
WRITTEN BY S NAGARAJAN
Post No. 11,363
Date uploaded in London – – 17 OCTOBER 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
செப்பு மொழி பத்தொன்பது
ச.நாகராஜன்
1. மகத்தான மனங்கள் கருத்துக்களை விவாதிக்கின்றன. சராசரி மனங்கள் சம்பவங்களை விவாதிக்கின்றன. குறுகிய மனங்கள் மனிதர்களை விவாதிக்கின்றன. – எலினார் ரூஸ்வெல்ட் Great minds discuss ideas; average minds discuss events; small minds discuss people. – Eleanor Roosevelt.
2. நீ உற்றுக் கவனித்தால் ஒவ்வொரு நாளும் எதையாவது கற்றுக் கொள்ளலாம். ரே லீ ப்ளாண்ட் You learn something new everyday if you pay attention. – Ray LeBlond.
3. வெற்றிகரமான ஒரு போர்வீரன் சராசரி மனிதன் தான் – லேஸர் போன்ற கவனக்குவிப்புடன் அவன் இருப்பான். – ப்ரூஸ் லீ The successful warrior is the average man, with laser-like focus.” – Bruce Lee.
4. கல்வி உலகத்தை மாற்றுவதற்கான சக்தி வாய்ந்த ஆயுதம்.- நெல்ஸன் மண்டேலா Education is the most powerful weapon which you can use to change the world. – – Nelson Mandela.
5. நம்மிம் பெரும்பாலோரிடம் உள்ள பிரச்சினை என்னவென்றால் விமரிசனத்தால் நாம் காப்பாற்றப்படுவதை விட புகழ் மொழியினால் அழிவது தான். – நார்மன் வின்செண்ட் பீல் The trouble with most of us is that we would rather be ruined by praise than saved by criticism.” – Norman Vincent Peale.
6. எந்த ஒரு நூலகரானாலும் சரி அறிவாளியானாலும் சரி மிக அருகில் என்பதும் துல்லியம் என்பதும் ஒன்றல்ல என்று உனக்குக் கூறி விடுவார். – லிப்பா ப்ரேAny librarian or scholar will tell you: Close is not the same as accurate.” – Libba Bray.
7. கல்வி என்ற ஒன்றைத் தான் யாராலும் உன்னிடமிருந்து பறிக்க முடியாது. – எலின் நார்டெக்ரென் Education is one thing no one can take away from you.” – Elin Nordegren.
8. உலகின் பெரிய மனிதர்கள் எல்லாம் பொதுவாக அறிவாளிகள் இல்லை; அல்லது உலகின் அறிவாளிகள் எல்லாம் பெரிய மனிதர்களும் அல்ல. – ஆலிவர் வெண்டல் ஹோம்ஸ் The world’s great men have not commonly been great scholars, nor its great scholars great men. – Oliver Wendell Holmes Sr.
9. அறிவு எதிரிகளுக்கு உதவுகிறது. ஆனால் அறியாமையோ நண்பர்களுக்குத் தீங்கு பயக்கிறது. மாச்ஷோனா தில்வாயோ Knowledge helps its enemies, but ignorance harms its friends.” – Matshona Dhliwayo.
10. ஒரு அறிவாளி எல்லாவற்றிலும் கொஞ்சம் கொஞ்சம் தெரிந்து வைத்திருக்க வேண்டும் – ஜூல்ஸ் வெர்ன்
A scholar has to know a little of everything. – Jules Verne.
11. மனிதரை இயக்க இரண்டு நெம்புகோல்கள் உள்ளன – ஆர்வம், பயம். – நெப்போலியன் போனபார்ட் There are two levers for moving men – interest, and fear.” – Napoleon Bonaparte.
12. தலைமைப் பண்பு என்பது நீ செய்ய விரும்பும் ஒன்றை இன்னொருவரை அவரே விரும்பிச் செய்வது போல செய்ய வைப்பது தான்! – ட்வைட் டி. ஐஸன்ஹோவர் Leadership is the art of getting someone else to do something you want done because he wants to do it.” – Dwight D. Eisenhower.
13. நீ செய்யும் அறுவடையை வைத்து ஒவ்வொரு நாளையும் எடை போடாதே; நி விதைக்கும் விதைகளை வைத்து எடை போடு. ராபர்ட் லூயி ஸ்டீவன்ஸன் Don’t judge each day by the harvest you reap but by the seeds that you plant.” – Robert Louis Stevenson.
14. இரும்பு இரும்பைக் கூர்மையாக்குகிறது. அறிவாளி அறிவாளியை. வில்லியம் ட்ரம்மண்ட் Iron sharpens iron; scholar, the scholar.” – William Drummond.
15. வசதியாக இருக்க விரும்பும் ஒரு அறிவாளி, அறிவாளி ஆவதற்குத் தகுதி அற்றவன் = லாவோ ட்ஸு A scholar who cherishes the love of comfort is not fit to be deemed a scholar.” – Lao Tzu.
16. கத்துக்குட்டிகள் குற்றம் கண்டுபிடிப்பதையே வழக்கமாகக் கொண்டு கற்க ஆரம்பிக்கின்றனர். ஆனால் அறிவாளியோ கற்கும் ஒவ்வொன்றிலும் ஆக்கபூர்வமான விஷயத்தைக் காண்கிறான் – ஜார்ஜ் வில்ஹெல்ம் ஃப்ரெடெரிக் ஹீகல் The learner always begins by finding fault, but the scholar sees the positive merit in everything.” – George Wilhelm Friedrich Hegel.
17. பெரும் அறிவாளிகள் எல்லாம் பொதுவாக புத்திசாலிகளாக இருப்பதில்லை. – ஜெஃப்ரி சாசர் The greatest scholars are not usually the wisest people.” – Geoffrey Chaucer.
18. தங்கத்தையும் மாணிக்க மணியையும் ஒரு அறிவாளி விலைமதிப்பே இல்லாத பொக்கிஷமாகக் கருதுவதில்லை. ஆனால் விஸ்வாசத்தையும் நல்ல நம்பிக்கையையுமே அவன் பொக்கிஷமாகக் கருதுகிறான். கன்ஃப்யூஷியஸ்

புத்தக அறிமுகம் – 89
அனைவருக்கும் ஆரோக்கியம் (பாகம் 2)
பொருளடக்கம்
நூலில் உள்ள அத்தியாயங்கள்
1. தோல் ஆரோக்கியத்திற்கு சோயா பால்
2. நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க 4 இயற்கையான எளிய வழிகள்!
3. டயாபடீஸா? கவலை வேண்டாம் இரவு நேர நொறுக்குத் தீனிகளைச்
சாப்பிடுங்கள்!
4. ஆரோக்கிய வாழ்வுக்கு கொத்தமல்லி, கறிவேப்பிலை, நெல்லிக்காய்
அகத்திக்கிரை; அட! எளிய உணவு வகைகள்!
5. மனச்சோர்வை அகற்ற ஒரு அபூர்வ மருந்து!
6. ஒளி உணரும் மூளைத் திசுக்கள் நம்மை விழிப்புடன் வைத்திருப்பது
எப்படி?
7. விந்தணு எண்ணிக்கை குறைபாடு – முக்கிய கேள்விகளும்
பதில்களும்
8. நரைமுடியைக் கறுப்பாக்கும் இரசாயன டைகளின் அபாயம்
9. பளபளப்பான செழுமையான கேசம் பெற எளிய குறிப்புகள்!
10. காச உறையழல் நோய் அல்லது காச மூளை உறையழற்சி நோயும்
அதற்கான தடுப்பூசியும்!
11. என்றும் இளமையோடு இருக்கலாமே!
12. டயாபடீஸ் – அடிப்படை உண்மைகள்
13. டயாபடீஸ் மற்றும் இதய நோயைத் தடுக்கும் அதிசய பாதாம்
பருப்பு
14. மூளைச் சிதைவைத் தடுக்கும் 6 சக்தி வாய்ந்த ஊட்டச்சத்துகள்
15. நமக்கில்லை இனி குறைவான ஆயுள் எல்லை!
16. மருத்துவ உலகில் இந்தியா உயரும் உயரும் உயர்ந்துகொண்டே
இருக்கும்!
*
நூலைப் பற்றிய சிறு குறிப்பு இது:
This gem of a book explains the various secrets to leading a healthy life. The writer has described several interesting findings of medical research, and these will be useful to all readers. In particular, the book will be very useful to aging adults so that they can take better care of their health.
ஆரோக்கிய வாழ்வின் அடிப்படை ரகசியங்களைச் சுவைபட விளக்கியிருக்கிறார் ஆசிரியர். மருத்துவ ஆராய்ச்சிக் கண்டுபிடிப்புகளை உள்ளடக்கிய இந்நூல் அனைவருக்கும் பயனுள்ளதாகவும் குறிப்பாகப், பெரியோர் தங்கள் உடல்நலனைப் பாதுகாத்துக் கொள்ள உதவுவதாகவும் அமைந்துள்ளது. அனைவரும் பாதுகாத்து வைத்துக் கொள்ள வேண்டிய அரிய நூல்!
*
இந்த நூல் திருமதி நிர்மலா ராஜூ அவர்களால் அவரது www.nilacharal.com மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இதை (EBOOK) டிஜிடல் வடிவமாகப் பெற விரும்புவோர் www.nilacharal.com இணையதளத்தில் EBOOKS என்ற பகுதியில் AUTHOR-ஐ தேர்ந்தெடுத்தால் எழுத்தாளர் பகுதியில் ச.நாகராஜன் (61) என்ற பெயரைக் காணலாம்.
அங்கு சொடுக்கினால் ச.நாகராஜன் எழுதிய 61 புத்தகங்களின் விவரத்தைக் காண முடியும். ‘ அனைவருக்கும் ஆரோக்கியம்’ -பாகம் 2’ நூலைப் பற்றிய சிறுகுறிப்பு, விலை விவரத்தைக் காணலாம்; அதை வாங்கலாம்.
Singapore, National Library இல் நிலாச்சாரல் வெளியீடுகள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
**