செப்பு மொழி முப்பத்தி மூன்று! (Post.11,360)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,360

Date uploaded in London – –    16 OCTOBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

செப்பு மொழி முப்பத்தி மூன்று! 

ச.நாகராஜன் 

1. தற்செயல் ஒற்றுமைகள் என்பவை ஆன்மீக விளையாடல்கள்!

       ஜி.கே.செஸ்டர்டன்

    Coincidences are spiritual puns.”  ― G.K. Chesterton

2. நான் சிந்திக்கிறேன். ஆகவே நான் சராசரிக்கு  மேலானவன்.

“I think; therefore, I am above average.”
― Michael Walton

3.  சாமர்செட் மாம் ஒரு முறை ஒரு நாவலை எழுதுவதற்கு மூன்று விதிகள் இருப்பதாகச் சொன்னார். அந்த விதிகள் என்ன என்பது யாருக்கும் தெரியாது. எனக்குத் தெரியும்

1. எழுது 2. திருப்பி எழுது 3. இரண்டு முறை எழுதினால் அதில் தவறு இருக்காது.  – ஸ்டீவர்ட் ஸ்டாஃபோர்ட்

“W. Somerset Maugham once said there were three rules for writing a novel and that no one knew what they were. I do:

1. Write
2. Rewrite
3. Two writes don’t make a wrong!”
― Stewart Stafford

4. பெரும்பாலான மனிதர்கள் 27ஆம் வயதில் இறந்து விடுகின்றனர். அவர்களை நாம் 72வது வயதில் புதைக்கிறோம்.

“Most men are dead at 27, we just bury them at 72”

5. அன்பு என்னும் மொழி தான் செவிடர்களும் கேட்கக் கூடியது; குருடர்களும் பார்க்கக் கூடியது – மார்க் ட்வெய்ன்

Kindness is the language which the deaf can hear and the blind can see. – Mark Twain

6. உண்மையை நீ சொன்னால், நீ எதையும் ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. – மார்க் ட்வெய்ன்                 If you tell the truth, you don’t have to remember anything. – Mark Twain

7. சரியானதைச் செய். அது சிலருக்கு மகிழ்வூட்டும்,  மற்றவர்களை வியக்க வைக்கும். – மார்க் ட்வெய்ன்                                   Do the right thing. It will gratify some people and astonish the rest. – Mark Twain

8. வாழ்நாளின் மிக அழகிய நாளாகத் திகழ ஒவ்வொரு நாளுக்கும் ஒரு வாய்ப்பைக் கொடு – – மார்க் ட்வெய்ன்                               Give every day the chance to become the most beautiful of your life.- Mark Twain

9. புத்தகங்கள் நல்ல தோழமை இல்லையென்றால் வேறு எங்கு தான் அதைக் கண்டுபிடிப்பதாம்? – மார்க் ட்வெய்ன்                        If books are not good company, where will I find it? – Mark Twain

10. முன்னால் முந்திச் செல்வதன் ரகசியம் (முதலில்) ஆரம்பிப்பது தான்.          The secret of getting ahead is getting started. – Mark Twain

11. ஒரு புதிய யோசனையைக் கொண்டிருப்பவன் அது வெற்றி பெரும் வரை ஒரு பித்துக்குளி தான்! – மார்க் ட்வெய்ன்                       The man with a new idea is a crank until the idea succeeds. – Mark Twain

12. தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருப்பது தாமதித்து பிரமாதமாய் இருப்பதை விட மேல் – மார்க் ட்வெய்ன்                                              Continuous improvement is better than delayed perfection. – Mark Twain

13. கட்டிடக் கலைஞர்கள் எதையும் இயற்கைக்குக் கற்பிக்க முடியாது. – மார்க் ட்வெய்ன்                                            Architects cannot teach nature anything. – Mark Twain

14. பெண்கள் இல்லாமல் ஆண்கள் என்ன ஆவார்கள்? அரிதானவன் ஆகி விடுவான் , சார், மிக அரிதானவனாக ஆகி விடுவான்! – மார்க் ட்வெய்ன்                                                                                                                      What would men be without women? Scarce, sir…mighty scarce. – Mark Twain

15. மற்றவர்களின் நடத்தையை விட வேறு எதுவும் சீர்திருத்தப்பட வேண்டியதில்லை. – மார்க் ட்வெய்ன்                                                        Nothing so needs reforming as other people’s habits. – Mark Twain

16. தனது சொந்த அங்கீகாரத்தைப் பெறாமல் ஒருவன் நிம்மதியாக இருக்க முடியாது. – மார்க் ட்வெய்ன்                                                                 A man cannot be comfortable without his own approval. – Mark Twain

17. உனக்குச் செய்யப் பிடிக்காதது எதையாவது ஒன்றை தினமும் செய்து வா. உனது பணியை கஷ்டப்படாமல் செய்ய இதுவே பொன்னான விதி. – மார்க் ட்வெய்ன்                                     Do something every day that you don’t want to do. This is the golden rule for acquiring the habit of doing your duty without pain. – Mark Twain

18. உனது வாழ்க்கையில் மிக முக்கியமான இரண்டு தினங்கள் : 1) நீ பிறந்த தினம் 2) எதற்காகப் பிறந்தேன் என்பதைக் கண்டுபிடித்த தினம்                                                                                                                                  The two most important days in your life are the day you are born and the day you find out why. – Mark Twain

19. படிக்கத் தெரியாத ஒருவனை விட படிக்காமல் இருக்கும் ஒருவனுக்கு எந்த வித ஆதாயமும் இல்லை.                                              The man who does not read has no advantage over the man who cannot read. – Mark Twain

20. சண்டை போடும் நாய் எவ்வளவு பெரிதாக இருக்கிறது என்பதல்ல விஷயம், அது எவ்வளவு பெரிதாகச் சண்டை போடுகிறது என்பது தான் விஷயம்! – மார்க் ட்வெய்ன்                           It’s not the size of the dog in the fight, it’s the size of the fight in the dog. – Mark Twain

21. உண்மை கதையை விட விசித்திரமானது. ஏனெனில் ஒரு கதையானது இன்னின்னவை தான் நடக்க முடியும் என்பதற்கு உட்பட்டதாகும். – மார்க் ட்வெய்ன்                                         Truth is stranger than fiction, but it is because fiction is obliged to stick to possibilities; truth isn’t. – Mark Twain

22. சுற்றுலா செல்வது என்பது இனிமேலும் என்னைக் கவரும் ஒன்றாக இல்லை. சொர்க்கம், நரகம் ஆகிய இரண்டைத் தவிர எல்லா நாடுகளையும் பார்த்து விட்டேன். இந்த இரண்டில் ஒன்றைப் பற்றி மட்டும் ஒரு  மாதிரியான ஆர்வம் தான் எனக்கு உண்டு.

Travel has no longer any charm for me. I have seen all the foreign countries I want to except heaven and hell, and I have only a vague curiosity about one of those. – Mark Twain

23. பசியோடு இருக்கும் ஒரு நாயை எடுத்து அதை செழிப்பாக நீ ஆக்கி விட்டால் அது உன்னைக் கடிக்காது.  இது தான் மனிதனுக்கும் நாய்க்கும் உள்ள ஒரு அடிப்படையான வித்தியாசம்! – மார்க் ட்வெய்ன்                                                                                                                            If you pick up a starving dog and make him prosperous, he will not bite you. This is the principal difference between a dog and man. – Mark Twain

24. ஒரு அழகிய நர்ஸ் வேண்டும் என்பவன் ‘ பேஷண்டாக’ இருக்க வேண்டும்!                                                                                                                      A man who wants a pretty nurse, must be patient.

25. ஒரு நான் – ஸ்டாப் ஃப்ளைட்டிலிருந்து நீ எப்படி வெளியில் வருவாய் என்பது தான் ஆச்சரியமாக இருக்கிறது!                                How do you get off a Non -stop Flight ?

26. FUNERAL என்ற வார்த்தை ஏன் FUN என்று தொடங்குகிறதோ?        Wonder why the word funeral starts with FUN ?

27. தீயை அணைப்பவனை தீ அணைப்பவன் – ஃபைர்மேன் என்று சொல்கிறோம். அவனை ஏன் வாடர்மேன் என்று சொல்வதில்லை!  Why isnt a Fireman called a Waterman ?

28. பிகினி உடையைப் போட்டிருக்கும் ஒரு பெண்மணி 90 சதவிகிதம் உடலைக் காட்டுகிறாள். ஆனால் ஆண்களோ மிகவும் மரியாதை தெரிந்தவர்கள் ஆயிற்றேஆகவே தான் அவர்கள் மீதி 10 சதவிகிதத்தைப் பார்க்கிறார்கள்.                                        When wearing a bikini, women reveal 90 % of their body… men are so polite they only look at the covered parts.

29. ஒரு ராஜதந்திரி என்பவன் யார் என்றால் அவன் ஒரு பெண்மணியின் பிறந்த நாளை மட்டுமே ஞாபகத்தில் வைத்திருப்பவன். அவளது வயதை ஒரு நாளும் அவன் நினைவில் வைத்திருக்க மாட்டான்.                                                                                              A diplomat is a man who always remembers a woman’s birthday but never remembers her age.

30. லிப்ஸ்டிக் என்று நினைத்து கோந்தை தவறுதலாக என் மனைவியிடம் கொடுத்து விட்டேன். இன்னும் கூட அவள் என்னிடம் பேச மாட்டேன் என்கிறாள்!                                                                                                 I accidentally handed my wife a glue stick instead of a chapstick. She still isn’t talking to me.

31. ஒவ்வொரு கோபமான பெண்மணிக்கும் பின்னால் என்ன செய்தோம் என்று தெரியாமல் முழிக்கும் ஒரு அப்பாவியான ஆண் இருக்கிறான்.                                                                                                         Behind every angry woman is a man who has absolutely no idea what he did wrong.

32. விவாதங்களுக்கு தலைமை வகிக்கும் ஒரு பெண்மணியை ஒரு போதும் திருமணம் செய்து கொள்ளாதே!                                                     Never marry a woman who was captain of the debate team.

33. நான் கார் ஓட்டும் போது நான் விடும் குறட்டையின் பலத்த சத்தத்தைக் கேட்டு அனைவரும் பயப்படுகிறார்கள்!                      Apparently I snore so loudly that it scares everyone in the car I’m driving.

***

 புத்தக அறிமுகம் – 88

அனைவருக்கும் ஆரோக்கியம் (பாகம் 1)

பொருளடக்கம்

நூலில் உள்ள அத்தியாயங்கள்

1.    ஆரோக்கியத்திற்கு அவசியமான நடைப்பயிற்சி! 

2.    வியாதி வராமல் இருக்க நீங்கள் அறிய வேண்டிய பிஹெச்

     வால்யூ!  

3.    சரியான பிஹெச் வால்யூ பெறுவதற்கான உணவு வகைகள்!

4.    எச்சிலை சோதித்தால் ஒரு மனிதனின் வயதை அறிய முடியும்!

5.    உங்கள் குழந்தை குண்டாக இருக்கிறதா? விட்டமின் டி தேவை! 

6.    இரத்த ஆல்கஹால் இருப்பை – பி ஏ சி யை (BLOOD ALCOHOL

     CONTENT -BAC) எப்படிக் கணக்கிடுவது?

7.    செயற்கை உணவில் சேர்க்கப்படும் சேர்ப்புப் பொருள்கள்   

8.    முதுமையை முறியடியுங்கள், ஆயுளைக் கூட்டுங்கள்: இதோ  

     வழி!

9.    பசு மூத்திரத்தின் நோய் தீர்க்கும் அற்புத ஆற்றல்கள் 

10.   பசு மூத்திரத்தின் நோய் தீர்க்கும் அற்புத ஆற்றல்கள் – 2   

11.   ஸமோனெல்லா – கேள்விகளும் விடைகளும்   

12.   செக்ஸ் பற்றிய நுணுக்கமான கேள்வி பதில்கள்!

13.   தூக்க வியர்வை மிகைப்பு 

14.   விட்டமின் 12 குறைபாடு ஏன்? அதைப் போக்குவது எப்படி? 

15.   மோர் நீர் அல்லது மோர்த் தெளிவில் உள்ள புரதச் சத்து பற்றிய

     உண்மைகள்! படியுங்கள் – மோர் தரும் ஆற்றலை!    

16.   உடல் பயிற்சிகள் மூலம் மூளை ஆற்றல் கூடுகிறது! 

17.   டயாபடீஸா? கெமிக்கல்கள் ஜாக்கிரதை!   

18.   செக்ஸ் தரும் ஆரோக்கிய வாழ்வு!   

19.   மாறிவரும் மாடர்ன் செக்ஸ் உறவுகள்!    

20.   மருத்துவ உலகில் மகிழ்ச்சி தரும் புதிய கண்டுபிடிப்புகள்! (1)    

21.   மருத்துவ உலகில் மகிழ்ச்சி தரும் புதிய கண்டுபிடிப்புகள்! (2)    

22.   மருத்துவ உலகில் மகிழ்ச்சி தரும் புதிய கண்டுபிடிப்புகள்! (3)    

23.   மருத்துவ உலகில் மகிழ்ச்சி தரும் புதிய கண்டுபிடிப்புகள்! (4)    

24.   மருத்துவ உலகில் மகிழ்ச்சி தரும் புதிய கண்டுபிடிப்புகள்! (5)    

25.   மருத்துவ உலகில் மகிழ்ச்சி தரும் புதிய கண்டுபிடிப்புகள்! (6)    

26.   மருத்துவ உலகில் மகிழ்ச்சி தரும் புதிய கண்டுபிடிப்புகள்! (7)    

27.   மருத்துவ உலகில் மகிழ்ச்சி தரும் புதிய கண்டுபிடிப்புகள்! (8)    

*

நூலைப் பற்றிய சிறு குறிப்பு இது:

All our prayers are oriented towards living a hale and healthy life for 100 years and beyond. This book takes us on the road to healthy life, revealing the health secrets of Nature; ‘Notable Medicine Discoveries’ gives the confidence in medicine technology and ensuring wealthy health.

நூறாண்டுகள் வாழ்வோம்; நோய் நொடி இல்லாமல் வாழ்வோம் என நமது அறநூல்கள் அனைவருக்குமான பிரார்த்தனையில் குறிப்பிடுகின்றன! இன்றைய சூழ்நிலையில் ஆரோக்கியமாக நெடுநாள் வாழ்வதற்கான அடிப்படை ரகசியங்களைப் பல கட்டுரைகள் வாயிலாக இந்த நூல் விளக்குகிறது. இதிலுள்ள ‘சிறந்த மருத்துவக் கண்டுபிடிப்புகள்’ பகுதி இன்றைய புதிய கண்டுபிடிப்புகளை அறிமுகம் செய்து நீண்ட வாழ்வுக்கு நம்பிக்கையூட்டுகிறது! அனைவரும் பாதுகாத்து வைத்துக் கொள்ள வேண்டிய நூல்!

*

இந்த நூல் திருமதி நிர்மலா ராஜூ அவர்களால் அவரது www.nilacharal.com மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இதை (EBOOK) டிஜிடல் வடிவமாகப் பெற விரும்புவோர் www.nilacharal.com இணையதளத்தில் EBOOKS என்ற பகுதியில் AUTHOR-ஐ தேர்ந்தெடுத்தால் எழுத்தாளர் பகுதியில் ச.நாகராஜன் (61) என்ற பெயரைக் காணலாம்.

அங்கு சொடுக்கினால் ச.நாகராஜன் எழுதிய 61 புத்தகங்களின் விவரத்தைக் காண முடியும். ‘ அனைவருக்கும் ஆரோக்கியம்’ – பாகம் 1 நூலைப் பற்றிய  சிறுகுறிப்பு, விலை விவரத்தைக் காணலாம்; அதை வாங்கலாம்.

Singapore, National Library இல் நிலாச்சாரல் வெளியீடுகள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

**

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: