இலவச உணவை இகழ்ந்து ஒதுக்கு! (Post No.11,351)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,351

Date uploaded in London – –    13 OCTOBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

இலவச உணவை இகழ்ந்து ஒதுக்கு!

ச.நாகராஜன் 

ராபர்ட் க்ரீன் எழுதியுள்ள தி 48 லாஸ் ஆஃப் பவர் (Robert Greene – The 48 Laws of Power) வெற்றிக்கான விதிகளைச் சொல்லும் புத்தகம்.

 இது சர்ச்சைக்கு உள்ளான புத்தகம்; கடுமையாக விமரிசிக்கப்பட்ட புத்தகம் – இது கூறுகின்ற வழி முறைகளால்! அமெரிக்காவில் சிறைகளில் தடை செய்யப்பட்ட புத்தகமும் கூட.

 இப்போது நாம் பார்க்கப் போவது அவர் கூறும் 40வது விதி.

இலவச உணவை இகழ்ந்து ஒதுக்கு! (Despise the free lunch) என்பது அவர் கூறும் விதி.

 இதில் அவர் பல உதாரணங்களை எடுத்துக் காட்டுகிறார். இரண்டு சம்பவங்களை இங்கு பார்ப்போம்.

 அகிமோதோ சுஸுடோமோ (Akimoto Suzutomo) என்பவர் ஒரு பெரிய செல்வந்தர். அவர் தேநீர் சடங்கை பெரிதும் விரும்புபவர்.

ஒரு முறை நூறு பொற்காசுகளுக்கு ஒரு தேநீர் கோப்பை விலைக்கு வருவதாக அவருக்குத் தெரிய வந்தது. தனது வேலைக்காரன் ஒருவனைக் கூப்பிட்ட அவர் குறிப்பிட்ட இடத்தைச் சொல்லி நூறு பொற்காசுகளைக் கொடுத்து தேநீர் கோப்பையை வாங்கி வருமாறு அவனிடம் உத்தரவிட்டார்.

 அந்த வேலைக்காரர் அந்த குறிப்பிட்ட இடத்திற்குச் சென்றார். அதை நூறு பொற்காசுகள் கொடுத்து வாங்குவதா என்று அவருக்கு ஒரு எண்ணம் வந்தது. ஆகவே அந்த இடத்தில் அதை வைத்திருந்தவருடன் வெகு நேரம் பேரம் செய்ய ஆரம்பித்தார். கடைசியாக 95 பொற்காசுகள் கொடுத்து அதை வாங்கி வந்தார்.

தன் எஜமானனிடம் சமயம் பார்த்து பக்குவமாக தனது சாமர்த்தியமான பேரத்தைச் சொல்லி 95 பொற்காசுகளுக்கு அதை வாங்கி வந்த விவரத்தைச் சொன்னார்.

இதைக் கேட்டவுடன் எஜமானருக்கு மிகவும் கோபம் வந்தது.

 “அட அடி முட்டாளே! ஒரு தேநீர் கோப்பைக்கு ஒருவர் நூறு பொற்காசுகள் கேட்கிறார் என்றால் அது பரம்பரையான ஒரு மிகப் பெரும் செல்வந்தருடையதாக அல்லவா இருக்க வேண்டும். அதை விற்கப் போகிறார் என்றால் அந்தக் குடும்பத்திற்கு ஏதோ ஒரு  பண நெருக்கடி வந்திருக்கிறது என்று அல்லவா அர்த்தம்! அப்படிப்பட்ட குடும்பம் அந்தக் கோப்பையை 150 பொற்காசுகள் கொடுத்தும் ஒருவர் வாங்க முன்வரக்கூடும் என்று அப்படிப்பட்ட ஒருவரை அல்லவா எதிர்பார்த்துக் காத்திருக்கும். அவர்களது உணர்வை நீ கொஞ்சமாவது உணர்ந்தாயா? மதித்தாயா? அது ஒரு புறமிருக்க நூறு பொற்காசுகளுக்கு பதில் 95 கொடுத்து வாங்குபவனைப் பற்றி அவர்கள் என்ன நினைப்பார்கள்? அவனை எப்படி மதிப்பார்கள்? இனி ஒரு போதும் அந்த தேநீர் கோப்பையை என் அருகில் கொண்டு வராதே. அதைக் காண்பிக்காதே!” என்றார்.

நீதி : ஒரு பொருளை குறைத்து வாங்கும் சாமர்த்தியத்தில் உன் மதிப்பை இழக்கக் கூடாது.

 இன்னொரு சம்பவம் இது:

லார்ட் டேட் மஸாமுனே (Lord Date Masamune) பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த பெரும் தளகர்த்தர். அவர் ஒரு நாள் தனது படை இருக்குமிடத்தில் பல தளகர்த்தர்கள் கூடி இருக்கும் இடத்தின் வழியாகச் சென்றார்.

அவர்கள் பெரிய போர் ஒன்றுக்குச் செல்வதற்கு முன்னர் குதூகலமாக ஒரு ‘ஊதுபத்தி வாசனை பார்க்கும் போட்டி’ ஒன்றை நடத்திக் கொண்டிருந்தனர்.

போட்டியில் ஜெயிப்பவர்களுக்குத் தருவதாக ஒவ்வொரு தளகர்த்தரும் தன்னிடம் இருந்த அரிய ஒரு பொருளைச் சொல்லிக் கொண்டிருந்தார்.

ஒருவர்  வில் என்றார். இன்னொருவர் அம்பு, இன்னொருவர் சேணம் இப்படி பரிசுப் பொருள்கள் அறிவிக்கப்பட்டுக் கொண்டிருந்தன.

டேட் மஸாமுனேயைப் பார்த்த மற்ற தளகர்த்தர்கள் அவரையும் போட்டியில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்கள்.

டேட் தனது பங்கிற்கு வென்றவருக்கு தனது பெல்ட்டில் சொருகி இருந்த ஒரு சுரைக்காய் குடுக்கையைத் தருவதாகச் சொன்னார்.

அதைக் கேட்ட அனைவரும் சிரித்தனர்.

வென்றவர்கள் யாரும் அந்தப் பரிசுப் பொருளை வாங்க முன் வரவில்லை.

 கடைசியாக ஒரு வெற்றியாளர் அந்த சுரைக்காய் குடுக்கையை வாங்க  முன் வந்தார்.

அவரிடம் குடுக்கையைத் தந்த டேட், “ ஒரு நிமிடம்” என்று சொல்லி விட்டு தனது குதிரையிடம் சென்று அதைக் கொண்டு வந்து அந்த வெற்றியாளரிடம் கொடுத்தார்.

 “இந்தக் குடுக்கையுடன் இந்த குதிரையும் சேரும்” என்றார் அவர்.

மிக பிரமாதமான கம்பீரமான விலை மதிக்க முடியாத அந்த குதிரையைப் பார்த்த அனைவரும் அசந்து போனார்கள்.

வென்றவருக்கு ஒரே மகிழ்ச்சி!

 டேட்டிற்கு பணத்தின் வலிமை என்ன என்று தெரியும். அதைக் கொடுப்பதில் உள்ள சந்தோஷமும் தெரியும். குடுக்கையுடன் குதிரையைச் சேர்த்துக் கொடுத்த போது அவரது கொடுக்கும் சக்தியையும் கம்பீரத்தையும் அனைவரும் அறிந்து கொண்டனர்.

ஒரு பொருளை வாங்கு முன்னர் அதற்கான தகுதியைப் பெறு; இலவசம் என்றவுடன் ஓடாதே; இலவசமாக வரும் உணவை இகழ்ந்து ஒதுக்கு; தகுதி பெறு, தகுந்ததை வாங்கு என்பது ராபர்ட் க்ரீன் கூறும் 40வது விதி.

**

புத்தக அறிமுகம் – 85

மாயச்சதுரமும் கணிதப் புதிர்களும்

பொருளடக்கம்

நூலில் உள்ள அத்தியாயங்கள்

 1. மாயச் சதுரம் (1)  

2. மாயச் சதுரம் (2)  

3. கஜுராஹோ மாயச் சதுரம்   

4. நவகிரகங்களும் அவற்றிற்குரிய மாயச் சதுரங்களும்

5. செல்வம் வேண்டுமா? இதோ இருக்கிறது குபேர சக்கரம்!

6. மிக மிக அதிசயமான பெரிய மாயச் சதுரம்   

7. பிரமிக்க வைக்கும் 16 சூப்பர் மாயச் சதுரங்கள்

8. கணிதப் புதிர்கள்  

9. கடினமானதுபோலத் தோன்றும்; ஆனால் சிக்கலை அவிழ்த்தால் எளிதாகும்: புதிர்கள்!  

10. அறிவியல் புதிர்கள்    

11. கணிதப் புதிர்களைக் கணக்கின்றித் தொகுத்த மார்டின் கார்ட்னர்!   

12. முன்கூட்டியே ஒரு கணித எண்ணை மேஜிக்போல உங்களால் சொல்ல முடியும்! 

13. அல்பேக்கரின் ‘நியூமரோ’’   

14. மனிதக் கணினி சகுந்தலா தேவி! 

15. எப்போதும் விடை ஒரே எண்தான்!

16. காணாமல்போன இலக்கத்தைக் கண்டுபிடிக்கலாம் 

 நூலைப் பற்றிய சிறு குறிப்பு இது:

 This mathematical series was published in a weekly internet magazine nilacharal. This series has been compiled and published as a digitalized book. History of magic squares, complicated magic squares, methods for formulating them are given with a step by step procedure. This book is suitable for students, magic square and puzzle lovers. This is a Tamil book written in a simple style.

 நிலாச்சாரல் மின்னிதழில் வாராவாரம் வெளிவந்த கணித சம்பந்தமான தொடர், நூலாக மலர்ந்துள்ளது. மாயச் சதுரங்களின் வரலாறு, சிக்கலான மாயச் சதுரங்கள், அவற்றை அமைக்கும் வழிமுறைகள் ஆகியவை தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. மாணவர்களுக்கும், கணித ஆர்வலர்களுக்கும், புதிர்களைப் பற்றி அறிய விரும்புவோருக்கும் ஏற்ற நூல்!

 இந்த நூல் திருமதி நிர்மலா ராஜூ அவர்களால் அவரது www.nilacharal.com மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இதை (EBOOK) டிஜிடல் வடிவமாகப் பெற விரும்புவோர் www.nilacharal.com இணையதளத்தில் EBOOKS என்ற பகுதியில் AUTHOR-ஐ தேர்ந்தெடுத்தால் எழுத்தாளர் பகுதியில் ச.நாகராஜன் (61) என்ற பெயரைக் காணலாம்.

அங்கு சொடுக்கினால் ச.நாகராஜன் எழுதிய 61 புத்தகங்களின் விவரத்தைக் காண முடியும். ‘மாயச்சதுரமும் கணிதப் புதிர்களும்’ நூலைப் பற்றிய  சிறுகுறிப்பு, விலை விவரத்தைக் காணலாம்; அதை வாங்கலாம்.

Singapore, National Library இல் நிலாச்சாரல் வெளியீடுகள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

**

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: