ஆனால் ஒரு நாளும் அது உறுதியாக இருக்க முடியாது.

A broken friendship may be soldered, but will never be sound.

8. தானே விருப்பப்பட்டு சுமக்கும் ஒரு சுமையானது ஒரு நாளும் ஒருவனுக்குச் சுமையாகத் தோன்றாது.

A burden of one’s own choice is not felt

9. மோசமான காலை உணவை விட ஒன்றும் சாப்பிடாமல் இருக்கும் உண்ணா விரதம் சிறந்தது.

A clean fast is better than a dirty breakfast.

10. சுத்தமாக இருக்கும் கையை கழுவிக் கொள்ள தேவையே இல்லை.

A clean hand wants no washing.

11. தவறாகச் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளைப் பார்த்து சுத்தமான மனச்சாட்சி சிரிக்கும்.

A clear conscience laughs at false accusations.

12. மூடிய வாயில் ஈக்கள் புகாது.

A close mouth catches no flies.

13. செயற்கையாக காட்டப்படும் அன்பிற்கு நன்றி சொல்லத் தேவையில்லை.

A forced kindness deserves no thanks.

14. உடைந்து போன மணி சரியான நாதத்தை எழுப்பாது.

A cracked bell can never sound well.

15. எதிர் வரும் அபாயத்தை முன்னரே தெரிந்து கொள்வது அதைப் பாதி தவிர்த்தலுக்குச் சமம்.

A danger foreseen is half avoided.

16. ஒரு முட்டாளும் அவனது பணமும் சீக்கிரமே பிரிந்து விடும் ஒன்று.

 A fool and his money are soon parted.

17. இன்று கணவரைப் போற்றும் சர்வதேச தினம். அனைவரும் இரண்டு நிமிடம் மௌனம் அனுஷ்டிப்போம்

Today is National Husband Appreciation Day. Let us keep two minutes silence..

18. திருமணத்திற்குப் பிறகு கணவனும் மனைவியும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாக ஆகி விடுகின்றனர். ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் பார்க்க முடியாது. என்றாலும் சேர்ந்தே தான் இருக்க வேண்டும். – அல் கோர்

After marriage, husband and wife become two sides of a coin, they just can’t face each other, but still they stay together.  – Al Gore

19. ஒரு நல்ல மனைவி அவளது கணவனை எப்போதுமே மன்னிக்கத் தயார் தான் – அவள் தவறு செய்யும் போது – பாரக் ஒபாமா

A good wife always forgives her husband when she is wrong. – Barack Obama

20. நீ காதல் வயப்படும் போது ஆச்சரியங்கள் நிகழ்கின்றன. ஆனால் திருமணம் ஆன பின்போ என்ன நடந்தது என்று நீ ஆச்சரியப்படுகிறாய் – ஸ்டீவ் ஜாப்ஸ்

When you are in love, wonders happen. But once you get married, you wonder, what happened.  – Steve Jobs

 21. திருமணம் என்பது ஒரு அழகிய காடு. அங்கு துணிச்சலான சிங்கங்களை அழகிய மான்கள் கொல்கின்றன – ப்ராட் பிட்

Marriage is a beautiful forest where Brave Lions are killed by Beautiful Deers.  – Brad Pitt

 22. திருமணம் ஆனவுடன் பெரும்பாலான மாப்பிள்ளைகள் மணப்பெண்ணின் பெற்றோரைப் பார்த்து, “உங்கள் பெண்ணை அவள் ஆயுள் முடிய நான் சந்தோஷமாக வைத்துக் காப்பேன்” என்பார்கள்.

ஆனால் எப்போதாவது மணப்பெண் மாப்பிள்ளையின் பெற்றோரைப் பார்த்து, “உங்கள் பையனை அவரது ஆயுள் முழுவதும் சந்தோஷமாக வைத்திருப்பேன்” என்று சொல்லக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா?

கேள்விப்பட்டதில்லை அல்லவா? ஏன் தெரியுமா – பெண்கள் பொய் சொல்ல மாட்டார்கள்!

While getting married, most of the guys say to girl’s parents, “ I will keep your daughter happy for the rest of her life.” Have you ever heard a girl saying something like this to the boy’s parents like I will keep your son happy for the rest of his life.

Because women don’t tell lies!

 23. மனைவி கணவனின் கவனத்தை ஈர்க்க விரும்பினால் அவள் சோகமாகவும் சஞ்சலத்துடனும் காட்சி தருவாள். ஆனால் கணவன் மனைவியின் கவனத்தை ஈர்க்க விரும்பினால், அவன் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் காட்சி தருவான்.

If wife wants husband’s attention, she just has to look sad and uncomfortable. If husband wants wife’s attention, he just has to look comfortable and happy.

24. ஒரு தத்துவ ஞானியான கணவன் சொன்னது : ஒவ்வொரு மனைவியும் அவல் கணவனுக்கு மிஸ்ட்ரெஸ் தான்! அவள் கணவனுக்கு ‘மிஸ்’ ஆக முதல் வருடமும் ‘ஸ்ட்ரெஸாக” மீதி வாழ்நாள் முழுவதும் இருப்பாள்!

A Philosopher Husnand said : “Every wife is a ‘Mistress’ of her husband. Miss for first year and “Stress” for rest of the life.

25. ஒரு கணவனின் நிலை ஸ்பிலிட் ஏ.சி. போலத் தான்! வெளியில் எவ்வளவு சத்தம் போட்டாலும், உள்ளுக்குள் அவன் மௌனமாக இருக்கும்படி தான் அவன் வடிவமைக்கப்பட்டிருக்கிறான்.

Position of a husband is just like a Split AC, No matter how loud he is outdoor, He is designed to remain silent indoor.

 26. கணவன் மனைவியிடம், நீ உனது தவறை அணைத்துக் கொள்ளத் தெரிய வேண்டும் என்றாள். உடனே மனைவி கணவனை அணைத்துக் கொண்டாள்!

Husband to Wife : You should learn to embrace your mistakes.

She hugged him immediately.

 27. அனைவருக்கும் நண்பனாக இருக்கும் ஒருவன், ஒருவனுக்கும் நண்பன் இல்லை.

A friend to all is a friend to none.

 28. எதிரியின் புன்னகையை விட ஒரு நண்பனின் முகச்சுளிப்பு மேலானது.

 A friend’s frown is better than a foe’s smile.

 29. நல்ல ஒரு பட்டடைக் கல் சுத்தியல் அடிக்குப் பயப்படாது.

 A good anvil does not fear the hammer.

  30. ஒரு அருமையான முகமே பரிந்துரைக்கும் கடிதமாகும்.

A good face is a letter of recommendation.

 31. காசில்லாத ஒரு பர்ஸ் மோசமான ஒரு சாபமாகும்.

A light purse is a heavy curse.

 32. சின்ன ஓட்டையும் பெரிய கப்பலை  மூழ்கடிக்கும்.

A small leak will sink a great ship.

குறிப்பு : நாளுக்கு நாள் பெருகி வரும் மொபைல் போன் செப்பு மொழிகள், இணைய தள ஒரு வரிச் செய்திகளிலிருந்து கிடைத்தவை.

 *** 

புத்தக அறிமுகம் – 84

அதிசய பூமியில் ஓர் ஆனந்தப் பயணம்

 பொருளடக்கம்

நூலில் உள்ள அத்தியாயங்கள்

அதிசய பூமியில் ஆனந்தப் பயணம்!  

அறிவியல் அதிசயங்கள்  

மூளை பற்றிய ஆராய்ச்சி!

அணுத்துகள் விஞ்ஞானிகள் வியக்கும் நடராஜ நடனம்!

விஞ்ஞானிகள் வியக்கும் மந்திர மகத்துவம்!    

விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்!

நாஸா வியக்கும் சம்ஸ்கிருத மொழி!

விஞ்ஞானிகள் வியக்கும் வித்தக சித்தர் கணம்! 

உலக பலன்களை உரைத்த அதிசய ஜோதிடர் நாஸ்டர்டாமஸ்!  

 *

நூலைப் பற்றிய சிறு குறிப்பு இது:

This book is a collection of short stories with the title story in its own name, and science articles. The author gets excited on seeing Tibet in his journey, after some unexpected events in his life. The Shambhala town portrays the Golden Era of Yuga Civilization in front of our eyes. The author returns to his homeland still wondering the existence of such an exotic place on earth. Besides, the facts about Mystic Square and Fenzooyi are also included in this book. It is a must read book for readers who aspire to know interesting facts.

 ‘அதிசய பூமியில் ஓர் ஆனந்தப் பயணம்’ எ‎‎ன்னும் குறுந்தொடரையும், மேலும் சில அறிவியல் விந்தைக் கட்டுரைகளையும் கொ‎ண்ட நூல் ‏இது. எதிர்பாராமல் தானே நிகழும் சில விந்தையான நிகழ்வுகளுக்குப் பி‎ன் திபெத்துக்குச் செல்லும் எழுத்தாளர், அங்கு தா‎ன் காணும் காட்சிகளைக் கண்டு வியக்கிறார். அங்கு காணும் ஷம்பாலா நகரம் தங்க யுகம் எ‎னச் சொல்லப்படும் யுக நாகரிகத்தைக் கண்மு‎ன் நிறுத்துகிறது. ‏இப்பூமியில் இப்படியும் ஒரு அதிசய உலகம் உள்ளதா என எண்ணியவாறு திரும்புகிறார் எழுத்தாளர். இதனோடு மாயச் சதுரம், ஃபெங்சூயி பற்றிய கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன. புதுமையான தகவல்களை அறிய ஆர்வமுள்ளவர்கள் தவற விடக் கூடாத நூல்!

 *

இந்த நூல் திருமதி நிர்மலா ராஜூ அவர்களால் அவரது www.nilacharal.com மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இதை (EBOOK) டிஜிடல் வடிவமாகப் பெற விரும்புவோர் www.nilacharal.com இணையதளத்தில் EBOOKS என்ற பகுதியில் AUTHOR-ஐ தேர்ந்தெடுத்தால் எழுத்தாளர் பகுதியில் ச.நாகராஜன் (61) என்ற பெயரைக் காணலாம்.

அங்கு சொடுக்கினால் ச.நாகராஜன் எழுதிய 61 புத்தகங்களின் விவரத்தைக் காண முடியும். ‘அதிசய பூமியில் ஓர் ஆனந்தப் பயணம்’ நூலைப் பற்றிய  சிறுகுறிப்பு, விலை விவரத்தைக் காணலாம்; அதை வாங்கலாம்.

Singapore, National Library இல் நிலாச்சாரல் வெளியீடுகள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

**

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: