இந்துக்கள் தினமும் சொல்ல வேண்டிய துதிகள் (Post No.11,367)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,367

Date uploaded in London – 18 OCTOBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

 Xxx

ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக இந்துக்கள் சொல்லி வந்த துதிகள் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருகின்றன. காலை எழுந்தது முதல் இரவு படுக்கைக்குச் செல்லும் வரை இவைகளை சிறுவர்களும் பெரியவர்களும் சொல்ல வேண்டும். இதனால் நமக்கு இயற்கையின் மீதுள்ள மரியாதை அதிகரிக்கும். புறச் சூழல் பாதுகாக்கப்படும்.  எதையும் வீணடிக்கமாட்டோம். மன அமைதியும்  ஏற்படும்.

xxx

1.காலையில் விழித்திக்கொண்டவுடன், படுக்கையில் இருந்தவாறே,  இதைச் சொல்லலாம். அல்லது வெளிச்சத்துக்கு வந்து உள்ளங்கையைப் பார்த்துக்கொண்டு இந்தத்  துதியைச் சொல்லலாம். இதில் கொஞ்சம்  மாறுதலோடு மூன்று துதிகள் உள்ளன. எதை வேண்டுமானாலும் சொல்லலாம்.

A). கராக்ரே வஸதே லக்ஷ்மீ கரமத்யே சரஸ்வதீ கர மூலே து  கோவிந்தஹ , ப்ரபாதே கர தர்சனம்

B).கராக்ரே வஸதே லக்ஷ்மீ கரமத்யே சரஸ்வதீ கர மூலே ஸ்திதா கெளரீ   , ப்ரபாதே கர தர்சனம்

C).கராக்ரே வஸதே லக்ஷ்மீ கரமத்யே சரஸ்வதீ கர மூலே ஸ்தித கோவிந்த, ப்ரபாதே கர தர்சனம்

பொருள்:

உள்ளங் கையின் மேல் புறத்தில் லக்ஷ்மீ வசிக்கிறாள்.; நடுவில் சரஸ்வதீ யும் கீழ்ப் பகுதியில் கோவிந்தனும்/ கெளரியும் வசிக்கின்றனர் என்று சொல்லிக்கொண்டு கையை தரிசிக்கவும் /பார்க்கவும்

புனிதமான கை  என்று சொல்லி, நாளைத்  துவங்குவதால் எந்த கெட்ட காரியத்தையும் செய்ய மனம் இடம் கொடாது.

XXX

2.பெண்கள் தினமும் குளித்து விட்டுச் சொல்ல வேண்டிய  துதி

அஹல்யா தாரா திரௌபதீ ஸீதா ததா மண்டோதரீ

தேவதா பஞ்ச கன்யா ஸ்மரேன்  நித்யம் மஹா பாதக நாசனம்

 अहल्या तारा द्रौपदी सीता तथा मंदोदरी देवता पंच कन्या स्मरे नित्यम महा पातक नाशनम

அஹல்யா, தாரா , திரௌபதீ , ஸீதா ,மண்டோதரீ ஆகிய ஐந்து கற்புக்கரசிகளையும் நினைத்தால் மிகப்பெரிய பாபங்களும் அழிந்துவிடும்

(இதில் தவறு செய்து திருந்திய அஹல்யா பெயரையும், வாலியின் மனைவியான தாராவையும், அரக்கன் என்று கருதப்படும் ராவணனின் மனைவியான, சிவ பக்தையான மண்டோதரீயையும் சேர்த்து இருப்பது குறிப்பிடத்  தக்கது.)

XXxx

Hindu Children Cleverer than Einstein

3.படிக்கத்  துவங்கும் போதோ, பூஜை அல்லது காரியங்களைத் துவங்கும் போதோ கீழ்கண்ட ஸ்லோகங்களை சொல்ல வேண்டும் :-

வக்ரதுண்ட மஹா காயா சூர்ய கோடி ஸமப்ரபா

நிர்விக்னம் குரு (kuru) மே தேவா ஸர்வ கார்யேஷு ஸர்வதா

கோடி சூர்ய பிரகாசம் உடையவரும், வளைந்த துதிக் கையையும் உடைய இறைவனை வணங்குகிறேன் ; எடுத்த காரியம் யாவினும் வெற்றி நல்குவீராக ; அதற்கான பாதையில் உள்ள கஷ்டங்களை/ இடையூறுகளைக்  களைந்து எறிவீராகுக’

(இதில் ஒரு விஞ்ஞான ரஹசியம் இருப்பதைக் கவனிக்க வேண்டும். இந்தப் பிரபஞ்சத்தில் கோடிக்கணக்கான சூரியன்கள் (Million Suns)  இருப்பதை அமெரிக்க ரஷ்ய விஞ்ஞானிகள் புஸ்தகங்களில் எழுதியது கடந்த 200 வருடங்களில்தான். அதற்கு முன்னரே இதை அறிந்து பாடிய இந்துக் குழந்தைகள் பெரிய விஞ்ஞானிகள் என்பதை இந்த ஸ்லோகம் காட்டுகிறது. இதற்கு இன்னும் ஒரு சான்றும் உளது. அமெரிக்க பாலைவனத்தில் அணுகுண்டு சோதனை செய்யப்பட்டபோது, அணு குண்டின் தந்தை என்று அழைக்கப்படும் ராபர்ட் ஓப்பன்ஹீமரை அழைத்திருந்தனர். அவருக்கு பகவத் கீதை அத்து படி . முதல் அணு குண்டு சோதனையை தொலை தூரத்திலிருந்து கண்ட அவர் பகவத் கீதையில் விஸ்வ  ரூப  தரிசனத்தைக் கண்டு வியந்த அர்ஜுனன் சொன்ன ஸ்லோகத்தை சொன்னார். அதில் கிருஷ்ண பரமாத்மாவின் முகம் ஆயிரம் சூரியன் பிரகாசத்தோடு விளங்கிதை அர்ஜுனன் திவி சூர்ய சஹஸ்ரஸ்ய என்று வருணிக்கிறான் . முதல் அணுகுண்டு அது போல பிரகாசித்தது. அர்ஜுனனுக்கு பேச்சுவாக்கில் கூட 1000 சூரியன்தான்  வந்தது !!)

XXX

4.பூஜைகளிலும் , கோவிலில் பிள்ளையார் சிலைகளுக்கு  முன்னால் நின்று கொண்டும், இரு கைகளாலும் நெற்றியின் பக்க வாட்டில் ஐந்து முறை

குட்டிக் கொண்டு, கீழ்க்கண்ட  ஸ்லோகத்தைச் சொல்ல வேண்டும்.:-

சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம்

ப்ரசன்னவதனம்  த்யாயேத்  ஸர்வ விக்நோப சாந்தயே

தூய வெண்ணிற ஆடைகளை அணிந்தவரும் எங்கும் நிறைந்தவரும், நான்கு கைகளை உடையவரும் , இன்பம் பொங்கும் முகத்தை உடையவருமான இறைவனை, எல்லா இடையூறுகளையும் விலக்கும் படி தியானம் செய்கிறேன்

(இது எப்படி ஆனை முக பிள்ளையாருக்குப் பொருந்தும் என்பதை அறிய காஞ்சி பரமாசார்யாளின் (1894-1994) உரையை தெய்வத்தின் குரலில் படிக்கவும் )

ACCUPRESSURE, ACCUPUNCTURE

இந்துக்கள்தான் அக்குபிரஸ்ஸர் , அக்கு பங்ச்சர் ஆகியவற்றைக் கண்டுபிடித்து  உலகிற்கே கற்றுக்கொடுத்தனர் . காது குத்துவது, சீமந்தத்தின் போது கர்ப்பிணிப் பெண்களின் தலை வகிட்டுப் பகுதியை முள்ளம்பன்றி முள்ளால் மெதுவாகக் கீறுவது, பெண்களுக்கு மூக்கு குத்தி மூக்குத்திப் போடுவது, பிள்ளையார் முன் தலையில் குட்டிக்கொள் வது ஆகிய அனைத்தும் உடலில் உள்ள சக்தியை உந்திவிடும் அக்குபிரஸ்ஸர் , அக்கு பங்ச்சர் உத்திகள் ஆகும். பீஷ்மர் அம்புப் படுக்கையில் Bed of Arrows படுத்து 2 மாதம் உயிருடன் இருந்து ,நினைத்தபோது உயிரை நீத்ததும் அக்குபிரஷர் டெக்னீக் தான்!

XXXX

5.நீரையும் சீராடு Water is God; Unity of India through Holy Rivers

இந்துக்கள் நதிகளை அசுத்தம் செய்யமாட்டார்கள்; நீரை வீணடிக்க மாட்டார்கள் ;புறச்சூழல் உணர்வுமிக்கவர்கள் ; ஆகையால் குளம், குட்டை, கிணறு, ஏரி , கண்மாய் எங்கு குளித்தாலும் அந்த தண்ணீரை ஏழு புனித நதிகளின் தண்ணீருக்கு ஒப்பிட்டு பய பக்தியோடு குளிப்பார்கள். அவர்களுக்கு நதியும் மலையும் கடவுள்; எதையும் தேவைக்கு மேல் பயன்படுத்தமாட்டார்கள் ; ஆகையால் கீழ்க்கண்ட ஸ்லோகத்தைச் சொல்லி குளித்தார்கள்; அதை நாமும் கடைப்பிடித்து நம்முடைய குழந்தைகளுக்கும் கற்பிக்க வேண்டும்

கங்கே ச யமுனே சைவ கோதாவரீ சரஸ்வதீ

நர்மதே  , சிந்து காவேரி ஜலேஸ்மின் சந்நிதிம் குரும்

நான் குளிக்கும் இந்த நீரை, புனித நதிகளான கங்கை, சிந்து, ஸரஸ்வதி , காவிரி, நர்மதை, கோதாவரி ஆகியன  புனிதம் ஆக்கட்டும் . அதாவது அந்த 7 புனித நதிகளும் பிரசன்னமாகட்டும்.

(இதில் ஒரு முக்கியச் செய்தி இருப்பதை இந்துக்கள் உணரவேண்டும்; வெள்ளைக்காரன்தான் இந்தியாவை ஒற்றுமைப்படுத்தினான் என்று பல அரை வேக்காடுகள் உளறுவதைப்  படித்திருப்பீர்கள். ஆனால் நாமோ சரஸ்வதி முதல் காவிரி வரை சொல்லும்போது பிரம்மாண்டமான ஒன்றுபட்ட இந்தியாவைக் (Akhand Bharat) காண்கிறோம்; குளிக்கும்போது கூட!!! இமய மலையில் உற்பத்தியாகும் கங்கை, கல்கத்தா அருகில் கடலில் விழுகிறது; சிந்து சரஸ்வதி மேற்குப்பக்கமாகப்  பாய்கின்றன; காவிரி தெற்கிலும் மத்திய இந்தியாவில் கோதாவரி, நர்மதையும் பாய்கின்றன. மேலும் இந்த வழக்கம் வேத காலம் முதற்கொண்டு இருப்பதை இப்போது மறைந்துபோன சரஸ்வதி நதியைக் குறிப்பிடுவதிலிருந்து  அறியலாம் புறநானூற்றின் பாடலில் கூட இமயமும் பொதியமும் என்ற வரி வருகிறது.  )

XXX

6.மாணவர்கள் படிப்பதற்கு முன்னால் , அல்லது பள்ளிக்கூடத்தில், தினமும் சொல்ல வேண்டிய சரஸ்வதி துதி :

சரஸ்வதீ  நமஸ்துப்யம்  வரதே காமரூபிணீ

வித்யாரம்பம் கரிஷ்யாமி சித்திர் பவது மே ஸதா

வேண்டியதை எல்லாம் அளிக்கும் தாயே, சரஸ்வதீ தேவியே ! நான் படிக்க துவங்குகிறேன். இதில் எனக்கு எப்போதும் வெற்றிகிட்ட அருள்வாயாகுக; (நான் படிப்பதை எல்லாம் கற்கக் கசடறக் கற்க அருள் புரி )

XXXx

7.தீப மங்கள ஜோதீ நமோ நம

விளக்கு ஏற்றும்போது பெண்கள் சொல்ல வேண்டிய துதி

சுபம் கரோதி கல்யாண ஆரோக்ய  தன  சம்பத

சத்ருபுத்தி விநாஸாய தீப ஜ்யோதீர்  நமோஸ்துதே

விளக்கில் ஒளிரும் ஜோதியே ; இருளை அகற்றும்  நீ கெட்ட எண்ணங்களை அகற்றுவாயாகுக ; மன இருளை (தீய எண்ணங்களை) அகற்றி எங்கும் சுபம், ஆரோக்கியம், மங்களகரமான செய்திகள், செல்வம் ஆகியவற்றை கொணர்வாயாகுக.

XXX

8.சாப்பிடும்போது சொல்ல வேண்டிய துதி :-

அன்ன பூர்ணே சதா பூர்ணே சங்கர ப்ராண  வல்லபே

ஞான வைராக்ய ஸித்யர்தம் பிக்க்ஷாம்  தேஹி ச பார்வதீ

அன்ன பூரணி தாயே ; குறைவில்லாத உணவின் வடிவே! சங்கரனின் உயிராக விளங்கும் தாயே ! ஞானத்தையும் ஆசைகளை அகற்றும் வைராக்கியத்தையும் பார்வதீ தேவியான நீ, பிச்சையாக அளிக்க வேண்டுகிறேன்  (சாப்பிடும் உணவு எனக்கு பேரறிவினை நல்க வேண்டும்; அதுதான் நான் கேட்கும் பிச்சை )

XXX

9.எந்த இடத்தில் பெண்களை தெய்வமாக வழிபடுகிறோமோ  அந்த இடங்களில் எல்லாம் , குறிப்பாக துர்க்கை சந்நிதியில் சொல்ல வேண்டிய துதி :

சர்வ மங்கள மாங்கல்யே சிவே ஸர்வார்த்த சாதிகே

சரண்யே த்ரயம்பகே கெளரி நாராயணீ நமோஸ்துதே

நாராயணீ,  உனக்கு வணக்கங்கள் உரித்தாகுக . எல்லாவித மங்களங்களையும் (நன்மைகளையும்) அருளும் மங்களங்ளுக்கு எல்லாம் மங்களமாகிய சிவனின் துணைவியே; ஆசைகளை எல்லாம் பூர்த்தி செய்யும் அடைக்கலமே ; முக்கண்ணனின் மனைவியே அழகிய வடிவானவளே  உன்னை வணங்குகிறேன்

XXXX

10.சக்தி தேவியை வணங்கும் பொதுவான இந்த துதியை எல்லா தேவி சந்நிதிகளில் சொல்லலாம்

யா தேவீ  ஸர்வ பூதேஷு சக்தி ரூபேண ஸம்ஸ்திதா

நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நமஹ

எந்த தேவியானவள் அனைத்து உயிர்களிடத்தும் சக்தி உருவில் உறைந்திருக்கின்றாளோ அந்த தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.

இதில்  சக்தி ரூபேண என்ற சொற்களை விஷ்ணு மாயேதி என்று மாற்றியும் சொல்லுவர்

யா தேவீ  ஸர்வ பூதேஷு விஷ்ணு மாயேதி ஸம்ஸ்திதா

நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நமஹ

எந்த தேவியானவள் அனைத்து உயிர்களிடத்தும் விஷ்ணு மாயை உருவில் உறைந்திருக்கின்றாளோ அந்த தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்..

—SUBHAM—

Tags-தினசரி துதிகள், ஸ்லோகங்கள் , காலை, , விளக்கு, ஏற்றும்போது, சாப்பிடும் ,குளிக்கும் போது ,புனித  நதிகள்

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: